முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனிமை - PiT போட்டிக்கு இல்லையெனினும்...

இந்த மாத PiT போட்டிக்கான கடைசி தேதி 15ஆம்! வழக்கமான எனது சோம்பேறித்தனத்தால் கடைசிதேதி 18ன்னு நினைச்சுக்கிட்டு ஒரு நாளில் கோட்டை விட்டுட்டேன். இருந்தாலும் இருக்கற இரண்டு படங்களைக்காட்டி அழ எனக்கு உங்களை விட்டால் யாரும் இல்லையாதலால் இங்கே! ஹிஹி..கருத்துகள்

 1. அடடா அருமையா இருக்கு. நீங்க போட்டில கலந்திருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 2. shkumarதலை என்ன இது? கலக்கல். அநியாயமா முதல் பரிசை கோட்டை விட்டிட்டீங்களே

  பதிலளிநீக்கு
 3. படத்தோட க்வாலிட்டி பத்தி எனக்கு கமெண்ட் பண்ண தெரியல.. ஆனா உங்க கான்செப்ட் ரொம்ப பிடிச்சிருக்கு...

  தனிமைனா வெறும் மனிதர்கள் இருக்குற மாதிரியே எல்லாரும் சிந்திக்கிற பட்சத்தில் உங்கள் படைப்பு அருமை...

  இதை நீங்க முதல் வாரத்திலே வெளியிட்டிருந்தால் போட்டியில் சுவாரஸ்யம் கூடியிருக்கும்னு நினைக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 4. தல .. முதல் படம் .. பல சேதி சொல்லுது .. தனிமை உணர்வை பார்த்ததும் வர வச்சிருச்சு ..

  பதிலளிநீக்கு
 5. படம் 1:- பெருங்கூட்டத்தில் தனியொருவன்

  படம் 2:- அவர்களுக்கான காத்திருப்பில்..!

  :))

  தோன்றும் தலைப்புக்களை அனுப்பலாம். இளவஞ்சி.. எல்லோருக்கும் ஒரு கிலோ அல்வா தருவார் என்று கூறிக்கொள்கிறேன்.

  எப்படீ... நாங்க படத்துக்கு தலைப்பு வச்சி... தனி போட்டியே ஆரம்பிச்சுடுவோம்ல..

  பதிலளிநீக்கு
 6. தல

  படத்தை பத்தி கமெண்ட் அடிக்க ஒன்னும் இல்ல...அம்புட்டு அழகு ;))

  கலக்கல் ;)

  பதிலளிநீக்கு
 7. பிரேம்ஜி, முரளிகண்ணன், பாலாஜி,

  ஊக்கங்களுக்கு நன்றி! :) போட்டி விதின்னா விதிதான்! அதனால அடுத்தமுறை மறக்காம முன்னாடியே கலந்துக்கறேன்.


  யாத்ரீகன்,

  நன்றி... எப்பலேர்ந்துயா இந்த குடுமி?! :)

  பாபா, தருமி, நிமல், அமல், கோபிநாத்,

  உங்களுக்கும் நன்றின்னேன்! :)

  பதிலளிநீக்கு
 8. தல பாலாபாய்,

  அடங்க மாட்டிங்களா?! :)

  என்னே ஒரு கவித்துவமான இலக்கியச்சிந்தனை! கொழுந்துவிட்டேரியும் உம்ம எலக்கியச்சிந்தனைக்கு எவனொருவன் மிரண்டாவோ பொவண்டோவோ ஊத்தி அணைக்கறானோ அவனுக்கே அடுத்த இலக்கியச்சிந்தனை விருது...

  பதிலளிநீக்கு
 9. //வெட்டிப்பயல் said

  படத்தோட க்வாலிட்டி பத்தி எனக்கு கமெண்ட் பண்ண தெரியல.. ஆனா உங்க கான்செப்ட் ரொம்ப பிடிச்சிருக்கு...//

  வழிமொழிகிறேஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்........:-)

  முதல் படம் அருமை.

  பதிலளிநீக்கு
 10. Hi Ilavanji,

  pls do posting frequently... sorry to say I always dissapoint to see old posting for long time. You are really a special blog writter, so please keep posting.

  பதிலளிநீக்கு
 11. Sunny,

  உங்கள் வருகைக்கும் என்மீதான நம்பிக்கைக்கும் நன்றி!

  இப்போதைக்கு பதிவுகள் எழுதுமளவுக்கு நேரமில்லாத ஒரு வாழ்க்கைவட்டத்தில் சூழப்பட்டிருக்கிறேன் என்று மரியாதை நிமித்தமாக சொல்லிக்கொள்ள முடியுமெனினும், இப்பொழுதெல்லாம் உண்மையில் மண்டையில் சரக்கில்லை என்பதுவும் ”என்னத்தை எழுதி..” என்ற சோம்பேறித்தனமுமே உண்மையான காரணமென்பதை வெட்கமில்லாமல் சொல்லிக்கொள்வதில் பெருமையடை...

  இதுவும் கடந்துபோகும்... கூடிய சீக்கிரம் வரப்பார்க்கனுங்... :)

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

க.க:5 - காதலிக்க நேரம் உண்டு! காத்திருக்க இருவர் உண்டு!!

எ ன்னது?! ஒரு வார கேப்புல சன்னமா பொண்ணை பேசி முடிச்சிட்டீங்களா? நிச்சயம் வரைக்கும் போயாச்சா? ரெண்டு வீட்டுலையும் கைய நனைச்சிட்டீங்களா?! கல்யாண தேதிக்கு இன்னும் அஞ்சாறு மாசம் இருக்கா? என்னப்பு... சொல்லவேல்ல? சரி விடுங்க.. சொந்த பந்தங்க மட்டும் கூடி மேட்டரை முடிச்சிருப்பீங்க... கல்யாணத்துக்காவது மறக்காம பத்திரிக்கை வைங்க! நமக்கெல்லாம் அடிக்கடி இந்த கல்யாணவீட்டு போட்டோவுலையும் வீடியோவுலையும் லைட்டா பல்லைக்காட்டிக்கிட்டு, 101 ரூவா வைச்ச கவரை கமுக்கமா மாப்ளை கைல அழுத்திட்டு, நமக்கு தெரிஞ்ச ஒரே இங்கிலீசு வாழ்த்தான "Many more Happy returns of the Day" அப்படிங்கறதை ஜாக்கிரதையா தவிர்த்து, கேனத்தனமா "மச்சி! கடைசில நீயும் கவுந்துட்டயா"ங்கற மாதிரி ஏதாவது பெனாத்தி, வீடியோல விழுகறதெல்லாம் நமக்கு சர்வசாதாரணங்கற மாதிரி ஒரு லுக்கோட, கொஞ்சம் முறுக்கிக்கிட்டு வெரைச்சா மாதிரி நின்னு வந்ததுக்கான எவிடென்சு காட்டலைன்னா சமுதாயத்துல திடீர்னு நம்ம பெரபலம் கொஞ்சம் கொறைஞ்சுட்டாப்புல ஒரு நெனைப்பு வந்துரும்! அதுக்காகத்தான்! மத்தபடி மூனுவேலை மூக்குப்பிடிக்க மொசுக்கறதுக்கு இல்லைங்...! ஆக ம