முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பதிவுகளாராய்ச்சி மையத்தில் சுப்பனும் குப்பனும்...


"இந்த முறைதான் மழை பெய்ஞ்சும் கெடுத்து, பெய்யாமலும் கெடுத்து பொழப்பு நாறிடுச்சே! அடுத்தமுறையாவது ஏதாவது வீரிய விதைகளா வாங்கி நவீன முறையில நாத்து பதிஞ்ச்சா நல்ல வெளைச்சல் பார்க்கலாமே"ங்கற நப்பாசையில குப்பன், ஊருக்குள்ள பார்க்க படிச்சவரு மாதிரி இருக்கற, எப்பப்பாரு டைப்படிக்கற மிசினு மாதிரியே இருக்கற டீவி பொட்டில தமிழ்ல தட்டிக்கிட்டு இருக்கற ஓராளை போய் பார்த்தாப்புல! விசயம் தெரிஞ்சவரா இருப்பாரு போலன்னு நம்பி கோக்கு மாக்கா இருந்த அந்த ஆளுகிட்ட போயி கேட்டதுல அவரு நாத்து 'பதிய'றதை 'பதிவு' பதியறதுனு புரிஞ்சுக்கிட்டு "பதிவுகளாராய்ச்சி மையத்"தோட அட்ரசை குடுத்து அங்க நம்மூரு ஆளு சுப்பன்னு ஒருத்தரு இருக்காப்புலன்னும் சொல்லி அனுப்பிச்சிட்டாரு! நம்மாளுக்கு படிக்கத் தெரியாதுன்னாலும் அங்க இங்க கேட்டு ஒரு வழியா கண்டுபுடிச்சி போய்டாப்புல..

****

சுப்பன்: அடடே குப்பா! வாப்பா வா! எப்படி இருக்க?

குப்பன்: எனக்கென்ன கேடு?! நல்லாத்தான் இருக்கேன்! இந்த நாத்து பதியற விசயமா..

சுப்பன்: அடப்பாவி! யாருப்பா உனக்கு இந்த அட்ரசை கொடுத்தது? எனக்குத்தான் விதி.. இங்க மாட்டிக்கிட்டேன்! இங்க எல்லாம் கால் வைச்சா வெளங்க மாட்டப்பு..

குப்பன்: என்னய்யா சொல்லற? இது என்ன அம்புட்டு மோசமான எடமா? அப்ப இம்புட்டு தூரம் வந்தது வீணாப்போச்சா?

சுப்பன்: அட விடப்பு! சலிச்சுக்காத.. வந்ததுதான் வந்த..இன்னய தேதில ஒலகத்துல என்ன நடக்குதுன்னாவது தெரிஞ்சுட்டு போ...!

****

சுப்பன் குப்பனை கூட்டிக்கொண்டு ஒரு அறைக்குள் செல்கிறார்! அறை மொத்தமும் அலங்கோலமாக இருக்கிறது... ஆங்காங்கே கருத்துச்சுதந்திரம், அங்கதம், நகைச்சுவை, சமூகம் என்று சுவர்களில் கிறுக்கப்பட்டிருக்கிறது. ஒரு மூலையில் கணினியை லென்ஸ் வைத்து உத்து உத்துப்பார்த்தபடி குளிச்சு நாலைஞ்சு நாளான மாதிரி ஒருத்தரு... அவரைச்சுற்றி கலர் கலரா ஸ்கெட்சு பென்களும் கலர் பென்சில்களும் க்ரையான்களும்... ஒரு 80 பக்க நோட்டுல அடிக்கடி எதையெதையோ எழுதிவிட்டு அதுமேல ஒவ்வொரு எழுத்துக்கும் கலர் பென்சில்களை வைச்சு வர்ணமடிச்சுக்கிட்டு இருக்காரு..

அவருக்கு நாலடி தள்ளி ஆறடில இன்னொருத்தரு... மொகத்தை மட்டும் காணோம்... பர்மாபஜாருல 10 ரூவாய்க்கு நாளுன்னு விக்கற முகமூடில ஒன்னை எடுத்து மாட்டிக்கிட்டு "ஹையா! என்னை யாரும் கண்டுபுடிக்க முடியாதே!" அப்படின்னு மனசுல மகிழ்ச்சி பொங்க இவ்வளவு நாள் இல்லாம திடீர்னு தேசியக்கொடிய கையில எடுத்து வைச்சுக்கிட்டு, இதை வைச்சு எத்தனை பேருக்கு திகிலூட்டலாம்கற நினைப்புல அதை தடவிக்கிட்டு இருக்காரு! இப்பவெல்லாம் மொகமூடிய போறவர்றவனெல்லாம் கிழிக்கறதாலயும், சில சமயம் உணர்ச்சி வசப்பட்டு தனக்குத்தானே கிழிச்சுக்கறதாலையும் பக்கத்துலயே ஹோல்சேல்ல வாங்கிட்டு வந்த மொகமூடிகளை அன்னைக்கு எழுதறதுக்கேற்ப மாத்தி மாத்தி போட்டுக்கறதுக்கு ரெடியா அடுக்கி வைச்சிருக்காரு!

சுப்பன்: குப்பா! இவருதான் முகமூதீ... வணக்கம் சொல்லுங்க

முகமூதீ: ஹாய்..ஹாய்..ஹாய்..ஹாய்...

குப்பன்: (பயந்துபோய்...) என்னப்பா இது? ஆயீ.. ஆயீங்கறாப்புல.. ஆராய்ச்சிமையம்ன... இவன் கூவறதைபார்த்தா வேறமாதிரி எடம்போல இருக்கே? பக்கெட்டு, சொம்புன்னு ஏதாவது கொடப்பா!

சுப்பன்: அடப்பாவி! அவரெல்லாம் படிச்ச பாரினரு... அப்படித்தான் வணக்கம் சொல்லுவாரு! நாமதான் பார்த்து பதவிசா நடந்துக்கனும்!

குப்பன்: சரியப்பா! வணக்கம் மூதீ...

முகமூதீ: ம்ம்ம்.. சரிசரி.. அடடே! உம்மூஞ்சி என்ன இப்படி கொரங்காட்டம் இருக்கு? மூக்கைப்பாரு போண்டா மாதிரி.. வாயப்பாரு.. காத்துப்போறாப்புல தொறந்திருக்கு! அப்படின்னா நீதானே காத்துவாயன்?

குப்பன்: சுப்பா.. உங்கூட்டாளின்னு பார்க்கறேன்! இல்லைன்னா நடக்கறதே வேற..சொல்லிவை!

முகமூதீ: டேய்! யாரைப்பார்த்து மெரட்டறமாதிரி பேசற?! கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா? கருத்துச்சுதந்திரம்னா என்னன்னு தெரியுமா... டாய்...

குப்பன்: என்ன அநியாயம்டா இது! இவன் மூஞ்சிசைக் காட்டறதுக்குகூட துப்பில்லை! என் மொகத்தை கேவலப்படுத்தறான்! இதையெல்லாம் கேக்க ஆளே இல்லையா?

முகமூதீ: யாருக்குடா துப்பில்லை? அந்த காலத்துல நான் ஒரிஜினல் போட்டோவே போட்டு இங்கிலீசுலயே எழுதினவன்! என்ன? நான் வாய வைச்சுக்கிட்டு சும்மா இல்லாமபோக, அவனவன் மிதிக்கற மிதி தாங்கமுடியாம தமிழுக்கு வந்து முகமூடி போட்டவன்! என் வரலாறு தெரியுமா ஒனக்கு? நான் எதுக்கும் பயப்படமாட்டேன்! ஆட்டோ சத்தத்தை தவிர...

குப்பன்: சுப்பா! இது சரியில்லை! நானொன்னு கேட்டா இவனொன்னு சொல்லறான்!

சுப்பன்: அப்பறம்?! நீ கேக்கற கேள்விக்கு சரியான பதிலை சொல்லிட்டா சும்மா இருப்பியா? ஒடனே அடுத்தது கேக்கமாட்ட? அதுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருந்தா அப்பறம் கருத்து சொதத்திரத்தை யாரு காப்பாத்தறது?!

முகமூதீ: (அவரச அவரசமாக எதையோ எழுத ஆரம்பிக்கிறார்..) "அய்யோ...என்னை கொலை பண்றாங்கப்பா... அவன் என்னை திட்டறாம்ப்பா.. அங்கிட்டு ஒருத்தன் என்னை மொறைக்கறாம்ப்பா.. எல்லாரும் சுத்தி சுத்தி என்னையே கொடயறாங்கப்பா..."

சுப்பன்: சரி விடு... கெரகம் ஆரம்பிச்சிருச்சு! இன்னும் இங்க நடந்ததுக்கு வெளக்கம் சொல்லறேன்னு 20 பக்கத்துக்கு வாந்தியெடுக்காம ஓயமாட்டான்.. இங்க வா! இன்னொருத்தனை காட்டறேன்! (ஒரு கையில் லென்ஸும் மறுகையில் கலர் பென்சிலுமாய் இருந்த முதல்மேஜை ஆசாமியிடம் ) குப்பா! மீட் மிஸ்டர் 'குசு'ம்பன்!

குப்பன்: ஏன்யா! இதென்னா ஆராய்ச்சிக்கூடமா.. இல்லை கொல்லைப்புறமா?! ஆரம்பத்துல இருந்து கெரகம் கேக்கறதெல்லாம் நாத்தமாவே இருக்கு!

சுப்பன்: அப்படி எல்லாம் சொல்லாத.. இவரு பெரிய அறிவுஜீவி! மத்தவங்க எழுதற ஒவ்வொரு எழுத்துக்கும் கொறஞ்சது 50 அர்த்தமாவது கண்டுபுடிச்சதா சொல்லிகுவாப்புல.. இவருதான் இன்னைய தேதில அங்கதத்துக்கு அளவுகோல்! இவரு பார்த்து அது நகைச்சுவைன்னா அது நகைச்சுவை! இல்லைன்னா அது சீரியஸ் மேட்டரு!

'குசு'ம்பன்: வாங்க குப்பன்! உங்க வணக்கத்துக்கு முன்னாடி நேத்து காலைல வெயிலடிச்சப்ப கொதிக்கற சாம்பாரை எடுத்து பஸ்ல கண்டக்டருக்கு ஊத்தி பள்ளிக்கோடத்துல வாத்தியாரு சாக்பீசை அணு உலைல போட்டுட்டு அடில ஒன்னுக்கு அடிக்கறப்ப தவக்களை தத்துவம் சொல்ல அமெரிக்காவுல புஸ்சு வீட்டுல பூனை கணக்கு எழுத கத்திக்கப்பல் தண்ணில போகும்!

குப்பன்:(உதறலெடுக்க நடுங்கியபடி..) யோவ் சுப்பா.. என்னையா இது? இவனுக்கு அவனே தேவலாம்! இந்த ஒளரு ஒளர்றான்! காத்து கருப்பு அடிச்சிருச்சா? வேப்பிலை வாங்கி அடிக்கலாமா?!

சுப்பன்: நீ வேற! இவரு இப்படித்தான் எழுதுவாரு! கேட்டா நாமளே ஏதாவது புரிஞ்சுக்கிட்டு அர்த்தம் பண்ணிக்கனுமாம்! இவனுக மனவியாதிகளுக்கெல்லாம் நாம எழவெடுக்க வேண்டியிருக்கு... என்னத்த செய்ய?

குப்பன்: இதெல்லாஞ்சரி.. அது என்னைய்யா பேரு 'குசு'ம்பன்?!

சுப்பன்: அதுவா! அதுவும் இவனுக்கு இருக்கற வியாதி! இப்படி லென்சை வைச்சுக்கிட்டு மத்தவங்க எழுதுன பதிவெல்லாம் படிச்சிட்டு, அதுக்கு புதுப்புது அர்த்தமா கண்டுபிடிச்சுட்டு, எழுதனவங்களே ஆச்சரியப்படற அளவுக்கு அவங்க பதிவுக எழுதுனதுக்கு புதுப்புது நோக்கங்களை கண்டுபிடிச்சு வயித்தை நெரப்பிக்குவாப்புல! அப்பறம் என்ன? வயிரு உப்புசமாகி... ஒருநாளு டர்ர்ர்..புர்ர்ர்ருன்னு போட்டுத் தாக்குவாப்புல! ஆனாலும் இவரு எல்லாரு பதிவுகளையும், மனசையும் படிச்ச, அதன் நோக்கங்களை அலசி ஆராய்ஞ்ச அறிவுஜீவி இல்லையா! அதனால நம்ம மாதிரி சாதாரண மனுசங்களுக்கு போறமாதிரி இல்லாம வானவில் மாதிரி கலர்கலரா போகும்!!!

'குசு'ம்பன்: ஆமா! நீங்கெல்லாம் பொறுக்கித் திங்கற பொறம்போக்கு நாய்கதானே! சரிசரி மனசுல வைச்சுக்காதீங்க.. கதை எழுதியிருக்கேன்! வந்து ஓட்டுப்போடுங்க! என்னது போட்டுட்டீங்களா?! அப்படின்னா போங்கடா பண்ணாடைகளா!!

குப்பன்: வெளங்கீரும்! என்ன ஒரு பண்பட்ட பேச்சு! முத்துன கேசுதான் போல! யாரையாவது கடிச்சு வைக்கறதுக்குள்ள ஏதாவது செய்யுங்கப்பா!

சுப்பன்: இதுக்கே இப்படிங்கற? இப்ப நடக்கற கூத்தை பாரு!

'குசு'ம்பன்: முகமூதீ... உன்னைப்பத்தி எழுதி தேன்கூட்டுல போட்டுட்டேன்! நீயெல்லாம் அவங்க லிஸ்டுல வரப்போற.. நீயெல்லாம் எழுத்தாளரு! காலத்தின் கோலத்தை பார்த்தியா?! தமாசையா தமாசு..

முகமூதீ: 'குசு'ம்பரே! நானும் உன்னைப்பத்தின வண்டவாளங்களை எல்லாம் எழுதி தேன்கூட்டுல போட்டுட்டேன்! நீயெல்லாம் சூசக எழுத்தாளாராமே! நீ எழுதறதை கவனமாப் படிச்சு புரிஞ்சுக்கனுமாம்! தமாசையா தமாசு...

குப்பன்:(பிரபு ஸ்டைலில்...) என்ன கொடுமை சார் இது?!

சுப்பன்: கண்டுக்காத... ஏதாவது கேட்டா "நமக்கு நாமே திட்டம்"னு இதுக்கொரு தமாசான பதிலை வைச்சிருப்பானுங்க! இதையெல்லாம் பார்த்து மனசு கொழம்பாத... ஊருக்கு போய் புள்ள குட்டிங்களோட நல்லா விவசாயம் பார்த்து சந்தோசமா இரு!

முகமூதீ: டாய்.. என்ன சொன்ன.. "நல்ல".. "சந்தோசம்"கற வார்த்தையெல்லாம் காதுல விழுகுது.. ஓடியாங்க ஓடியாங்க... இவன் அவனுக்கு முதுகு சொறியறான்.. முதுகு சொறியறான்!!!

குப்பன்: என்ன கெரகம்டா இது! பாராட்டா ஒரு வார்த்தை சொன்னா முதுகு சொறியறதா?! அப்ப இவனுங்க எழுதறதுக்கும் நாலு பேரு நல்லா இருக்குன்னு தானே சொல்லறாங்க.. அது என்னவாம்?!

சுப்பன்: குப்பா! நீ ஆனாலும் ஓவரா கேள்வி கேக்கற?! அவங்களும் நாமளும் ஒன்னா? அவங்க எல்லாம் எழுதறதுக்குன்னே பொறந்தவனுங்க! அதனால பாரட்டுங்கறது எல்லாம் அவனுங்களுக்கு இயல்பு! யாரு கவிஞரு.. யாரு எழுத்தாளரு அப்படிங்கறதுக்கெல்லாம் அவிங்கதான் அத்தாட்சி கொடுப்பாக! மீறி யாராவது அந்த பேரு வாங்கலாம்னு ஆசைப்பட்டீங்க.. அப்பறம் நீங்க எல்லாம் முதுகு சொறியற கூட்டம் தான்!

குப்பன்: என்ன கெரகமோ! என்ன அரசியலோ! மண்டை சுத்துது.. ஆமா.. இப்ப எதுக்கு முகமூதீ கையில தேசியக்கொடிய எடுத்துக்கிட்டு "ஜெய்ஹிந்த்.. ஜெய்கிந்த்"ன்னுகிட்டு இருக்கான்? இது ஏதானா புது வியாதியா?

சுப்பன்: அதெல்லாம் இல்லையப்பு! இங்க ஒரு குரூப்பு இப்ப திராவிடம்.. தமிழன்னு கெளம்பியிருக்கானுங்க.. கூட்டம் வேற நல்லா சேருது.. வந்த புதுசுல முகமூதிக்கும் இப்படி ஒரு கூட்டம் இருந்தது! கருத்துக்களை அம்சமா சொல்லி கலக்கறாறேன்னு... ஆனா போகப்போக... சாயம் வெளுத்துருச்சா.. மக்களும் வெவராயிட்டாங்க...என்னடா இது... தமாசு தமாசுங்கறான்... நாம சிரிச்சா ஒத்துக்கறான்.. புரியாம பார்த்தா நீ வேற குரூப்பாங்கறான்! ஏதாவது கோக்கு மாக்கா கேள்வி கேட்டா மட்டும் மேல விழுந்து புடுங்கறான்!! மத்தவங்க உணர்வுகள் காயப்படுமோன்னு கவலைப்படாம மயிர்த்தமிழ்ங்கறான்.. தமிழ்ப்படுத்தறேன் பேர்வழின்னு பொறுக்கிங்கறான்.. ஆனா அவனை ஏதாவது கேட்டா மட்டும் "என்னை இப்படி கூட்டம் சேர்ந்து அடிக்காதிங்க"ன்னு உணர்வு காட்டறான்.. அப்படின்னு... அதனால இப்பெல்லாம் மக்களும் அவங்கிட்ட வாயக்குடுக்கறது இல்லை! அவன் பாசைல முதுகு சொறியறவங்க மட்டுமே வந்துபோற எடமா பதிவு ஆயிருச்சு! அதனால எப்படி கூட்டம் சேர்த்தறதுன்னு தெரியாம இப்போ திடீர்னு தேசியக்கொடிய தூக்கியிருக்கான் போல..!


குப்பன்: என்ன வாழ்க்கைடா இது?! ஆமா இவங்க எல்லாம் அங்கதம், நகைச்சுவைன்னு இவனுங்களுக்கு பிடிக்காத ஒரு குரூப்பான ஆளுங்களை மட்டும் போட்டுத் தாக்கறாங்களே! மத்தவங்க செய்யற தப்பெல்லாம் இவனுங்களுக்கு கண்ணுக்குத் தெரியாதா?!

சுப்பன்: நீவேற.. இதெல்லாம் தெரியலைன்னு சொல்லி அவனுங்களை மத்தவங்க முன்னாடி கீழ எறக்கிக்குவானுங்களா என்ன?! அதனால அவங்களையெல்லாம் போட்டுத் தாக்காம "சோ"த்தனமான நையாண்டியா மாத்தி ஒருத்தரை ஒருத்தரு கிச்சுகிச்சு மூட்டிக்குவானுங்க.. அவங்களையும் போட்டுத் தாக்குனா அப்பறம் யாரு வந்து அவனுங்களுக்கு பாராட்டுப்பத்திரம் வாசிக்கறது?!

குப்பன்: யய்யா!! இப்பவே கண்ணைக்கட்டுதே?! என்ன விளையாட்டுய்யா இது?! இப்படி அடுத்தவன் பொச்சை சொறிஞ்சுக்கிட்டே இருக்கனுங்களே! இவனுங்களுக்கு எல்லாம் இதைவிட வேற ஒன்னுமே எழுதத் தெரியாதா?!

சுப்பன்: அட்டகாசமா எழுதுவானுங்க! திறமையெல்லாம் அதிகப்படியாத்தான் இருக்கு! ஆனா அதைவிட மண்டைல வெயிட்டு கொஞ்சம் அதிகமா இருக்கு! அதனால வர பிரச்சனைதானப்பு இத்தனையும்!!!

குப்பன்: ஆமா இதெல்லாம் நீ சொல்லறது தெரிஞ்சா அவிங்க உம்மேல கோவப்பட மாட்டாங்களா?!

சுப்பன்: இத்தனை சொன்ன பிறகும் நீ வெளங்காத ஆளாவே இருக்கியே?! அவங்க எல்லாம் என்ன நம்பளை மாதிரி "நையாண்டியைக் கூட இன்சல்ட்"டாக எடுத்துக்கற சமூகமா?".. அவங்க எல்லாம் கருத்து சுதந்திரத்தை வரையருக்கறவனுங்க... அங்கதம்னா என்னன்னு மத்தவிங்களுக்கு வகுப்பெடுக்கறவனுங்க... தமாசு எழுதறதுல கரை கண்டவனுங்க... நிச்சயம் என்னை பாராட்டத்தான் செய்வானுங்க.. நீ வேணா பாரேன்! "பதிவுக்கு நன்றி!", 'இது ஒரு நல்ல பதிவு"ன்னு ஆழமான பின்னூங்களா போடத்தான் போறானுங்க!

குப்பன்: சுப்பா! இப்படி அவிங்களை பத்தி புட்டு புட்டு வைக்கறியே?! இதைப் பார்த்துட்டு "இவனுக்கு ஏன் குடையுது?.. இவனும் அவனுங்க குரூப்பா..."ன்னு கெளம்பிருவானுங்களே!!! உனக்கு எதுக்குடா இந்த வம்பெல்லாம்?!

சுப்பன்: நல்லா கேட்ட போ! நாந்தான் அவனுங்க மனசாட்சியே! சரி விட்டுத் தள்ளப்பு!! இதைவிட உச்சகட்ட இங்கிலீசு தமாசு ஒன்னு சொல்லறேன்! ஆனா அதுக்கு நீ கண்டிப்பா வாயில மட்டும்தான் சிரிக்கனும்! அப்படின்னா சொல்லறேன்!

குப்பன்: சரியப்பா! அதென்னது அது அப்படியாப்பட்ட தமாசு?!

Disclaimer :: This weblog entry is a narration of events actually happened in Bangalore, on may 20, 2006. Any actual resemblance to any other individuals, organisation or events is purely unintentional. © ilavanji

கருத்துகள்

  1. This is awesome! i'd call it 'without reservations' that this is a great personification of parody! ;)

    great job dude! :)

    பதிலளிநீக்கு
  2. நன்றி :-) ** அர்ததம் கண்டுபிடித்து கொள்ளுங்கள் :-)**

    பதிலளிநீக்கு
  3. >> யாருக்குடா துப்பில்லை? அந்த காலத்துல நான் ஒரிஜினல் போட்டோவே போட்டு இங்கிலீசுலயே எழுதினவன்! என்ன? நான் வாய வைச்சுக்கிட்டு சும்மா இல்லாமபோக, அவனவன் மிதிக்கற மிதி தாங்கமுடியாம தமிழுக்கு வந்து முகமூடி போட்டவன்! என் வரலாறு தெரியுமா ஒனக்கு? நான் எதுக்கும் பயப்படமாட்டேன்! ஆட்டோ சத்தத்தை தவிர... >>

    hmmm! DO you have the links to the old blog? ;)

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் இடது பக்கத்தில் இணைத்துள்ள படத்தில் உள்ளதில் மூன்றாவதை நான் பெரும்பாலும் செய்து வருகின்றேன் (You can ignore the teaser)

    நன்றி

    பதிலளிநீக்கு
  5. //ஆனா அதுக்கு நீ கண்டிப்பா வாயில மட்டும்தான் சிரிக்கனும்!//

    :-)))))))))))))))))))

    பதிலளிநீக்கு
  6. இந்த சீப்பை ஒளிச்சு வச்சு கல்யாணத்தை நிறுத்தற புண்ணியவானுங்க தொல்லை தாங்க முடியலைப்பு..

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லாசனி, மே 20, 2006 12:17:00 PM

    "-" for this one.

    I think this post is a reply to other post in this week.I read the same too. Unless otherwise you are a longterm reader of thamizmanam you cant recognize the persons in that post. But in this one you mentioned the names directly and .

    You degraded yourself by publishing this post bcoz you directly attacked the other bloggers.

    I dont know when you guys are going to stop attacking people directly. within this small community of 1000 people you have this much of politics means imagine the real world.

    If this post is to identify yourself that you belong to a group I feel sorry for it

    Waiting for your next kalyanamam kalyanam post

    Senthil

    பதிலளிநீக்கு
  8. //முகமூதி,
    'குசு'ம்பன்,
    'பீ'KS,
    தெரியாத்தனமா அவங்க நாட்டுல ஒரு நியூட்பீச்சுக்கு போயிட்டு வந்ததுல இருந்து இப்படித்தான்! அடிக்கடி 'ஆயிருது'! ஏதாவது சிட்டுக்குருவி லேகியம் சாப்புட்டுப் பாருப்பான்னாலும் கேக்க மாட்டேங்கறான்! இப்படியே போச்சுன்னா இனி பழனி டாக்டருகிட்டதான் காட்டனும்! //

    இளவஞ்சி, என்னதான் நகைச்சுவைப் பதிவானாலும் உங்கள் பொதுவான தரத்திலிருந்து தாழ்ந்ததாகவே தெரிகிறது. எனக்குத் தோன்றியது சொல்கிறேன். அதற்காக எனக்கு எதாவது முத்திரை குத்தாதீர்கள்.

    பதிலளிநீக்கு
  9. படம் பிடிச்சு காமிச்சுருக்கு இந்தப் பதிவு!

    :-))

    தெகா.

    பதிலளிநீக்கு
  10. நன்றாக உள்ளது.
    நல்ல துணிவு தான்.

    பதிலளிநீக்கு
  11. இளவஞ்சி,

    இந்தப் பின்னூட்டத்தினால் யார் என்ன பிராண்ட் எனக்கு குத்தினாலும் கவலையில்லை.

    கொத்தனார் சொன்னதே தான் என் கருத்தும். சின்னவன் 'தங்கச்சியை நாய் கடிச்சுடுச்சு'ன்னு போட்ட பதிவுக்கு பதில் பதிவு போட்ட நீங்களா இப்படி?

    உங்களுக்கு யாரும் பிராண்டு குத்தப் போவதில்லை. தனிப்பட்ட அபிமானங்கள், விருப்புவெறுப்புகள் இருப்பதில் தவறில்லை. ஆனால், நேரடியாக மற்ற வலைப்பதிவாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு இப்படிப்பட்ட ஒரு பதிவை இளவஞ்சியா எழுதினார் என்று ஆச்சரியப்படுகிறேன். அதுவேதான் உங்களைப் படிக்கும் பலரும் நினைப்பார்கள் என்று நினைக்கிறேன்.

    :((((

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லாசனி, மே 20, 2006 3:35:00 PM

    இங்கு சிலர் வந்து நேரடியக பெயர் குறிப்பிட்டது பிழை என்கின்றனர். மூதி போன்றவன் மறைமுகமாக குறிப்பிட்டாலும் அது மற்றவர்களுக்கு விளங்கும்படி தானே எழுதுகின்றான். அப்பிடிய்ருக்கும் பொழுது பெயரை நேரடியாக இட்டாலென்ன மறைமுகமாக இட்டாலென்ன? இங்கு வந்து உங்களைக் குறை கூறியவர்கள் அந்த 'மூதி'யைக் கடிந்தனரா? அதிலிருந்தே அவர்களின் பக்க சாய்வு தெரிகிறது. சொல்ல மறந்துவிட்டேன், இப்பதிவு ரசிக்கக் கூடியதாகவும் உண்மைகளை அறியக் கூடியதாகவும் இருந்தது. அந்த "உச்ச கட்ட"த்தை தவிர்த்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  13. இளவஞ்சி, உங்களிடம் கற்பனை வறட்சி தெரிகிறதே. பதிலடி தரவேண்டுமென்றால் வித்தியாசமாக அல்லவா தரவேண்டும்.

    அவருடைய பாணியிலேயெ பதில் அளித்ததால் உங்களின் பதிவின் தரம் குறைகிறது. இரண்டாவது முறையாக என்னுடைய பதிவில் நான் எதிர்பார்க்கும் பின்னூட்டன்களைப் போட்டதால் வெகுண்ட நீங்கள் போய் முகமூடியை காப்பி அடிப்பது அவ்வளவு நல்லதாக இல்லை

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லாசனி, மே 20, 2006 7:39:00 PM

    அதாவது யோசிச்சு படிச்சா புரியற மாதிரி இருந்தா நகைச்சுவை யாம். இலலாட்டி அது தாக்குதலாம். நலலா இருக்கு சாமி உங்கள் நடுநிலைமைத்தனம்.

    மாயவரத்தான், துளசி கோபால், சிங்கை சிவா, பெத்த ராயுடு, இலவசகொத்தனார், செல்வன், பொன்ஸ், கார்த்திக், ஏஜெண்ட், பி.கே.எஸ், மீணாக்ஸ், பினாத்தல் சுரேஷ், எஸ.கே, கால்கரி சிவா, சந்தோஷ், கோபி, தேவ்
    இவங்கள்ளாம் தான் அங்க பின்னூட்டம் இட்டு ரசிச்சிருக்காங்க. இவங்க கருத்து என்ன இந்த பதிவுக்கு?

    பதிலளிநீக்கு
  15. மாயவரத்தான், துளசி கோபால், சிங்கை சிவா, பெத்த ராயுடு, இலவசகொத்தனார், செல்வன், பொன்ஸ், கார்த்திக், ஏஜெண்ட், பி.கே.எஸ், மீணாக்ஸ், பினாத்தல் சுரேஷ், எஸ.கே, கால்கரி சிவா, சந்தோஷ், கோபி, தேவ்
    இவங்கள்ளாம் தான் அங்க பின்னூட்டம் இட்டு ரசிச்சிருக்காங்க. இவங்க கருத்து என்ன இந்த பதிவுக்கு? ////

    அந்த பதிவை நான் ஒன்றும் ஆதரித்து பின்னூட்டம் இடவில்லை.சுப்பன் என சொல்லியிருந்தது யார் என தெரியவில்லை.அதனால் அது யார் என்று மட்டும் கேட்டேன்.இந்த பதிவில் அனைவரையும் தெரிந்துவிட்டதால் கேள்வி கேட்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.அண்ணே என சொல்லியிருந்தது நான் பிறந்த கொங்கு மண்ணின் விளிக்கும் முறை.இதுவரை பெரும்பாலான பின்னூட்டங்களில் அக்கா,அண்ணா,ஐயா,சார்,தம்பி என கொங்கு நாட்டு மண்ணுக்கேற்ப மரியாதையாகத்தான் அனைவரையும் விளித்திருக்கிறேன்.

    அன்புடன்
    செல்வன்

    பதிலளிநீக்கு
  16. //நேரடியாக மற்ற வலைப்பதிவாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு இப்படிப்பட்ட ஒரு பதிவை இளவஞ்சியா எழுதினார் என்று ஆச்சரியப்படுகிறேன்.
    //
    //இளவஞ்சி, என்னதான் நகைச்சுவைப் பதிவானாலும் உங்கள் பொதுவான தரத்திலிருந்து தாழ்ந்ததாகவே தெரிகிறது. எனக்குத் தோன்றியது சொல்கிறேன். அதற்காக எனக்கு எதாவது முத்திரை குத்தாதீர்கள்.
    //
    //அவருடைய பாணியிலேயெ பதில் அளித்ததால் உங்களின் பதிவின் தரம் குறைகிறது.
    //

    வாழ்க நடுநிலமை.....

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லாசனி, மே 20, 2006 11:18:00 PM

    இளவஞ்சி, உங்கள் இரசிகர்களை ஏமாற்றி விட்டீர்கள். If they stoop, should you also ?

    பதிலளிநீக்கு
  18. இளவஞ்சி,

    You are in full form! கவலைப்படாமல் அடிச்சு ஆடுங்க. ஏற்கனவே சில பூனைகள் வெளியே வந்து விட்டன...

    பதிலளிநீக்கு
  19. ம்ம்ம்...

    "தெரியுண்டா... நீயெல்லாம் அந்த குரூப்புதானே.."ன்னு முத்திரை குத்தாம "இளவஞ்சியா இப்படி எழுதியது?" என நீங்கள் கேட்பதன் மூலம் என்மீது வைத்துள்ள நம்பிக்கையும் மரியாதைக்கும் முதலில் என் நன்றிகள்!

    பின்னூட்டமளித்த நண்பர்களுக்கும் என் நன்றிகள்!

    நான் எதிர்ப்பார்த்த கீழ்க்கண்ட பின்னூட்டங்களில் ஒன்றாவது வந்திருந்தால் இதை எழுதியதன் நோக்கம் நிறைவேறியிருக்கும்!

    1. "இந்த பதிவு யாரையாவது குறிப்பிட்டால் அது தற்செயல்தான்..." என்ற ஒரு வரியை கடைசியில் போட்டுவிட்டால் நீ யாரைப்பற்றி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதலாமா? என்ன ஒரு அயோக்கியத்தனமான கோழைத்தனமான டெக்னிக் இது?!

    2. "நையாண்டியை இன்சல்ட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது" என்ற அறிய பெரிய தத்துவம் எவ்வளவு குயுக்தித்தனமானது?! "இது எனக்கும் நகைச்சுவைதான்" என்று யாரைக்குறித்து எழுதப்பட்டதோ அவன் சொல்ல வேண்டுமா? இல்லை எழுதறவனே "நான் உன்னைப்பற்றி கேவலமாக எழுதுனதுக்கெல்லாம் இன்சல்ட் ஆகாத மகனே! நகைச்சுவை உணர்வை வளர்த்துக்க" அப்படின்னு எழுதறவன் சொல்லனுமா?! உனக்கெல்லாம் எவ்வளவு கொழுப்பு இருந்தா... அடுத்தவனை பத்தி பூடகமா கேவலம எழுதிட்டு "நையாண்டியைக்கூட இன்சல்ட்டாக எடுத்துக்கொள்ளனும் சமூகம்" னு சொல்லுவ?!

    3. பேரை கொஞ்சம் மாத்தி என்ன வேணா எழுதலாம்! அது தனிமனித தாக்குதலாகாதுங்கற தொணில எழுதியிருக்கயே?! நீ எல்லாம் சோத்தைத்தான் திங்கறயா?!

    ம்ம்ம்... உங்க உணர்வுகள் எல்லாம் அந்த அளவுக்கு பட்டுப்போயுள்ளது?! எழுதறவனின் இமேஜ் அவன் செய்யும் தவறுகளை கண்டுக்காமல் போகவேண்டும் என்ற அளவுக்கா உங்கள் கண்களை மறைக்கிறது?! என் எதிர்பார்ப்பில் மண்! சரி விடுங்க! நானே சொல்கிறேன்!

    "இது யாரையும் குறிப்பிடுவதல்ல" என்று போடுவிட்டு அடுத்தவங்களைப்பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம்.. என்னை எவனும் கேட்க முடியாது என்ற தொனியிலிருக்கும் இந்த பதிவு அயோக்கியத்தனமானது!

    கேவலமாக எழுதுவதையெல்லாம் எழுதிவிட்டு இதெல்லாம் இன்சல்ட்டா இல்லாம நகைச்சுவையா எடுத்துக்க என்று சொல்லும் இந்த பதிவு மகா மகா அயோக்கியத்தனமானது!!! எப்படி ஒரு அயோக்கியத்தனமான பதிவு எழுதக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த பதிவு என்றைக்கும் இங்கு இருக்கும்!

    குழலி, உங்களுடைய 3வது தேர்வு மிக உபயோகமானது! ஆனா இந்த தடவை மட்டும் நான் கடைசி சாய்சை எடுத்துட்டேன்!

    செந்தில், பெயரை சூசகமா சொல்லி மேட்டரை பூடகமா கேவலமா எழுதினா மட்டும் அது நையாண்டி! ஆனா பார்த்தவுடனே யாருன்னு தெரிஞ்சுக்கற மாதிரி எழுதுனா அது மோசமான பதிவு?! இந்த ஸ்கேலை எங்கப்பு கண்டுபிடிச்சீங்க?! :) ரெண்டுமே ஒரே அளவு கேவலம்தான்!

    கடைசியாக, கால்கரி...

    நீங்கள் சொல்லும் நபர் யாரென்று எனக்கு தெரியாது! ஆனால் நீங்கள் கண்டறிந்த உண்மைகளான கற்பனை வறட்சி, காப்பி போன்றவை புல்லரிக்க வைக்கிறது! இதெல்லாம் இங்க பெங்களூர்ல நிஜமாகவே நடந்ததுதான்! நம்பலையின்னா ஒரு ஸ்மைலி வேணா போடறேன் :))

    உங்கள் அனைவரின் வருகைக்கும், கருத்துக்களுக்கும், 'ஊக்கங்களுக்கும்' என் நன்றிகள்! :)

    பதிலளிநீக்கு
  20. பல பேருடைய நடுநிலைமை சந்தி சிரித்தது. பதிவுக்கு நன்றி இளவஞ்சி.

    நாகரீக அனானிமசு

    பதிலளிநீக்கு
  21. english peters,

    kindly give your judgement on mugamoodi's post also.

    பதிலளிநீக்கு
  22. english peter 2,

    உங்களுக்கும் அதேதான்!

    நீங்கள் சொல்லும் நபர் யாரென்று எனக்கு தெரியாது! இதெல்லாம் இங்க பெங்களூர்ல நிஜமாகவே நடந்ததுதான்! நம்பலையின்னா ஒரு ஸ்மைலி வேணா போடறேன் :))

    பதிலளிநீக்கு
  23. இளவஞ்சி,
    முதல் முறையாய் அங்கதப்பாணி பதிவு முழுவதும் புரிந்தது. நன்றி. முகமூடியின் சமீப பதிவையும் படித்து, வழக்கப்படி முழித்தேன். இணைய குசும்பனின் பதிவுகள் 99% சதவீதம் புரியாது. அதனால் எங்காவது நான் வந்தால், நுனிப்புல்லுக்கு லிங்க் கொடுத்துவிடுங்கள் என்றுக் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.ஞானபீடத்தின் சில பதிவுகள் கூட புரிந்ததில்லை.
    அவ்வப்பொழுது, இணையத்தில் இல்லாததால் ஏற்படும் பிரச்சனை இது.

    நகைசுவை வேறு, அங்கதம் வேறு. அங்கதத்திற்கு சமீப உதாரணம், சத்தியராஜ் மாகநடிகன் படத்தில், கூட்டத்தில் பேசிவிட்டு, ஏமிரா அதி என்று தெலுங்கில் பின்னால் திரும்பி கேட்பார். அந்த அங்கத்ததிற்கு தியேட்டரே கைதட்டலிலும், சிரிப்பிலும்
    ஆடிப் போனது என்பது பத்திரிக்கை செய்தி. ஆனால் அதைப் பார்த்தால் கேப்டனுக்கு பிபி சர் என்று ஏறி இருக்கும்.

    சிவகாமியின் சபதத்தில் கூட, மகேந்திர பல்லவன் எழுதிய நாடகத்தை சிவகாமி, குடித்துவிட்டு உளறும் புத்த பிஷூவாய் நடிக்க, பார்க்கும் நாக நந்தியின் முகம் மாறும்.

    இன்று தமிழ் பதிவில் பலரும் எழுதுகிறார்கள். பிரபலம் ஆன சிலரை பற்றி நேரே சொல்ல முடியாமல், இப்படி நையாண்டி என்ற போர்வையில் சில விஷயங்களை சொல்கிறார்கள். இப்படி சொல்வது சரியா தவறா என்றுக் கேட்காதீர்கள். எனக்கு தெரியவில்லை. ஆனால் படிக்கும்பொழுது நன்றாகத்தான் இருக்கிறது. அதீதமாய் போகாமல், மிக பர்சனலாய் தாக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
    பி.கு உனக்கு தேவையா இது? இரண்டும் நல்லா இருக்கு என்று சொல்கிறாயே என்று மனசாட்சி திட்டுகிறது

    பதிலளிநீக்கு
  24. //மாயவரத்தான், துளசி கோபால், சிங்கை சிவா, பெத்த ராயுடு, இலவசகொத்தனார், செல்வன், பொன்ஸ், கார்த்திக், ஏஜெண்ட், பி.கே.எஸ், மீணாக்ஸ், பினாத்தல் சுரேஷ், எஸ.கே, கால்கரி சிவா, சந்தோஷ், கோபி, தேவ் இவங்கள்ளாம் தான் அங்க பின்னூட்டம் இட்டு ரசிச்சிருக்காங்க. இவங்க கருத்து என்ன இந்த பதிவுக்கு? //

    என்னப்பா வம்பா போச்சு.. பின்னூட்டம் போடும் போது கூடவா டிஸ்க்ளெய்மர் போட முடியும்?!!! நானும் செல்வன் மாதிரியே சொல்றேன்.. அவருக்காவது அந்தப் பதிவுல ஒருத்தர் தான் யார்னு தெரியலை, எனக்கு யாருமே யார்னு தெரியாத காரணத்தால் தான் டிக்ஷ்னரி கேட்டேன்.. கேட்கும்போது ஒ.பு.ஒவாகத் தான் இருந்தது. புரிஞ்சப்போ கொஞ்சம் கடுப்புதான். அங்க எழுதி என்ன ஆகப் போகுதுன்னு விட்டாச்சு. இனிமேலாவது நெஜமாவே 'ரசிச்சவங்க' யாரையாவது கூப்பிட்டு கருத்து கேளுங்க!!!

    இளவஞ்சி, யாருமே சொல்லலைன்னு வருத்தப் படாதீங்க,
    1. "இந்த பதிவு யாரையாவது குறிப்பிட்டால் அது தற்செயல்தான்..." என்ற ஒரு வரியை கடைசியில் போட்டுவிட்டால் நீங்க யாரைப்பற்றி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதலாமா? என்ன ஒரு அயோக்கியத்தனமான கோழைத்தனமான டெக்னிக் இது?!
    2. பேரை 'கொஞ்சம்' மாத்தி என்ன வேணா எழுதலாம்! அது தனிமனித தாக்குதலாகாதுங்கற தொனில எழுதியிருக்கீங்களே! இதுக்கு நீங்க பேரை மொத்தமா மாத்தியே எழுதி இருக்கலாம்!!!

    பதிலளிநீக்கு
  25. உஷா,

    //அதீதமாய் போகாமல், மிக பர்சனலாய் தாக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். // எங்கே? இங்கே மட்டுமா?!

    ;) ( கவனியுங்கள்! ஸ்மைலி... இது ஒன்னை போட்டுட்டால் என்ன வேண்டுமானலும் எழுதலாம்!! : )

    ****

    வாம்மா பொன்ஸ்,

    //யாருமே சொல்லலைன்னு வருத்தப் படாதீங்க //

    சேச்சே! சந்தோசமா இருக்கு! நீயாவது... "இங்க மட்டுமாவது".. சொன்னியே! நன்றி!

    :)

    பதிலளிநீக்கு
  26. அய்யா அனானி,

    // மாயவரத்தான், துளசி கோபால், சிங்கை சிவா, பெத்த ராயுடு, இலவசகொத்தனார், செல்வன், பொன்ஸ், கார்த்திக், ஏஜெண்ட், பி.கே.எஸ், மீணாக்ஸ், பினாத்தல் சுரேஷ், எஸ.கே, கால்கரி சிவா, சந்தோஷ், கோபி, தேவ் இவங்கள்ளாம் தான் அங்க பின்னூட்டம் இட்டு ரசிச்சிருக்காங்க. இவங்க கருத்து என்ன இந்த பதிவுக்கு? //

    அங்க கேட்ட கேள்வியை தான் இருக்கும் கேட்கிறேன்.. அடுத்த தடவை பதிவுகளாராய்ச்சி மையத்துக்கு போகும் போது என்னையும் அழைத்து செல்வீர்களா ? நிஜமாத்தான் கேக்குறேன்..

    என்னையும் மதிச்சி கருத்து கேக்குறிங்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ஆனா நீங்க யாருன்னு எனக்கு தெரியல. யாருன்னு சொல்லுவீங்களா ? .

    இன்னாருக்குத்தான் பதில் சொன்னேன்ன்னு தெரிஞ்சிக்குவேன் :-).. இங்கு இல்லை தனி மெயிலில் ..

    ***

    வாத்தியார் இளவஞ்சி,

    //நான் எதிர்ப்பார்த்த கீழ்க்கண்ட பின்னூட்டங்களில் ஒன்றாவது வந்திருந்தால் இதை எழுதியதன் நோக்கம் நிறைவேறியிருக்கும்!

    நான் இந்த கமென்ட்ஸ் எல்லாம் எழுதுனதா நினைச்சிகோங்க :-).. நீங்க எழுதுன நோக்கம் நிறைவேறிவிட்டது :-)

    பதிலளிநீக்கு
  27. //எங்கே? இங்கே மட்டுமா?!//

    இதை பொதுவா எல்லாருக்கும் சொன்னேன். நீ யாரூ சொல்ல என்றால் பி.கு வில் நான் எழுதியவைகளை நானே இன்னொரு முறை படிச்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  28. உஷா,

    //நீ யாரூ சொல்ல என்றால் // தயவு செய்து அவசரப்படாதீர்கள்! நான் அந்த புரிதலில் சொல்லவில்லை! அப்படிச்சொல்ல வேண்டிய அவசியமும் நமக்குள் இல்லை!!

    எனினும் தவறெனில் மன்னிக்க!

    பதிலளிநீக்கு
  29. இளவஞ்சி, அதேதான். இந்த புரிதல் இருப்பவரிடம் லேசாய் சொல்லாமல் விட்டதில்லை. யார் யார் இடம் என்று நான் நீரூபிக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். ஆனால் நட்புக்கு நான் கொடுக்கும் மரியாதையை எதிராளியும்
    தர வேண்டும் என்று எதிர்பார்ப்பேன். எங்கு யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று இத்தனை வயது அனுபவத்தில் தெரியாதா என்ன? பிடிப்படாத, புரியாத இடத்தில் நான் போவதும் இல்லை, அப்படி போனாலும், வேறு என்ன
    குமியும் பின்னுட்டங்களைப் பார்த்து வேகமாய் ஒரு பார்வைப் பார்த்து விட்டு விட்டு நகர்ந்து விடுவேன். அது என் உடம்புக்கும், மனசுக்கும் நல்லது.
    திரும்ப, சொல்கிறேன். அங்கதம் எழுதுவது மிக கடினமான காரியம். இதை முன்பு சொன்னது எழுத்தாளர் பாரா. எங்க எப்பொழுது என்று கேட்டுவிடாதீர்கள். தேடி லிங்கு எடுத்துக் கொடுக்க இயலாது. இங்கு உங்கள் இடத்தில் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் - அதீத கேலியும், கிண்டலும் நல்ல நட்பு உள்ளவர்களிடமே கோபத்தை
    ஏற்படுத்தும். அப்படி இருக்க, ஒத்த எண்ண அலைகளில் வராதவர்களை் கொஞ்சம் பார்த்து....

    பதிலளிநீக்கு
  30. 1. முகமூடியின் பதிவைப் படித்தபோது யாரையோ நக்கல் அடிப்பது புரிந்தது.
    யாரைப்பற்றி என்று தெரியாததால் ரசிக்க முடிந்தது.

    2. இளவஞ்சியின் பதிவு கொஞ்சம் விளக்கியது.

    முகமூடியின் பதிவை படித்தபோது, இது வழக்கமா நடக்கறதுதானே, அப்படின்னு ஒரு எண்ணம்.

    இளவஞ்சியின் பதிவைப் படித்தபோது, அடடா, இவரா இப்படி பதிவு போட்டிருக்கிறார் என நினைத்தாலும் அவருடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிந்தது.

    பதிலளிநீக்கு
  31. இளவஞ்சி, உங்கள் மனம் புரிகிறது. அதைப் புரிந்துகொள்ளாமல் பிதற்றுகிறார்கள் பலர் இங்கே. அவர்களைப் பொறுத்தவரை நேரடியாகப் பெயர் சொன்னதுதான் பிரச்சனை.

    இல்லையென்றால் உங்களுக்கும் அங்கதம் கால்வந்த கதையாகியிருக்கும்., இளவஞ்சியின் நகைச்சுவை உணர்வையும் சரி, அர்த்தமுள்ள பதிவுகளையும் சரி புரிந்துகொண்டவன் என்ற முறையில் அநானியாகவாவது வந்து ஆதரவை தரவே என்னையும் அநானியாக மாற்றிக் கொண்டுள்ளேன்.

    இப்படிக்கு வருத்தத்துடன்
    ஒரு அநானி

    பதிலளிநீக்கு
  32. //அதாவது யோசிச்சு படிச்சா புரியற மாதிரி இருந்தா நகைச்சுவை யாம். இலலாட்டி அது தாக்குதலாம். நலலா இருக்கு சாமி உங்கள் நடுநிலைமைத்தனம்.

    மாயவரத்தான், துளசி கோபால், சிங்கை சிவா, பெத்த ராயுடு, இலவசகொத்தனார், செல்வன், பொன்ஸ், கார்த்திக், ஏஜெண்ட், பி.கே.எஸ், மீணாக்ஸ், பினாத்தல் சுரேஷ், எஸ.கே, கால்கரி சிவா, சந்தோஷ், கோபி, தேவ்
    இவங்கள்ளாம் தான் அங்க பின்னூட்டம் இட்டு ரசிச்சிருக்காங்க. இவங்க கருத்து என்ன இந்த பதிவுக்கு?

    //

    அனானிமஸ்,

    கவுண்டமணி செந்த்திலை அடித்தது ஒரு வகை காமெடி.

    இதிலிருந்து வித்தியாசமாக வடிவேலு அவ்வ்வ்வ்வ் என்று அழுவது வேறு விதமான காமெடி

    இந்த வித்தியாசம் இருந்ததால் தான் வடிவேலுவிற்கு இப்போதைக்கு மார்கெட்.

    இளவஞ்சி யும் அவர் யாரென்று அறியாத முகமூடி போல் காமெடி செய்வது போர் அடிக்கிறது.

    இவ்வாறு சொல்வது "இயக்கத்தினர்க்கு" பிடிக்கவில்லையென்றால் அதைப் பற்றி கவலை எனக்கில்லை ஏனென்றால் நான் எந்த இயக்கத்திலும் இல்லை

    பதிலளிநீக்கு
  33. இளவஞ்சி!

    இங்கும் 'நுண்ணரசியல்' விளையாடுகிறது! என்னவென்பது எல்லோருக்குமே புரிந்த ஒன்றுதான்!

    கொஞ்ச நாட்களுக்கு முன்பு எழுத்தாளர் எஸ்.ரா 'குட்டி ரேவதி' 'துப்பட்டா' விவகாரம் - வந்தபோது, யார் யாரெல்லாம் அவருடைய "நேரடியான பெயர் குறிப்பிடும்" "அயோக்கியத்தனத்தை" ஆதரித்தனர் - வலைப்பதிவுகளில் 'கம்பு சுழற்றினார்கள்' என்பதும் இப்போது நினைவுக்கு வந்து தொலைக்கிறது!!

    உங்கள் பதிவு - இம்மாதிரியான சூழலில் தேவையான ஒன்றுதான் என்றுதான் முடிவெடுக்க வேண்டியிருக்கிறது.

    I like it that you are not playing any defensive strokes! Take 'em on! ;)

    பதிலளிநீக்கு
  34. முதலில் எழுதியது கற்பனை!
    பின்னால் அது போலவே வருவது 'காப்பி' [அ] தழுவல்.

    அதற்குப் போட்டி என எழுத நினைத்தபின், தனித்துவம் இல்லையே எனச் சிலர் அங்கலாய்ப்பது எல்லாம் வேண்டாத வேலை.

    பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைத்துப் போட்ட பதிவு இது.

    யாரென்பதே புரிதல் மிகவும் கடினம் என்னும் வகையில் எழுதப்பட்ட அந்தப் பதிவுக்கும், 'இன்னார்தான் என் இலக்கு' என வரையப்பட்டிருக்கும் இதற்கும் மிகவும் அதிக வேறுபாடுகள் உண்டு.

    என்னைப் பொறுத்தவரைக்கும், முதலாவது சற்றுக் கண்ணியமானதாகவும், சுவையானதாகவும் இருந்தது.[நையாண்டி]
    பின்னது, கோபத்தில் எழுதப்பட்டதாலோ என்னவோ, சற்று கொச்சையாகவும் , தவிர்த்திருக்கப்பட வேண்டிய சிலபகுதிகளைக் கொண்டதாகவும் இருந்தது. [அங்கதம்]

    என் 'கருத்து சுதந்திரப்படி' இதில் பின்னூட்டம் இட வேண்டாம் என இருந்தேன்.
    ஆனால், பெயர் குறிப்பிட்டு அழைத்ததால், சொல்லவேண்டிய கட்டாயம்!

    கருத்து சுதந்திரத்தைத் 'தனி நபர் தாக்குதலுக்கு'[அங்கதம்] பயன்படுத்தாமல், நையாண்டிக்கு மட்டும் பயன்படுத்தினால் தமிழ் மணக்கும்;
    இல்லையேல் நாறும்!
    அது அவரவர் சுதந்திரம்.

    சொல்லிவிட்டேன்!

    "இருவர் மீதும் குற்றமில்லை!
    "இணையம்" செய்த குற்றமடி!"

    :))

    நன்றி!

    பதிலளிநீக்கு
  35. //என்னைப் பொறுத்தவரைக்கும், முதலாவது சற்றுக் கண்ணியமானதாகவும், சுவையானதாகவும் இருந்தது.[நையாண்டி]
    பின்னது, கோபத்தில் எழுதப்பட்டதாலோ என்னவோ, சற்று கொச்சையாகவும் , தவிர்த்திருக்கப்பட வேண்டிய சிலபகுதிகளைக் கொண்டதாகவும் இருந்தது. [அங்கதம்]
    //
    பதிவர்களின் முகமூடிகள் தான் கிழிகிறதோ என்று நினைத்தேன், ஏதேது பின்னூட்டர்களின் முகமூடியும் சேர்த்து கிழிகிறதே.....

    நன்றி

    பதிலளிநீக்கு
  36. இளவஞ்சி....மொதல்ல இந்தப் பதிவுக்கு வந்தப்ப.....இது ஏதோ நகைச்சுவைப் பதிவுன்னு நெனச்சேன். அப்புறந்தான் தெரியுது...இது ஏதோ சீரியஸ் மேட்டருன்னு. எழுதுனது பலது புரிஞ்ச மாதிரி இருந்தாலும் புரியலை. :-( எனக்கு என்னவோ ஆயிருச்சோன்னு திக்குன்னு இருக்கு........

    பதிலளிநீக்கு
  37. இங்கே என்ன நடக்குது? இதுவரை இங்கே பின்னூட்டம் போடாமலேயே நம்ம பேரு ஏகத்துக்கும் ரிப்'பேர்'
    ஆகிக் கிடக்கு.

    மெள்ள என்ன ஏதுன்னு பார்த்தா இந்த 'நாய்' தான் விவகாரமா?

    ஏம்ப்பா,' மிருக ஸ்நேகி'தின்ற முறையிலே நாய்ப் பதிவைப் படிச்சு கமெண்ட்ஸ் போட்டதும் தப்பாப் போச்சே(-:

    ஆனா, இளவஞ்சி,

    ரொம்ப உணர்ச்சிவசபட்டுப் போட்ட மாதிரி இருக்குதேப்பா.

    பதிலளிநீக்கு
  38. //ஐயா,

    அங்கிருந்து "நான் கண்ட பேய்கள்" என பதில் வரும்.

    இதை சொல்வதால் சில பேருக்கு புல்லரித்து எரியவும் செய்யும்

    (நிஜ) பிராணிகளின் நண்பன்

    கால்கரி சிவா//

    இது ஜால்ரா சத்தம் !!

    //இளவஞ்சி, உங்களிடம் கற்பனை வறட்சி தெரிகிறதே. பதிலடி தரவேண்டுமென்றால் வித்தியாசமாக அல்லவா தரவேண்டும்.

    அவருடைய பாணியிலேயெ பதில் அளித்ததால் உங்களின் பதிவின் தரம் குறைகிறது//

    இது மட்டையடி!!!

    கால்(கேப்)மாரி'சவா'வின் முகமூதியும் டர்ர்ர்ர்ர்!(கிழியுற சத்தம் தான்)

    பதிலளிநீக்கு
  39. என்ன கொடுமை சார் இது ?(பிரபு ஸ்டைல்-சந்திரமுகி படம்)

    மிகவும் ரசித்து சிரித்தேன். பின்னூட்டம் கோஷ்டியினரில் பலரின் பவுசு வெளிப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  40. எளவஞ்சி,

    நானும் இவனுங்களுக்கு ரெண்டு வருசமா யாராவது மணி கட்டுவானானுங்களான்னு பாத்துகினுத்தான் இருக்கன்.

    கொள்கைனு லட்சியமுனு எவனாவது சொல்லக்கூடாது. மூஞ்சை காட்டாம எவனாவது ஒர்த்தன் வாந்தி எடுப்பான். உடனே அதுக்குன்னே காத்திருந்த மாதிரி ஒரு கும்பல் வந்து கொலை கொலையா முந்திரிக்கா பாடும்.அந்த வாந்தியை எடுத்து தலையில் தெளிச்சிக்கும்.

    இவனுஙக இஸ்டைலு என்னன்னா

    பக்திமான் பரம்பரை மாரி வேசம் கட்டறது, இவனுங்க மூச்சு காத்து இல்லாட்டா தேசிய கொடி பறக்காதுங்கறது

    இவனுக இஸ்டைலு தெரியாம கொளுகை பேசின கிறுக்கு பயலுவள இவன் தாக்க, அந்த மடச்சாம்பிராணிங்க அதை புரியாமக்கூட கெடந்தானுங்க.

    கொலை கொலையா முந்திரிக்காய் பாடுன ஆளுங்க நீ அடிச்சி பேசின உடன அய்யோ எளவஞ்சி இப்டியா நீன்னு பீல் பன்ணி ஓன்ணு ஒப்பாரி

    முகமூடி கிழிஞ்சு பலநாள் ஆவுது.ஒரு பொம்பிளை புள்ளையை டபுள் மீனிங்ல பேசினானே அன்னைக்கே அவங்கதை முடிஞ்சது.இன்னி தேதிக்கு நீ கட்டுனது அவனுக்க இல்ல.கொலை கொலையா முந்திரிக்கா கோஷ்டிக்கு மணி.இது நடுவில யாராவது அலறினாக்க ஒளியறதுக்கு ஒரு ஜெய்ஹிந் பதிவு வெற.படிச்சிட்டு சிலிர்க்கறாங்களாம் மக்க.

    கொலை கொலையா முந்திரிக்கா பாடறதுக்கு முன்ன போய் மூஞ்சை கண்ணாடில பாருங்கடா டேய்.

    பதிலளிநீக்கு
  41. நம்ம மண்டைக்கு பதிவு புரியுதே தவிர பதிவுக்கான காரணம் புரியவில்லை.

    பின்னூட்டத்துல கால்கரி சிவா காமெடி நல்லா இருக்கு.என்ன நடுநிலமை !என்ன நடுநிலமை!

    பதிலளிநீக்கு
  42. இவங்க எல்லாம் "அறிவிக்கப்படாத குழுவினராக" எவ்வித கூச்சமும் இன்றி ஒரு 'மாஃபியா' போல் செயல்படுகிற அதே வேளையில், பூடகங்கள் இல்லாமல் கருத்துக்களின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயல்படுவோரை இழிவாகப் பேசுவார்களாம்..அது 'நல்ல அங்கதமாம்'! இதைச் சொல்லுவதற்கு நடுநிலைவியாதி பீடித்தவர்களின் அணிவகுப்பு இங்கு 'படை'யெடுத்து வருகிறது!

    ரிங் சொலிங், ஜாலிம் லோஷன்-லாம் தீந்து போயிருச்சு போல!

    பதிலளிநீக்கு
  43. என்ன நடக்குது இங்க... எனக்கு ஒன்னும் புரியலை...

    பதிலளிநீக்கு
  44. உதயகுமார் >> எனக்கு பிரியுது உன் கவலை.. நம்ம பாட்டுக்கு ஃபோரம் போன ஜோர்ல கல்யாணமாம் கல்யாணம் பார்க்க வந்தா.. இங்க ஒரே கூப்பாடா கிடக்குதுனு பீல் ஆவுற.. மெர்சலாகம வெயிட் பண்ணுப்பா.. நம்ம இளவஞ்சி அப்படியெல்லாம் நம்மள டீல்ல வுட மாட்டாரு.. சீக்கிரமா க.க. 4வது பாகம் வந்துரும்..

    (ண்ணா.. நம்பி வாக்கு குடுத்துட்டேன்.. தயவு பண்ணுங்க)

    பதிலளிநீக்கு
  45. ஜோ / Joe said...
    நம்ம மண்டைக்கு பதிவு புரியுதே தவிர பதிவுக்கான காரணம் புரியவில்லை.
    .........ஆஹா, அதே!

    பதிலளிநீக்கு
  46. சகோதரரே, ஒன்றும் புரியவில்லையே. ஏதோ முக்கிய விவகாரம் என்பது மட்டும் புரிகிறது.

    பதிலளிநீக்கு
  47. குசும்பனுக்கும் PKSக்கும் சில விளக்கங்கள்...

    குசும்பன் /PKS,

    முதலில் ஒரு நாய் வண்டியை எடுத்துக்கொண்டு தெருத்தெருவாக திரிந்து நாய்களைப்பிடித்து வந்து நாய்க் கண்காட்சி வைக்காமல் பெயரைச்சொல்லி முகத்தில் குத்திய உங்கள் நேர்மைக்கு என் வந்தனங்கள்!

    இதை எழுதுவதற்கான ஒரே காரணம் "பாஸ்டன் பாலாஜி, இகாரஸ் ப்ரகாஷ், பத்ரி சேஷாத்ரி, உஷாஜி போன்றோர் இளவஞ்சியிடம் கேட்டுச் சொன்னால் நல்லதுதான்" என்ற வரிகள்தான்! அவர்கள் என்னை கேட்கப்போவதில்லை. ஆனாலும் சிலவற்றை சொல்லவதன் மூலம் அவர்களுக்காவது என் அயோக்கியத்தனமான அங்கதத்தில் சொல்ல வந்த உணர்வுகள் புரியுமென்ற நம்பிக்கைதான்!

    எனக்கும் இளவஞ்சிக்கும் என்ன தொடர்பு? எதற்காக என்னைத்தாக்கி பதிவிடுகிறார்? நான் என்றைக்காவது அவரைத் தாக்கியதற்கான சுட்டிகளை கொடுக்கமுடியுமா? என்ற கேள்விகளுக்கான பதில்களை தேடும்முன் உங்களுக்கு அதே கேள்விகளை இங்கே வைக்கிறேன்! இத்தனை நாட்கள் நீங்கள் அங்கதம் என்ற பெயரில் அனைவரையும் போட்டுத்தாக்கும் பதிவுகளைப்போட்டதில் எத்தனை பேர் உங்களோடு தொடர்புடையவர்கள்? எத்தனை பேர் உங்கள் மீது கொண்ட வன்மம் காரணமாக உங்களை அவதூறாக தாக்கி பதிவிட்டிடுக்கிறார்கள் என்பதற்கான சுட்டிகளை என் பார்வைக்கு அளிக்க முடியுமா? உங்களைப்பற்றி அங்கதம் என்ற பெயரில் அவதூறாக பதிவிடுவதற்கு உங்களையும் உங்கள் கருத்துக்களையும் பிடிக்காமல் இருந்தாலே போதும்! இதுபோல போட்டுத்தாக்கிவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம்! நாமெல்லாம் செய்து கொண்டிருப்பதைப்போல. போட்டுத்தாக்கிய ஒரே ஒரு பதிவின்மூலம் உங்கள் தரமெல்லாம் இறங்கி என்னை கிழிகிழியென கிழித்து பதிவுகள் இடும் அளவுக்கு உங்களுக்கு கோபம் வருகிறதே? உங்கள் அங்கததின் மூலம் பாதிப்பான மற்றவர்களுக்கு எவ்வளவு கோபம் வரும் என்று என்றைக்காவது நினைத்துப்பார்த்திருக்கிறீர்களா? அல்லது உங்களைப்போல பதிலுக்கு வார்த்தைகளின் மூலம் விளையாட வக்கில்லாமல் மனதுக்குள் குமைந்துகொண்டிருக்கும் அவர்களது இயலாமைதான் உங்கள் பலமா?

    அதெல்லாம் அங்கதம்.. அதனால் பாதிக்கப்பட்டதாக யாரும் எனக்கு சொன்னதில்லை. ஆனால் நீ செய்தது அவதூறு என்பீர்களானால் உங்களது அங்கதம் பற்றிய அளவுலோலை இங்கே அனுப்பிவைப்பீர்களானால் நன்றியுடையவனாக இருப்பேன்! நானும் அடுத்தவர் வாயைத்திறந்து சொல்லக்கூட முடியாத அளவுக்கு என் நரகல் நடையை மாற்றிக்கொண்டு நாசூக்காக பிடிக்காதவர்களை குத்திக்கொண்டே இருப்பேன்! நிர்வாகியாக இருந்துகொண்டே வலைப்பதிவாளன் என்று எழுதியது என பல்டி அடிக்கிறாயே என்றால் என்ன சொல்வது? உங்களுக்கு எப்படி நீங்கள் மகிழ்சியாக இல்லமலேயே அந்த பதிவுகளை எழுத முடிந்தது!? அதுபோலத்தான் இதுவும்!

    மேலும் சிலவற்றை சொல்வதற்கு முன்பாக சில கேள்விகளை முன்வைக்கிறேன்...

    1. "இந்த பதிவு யாரையாவது குறிப்பிட்டால் அது தற்செயல்தான்..." என்ற ஒரு வரியை கடைசியில் போட்டுவிட்டால் யாரைப்பற்றி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதலாமா? இதைப்பற்றிய உங்கள் கருத்தென்ன?

    2. "நையாண்டியை இன்சல்ட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது" என்பதைப்பற்றிய உங்கள் கருத்தென்ன? "இது எனக்கும் நகைச்சுவைதான்" என்று யாரைக்குறித்து எழுதப்பட்டதோ அவன் சொல்ல வேண்டுமா? இல்லை எழுதறவனே "நான் உன்னைப்பற்றி கேவலமாக எழுதுனதுக்கெல்லாம் இன்சல்ட் ஆகாத மகனே! நகைச்சுவை உணர்வை வளர்த்துக்க" அப்படின்னு எழுதறவன் சொல்லனுமா?!

    3. பேரை கொஞ்சம் மாத்தி என்ன வேணா எழுதலாம்! அது தனிமனித தாக்குதலாகாது என்பதைப்பற்றிய உங்கள் கருத்தென்ன?

    கடைசியில் கண்ட டிஸ்க்ளெய்மரை பார்த்தீர்களா? "இது யாரையாவது குறிப்பிட்டால் தற்செயல்தான்" என தெளிவாக சொல்லிய பிறகும் ஏன் நீங்கள் உங்களை குறிப்பதாக எடுத்துக்கொள்கிறீர்கள்? உங்களை பாதிப்பதாலா? உங்களைப்போல நேரடியாக முகத்தில் குத்தாமல் ஒரு நாய்வண்டியை எடுத்துக்கொண்டு வீதிவீதியாக நாய்பிடிக்க அலையவைத்தது இந்த டிஸ்கெய்மரில் உள்ள அயோக்கியத்தனத்தை உணர்திருப்பதால் தானே?! ஒருவன் கவிஞன் ஆக ஆசைப்படுகிறேன் என்று சொல்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? அவனை காத்துவாயன் என்று கண்டுபிடிக்கிற அளவுக்கு அவன் மீது உங்களுக்கு என்ன காண்டு? ஒருவர் நான் எழுத்தாளராக வரவிரும்புகிறேன் என்று சொன்னால் "3000 பேரு படிச்சா நீயெல்லாம் எழுத்தாளனா?" என்று ஷகிலா போஸ்டரை பார்த்த கணக்கோடு வருவதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? இவர்களை விட அதிகமாக 90000 பேர் பார்த்ததன்மூலம் இப்படி மற்றவரை தூற்ற உங்களுக்கு உரிமையும் தகுதியிருக்கிறது என்றா? ஒருவரை அவ்ரது உருவத்தை வைத்து காயப்படுத்துவதற்கு வேண்டிய தினவை உங்களுக்கு கொடுப்பது எது? நீங்கள் உங்கள் முகத்தை மறைத்திருக்கும் தைரியம்தானே? எங்கே உங்கள் படத்தையும் போடுங்களேன் பார்ப்போம்? மற்றவர்களின் கருத்துக்களையும் கொஞ்சம் அறியலாம்!

    தேன்கூடு பற்றி சொல்லியதெல்லாம் நீங்கள் அடிக்கடி உபயோகப்படுத்தும் "முதுகு சொறிதல்" என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டை சொல்வதற்காகதான்! உச்சகட்டம் மற்றும் உங்கள் கதையைப்பற்றி சொன்னதெல்லாம் போகிற போக்கில் போட்டுத்தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருப்பதுதான்! அங்கதம் என்று எழுத ஆரம்பித்த பிறகு சொல்லும் கருத்தில் லாஜிக் எல்லாம் பார்க்க முடியுமா என்ன? எதைச்சொன்னால் எதிராளி மனதளவில் காயப்படுவான், கோபம் பீரிட்டுக்கிளம்பும் என குறிபார்த்து அடிப்பதுதான்! இத்தனை நாள் அங்கதம் எழுதும் உங்களுக்கு இது புரியவில்லை என விளக்கம் கேட்டால் நான் என்ன சொல்வது? இரண்டாவதான நாய்ப்பதிவு கண்டிப்பாக, சத்தியமாக, உண்மையாக உங்களைப்பற்றியது இல்லை! ரெண்டு ரூவா இருந்தா கொடுங்க(என் குடும்பத்துக்கே ப்ளைட் டிக்கெட் வாங்கித்தறவுக நீங்க..ரெண்டுரூவா கொடுக்கமாட்டீங்களா என்ன? :) ) கற்பூரம் வாங்கி வந்துகூட சத்தியம் செய்கிறேன்! ஊரெல்லாம் தேடித்தேடி பார்த்தாலும் நாய்கள் மட்டுமே கண்ணுக்கு தெரியும் பார்வைக்குறைபாடுள்ள ஒருவருக்கு அவரது நிலையை விளக்கும் பதிவு அது!

    அந்த இரண்டு பதிவுகளையும் எழுதுவதற்கு உங்களுக்கு எவ்வளவு நேரமாயிற்று? 30 நிமிடங்கள்?! எனக்கு 40 நிமிடங்கள்! அவ்வளவே! இதுபோன்ற அயோக்கியத்தனமான அங்கதங்கள் எழுதுவதற்கு அறிவுஜீவித்தனமோ இல்லை புத்திசாலித்தனமோ தேவையில்லை! மூளையில் கொஞ்சம் மடங்கல் இருந்தால் போதும்! போகிற போக்கில் போட்டுத்தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம்! இப்பகூட ஒன்று சொல்கிறேன் பாருங்க! "வழிப்போக்கன்: போகிற வழியெல்லாம் வயித்தால போறவன்!" அவ்வளவுதான் இதற்கு என்ன திறமை வேண்டும் என நினைக்கிறீர்கள்? இப்படியும் அப்படியும் மடக்கும் மாற்றியும் திரித்தும் எழுதப்படும் சொற்களை வைத்து மற்றவர்களது சின்னச்சின்ன குறைகளை பெரியதாக மாற்றி அடுத்தவன் உணர்வுகளை மதியாமல் அவர்களை அலங்கார,அதீத, அங்கத சொற்களால் அடித்து வீழ்த்தி அவர்களை வாய்திறவாமல் செய்வதில் இல்லை திறமை! இவ்வளவு இருந்தும் தெரிந்தும் அவைகளை பிடிக்காதவர்கள் மீது ஏவாமல் அவர்கள் கருத்தையும் மதிப்பதில் உள்ளது நமது திறமைகளின் மீதான நமது நம்பிக்கை!

    இத்தனை பேர் கருத்துச்சொல்லியும் என்னைமட்டும் அவதூறு செய்தது ஏன் எனக்கேட்டும் PKSக்கு.. அது அங்கே இருந்த மண்ணாந்தைகளில் உங்களை மட்டும் ஆந்தையாக பார்த்தால்கூட இருக்கலாம்! நையாண்டியை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற உங்களது கருத்து நிஜமாகவே புல்லரிக்க வைத்தது! அப்படிப்பார்த்தால் எனது பதிவுகூட ஒரு வைகையான Black Humour தான்! இதுமட்டும் ஏன் உங்களுக்கு நகைச்சுவையாக தெரியவில்லை? உங்களைப் பாதித்ததாலா? அங்கு படித்ததில் யார் யாரெல்லாம் பாதிக்கப்பட்டார்கள் என எனக்கு தெரியாது. அதைத்தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை என்று சொல்வீர்களானால் ஏன் என் பதிவில் உள்ள ஆழமான நகைச்சுவையை உங்களால் உணரமுடியவில்லை! உங்கள் உணர்வுகள் காயப்பட்ட ஒரே காரணத்தாலா? காத்துவாயன், பொறுக்கிகள் என குறிப்பிட்ட ஒரு ஆட்களை மட்டும் தாக்கப்பட்டபோது நீங்கள் ரசித்து சிலாகிக்கும் அளவுக்கு உயர்ந்து இருந்த அந்த நகைச்சுவை உணர்வு ஏன் என் பதிவினை படிக்கும் போது இல்லை? நம்மை பற்றிச்சொல்லும்போது நமது நகைச்சுவை உணர்வுகளை இழுத்துப்பூட்டி வைத்துவிட வேண்டுமா என்ன? "அடுத்தவனை கேவலப்படுத்தும்போது கைதட்டி சிரிக்கறையா.. இரு.. இரு.. உன்னை சொல்லும்போது என்ன செய்யற பார்க்கறேன்" என்ற சிறுபிள்ளைத்தனமான கோபத்தின் வெளிப்பாடே உங்களைப்பற்றி சொல்லியது! பார்க்கப்போனால் அந்த பதிவே ஆத்திரம் கண்களை மறைக்க இவனுங்களை எப்படியும் காயப்படுத்தி விடவேண்டும் என்ற வெறியுடன் எழுதப்பட்டதுதான்!

    பலியாடு, பலியாடு என்று என்னவோ என் தலைவெட்டப்பட்டு ரத்தவெள்ளத்தில் துடிப்பதுமாதிரியான பில்ட்டபுடன் என்ன நிறுவ முயல்கிறீர்கள்? நீங்களெல்லாம் சுயசுந்தனையுடைய பிரம்மாக்கள் என்றும் உங்களை தாக்கி ஒரே ஒரு பதிவிட்டதால் என்னையெல்லாம் உலகெங்கிலும் இருந்து தூண்டிவிடுகிறார்கள், சதி செய்கிறார்கள், அடியாளாக உபயோகப்படுத்துகிறார்கள் என்றா? ஒரு பதிவுக்கே நீங்கள் இத்தனை கற்பிதங்கள் கொடுக்கமுடியும் எனில் இத்தனை நாள் நீங்களெல்லாம் போட்டுத்தாக்கிய பதிவுகளுக்கு எத்தனை பேர், எத்தனை நாடுகளில் இருந்து எத்தனை நாட்கள் உங்களை தூண்டி, மூளைச்சலவை செய்து அடியாளாக உபயோகப்படுத்தியிருக்க வேண்டும்! நினைக்கவே மலைப்பாக இருக்கிறது!

    உங்களது தவறுகளை எடுத்துச்சொல்ல உங்களுக்கு இருக்கும் நண்பர்களை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது! அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்! இதுபோல அங்கதம் என்ற பெயரில் அடுத்தவரை போட்டுப்பார்க்கும் பதிவுகளை படிக்கும்போது தலையில் குட்டி கண்டிக்கவில்லையெனினும், படித்து விட்டு அன்னப்பறவைபோல அதிலிருக்கும் நகைச்சுவையை மட்டும் மனதார பாராட்டிவிட்டு நடையைக்கட்டாமல் நண்பன் என்ற உரிமையிலாவது "இது தவறு" என்று ஒரு முறை சொன்னீர்களானால், அடுத்தமுறை இதுபோன்ற கருத்துக்களால் மோதிக்கொள்ள முடியாமல் அங்கதம் என்ற பெயரில் மறைந்து அடுத்தவரை அடித்து வீழ்த்தும் அயோக்கியத்தனமான பதிவுகளை எழுதும் முன், சக வலைப்பதிவாளர்கள் மீது மரியாதை இல்லையெனினும் உங்கள் மீதுள்ள மரியாதைக்காகவது இதுபோல எழுதுவதற்கு முன்பு ஒரு முறை யோசிப்போமல்லவா?! தயவு செய்து இனி இதனை செய்யுங்கள்!

    நீங்கள் மதிக்கும் நண்பர்களின் மீது எனக்கும் மதிப்பும் மரியாதையும் உள்ளது! அவர்களையும் என் நண்பர்களாகத்தான் நினைக்கிறேன்! ஆகவே என் பதிவிலிருக்கும் ஆத்திரம் கண்களை மறைக்க தாக்கியே ஆகவேண்டும் என எழுதிய பகுதிகளை மகிழ்சியுடன் எடுத்துவிடுகிறேன். அப்ப மிச்சமிருக்கிறது என்ன எங்கிறீர்களா! எப்படி உங்கள் பதிவுகளை நீங்கள் அங்கதம் என்று நம்புகிறீர்களோ அது போல நிஜமாகவே எனக்கு அது அங்கதம் தாங்க! :) அதில் ஏதேனும் வருத்தமிருப்பினும் சொல்லுங்கள்! நீக்கிவிடுகிறேன்!

    இந்த பதிலையும் நீங்கள் வரிக்கு வரி ஆராயலாம்! சொல்லுக்கு சொல் திருப்பிப்போட்டு அடிக்கலாம்! அதைப்பற்றி எனக்கு வருத்தமில்லை! இதனை ஒரு தனிப்பதிவாக் போட்டு நாலுபேர் குழாயடிச்சண்டை என சொல்வதிலும் விருப்பமில்லை! எனவே பின்னூட்டமாக அளிக்கிறேன்! மேலும் ஏதேனும் கேள்விகள் இருப்பினும் கேளுங்கள்! பதிலிருந்தால் தருகிறேன்! இலக்கிய இணைய அரசியகளின் மீதான எனது அறிவு எனது ஏதேனும் ஒரு பதிவைப்படித்தாலே உங்களுக்கு விளங்கிவிடும்! பொய்சொல்வதற்கோ, புரட்டு பேசுவதற்கோ, இமேஜ் பில்டப்புக்கோ நான் என் பதிவுகளை பயன்படுத்துவதில்லை! ஆகவே, இங்கே சொன்னவற்றை எப்படி எடுத்துக்கொள்வது என்பது உங்களுடைய விருப்பம்! திராவிட கலரின்மீது 5 நிமிடம் கால் போட்டதையே மறைக்காமல் எழுதுகிறவனுக்கு இதெல்லாம் மறைக்கவேண்டிய அவசியமில்லை என்பதை நீங்கள் உணர்ந்தால் மகிழ்வேன்!

    பதிலளிநீக்கு
  48. இதை ஜால்ரா என்று சொன்னாலும் சரி,இளவஞ்சி உங்களுடைய கேள்விகள் மிகச்சரியானது, அதற்கு பதில் எதிர்பார்க்க முடியாது அவர்களிடமிருந்து என்றாலும் சுற்றி சுற்றி நீளமாக எழுதி குழப்புவார்கள் என்பதைத்தவிர நேரடி பதில் கிடைக்காது.

    //போட்டுத்தாக்கிய ஒரே ஒரு பதிவின்மூலம் உங்கள் தரமெல்லாம் இறங்கி என்னை கிழிகிழியென கிழித்து பதிவுகள் இடும் அளவுக்கு உங்களுக்கு கோபம் வருகிறதே? உங்கள் அங்கததின் மூலம் பாதிப்பான மற்றவர்களுக்கு எவ்வளவு கோபம் வரும் என்று என்றைக்காவது நினைத்துப்பார்த்திருக்கிறீர்களா? அல்லது உங்களைப்போல பதிலுக்கு வார்த்தைகளின் மூலம் விளையாட வக்கில்லாமல் மனதுக்குள் குமைந்துகொண்டிருக்கும் அவர்களது இயலாமைதான் உங்கள் பலமா?
    //
    அவர்களின் நேர்மை, பொறுமை, கருத்துசுதந்திரம்,அங்கதம், எல்லாவற்றிற்கும் மேலாக தரம் சந்திக்கு வந்துவிட்டது, இவர்கள் பேசுகிறார்கள் வேறு யாரோ அசிங்கமாக எழுதுகிறார்கள் என்று.

    பதிலளிநீக்கு
  49. முகமூடி எழுதிய அளவுக்கு நகைச்சுவையாக இல்லை என்பது எனது கருத்து. இதற்கு நீங்கள் தேர்ந்தெடுத்த பெயர்களும் ஒரு காரணமாக இருக்கலாம். நான் இந்தப் பதிவை சாண்ட்விச் சாப்பிட்டுக் கொண்டே படித்ததும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். எனது நகைச்சுவை உணர்ச்சி அண்மைக்காலமாக ரிப்பேர் ஆகிவிட்டதாலும் இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  50. மீனாக்ஸ்,

    இது நகைச்சுவைக்காக எழுதப்பட்டதல்ல! அங்கதம் என்ற பெயரில் நடக்கும் நுண் அரசியலை சுட்டிக்காட்ட எழுதப்பட்டது.

    எனவே உங்கள் நகைச்சுவை உணர்வை சந்தேகப்படாதீர்கள்! :))

    முடிந்தால் இதனையும் பாருங்கள்!

    http://ilavanji.blogspot.com/2006/05/blog-post_25.html

    பதிலளிநீக்கு
  51. நகைச்சுவைக்காக எழுதப்பட்டதில்லையென்றால் அதில் கருத்து கூற எனக்கு ஒன்றுமில்லை. மேலே ஒரு பின்னூட்டத்தில் நான் உட்பட சிலர் முகமூடியின் பதிவில் பாராட்டி எழுதியதாகவும் இங்கு என்ன சொல்லப் போகிறார்களோ என்று கேள்வி எழுப்பியிருப்பதைப் பார்த்தேன். முகமூடி சொன்ன விஷயங்களில் எனக்கு உடன்பாடு இல்லாமல் போனாலும் அவர் சொன்ன விதம் எனக்கு நகைச்சுவையாகத் தோன்றியது. (மிக ரிலாக்ஸான சூழலில் நான் அதைப் படித்ததுவும் காரணமாக இருக்கலாம்.) அவரது கருத்து வெளிப்பட்ட விதத்தையே நான் பாராட்டியிருந்தேன்.

    வலைப்பதிவில் சோ பற்றி நார் நாராய்க் கிழித்து தொங்க விடப்பட்ட அனைத்து விஷயங்களிலும் எனக்கு உடன்பாடு உண்டு. இருந்தாலும் இன்னும் ஒவ்வொரு வாரமும் நான் துக்ளக் வாங்குவதுண்டு. காரணம், எப்போதாவது அவர் ரசிக்கும்படியாக நகைச்சுவையாக ஏதேனும் சொல்லி வருவதால் மட்டுமே.

    பதிலளிநீக்கு
  52. I would be happy if you could remove the controversial posts from your blog itself. Thanks. :-)

    பதிலளிநீக்கு
  53. பெங்களூரில் உண்மையாகவே நடந்த ஒரு சம்பவத்துக்கு இவ்வளவு வண்ணங்களா?

    இளவஞ்சி, நீங்கள் போகும் பாதை சரியானது என்றே நான் நம்புகிறேன்....

    பதிலளிநீக்கு
  54. //இலவசக்கொத்தனார்:
    இளவஞ்சி, என்னதான் நகைச்சுவைப் பதிவானாலும் உங்கள் பொதுவான தரத்திலிருந்து தாழ்ந்ததாகவே தெரிகிறது. எனக்குத் தோன்றியது சொல்கிறேன். அதற்காக எனக்கு எதாவது முத்திரை குத்தாதீர்கள். //

    நான் இதை வழி மொழிகிறேன் :-O

    பதிலளிநீக்கு
  55. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  56. neo: உங்கள் பின்னூட்டத்தில் ஒரு பகுதியை எடுத்துவிட்டேன்! உங்கள் கருத்து தவறென சொல்லவில்லை! இங்கே வேண்டாம் என நான் நினைப்பதால் மட்டுமே!

    தவறெனில் தயவுசெய்து மன்னிக்க! :(

    From Neo:

    >> I would be happy if you could remove the controversial posts from your blog itself. Thanks. :-) >>

    வந்துட்டாரு தல!

    என்னங்க "அங்க" போயி இது போல சொல்லுங்களேங்க?

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு