முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திமிரு...


"ஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!"

"டேடேடேடேடேடேடேடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!"

"ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!"

"டேடேடேடேடேடேடேடேடேடேடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!"

"அப்ப.... நானாத்தான் நாறிட்டனா?!"

"ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!"

"டேடேடேடேடேடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!"

"பொம்பள பொம்பளயா இருக்கனும்! ஒரு பொம்பளைக்கு இவ்வளவு திமிரு இருக்கக்கூடாது!"

"ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!"

"டேடேடேடேடேடேடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!! உன்ன கண்டந்துண்டமா வெட்டாம விடமாட்டேன்டா"

"ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!"

"டேடேடேடேடேடேடேடேடேடேடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!"
திமிரு - வெற்றிப்படிகளில் விஷால்!

கருத்துகள்

 1. அட என்னா திமிரு வாத்தியாரே,.ஓ படத்தை பத்தி சொல்றீங்களா?
  ஷ்ரேயா பத்தி சொல்லவே இல்லையே. உங்க பேச்சி கா

  பதிலளிநீக்கு
 2. " திமிரு " ‍ பெண்களை பெரிதும் போற்றக்கூடிய படமாக இருப்பதால் வரி விலக்கு அளிக்க தமிழக அரசை வலியுறுத்துவோம்.

  கிறுக்கு பய‌

  பதிலளிநீக்கு
 3. இளா,

  // ஷ்ரேயா பத்தி சொல்லவே இல்லையே //

  என்னது ஷ்ரேயா பத்தி சொல்லவே இல்லையா?! படம் முழுக்க ஷ்ரேயா சொன்னதைதாங்க ( ரெண்டு வரிதவிர )இங்க பதிவா போட்டிருக்கேன்!!!

  பதிலளிநீக்கு
 4. நீண்ட/ஆழமான/பத்தி பிரிக்காத பதிவுகளுக்குப் புகழ் பெற்ற இளவஞ்சியை இப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்படீ......

  பதிலளிநீக்கு
 5. // " திமிரு " ‍ பெண்களை பெரிதும் போற்றக்கூடிய படமாக இருப்பதால் //

  அதானே!? :)

  ****
  பாலா,

  // ஆழமான // படம் முழுக்க மேற்கண்ட ஆழமான வசனங்கள் தான்! அவனவன் ஆழமா அடித்தொண்டைல இருந்து கத்திக்கிட்டே இருக்கானுங்க... :(

  பதிலளிநீக்கு
 6. அருமையான விமர்சனம்

  இப்ப படம் எல்லாம் ரவுடி தாதா படம்தான் வருது

  திமிரா(தில்லா) எடுக்குராங்க.

  நாமலும் பாக்காமல் விடுவதில்லை

  பதிலளிநீக்கு
 7. தலை,

  நல்லவேளை தானை தலைவி ஷ்ரேயாவை இப்படி கத்தவிட்டு தொண்டை தன்ணியை வரள வைக்கலை.டப்பிங் ஆர்டிஸ்ட் தானே கத்திருப்பாங்க?:)))

  பதிலளிநீக்கு
 8. //"பொம்பள பொம்பளயா இருக்கனும்! ஒரு பொம்பளைக்கு இவ்வளவு திமிரு இருக்கக்கூடாது!"
  //

  இது கூடவா ஸ்ரேயா சொன்னது?

  பதிலளிநீக்கு
 9. என்ன இருந்தாலும் எங்க தலைவர் சுள்ளான் தனுஷ் அளவுக்கு கத்த முடியுமா?  அகில உலக சுள்ளான் தனுஷ் ரசிகர் மன்றம், உருகுவே கிளை.

  பதிலளிநீக்கு
 10. ஏஏஏஏஎய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

  ஓஓஓஓஓஓஓ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  இன்னா இப்ப..

  ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆய்ய்ய்ய்ய்ய்ய்

  திமிரு?

  ஆஆஆஆஆஆஆஆஆஅங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்

  ரெம்பத்தான்..

  :)
  :)

  பதிலளிநீக்கு
 11. /./
  நல்லவேளை தானை தலைவி ஷ்ரேயாவை இப்படி கத்தவிட்டு தொண்டை தன்ணியை வரள வைக்கலை.டப்பிங் ஆர்டிஸ்ட் தானே கத்திருப்பாங்க?:)))
  /./

  கத்துறது சுலபம் கத்துற மாதிரி நடிக்குறது கஷ்டம்.:))

  பதிலளிநீக்கு
 12. //திமிரா(தில்லா) எடுக்குராங்க. //

  அதானே!

  //நாமலும் பாக்காமல் விடுவதில்லை//

  அடப் பாவிகளா!

  பதிலளிநீக்கு
 13. அட உங்க கதை வரிகளைப்பார்த்துவிட்டு நான் ஏதோ ஆதி படக் கதையெல்லோ என நினைத்தேன்..அப்ப இதுவும் அதுதான் கதையா?

  -theevu-

  பதிலளிநீக்கு
 14. யாத்தே...யாத்தே...யாத்தே....மாமனுக்கு ரொம்பத்தான் குசும்பு.

  பதிலளிநீக்கு
 15. பார்க்க வேண்டாம்னு குறிப்பாச் சொன்னதுக்கு நன்றி இளவஞ்சி. :O))

  படத்துலெ இருக்கறவங்கதான் ஷ்ரேயாவா? பாத்தா த்ரிஷா மாதிரி இருக்கே?? (த்ரிஷா/ஷ்ரேயா ரசிகர்கள் அடிக்க வராதிங்கப்பா..) ;O)

  பதிலளிநீக்கு
 16. படத்துலெ இருக்கறவங்கதான் ஷ்ரேயாவா? பாத்தா த்ரிஷா மாதிரி இருக்கே?? (த்ரிஷா/ஷ்ரேயா ரசிகர்கள் அடிக்க வராதிங்கப்பா..) ;O)/
  ஷ்ரேயா படத்தில் இருப்பது ரீமா சென் அல்லவா? இப்படி அப்பாவியாக இருப்பது நியாயமா :-)?

  பதிலளிநீக்கு
 17. நம்ம விஷாலு கில்லி மாதிரி ஒரு கதை சொல்லுங்கன்னு சொல்லியிருந்திருக்காரு. தாருண் கோபி கில்லி கதையையே ஒரு மாதிரியா சொல்லியிருக்காரு.

  பதிலளிநீக்கு
 18. நீங்களும் பார்த்து தொலைச்சுட்டீங்களா??

  அய்யோ.. அய்யோ..

  நானும் அவஸ்த்தை பட்டேன்.. :)

  பதிலளிநீக்கு
 19. //ஷ்ரேயா படத்தில் இருப்பது ரீமா சென் அல்லவா? இப்படி அப்பாவியாக இருப்பது நியாயமா :-)?//

  ரீமா சென்னா? எவ அவ? :O)

  எல்லாற்ற முகத்தப் பார்த்தாலும் ஒரே மாதிரித்தான் இருக்குது டிசே.. பழைய படத்தில பார்க்கிற மாதிரி.
  [மாமியொராள் படம் தொடங்கினதிலயிருந்து பாத்திட்டு, நடுவில இவ ஆரெண்டு காதநாயகியைப் பாத்துக் கேட்கிற மாதிரியான நிலமை எனக்குப் பழைய படம் பாக்கேக்குள்ள மட்டுந்தான் இருக்குது என்டுற என்ட நினைப்பில மண்!!! :O( ]

  பதிலளிநீக்கு
 20. ஹேஹேஹேஹேஹேஹே

  ஹாஹாஹாஹாஹாஹாஹா

  ஹுஹுஹுஹுஹுஹுஹு


  ( எச்சரிக்கைக்கு நன்றிங்க!!! )

  பதிலளிநீக்கு
 21. இதுதான் படமா...போகலாமோன்னு நெனசுச்க்கிட்டு இருந்தேன்...ரிஜெக்டேடு.....பேசாம கார்ஸ் படத்துக்குப் போகலாம்னு தோணுது.

  பதிலளிநீக்கு
 22. என்னங்க இது அநியாயமா இருக்கு. இப்பதான் the hindu வில் இது விஷாலுக்கு மூணாவது ஹிட் மூவி அப்டி இப்டின்னு நல்லா எழுதியிருக்காவன்னு இங்கன வந்தா, இப்படி ஊத்தி மூடியிருக்கீக!?

  பதிலளிநீக்கு
 23. ஒண்னுமே புரியல உலகத்துலே,
  என்னமோ நடக்குது மர்மமா இருக்குது!
  ஒண்னுமே புரியல உலகத்துலே...

  அய்யா, இளவஞ்சி அய்யா...
  என்ன சொல்லுறீங்கையா?

  (படம் பார்த்தா காது ஜவ்வு கிழிஞ்சிடும்-ன்னா...?)

  பதிலளிநீக்கு
 24. யமகாத பசங்கப்பா.. கொஞ்சம் குனிஞ்சா போதுமே முதுகுமேளே ஏறி குங்திக்கின்னு கும்மி அடிச்சிடுவீங்களே

  பதிலளிநீக்கு
 25. என்னப்பா... படத்தைப் பார்க்கலாமா, வேண்டாமா ???

  நல்லா குழப்புறீங்களேய்யா ??? ரீமாசென் வேற இருக்காங்க...

  மே மாதம் 98ல்......

  ****

  சன் டீவி என்னா சொல்துன்னு கேப்போம்...

  பதிலளிநீக்கு
 26. மின்னுது மின்னல்,

  // நாமலும் பாக்காமல் விடுவதில்லை // ஹிஹி...

  ****
  செல்வன்

  // தானை தலைவி ஷ்ரேயாவை //

  அடப்பாவிகளா!!

  ****
  பொன்ஸ்,

  // இது கூடவா ஸ்ரேயா சொன்னது? //

  தமிழக மாஸ் ஹீரோக்களுக்குன்னு இருக்கற ஒரே ஒரு வசனத்தையும் வில்லி சொன்னா எப்படி?! அதனால அது ஹீரோ சொன்னது!

  ****
  எண்ணம் எனது,

  வருகைக்கு நன்றி!

  ****
  கப்பி,

  // என்ன இருந்தாலும் எங்க தலைவர் சுள்ளான் தனுஷ் அளவுக்கு கத்த முடியுமா? //

  எதுக்கும் ஒரு முறை படத்தை பார்த்து சந்தேகத்த தீர்த்துக்கிடுங்க.. :)

  பதிலளிநீக்கு
 27. சிறில்,

  இதத்தான் ஏட்டிக்கு போட்டின்னு சொல்லறது! :)

  ****
  சுந்தர்,

  ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கீங்க! வாங்கப்பு.. :)

  ****
  அனானி,

  இந்தப்படத்துல ஷ்ரேயா தமிழ்த்திரையுலகில் யாருமே செய்யாத ஒரு கதாபாத்திரத்தை செஞ்சிருக்காங்க! (அப்படின்னு பட டைரக்டரு சொல்லச்சொன்னாரு! )

  ****
  தீவு,

  // அப்ப இதுவும் அதுதான் கதையா? //

  கடந்த 50 படங்களா கோலுவுட்ல இதான் கதை! :)))

  ***
  சனியன்,

  அப்ப... படம் பார்த்துட்டீங்க போல! சந்தோசம்! :)))

  ****
  மழை ஷ்ரேயா,

  டிசே சொன்னமாதிரி ஆனாலும் இது அநியாயத்துக்கு அப்பாவித்தனமான கேள்வி! :)

  ****
  ஜோ,

  சவுண்டு கரெட்டா வருது! அடுத்த படத்துல உங்களுக்கு ஒரு கேரக்டர் உறுதி! :))

  டிசே.. நன்றி

  பதிலளிநீக்கு
 28. அனானி,

  கில்லியே தெலுங்கு இறக்குமதி...

  ****
  ராசா,

  அடடா.. சந்தோசம்! படம் தான் கடின்னாலும் விஷாலுக்கு நல்ல எதிர்காலம் இருக்குங்கறது என் கணிப்பு!

  C செண்டர்ல பிச்சிக்கிட்டு ஓடும் பாருங்க...

  ****
  அருட்பெருங்கோ,

  எங்காது வலி உங்களுக்கு சிரிப்பா இருக்கு! OK.. OK

  ****
  ராகவன்,

  உமக்கென்னையா?! சென்னைவாசி... நினைச்சா எந்தப்படத்துக்கும் போகலாம்.. :)

  ****
  தருமிசார்,

  // இப்படி ஊத்தி மூடியிருக்கீக!? //

  நிச்சயமா இது வெற்றிப்படம்தான்... விஷாலை இனி யாராலும் தடுக்க முடியாது! :))) அதனாலதான்....

  திமிரு - வெற்றிப்படிகளில் விஷால்! :)))

  பதிலளிநீக்கு
 29. விழிப்பு,

  // படம் பார்த்தா காது ஜவ்வு கிழிஞ்சிடும்-ன்னா...?) //

  என்னது? என்ன கேட்டிங்க?! கொஞ்சம் சத்தமா சொல்லுங்கப்பு...

  ****
  ரவீந்திரன்,

  நீங்க என்னையா சொல்லறீங்க?! இல்ல... டிக்கெட்டு வாங்கிட்டுப்போய் குனிஞ்சு நின்னதுக்கு எங்க முதுகுமேல் ஏறி கும்மி அடிச்ச டைரடக்டரை சொல்லறீங்கலா?! :)

  ****
  சோம்பேறி பையன்.

  // சன் டீவி என்னா சொல்துன்னு கேப்போம்... //

  அடப்பாவமே! சினிமா விஷயத்துல நீங்க அவிங்களையா நம்பறீங்க?!

  ****
  மதுரா,

  // முருங்கமரத்தி மேல மூணு நிமிஷமாத் தொங்குரேன்! //

  அப்படியே இருங்க! படம் பார்க்கப்போய் மூனு மணிநேரம் தொங்கல்ல முடிஞ்சிறப்போகுது! :)

  பதிலளிநீக்கு
 30. பேசாம விஸால் சித்தப்பாவை செல்போன்ல பேச வச்சே கதைய முடிச்சிருக்கலாம்
  " என்னது .. பெரிய கருப்பு தப்பிச்சுட்டானா "
  " என்னது கனேஷ் பெரிய கருப்ப தேடி போயிருக்கானா "
  ..
  இதே மாதிரி முழு கதையையும் ஒரே ஷாட்டில முடிஷ்ஷிருக்கலாம்.

  நல்லவேளையா கிளைமாக்சில் இன்னொரு பாட்டு போடாம காப்பாத்தினாங்க .

  பதிலளிநீக்கு
 31. mana madurai... pattuku dance supreruuuuuuuuuuuuu....

  padam gilli mathiri...

  பதிலளிநீக்கு
 32. எங்கள் தலைவி ஷ்ரியாவின் பெருகும் செல்வாக்கினைக் கண்டு பயந்து யாரோ உமக்கு மால் வெட்டியது எல்லாம் எமக்குத் தெரியும்.

  "வெயில்" வரட்டும்.அப்போது தெரியும் எங்கள் தங்கத் தலைவியின் தாத்பர்யம்.

  இப்படிக்கு,
  ஷ்ரியா ரெட்டி ரஜிகர் மன்ரம்,
  பெங்களூரு டௌன்டவுன்.

  பதிலளிநீக்கு
 33. தமிழ் தீவிரவாதி,

  // இதே மாதிரி முழு கதையையும் ஒரே ஷாட்டில முடிஷ்ஷிருக்கலாம். // :))))

  டைரடக்டரு புதுசு போல! அவரு இஷ்டத்துக்கு ஷாட் வைக்க விடாம ஆளாளுக்கு ஆட்டிப்படைச்சிருப்பாங்க போல! :(

  ****
  அனானி,

  // padam gilli mathiri... //

  உமக்கு விஜய்மேல என்னய்யா கோவம்?! வீணா கில்லிய இறக்கறீங்க?

  ****
  சுட் ஜீ,

  // ஷ்ரியா ரெட்டி ரஜிகர் மன்ரம்,
  பெங்களூரு டௌன்டவுன் //

  பெங்களூருல டௌன்டவுன் மட்டும் ஏன் வளராம போச்சுன்னு இப்ப தெரியுது ஓய்! :)))

  பதிலளிநீக்கு
 34. இன்னைக்குத்தான் பார்த்தேன்... கில்லி , படையப்பா, பாட்ஷா, ரன் எல்லாம் மிக்ஸில போட்டு எடுத்து கதை ரெடி பண்ணிருக்காங்க...

  படையப்பாக்கு அப்புறம் வில்லியை வெயிட்டா காட்டியிருக்கறது இந்த படத்திலதான்...

  ஆனாலும் ஸ்ரேயா... ஒன்னும் சொல்லறதுக்கு இல்லை.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு