செவ்வாய், ஜூன் 22, 2010
எனக்கென்ன?
இறக்கிப்போட்ட ஜீன்ஸின் மேல்
ஜாக்கி பட்டை உன்னுது
இறுக்கிப்போட்ட அர்ணாகொடியுள்
எலாஸ்டிக்போன சுடர்மணி என்னது
எல்லோபோர்டு பல்லவனுக்கு
மூணுரூவா மொய்யி
ஏசிபோட்ட வோல்வுக்குள்ள
”புல்ஸிட் ட்ராபிக்”குங்கற நீய்யி
வெறிக்க வெறிக்கப் பார்த்தே
பூத்த கண்கள் என்னுது
ரேபனை கழட்டுன ஒடனே
சுருக்கும் கண்கள் உன்னுது
”லதாவை நான் காதலிக்கறேன்”னு
இன்னம் செவுத்துலதான் எழுதறேன்
“ரெடி ஃபார் அ டேட்?”னு நீ
ஃபேஸ்புக்குல எழுதற
உனக்கும் எனக்கும்
மாசக்கடைசியில்
ரெண்டு சைபரே வித்தியாசம்
டேபிள் தொடச்சுப்போகையில்
நீ உதிர்க்கும் ”தாங்ஸ்”சில்
நிக்குது உன் மனிதாபிமானம்
கூடவே உன்தரத்தில் என் இடமும்
ஆனாபாரு...
நீயே உன் கம்ப்பூட்டரை
துண்டுதுண்டாய் தின்னும்வரை
உன் வெளிக்கியை ட்ராக்ட்ராப்பை
ட்ராஸ்பின்னில் போடும்வரை
நான் நானாகவே வேண்டுமுனக்கு
இன்னனும் தெளிவில்லை
சமூகத்துல தனிச்சுப்போவது
நீயா நானான்னு
நிச்சயம் தெரியுமெனக்கு
பதில் தெரியும் நாளில்
வெளிப்படுமென் வன்மம்
உனதுபோல பூசிமெழுகி
இருக்காது!
எனக்கென்ன...
ஏக்கம் எனக்கொன்னும் புதுசில்லை
*****
கதிர் இங்கே! - வேறென்ன?
பழமைபேசி இங்கே! - பிறகென்ன?
இளா இங்கே! - அதுக்கென்ன?
*****
குறிச்சொற்கள்:
தொடரோட்டம்,
புகைப்படம்,
மொக்கை,
வஜனகவுஜை,
Travel Photography
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
:)
பதிலளிநீக்கும்ம்ம்
பதிலளிநீக்குகவிதை நல்லா இருக்கு.
பதிலளிநீக்குதனித்துவமான கவிதை ஆசானே !
பதிலளிநீக்குஉங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
பதிலளிநீக்குஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)
நல்ல இருக்கு
பதிலளிநீக்குthanks
mrknaughty
நல்ல கவிதை. பதிவொண்ணும் போடக் காணோமே??
பதிலளிநீக்குகோவம் ...
பதிலளிநீக்குdifferent one. liked it.
பதிலளிநீக்குImpressive...
பதிலளிநீக்குநல்ல பகிர்வு நண்பா...
பதிலளிநீக்கு