முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதுரை மீனாட்சி கோவில் - புகைப்படங்கள்

ரொம்ப நாளாகவே எனக்கு ஒரு ஆசைங்க! அதாவது இந்த வெள்ளைக்காரவுக எல்லாம் நம்ப ஊருக்கு டூரிஸ்ட்டுன்னு வந்துக்கிட்டு கையில ஒரு மேப்பும் முதுகுல ஒரு பையுமாக தம்பாக்குல திரியறாங்களே... அதுமாதிரி ஒரு நாளைக்கு நாமளும் சுத்தனும்னுட்டு. என்ன அவிங்க சரிசமமா சோடிபோட்டு சுத்துவாய்ங்க. ஆனா எங்கூட்டமா நான் கேமரா பையை தூக்கிக்கிட்டு கெளம்புனாலே சந்தோசமாகிருதாங்க. அதுபோக “ம்ம்ம்.. இந்ததடவை எனக்கு சனிபெயர்ச்சி ரெண்டுநாளைக்கா?”ன்னு கேட்டு கன்பார்ம்டு அலும்பு வேற! இதுல எங்கபோயி அவிங்களையும் கூட கூட்டிக்கிட்டு பரதேசிபோல சுத்தறது?! அப்படியே அவிங்க வந்துட்டாலும் பெத்துக ரெண்டும் ”யய்பா... யப்பா..” கொரங்குக்குட்டிக போல தொத்திக்கிட்டா அப்பறம் எங்க? எங்கானா நிழல் பார்த்து கூடாரம் போட்டு செட்டிலாக வேண்டியதுதான்! :)

அதனால இந்தமுறை வெவரமா குலசைல தசரா முடிஞ்சதும் நெல்லைல எறங்கி அரைக்கிலோ இருட்டுக்கடை அல்வா வாங்கி தின்னுக்கிட்டே மதுரைக்கு வந்து தனியா எறங்கிட்டேன்! என்னமாதிரி வயசுப்பையன் மதுரலை தனியா சுத்தறது டேஞ்சருன்னாலும் அழகிரி நாட்டுல ஒன்னும் நடந்துறாதுங்கற நம்பிக்கைல துணிஞ்சு என்னோட வலதுகாலை வைச்சாச்சு. அப்படியே காலேஜ் ஹவுஸ் தாண்டுன ரெண்டாவது ரெட்டுல ஒரு ச்ச்ச்சின்ன கடைல நாலு இட்லி, ஒரு முட்டைதோசை, கல்தோசை, ஒரு ஆம்லேட் வித் நாலு சட்னி, அரைலிட்டரு கொழம்போட கொழப்பியடிச்சுட்டு ரூமெடுத்து செட்டில். அப்பறம் ஒருநாள் பூரா மேலே சொன்ன பரதேசி வாழ்வுதான் :)

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு குணநலன் இருக்குங்க! சென்னைய தவிர்த்து வேற எங்க சுத்துனாலும் 100 கிலோமீட்டருல நடையுடைல இருந்து பேச்சுவழக்கு வரைக்கும் வித்தியாசம் பார்த்துறலாம். அதென்னவோ மதுரை ரொம்ப புடிச்சுப்போனதுக்கு காரணம் இதுவரைக்கும் எல்லா வேளையும் வஞ்சனையில்லாம சாப்பிட்ட ஒரு காரணத்துக்காகவே இருக்கலாம் :)

கோவில்லயும், கடைத்தெருவுலயும் எங்கனா ஓரமா ஒக்கார்ந்துக்கிட்ட போற வர்றவங்களைப்பார்க்கறதே பெருஞ்சுகம். சாயந்தரம் வரைக்கும் பொழுதை ஓட்டிட்டு அப்பறம் ஒருநாளைக்கும் மேல யாருகூடவும் பேசாமா இருந்தா எனக்கு பைத்தியம் தெளிஞ்சிரும்னு பயந்துக்கினு மணப்பாறைக்கு எஸ்கேப்பிக்கினேன். மக்களைப் படமெடுக்க மிகச்சிறந்த இடம் மீனாட்சி கோவிலுங்க. அப்படியே கோவிலுக்குள்ளயே சுத்திக்கிட்டே இருந்தா கண்டிப்பா பல நல்ல படங்கள் எடுக்க வாய்ப்புண்டு. அதுல சிலதுக இங்கே! ( அதாவது இதெல்லாம் நல்ல படங்களாம்! எப்பூடி?! :) )

வழக்கம்போலவே, பிடித்தவைகளை பெரிதாகப் பார்க்க படத்து மேல ஒரு க்ளிக்கு போடுங்கப்பு!

மேற்கு வாயிலில் இருந்து வடக்கு கோபுரம். கோபுரம் ஏன் சாஞ்சிருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்!





வடக்கு கோபுரம்






தெய்வீகப் பயணம் - Zoom Burst முறையில் எடுத்தது. செம எபெக்ட்டுங்க!




திருவள்ளுவரும் திருக்குறளும்



தெய்வத்துக்கும் எனக்குமிடையேயான வழக்கு!



நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகள்



குரூப்பு போட்டோகிராபி! மதுர மண்ணுக்கு வந்துட்டா மட்டுந்தேன் இது முடியும் போல! :)





பார்வையற்ற பிரார்த்தனைகள்




ஆஞ்சநேயரின் அருள்பாலிப்பு





மதுரை நாயக்கர் மாகால்


கருத்துகள்

  1. //ஒரு மேப்பும் முதுகுல ஒரு பையுமாக தம்பாக்குல திரியறாங்களே... அதுமாதிரி ஒரு நாளைக்கு நாமளும் சுத்தனும்னுட்டு. என்ன அவிங்க சரிசமமா சோடிபோட்டு சுத்துவாய்ங்க//

    எனக்கும் இதே ஆசை அப்படியும் ஒரு சந்தர்ப்பம் ஜுலை மாசம் அமைஞ்சு நீங்க சுத்தின கோவிலை சுத்தி சுத்தி வந்து மாஞ்சு மாஞ்சு போட்டோ எடுத்தும் பத்திரமா வைச்சிருக்கேன்! -அம்புட்டு திருப்தியா இல்ல எதோ கோளாறு :))

    ஜூம் பர்ஸ்ட் இமேஜும் அப்புறம் தரையில குந்திக்கிட்டு கோபுரம் டோட்டலா கவர் பண்ணியிருக்கிற இமேஜும் (வடக்கு கோபுரம்?!) அட்டகாசம் :))

    பதிலளிநீக்கு
  2. வாத்தி

    ஊரு ஞாவகத்தை கிளப்பிவிட்டுட்டீங்களே!

    உங்களைப் போல் படங்களும் அழகு

    பதிலளிநீக்கு
  3. தல .... படங்கள் அருமையா இருக்கு .... கேமரா என்ன மாடல் வெச்சிருக்கீங்க ??

    பதிலளிநீக்கு
  4. இந்த ஊர்கார பயபுள்ள (மாப்பி ராம்) வரதுக்குள்ள நான் வந்துட்டேன் போல ! ? ;)

    பதிலளிநீக்கு
  5. ஆசானே..என்ன இப்பவே ஆன்மீக பயணம் எல்லாம்!! ;))

    எல்லாமே தூள்

    \\நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகள்\\

    இது எல்லாத்தையும் விட தூள் ;))

    பதிலளிநீக்கு
  6. எங்க ஊரு கோயில அருமையாப் படம் எடுத்திருக்கீங்க. ஒவ்வொரு படமும் சும்மா பட்டையக் கிளப்புது.

    பதிலளிநீக்கு
  7. அனைத்து படங்களும் டாப்பு !

    //கோபுரம் ஏன் சாஞ்சிருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்! //
    நீங்க காமிராவ சாச்சு புடிச்சு இருக்கீங்க அதான் ;)

    பதிலளிநீக்கு
  8. //கோபுரம் ஏன் சாஞ்சிருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்! //

    தெரியல ஆசானே!?

    வழக்கம்போல பேச்சுல அரைகிலோ நக்கல் கூட இருக்கறதோட போட்டோவுக்கு கொடுத்திருக்கும் கமெண்டுகளும் அருமை..

    Zoom Burst முறையில் எடுத்த படம் அருமை. நான் ஏதோ கோயிலுக்குள்ள ஓடுன எஃபெக்ட் வந்துடுச்சு..

    பதிலளிநீக்கு
  9. படமும்சரி கமேண்டுஞ்சரி ரொம்ப நல்லா இருக்குங்க

    பதிலளிநீக்கு
  10. ஆயில்யன்,

    // அம்புட்டு திருப்தியா இல்ல எதோ கோளாறு // அடடா... வலைல ஏத்துங்க. நம்ப மக்கா நல்லதோ கெட்டதோ பார்த்துசொல்லட்டும். பின்ன எப்படி நாம தொழில் பழகறது?! :)

    முத்துகுமரன்,

    /// உங்களைப் போல் படங்களும் அழகு// அதானே. மதுரக்காரவிங்களுக்கு மண்ணை விட்டு தள்ளி இருந்தாலும் அந்த நக்கலு மட்டும் அப்படியே! :)

    சம்பத்,

    Nikon D80 + 18-200VR

    கோபி, அமல், நேசமித்திரன்,

    தொடர்ந்த ஊக்கங்களுக்கு நன்றி! :)

    நாதஸ், சென்ஷி,

    // நீங்க காமிராவ சாச்சு புடிச்சு இருக்கீங்க அதான்//

    அடடா எப்படிங்க?! நானே ச்சும்மா ஒரு உதாரு விட்டா நீங்க எனக்குமேல இருபீங்க போல! :)

    கோபுரத்துக்கு முன்னாடி இருக்கற சிலையை ஹரிசாண்டலா வைச்சு எடுத்தேன். அதாவது வித்தியாசமான கோணத்துல பார்க்கறாம்!

    அதான் டெக்குனிக்கு ஹிஹி...

    பதிலளிநீக்கு
  11. நல்லாருந்துச்சு படங்கள்!!

    /
    குரூப்பு போட்டோகிராபி!/

    வாய் விட்டு சிரித்துவிட்டேன்! :-))

    பதிலளிநீக்கு
  12. தெய்வீகப் பயணமும், மஹாலும் அட்டகாசம்!

    பதிலளிநீக்கு
  13. அந்த மஹால் படம் மிக அருமை
    பதிவிற்கு நன்றி.
    பதிவுலகிற்கு நான் புதியவன்.

    பதிலளிநீக்கு
  14. நம்பிக்கை ஒளிக்கீற்று படம் அருமை. நம்ம மீனாக்ஷி அம்மன் கோவிலின் அழகு மிளிர்கிறது உங்கள் படங்களில்.

    பதிலளிநீக்கு
  15. படங்கள் அருமை இளவஞ்சி.. முக்கியமாக கோபுரமும், நாய்க்கர் மஹாலும் அசத்தல்.

    பதிலளிநீக்கு
  16. நாயக்கர் மாஹால் படம் ரொம்ப அழகு
    எல்லாமே கலக்கலான படங்கள்

    பதிலளிநீக்கு
  17. வாவ்! ரொம்ப ரொம்ப அற்புதமாய் எடுத்திருக்கிறீர்கள். இந்த அளவுக்கு இருக்காது என்றாலும் மதுரைப் படங்கள் சில இங்கே:)!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு