முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காசியண்ணன் புண்ணியத்தில் ஒரு பதிவு!

அண்ணன் காசியின் ஐடியா படி இந்த உருப்படி இங்கே...

பெரியவங்க பலபேரு டீடெயில்லா ஆராய்ஞ்ச உணர்ந்த தெளிந்த தகவல்களை போட்டிருக்காங்க. இராம. கி அய்யா எல்லாம் படிச்சா மலைப்பா இருக்கு! நான் என் வழக்கப்படி (அதாங்க... தான்தோன்றித்தனமா... )அடிச்சு விட்டிருக்கறேன். காசியண்ணன் கும்பலோடு கும்பலா என்னுதையும் போட்டிருந்தா எம்மானம் நின்னிருக்கும். இப்ப தனியாப்போட்டு என் அறிவையெண்ணி மக்கா நீங்க தலைதலையா அடிச்சுக்கப் போறீங்க!

தெரியுதில்ல அப்பறம் என்னத்துக்குலே எழுதனன்னு ஆசிப்பு அண்ணாச்சி மாதிரி ஆளுங்க வருவாய்ங்க! அதுக்கெல்லாம் வெட்கம் மானம் ரோசம் பார்த்தா அப்பறம் நான் எப்பத்தான் புதுப்பதிவு போடறது?! எனவே, படிச்சு களிங்க :)

1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?

இல்லை என்றே நினைக்கிறேன். சங்கத்தமிழில் இருந்து நவீன இலக்கியம் வரைக்கும் இவ்வளவு இருக்கு இல்லை என்பதான தரவுகளை விடுங்கள்! பழந்தமிழ் வார்த்தைகளை தேடித்தெரிந்துகொள்ள ஒரு இணையப்பக்கம் உள்ளதா என்றால் இல்லை. தற்காலத்தில் புழங்கும் ஒரு 1000 சொற்களுக்கு அர்த்தம் தேடி கண்டுபிடித்து விடலாம்தான். ஆனால் எனக்கு பசலை, துணிபு போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தமும் அச்சொல்லைச் சுற்றின கதைகளும் வரலாறுகளும் தெரிய வேண்டுமெனில் எங்கே போவது? எனக்கிருக்கற எண்ணம் என்னன்னா நாம அபிதானசிந்தாமணியை மட்டுமாவது ஆன்லைன்ல கொண்டுவந்தா இந்த பெருங்குறையை தீர்க்கலாம் என்பதுதான். முடிந்தால் அதை அப்படியே கொண்டுபோய் பக்கம் பக்கமா சுட்டிகளோடு தமிழ் விக்கிபீடியாவோட சேர்த்துட்டம்னா
அப்பறம் மக்கா அப்பப்ப அப்டேட் செய்யச்செய்ய தாழில திரண்ட வெண்ணை மாதிரி பின்னால வரும் வருங்கால சந்ததிகள் நோகாம நோம்பி கும்பிட்டுக்க வேண்டியதுதான்...( அதாவது அவங்களுக்கு எல்லாம் தமிழ் எழுதப்படிக்கத் தெரிஞ்சா! ஹிஹி.. )



2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

ஒரு குத்துமதிப்பா ஆமான்னுதாங்க சொல்லனும்! அரசாங்க அலுவலக செயல்களில் தகவல் பெறுவதில் ஓக்கே! தகவல் அளிப்பதில் இன்னனும் ஆங்கிலம்தான். போனமாசம் ஆன்லைன்ல கரண்டுபில்லு கட்டுனேன். எல்லாம் ஆங்கிலத்துலதான் இருக்கு. அதுவும் வர்த்தக ரீதியான வெரிசோன் மாதிரியான உலக அளவில் ஒரே முறையில் இயங்கும் கொடுக்கல் வாங்கல் நடக்கும் பரிவர்த்தனைகளில் தமிழ் போன்ற வட்டார மொழிகள் எப்படி பங்களிக்கும்னு குழப்பமாகத்தான் இருக்கு. இணையத்தில் மொழிக்கான முக்கியத்துவம் பயனர்களை பொறுத்தே அமைகிறது. இப்பத்திக்கு இணையம் படிச்சவுக கையில இருக்கறதால மொழி ஒரு பிரச்சனையில்லன்னுதான் நினைக்கறேன்.


3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?

தனித்தனி ஃபாண்ட்டுகளில் அவரவர் தனியாவர்தனம் நடத்திய காலத்தில் இருந்து இப்பொழுது கமுக்கமாய் அனைவரும் ஒருங்குறியில் பட்டையை கிளப்புவது வரையில் அனைத்து முயற்சிகளுமே முக்கியமானவைதான். இதில் வெற்றி தோல்வி என்பதெல்லாம் இல்லையென்றே நினைக்கிறேன்.

இணையவெட்டுகளாக காலாகாலத்துக்கும் அழியாமல் நிற்கப்போகும் இம்முயற்சிகள் தனிமனித குழும அடையாளங்களை காலப்போக்கில் உதிர்த்துக்கொண்டே செல்லப்போகின்றன. இன்றைக்கு 50 வருடங்கள் கழித்து நம்ப மக்காக்களின் அலப்பறை பதிவுகளான இன்றைய கும்மிகளை படிக்கும் ஒருவன் ”2009ல் கணினி உபயோகித்த தமிழ்மேல் ஆர்வம்கொண்ட ஒரு கும்பலின் நகைச்சுவை உணர்வு எவ்வாறு இருந்தது?” என ஆராய்ச்சிசெய்ய ஏதுவான தரவுகளாக இருக்கலாம்! உள்குத்து என்பது என்ன? என்பது ஆறாங்கிளாஸ் 2 மார்க்கு கேள்வியாகக்கூட இருக்கலாம்! ”மீ த பர்ஸ்ட்டு” என்பது ”ஹவ் ஆர் யூ?” என்பதற்கு மாற்றாக அமையலாம்! அல்லது கலிகால இலக்கியத்தில் தமிழின் மிகச்சிறந்த போர்னோகிராபியா காமலோகம்.காம் நிலைக்கலாம்! யார் கண்டது?! :)

மிக முக்கியமானது என நான் நினைப்பது தமிழ் விக்கிபீடியாவைத்தான். தமிழில் ஒரு குறிப்பிட்ட தேடலுடையவரது தேவையை உத்தேசமாகவாவது இது காலாகாலத்துக்கும் தீர்க்கும் என்பதில் ஐயமேயில்லை! ஆனால் தமிழ்விக்கி இன்னும் போகவேண்டிய தொலைவு எவ்வளவோ இருக்கிறது. தேடினால் எளிதாக கிடைத்தே தீரக்கூடிய ஆங்கிலத்தில் சல்லீசாக கிடைக்கக்கூடிய தகவல்கள் போக தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளக்கூடிய தெரிந்தாக வேண்டிய தகவல்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தினால் பரவலானதாக இல்லாமல் ஆழமானதாக இருக்கும். உதாரணத்துக்கு நாளைக்கு நான் கமலம் எனத்தேடினால் அது LOTUS பற்றின ஆங்கிலத்தில் கிடைக்கக்கூடிய தகவல்களை மட்டுமே கொண்டிறாமல் “தோள்கண்டார் தோளே கண்டார்” என்பதனையும் இழுத்து வந்து அதற்கு விளக்கமும் கொடுத்தால் எவ்வளவு அருமையாக இருக்கும்?!


4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களை தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

ஒரு 1000 பேர் கொண்ட தமிழ் மொழிபெயர்ப்பு டீம். அதனை மேய்க்க 100 பேர் கொண்ட தமிழ் MAக்கள். ஒரு 10 தமிழ் மூதறிஞர்கள். அவர்கள் சுட்டிகாட்டுவது அனைத்தையும் இணையத்தில் ஏற்றுவதும், தொகுப்பதும் மட்டுமே 5 வருச என் பதவிக்காலத்தில் வேலையாக இருக்க வேண்டும். போதாதா? இதுபோக ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு தகவல் மையம். அதுல அரசு தகவல்மையத்துடன் இணைந்த ஒரு கணினி. அதைப்பார்த்துக்கறதுக்கு ஊருலயே நல்லாப்படிச்ச ஊர்வளர்ச்சியில் அக்கறையுள்ள பயபுள்ள ஒன்னு ரெண்டு பேரு. அவங்க வேலையே ஊருக்குத் தேவையான தகவல்களான வைகாசில கடலை போடலாமாங்கறதுல இருந்து, ஜப்பானுல இயற்கை விவசாயம் செய்யற ஊருக்கு தலைக்கு 10000 ரூபா லோன் குடுக்கறாங்கறதுல இருந்து, அவுட்டேட்டனாட விவசாய பண்ணை டெக்குனிக்குகளை அப்டுடேட்டா இந்தியாவுக்கு இறக்குமதி செய்யற தவறுகளை முன்கூட்டியே அறிஞ்சு சொல்லறதாத்தான் இருக்கனும். இதை ஒழுங்கா அமைச்சுப்புட்டாலே இப்ப இருக்கற உழவர்சந்தையை இணைய சந்தையா மாத்திற முடியாதா?! நினைச்சுப்பாருங்க. கோயம்புத்தூர்ல எங்கூட்டு கல்யாணத்துல சில்லிகோபி போடறதுக்கு தேவையான 5 மூட்டை காலிபிளவரை நான் பஞ்சாயத்து சந்தை சைட்டுல தேடி அது பொள்ளாச்சி ராமசாமி அய்யா கழனில சல்லீசா கிடைக்குதுன்னா ஒரு எட்டுபோய் மொத்த கொள்முதல் விலையையும் விவசாயி கையில் குடுத்துட்டு வாங்கியாந்துற மாட்டனா? அதான் எல்லாருக்கும் டீவி கொடுத்து முடிச்சாச்சே? அப்பறம் ஊருக்கு ஒரு கணினி கொடுத்தா என்னாங்கறேன்?!

இதுபோக இந்திய விவசாயம் பொழைக்க தண்ணிக்குத் தவிக்கற டெல்டா விவசாயிகளின் ஒரு கிராமத்துக்கு தண்ணி குடுக்கற ஒரு கர்நாடகா விவசாய கிராமத்தை மொத்தமா ஒரு சிறப்பு ரயில் விட்டு விருந்துக்கு வரச்சொல்லி ஒரு வாரம் திருவிழாவாகவே கொண்டாடலாம்! இந்த வருசம் அவிங்கன்னா அடுத்த வருசம் இவிங்க அங்குட்டு! இப்படி செஞ்சா விவசாயிக்க்கு விவசாயி பேசிப்புரிஞ்சி கஸ்டநட்டம் தெரிஞ்சு ஏதாச்சும் நல்லது நடக்க நல்ல மக்களை டெவலப் செஞ்சாப்புலயும் இருக்கும். நடுவால இருந்து ரெண்டுபக்கமும் ஊதிஊதி பெருசாக்கற கரைவேட்டிகள கழட்டி உட்டாப்புலயும் இருக்கும்.

இந்த ஐடியாவெல்லாம் நான் விஜயகாந்து மாதிரு யாருக்கும் சொல்லாம நானே வைச்சுக்கறது. ஹிஹி...


5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

ரெண்டுக்கும் சின்னதா சுருக்கமா சொல்லிடுதேன். தமிழ் வலைப்பதிவுகள் இன்னும் அச்சு உடகத்தின் பிரதிபலிப்பாத்தான் இருக்கறதா நான் நினைக்கறேன். தமிழ் வலைப்பதிவுகளுகென்று ஒரு தனித்தன்மை இன்னும் வரணும்.

வலைப்பதிவர்களுக்கான யோசனைகளா? சரி.. எனக்குத்தெரிஞ்ச ஒன்னே ஒன்னு சொல்லிக்கறேன்.... எழுதுங்க.. எழுதுங்க.. எழுதிக்கிட்டே இருங்க... ஆனா எழுதியே ஆகவேணுங்கற கட்டாயத்துல மட்டும் எழுதாதீங்க! அந்த கட்டாயப் பதிவுல இருந்து உங்க இணையபக்கத்தின் தனித்தன்மை காணாமப்பூடும்ங்கறது என் தனிப்பட்ட எண்ணம்!


6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து அண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

வாழ்த்துகள் :)

தமிழ்மணம் கூட நானும் 4 வருசம் இருந்திருக்கேங்கறது சந்தோசமா இருக்கு! கல்லூரி முடிச்சு வேலைக்கு சேர்ந்து கண்ணாலம் செஞ்சு புள்ளைபெத்து குதுரைக்கு கடிவாளம் கட்டுனாப்புல ஓடிக்கிட்டு இருந்து வாழ்க்கைல என்னத்தையோ தொலைக்கறோமோன்னு இருந்த எனக்கு தமிழ்மணம் மூலம் கிடைச்சது ஒரு மிகப்பெரிய இன்பவெளி. இயந்திர வாழ்வில் இருந்து ஒரு தப்பிச்சலாகத்தான் ஆரம்பிச்சது அப்படியே ஒரு ஆர்வக்கோளாறா மாறி மீண்டும் தமிழ்ல தொடர்ச்சியா படிக்கறதும் (அப்பப்ப ) எழுதறதும்னு ஒரு இயல்பான நிலைக்கு வந்து நிக்குது. இதுக்கு நிச்சயம் தமிழ்மணத்துக்கு நன்றி சொல்லிறனும். இந்தமாதிரி ஒரு இணையவெளி கிடைச்சிருக்கலன்னா நான் தமிழ்ல ஒரு கடுதாசி கூட எழுதியிருக்க மாட்டேன்!




படத்துல இருக்கற பயபுள்ளைங்களை பாருங்க. அவங்க எப்படி ஒன்னா இருக்கயில ஃபீலாவுறாங்களோ அதே ஃபீலிங்சுதான் எனக்கும் தமிழ்மணத்தில் கிடைப்பது! நன்றின்னேன்!!

வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் என்ன செய்யவா?! நீங்க பாட்டுக்கு போய்க்கினே இருக்கப்பு. நாங்க பாட்டுக்கு பின்னால வந்துக்கினே இருக்கறோம்.

அவ்ளவ்தான் மேட்டரு! :)

கருத்துகள்

  1. //எழுதியே ஆகவேணுங்கற கட்டாயத்துல மட்டும் எழுதாதீங்க! அந்த கட்டாயப் பதிவுல இருந்து உங்க இணையபக்கத்தின் தனித்தன்மை காணாமப்பூடும்ங்கறது என் தனிப்பட்ட எண்ணம்!//


    வழிமொழிகிறேன்!

    பதிலளிநீக்கு
  2. //படத்துல இருக்கற பயபுள்ளைங்களை பாருங்க. அவங்க எப்படி ஒன்னா இருக்கயில ஃபீலாவுறாங்களோ அதே ஃபீலிங்சுதான் எனக்கும் தமிழ்மணத்தில் கிடைப்பது!//

    எச்சாட்டிலி ஸேம் பீலிங்கு :))))

    பதிலளிநீக்கு
  3. /உள்குத்து என்பது என்ன? என்பது ஆறாங்கிளாஸ் 2 மார்க்கு கேள்வியாகக்கூட இருக்கலாம்! ”மீ த பர்ஸ்ட்டு” என்பது ”ஹவ் ஆர் யூ?” என்பதற்கு மாற்றாக அமையலாம்! அல்லது கலிகால இலக்கியத்தில் தமிழின் மிகச்சிறந்த போர்னோகிராபியா காமலோகம்.காம் நிலைக்கலாம்! யார் கண்டது?! :)///

    ஹி ஹி ஹி

    பதிலளிநீக்கு
  4. //பழந்தமிழ் வார்த்தைகளை தேடித்தெரிந்துகொள்ள ஒரு இணையப்பக்கம் உள்ளதா என்றால் இல்லை. தற்காலத்தில் புழங்கும் ஒரு 1000 சொற்களுக்கு அர்த்தம் தேடி கண்டுபிடித்து விடலாம்தான். ஆனால் எனக்கு பசலை, துணிபு போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தமும் அச்சொல்லைச் சுற்றின கதைகளும் வரலாறுகளும் தெரிய வேண்டுமெனில் எங்கே போவது? எனக்கிருக்கற எண்ணம் என்னன்னா நாம அபிதானசிந்தாமணியை மட்டுமாவது ஆன்லைன்ல கொண்டுவந்தா இந்த பெருங்குறையை தீர்க்கலாம் என்பதுதான். //

    Check this out.

    பதிலளிநீக்கு
  5. indian, ரவிசங்கர்,

    இல்லை என்று சொன்னது என் தவறு மற்றும் அறியாமையே என் உணர்ந்தேன்! :(

    தகவலுக்கு நன்றி. சில வார்த்தைகளை தேடிப்பார்த்தேன். அதன் பொருளுடன் கூடவே அவைகள் பயன்படுத்தப்பட்ட இடங்களுடன் சேர்த்து விளக்கப்படுகிறது. அருமை!

    நன்றி :)

    பதிலளிநீக்கு
  6. //முடிந்தால் அதை அப்படியே கொண்டுபோய் பக்கம் பக்கமா சுட்டிகளோடு தமிழ் விக்கிபீடியாவோட சேர்த்துட்டம்னா//

    விக்சனரி !!!

    ta.wiktionary.org

    பதிலளிநீக்கு
  7. //இதுபோக ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு தகவல் மையம். அதுல அரசு தகவல்மையத்துடன் இணைந்த ஒரு கணினி. அதைப்பார்த்துக்கறதுக்கு ஊருலயே நல்லாப்படிச்ச ஊர்வளர்ச்சியில் அக்கறையுள்ள பயபுள்ள ஒன்னு ரெண்டு பேரு. அவங்க வேலையே ஊருக்குத் தேவையான தகவல்களான வைகாசில கடலை போடலாமாங்கறதுல இருந்து, ஜப்பானுல இயற்கை விவசாயம் செய்யற ஊருக்கு தலைக்கு 10000 ரூபா லோன் குடுக்கறாங்கறதுல இருந்து, அவுட்டேட்டனாட விவசாய பண்ணை டெக்குனிக்குகளை அப்டுடேட்டா இந்தியாவுக்கு இறக்குமதி செய்யற தவறுகளை முன்கூட்டியே அறிஞ்சு சொல்லறதாத்தான் இருக்கனும்.//

    இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன
    http://www.thehindu.com/2005/10/31/stories/2005103115660800.htm

    http://www.indg.in/e-governance/cscscheme/common-service-centres-scheme

    http://business.rediff.com/report/2009/aug/04/ficci-to-seek-quota-for-small-units-in-e-governance.htm

    விரைவில் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்து விடும்

    பதிலளிநீக்கு
  8. என் பெனாத்தல்களைப் போட்ட் பின் உங்க பதிவைப் பார்த்தால் ... ஒரு சந்தோஷம். முதல் பத்தியில் ஒரு ஒற்றுமை இருக்கோன்னு நினச்சிக்கிட்டே வாசிச்சா //தமிழ்மணம் கூட நானும் 4 வருசம் இருந்திருக்கேங்கறது சந்தோசமா இருக்கு!// அப்டின்னு ஒரு சொற்றொடர். என் பெனாத்தலில் //பரவாயில்லையே. ஐந்தில் நான்கு ஆண்டுகள் நானும் தமிழ்மணத்தோடு இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.// அப்டின்னு இருக்கு.

    ஒரே சந்தோசம். நம்ம இளவஞ்சி மாதிரி நாம கூட எழுதிட்டோமேன்னு ஒரு இதுவா போச்சி....

    பதிலளிநீக்கு
  9. டாக்டர்,

    மேலதிகத் தகவல்களுக்கு நன்றி!

    // விரைவில் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்து விடும் //

    படித்தேன். தெளிந்தேன்.
    இதுபோக பல விசயத்துல நாம பல மாநிலங்களுக்கு முன்னோடியா இருக்கறோம்னும் தெரிஞ்சுக்கிட்டேன். ச்சும்மா குஜராத்து குஜராத்துன்னு பீத்திக்கறாங்களே... கட்சி சார்புகளற்று நோக்கினால் நம் தமிழ்நாடு எத்தனை விசயங்களில் முன்னணியிலும் முன்னோடியாகவும் இருக்கு என புள்ளிவிவரத்தோடு ஒரு பதிவு போடுங்கன்னு வேண்டுகோள் வைச்சுக்கறேன் டாக்டர் :)

    நடமாடும் தகவல் சுரங்கம் நீங்கள் :)

    தருமிசார்,

    // நாம கூட எழுதிட்டோமேன்னு ஒரு இதுவா போச்சி....//

    இதெல்லாம் நெம்பவே ஓவர் சொல்லிட்டேன்!

    ஆனா, தமிழ்பதிவுகள் உலகில் நம்ப ரெண்டுபேருக்கும் ஒரே வயசுதான்! நாம நாலே நாலு வயசான யூத்து! :)

    பதிலளிநீக்கு
  10. நல்ல ஐடியா எல்லாம் கொடுத்திருக்கிங்க ஆசானே ;))

    பதிலளிநீக்கு
  11. தலை,

    பதிவு சூப்பர். அதைவிட இந்த ஃபாண்ட் சூப்பர். படிக்க செமை ஈஸியா இருக்கு. குளுமையாவும் இருக்கு

    பதிலளிநீக்கு
  12. முரளிகண்ணன்,

    ஃபாண்ட் Arial Unicode MS

    பாபு,

    நல்லா இருக்கேன்னேன்! :)

    பதிலளிநீக்கு
  13. ம்ம்.. நீங்க சொல்லுறது நடைமுறைக்கு வந்தா நல்லாத்தான் இருக்கும்..

    பதிலளிநீக்கு
  14. arumaiyaana padhivu..

    naan palli koodathula padicha kaalathukkum (15 years minnadi...ippo paakum bodhum pasanga tamil 2nd languageaa kooda edukardhu illa..innum solla pona en classmates palarukku thamizh ezhutha padika theriyala..ivlo per tamizh padika theriyaama iruppangannu nenakala

    indha nilaiaya maatha edhavadhu vazhigal solla mudiyuma ??

    பதிலளிநீக்கு
  15. அருமையான அபிப்ராயங்கள்...பிரத்யேக நடையில்...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு