முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு காதணி விழாவும் என் புகைப்படப்பெட்டியும்

போனவாரம் எங்க கிராமத்துப்பக்கம் என் பையனுக்கும் என் கசின்பிரதரு பசங்களுக்கும் முடியிறக்கி காதுகுத்து வைச்சிருந்தோம். கிராமம் எங்க இருக்குன்னு சொல்லறதுன்னு அம்புட்டு சுலபமா? மாக்கா உங்க நேட்டிவ் எதுங்கன்னு கேக்கறப்ப வழக்கமாச் சொல்லற கொழப்ப பதிலேத்தான் உங்களுக்கும்! (இதுக்கு பயந்தே நான் 20 வருசமா இருக்கற கோவைய சொல்லிக்கறது :) )

தருமபுரிங்க...

அது மாவட்டம்ப்பா! தருமபுரில எங்க?

அங்கன இருந்து 15 மைலுங்க.. பாலக்கோடு!

பாலக்காடா? கோடா? சரி...பாலக்கோட்டுல?!

பக்கந்தான்.. அங்க இருந்து 5 மைலு... மாரண்டஹள்ளி...

அடப்பாவி! அங்க இருந்து?!

வடக்கால 3 மைலு நடந்தா.. ஏழுகுண்டூர்!

எங்க பாட்டனுக்கு முப்பாட்டனுல இருந்து நாங்க வரைக்கும் இங்கதான் பசங்களுக்கு முடியிறக்கி காது குத்தறது. முனியப்பன் சாமி சிலையெல்லாம் இந்த தலைமுறை வைச்சது. அதுக்கு முன்னாடியெல்லாம் நடுகல் தான் சாமி. மலையின் அடிவாரத்துல இருந்து மேலவரைக்கும் ஏழு குண்டுப்பாறைகள் இருப்பதால் ஏழுகுண்டு முனியப்பன்! :) சாமிக்கு படையாலா கெடா வெட்டி சேவல் அறுத்து பன்னி குத்துவோம். பன்னிய இப்பெல்லாம் சமைக்கறதில்லை.. சாராயமும் படைக்கறதில்லை (சொல்லப்போனா கெடைக்கறதில்லை! ) ஈரல் ரத்த வருவலும் தலைக்கறி சோறும் சாமிக்கு படையலு. ஆட்டு பிரியாணி, கோழி வருவலு, ஜவ்வரிசி பாயாசம்.. இதான் விருந்து!

எங்கூட்டு விசேசத்தை லைட்டா உங்ககிட்ட பீத்திக்கறதுக்காக எடுத்த படங்களில் சில இங்கே..




முனியப்பன் & ப்ரண்ட்ஸ்...



ஆதி தமிழன் ஆண்டவனான்... மீதி தமிழன் அடிமைகளானான்...



விருந்துக்கு வருகை புரிந்த வாழையிலைக...



சிறப்பாவது? பொருளாதார மண்டலமாவது? Outsourcing strictly not Allowed!



ச்ச்சும்மா! எங்க முனியப்பனுக்கு ஒரு பில்ட்டப்பு படம்!



ரா. பார்த்திபனின் அடுத்த 'படம்'!



என்ன! லுக்கா?! 'மேல' வர்றாமையா போயிருவீங்க? அங்கன வைச்சுக்கலாம் பஞ்சாயத்த...




மொட்டைக்கு முன்னான பூவிழியின் போஸு...



கெடாய சாச்சுட்டம்ல..



விடு பாப்பா! தொடைக்கறி கடிக்கயில ஆட்டோட வலியெல்லாம் மறந்துரும்!



முனியப்பனின் ஆதிகால பூசாரி ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெகத்குரு மாதப்பன் ஸ்வாமிகள்! (பின்ன? எங்கூரு சாமியாருன்னா மட்டும் ஒரு கெத்து வேணாமா?! )



கதிரெழிலன் S/O இளவஞ்சி: இவனுங்களை நம்பி தலைய கொடுக்கலாமா? இல்ல.. எங்கப்பன் அவந்தலைமாதிரியே மாத்தறதுக்கு ஏதாச்சும் சதித்திட்டம் தீட்டுதானா?!



பாரதிநாதனின் மொட்டைக்கு முன்னான மருண்ட பார்வை!



இன்னாள் மொட்டையை அவதானிக்கும் முன்னாள் மொட்டை!



காட்டுப்பயக.. வர்றானுக... ஈரல்கறியும் தலைக்கறிசோறும் படையல் வைக்கறானுவ... ஆனா பல்லு வெளக்க ஒரு கோபால் பல்பொடி வெக்கமாட்றானுவ...



ஓஹோ.. காதுகுத்தயில இப்பிடித்தேன் அழனுமா?!



குத்தும் காது குழந்தைப்பயலுதுன்னாலும் வலி என்னவோ தாய்மாமனுக்கும் சேத்துத்தான்..



அப்பறம்?! கடைசியா என்ன நடந்ததா? மாரண்டஹள்ளி பாய் பிரியாணி விருந்துதான்...



மாமன் மச்சானுங்க எல்லாம் வந்து பிரியாணிய பட்டைய கெளப்புங்க... அப்படியே அஞ்சோ பத்தோ மொய்யெழுதாமயா போயிருவீக? :)

கருத்துகள்

  1. கலக்கல் படங்கள்.

    கதை சொல்லுவதுப் போல் அதன் தொடர்ச்சியும் அருமை.

    நடுவிலே உள்குத்து வேற..(ஆதி தமிழன்.... ) :)))

    பன்னி குத்துவோம் என்பது என்ன என்று தெரியவில்லை. புதசெவி

    பதிலளிநீக்கு
  2. அஞ்சு பத்து எல்லாம் செய்யலாம்தான். இப்ப நம்ம வசதிக்கு ஒண்ணே ஒண்ணு!

    நல்லா இருங்கடே!

    பதிலளிநீக்கு
  3. //
    கதிரெழிலன் S/O இளவஞ்சி: இவனுங்களை நம்பி தலைய கொடுக்கலாமா? இல்ல.. எங்கப்பன் அவந்தலைமாதிரியே மாத்தறதுக்கு ஏதாச்சும் சதித்திட்டம் தீட்டுதானா?!//


    ROTFL....


    பையன் தலைமுடியையும், உங்க அழகான,ஸ்டைலான தலையும் நினைச்சு பார்த்தா சிப்பு சிப்பா வருது... :)

    எல்லா போட்டோஸ்'ம் சூப்பரு.... வாத்தி'கிறதை நிருபீச்சிட்டிங்க... :)

    பதிலளிநீக்கு
  4. இப்படித்தான் அழுவனுமா... தாய்மாமாவுக்கும் சேர்த்து வலி கமெண்ட் சேந்து படத்துக்கு அழகு..

    பதிலளிநீக்கு
  5. Atleast you could have arranged ear piercing thru a gun which is very less painful comparing the tradional way.

    பதிலளிநீக்கு
  6. இளவஞ்சி போட்டோ மற்றும் கமென்ட் அசத்தல். நேர்ல வந்த மாதிரியே இருந்தது.

    பதிலளிநீக்கு
  7. படமெல்லாம் அருமை.. ஆமாம் நான் சுத்த சைவமாச்சே எனக்கென்ன விருந்து சரியா சொன்னாத்தான் மொய்பத்தி யோசிக்க முடியும்

    பதிலளிநீக்கு
  8. //கதிரெழிலன் S/O இளவஞ்சி: இவனுங்களை நம்பி தலைய கொடுக்கலாமா? இல்ல.. எங்கப்பன் அவந்தலைமாதிரியே மாத்தறதுக்கு ஏதாச்சும் சதித்திட்டம் தீட்டுதானா?!
    //

    கலக்கல் கமெண்ட் :)))

    பின்னூட்டம் போட்டதுக்கு பிரியாணி உண்டா?

    பதிலளிநீக்கு
  9. //கெடாய சாச்சுட்டம்ல..//
    //முனியப்பனின் ஆதிகால பூசாரி ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெகத்குரு மாதப்பன் ஸ்வாமிகள்! (பின்ன? எங்கூரு சாமியாருன்னா மட்டும் ஒரு கெத்து வேணாமா?! )//
    //இன்னாள் மொட்டையை அவதானிக்கும் முன்னாள் மொட்டை!//

    போட்டோஸ் கலக்கல் :))

    பதிலளிநீக்கு
  10. கதிரெழிலன் - பய பலவருசம் இதே அளவு முடியோட இருக்கட்டும்.. :)

    இன்னும் அதே கேமிரா தானா.. இல்ல 'ஃப்ரபொசனல்' வாங்கிட்டிங்களா? ச்சும்மா அதிருது போட்டா எல்லாம்.

    பதிலளிநீக்கு
  11. படமும் பத்தியும் கலக்கல் அண்ணாச்சி!

    //இன்னாள் மொட்டையை அவதானிக்கும் முன்னாள் மொட்டை!//

    கண்ணோரப் பார்வை தெரியும் அண்ணாச்சி! ஆனா காதோரப் பார்வை, அதிலும் காதோரக் கம்மல் பார்வை! - awesome shot! :-)

    பதிலளிநீக்கு
  12. தல,
    நல்லாவே விருந்து படைச்சிட்டீங்க ...

    பதிலளிநீக்கு
  13. pics are very nice and comments are ultimate...

    - Balakumar

    பதிலளிநீக்கு
  14. அருமையான படங்கள். ரத்தத் தெளிப்பைத் தவிர்த்திருக்கலாமோ?
    பையன் முடி நீண்டு வளர்ந்து நெடுநாள் வாழ வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  15. செம கலக்கல், அதுவும் தாய்மாமன் ரியாக்ஷனும், சாமியாரின் பகிங்கர பார்வையும்.

    பதிலளிநீக்கு
  16. "கெடாய சாச்சுட்டம்ல.."

    சந்தனத்துக்கு நடுவுல சகதி மாதிரி இருக்கு.

    அந்த படம் வேண்டாம்ணே.

    பதிலளிநீக்கு
  17. டிபிசிடி,

    உள்குத்தெல்லாம் இல்லைங்க. அங்க நட்டு வைச்சிருக்கற சாமிக்கல்லுக எல்லாம் எங்க பாட்டன் முப்பாட்டனுங்கதான்.

    அந்த காலத்துல பன்னிய குத்தித்தான் கொல்லுவாங்க. கெடா மாதிரி தலைய வெட்டி முடியாது. அந்த சொலவடை இன்னும் இருக்கு. வேணாம். ரொம்ப சொல்லப்போக அப்பறம் அபாகலிப்டோ மாதிரி ஆகிறப்போகுது! :)

    இகொ,

    டாங்ஸ்சேய்! :)

    ராயலு,

    // ிப்பு சிப்பா வருது... :)// ஏன்யா வராது உமக்கு?! உங்க 'தல'ய விடவா என் தலை மோசம்?! :)

    கயல்விழி,

    ஊக்கங்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  18. அனானி,

    குக்கிராமத்துல பியர்சிங் கன்னா? ஆசாரியே நல்ல மெல்லீசான ஊசி வைச்சிருப்பாரு.. பேப்பருல ஓட்டை போடறாப்புல லைட்டா ஒரு குத்து அவ்வளவுதான். புள்ளைங்க பாதி சும்மா பீதிலயே அழுதுங்க.

    முரளிகண்ணன்,

    நன்றின்னேன் :)

    கிருத்திகா,

    அப்ப உங்களுக்கு பாயாசமும் ரசஞ்சோரும் மட்டுந்தான்! :) இதுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை! நீங்க பாட்டுக்கு மொய் வைங்க :)

    ஆயில்யன்,

    // பின்னூட்டம் போட்டதுக்கு பிரியாணி உண்டா?//

    இதேது? அரசியல் கட்சிக்கு கூட்டம் சேர்க்ககதையாட்டம் இருக்கு?! உமக்கு இல்லாததா? அடிச்சாடுங்க! :)

    பதிலளிநீக்கு
  19. ராசா,

    UKல இருந்து வர்றப்ப ஒரு Nikon D80 புடிச்சுக்கிட்டு வந்தேன். அதுல காட்டற படந்தான் இதெல்லாம் :)

    கண்ணபிரான்,

    வாங்கப்பு! ஊருக்கு போய்ச்சேர்ந்தாச்சா?!

    தருமிசார்,

    உங்களுக்கு நான் ‘தல' யா? இந்த மதுர நக்கலு இருக்கே! :)

    பாலா,

    நன்றி!

    நாகு,

    ரத்ததெளிப்பு காட்சியை இன்டைரக்டா சொல்லற முயற்சிதான் :) ஊக்கங்களுக்கு நன்றி.

    இளா,

    வாங்கப்பு! சாமியாருக்கு வயசு 90 இருக்கும் :)

    பதிலளிநீக்கு
  20. ஒரிஜினல் "மனிதன்",

    வாங்கண்ணே! :)

    சந்தனமும் சகதியும் பார்க்கறவங்க பார்வையிலும் பழக்க வழக்கத்திலும் இருக்கு. கிராமத்து காதுகுத்துன்னா இதெல்லாம் நடந்தது/நடக்குங்கற பதிவு இது. இதுல அதைமட்டும் மறைச்சு உங்க பார்வைல பதிவை சந்தனமா மாத்தி நான் என்னத்த நடந்த சேதிய சொல்லப்போறேன்?! :)

    பதிலளிநீக்கு
  21. படங்களும், கமெண்ட்டுகளும் மிக அருமை. கலக்கலாக பண்ணியிருக்கறீங்க. ஊருக்குப் போய்ட்டு வந்த மாதிரியே இருந்தது.

    பதிலளிநீக்கு
  22. கதிரெழிலன் S/O இளவஞ்சி பெரிய ஆளா வர வாழ்த்துக்கள்..

    வருவார், ஏன்னா...

    //இவனுங்களை நம்பி தலைய கொடுக்கலாமா? இல்ல.. எங்கப்பன் அவந்தலைமாதிரியே மாத்தறதுக்கு ஏதாச்சும் சதித்திட்டம் தீட்டுதானா?//

    பெரியவர்க்கு இந்த வயசிலேயே நல்ல புரிதல்..:-)))

    பதிலளிநீக்கு
  23. பிரமாதம் நண்பா.. பக்கம், பக்கமா எழுதித்தீர்க்குற விஷயத்தை அழகா, விஷுவலா சொல்லிட்டீங்க. எல்லா படங்களுமே துல்லியமா, இயல்பா இருக்கும். அய்யனார் சிலையோட கை, கமுக்கட்டு, கழுத்து, தலை, தொடைன்னு ஒரு இடம் விடாம, பயலுக ஏறி உட்காந்திருக்குற படம், பல அரசியல் சங்கதிகளைப் பேசுது. நான் அந்த படத்தை களவாண்டு வச்சிருக்கேன்.

    பதிலளிநீக்கு
  24. ஒரு படம் பாத்த ஃபீலிங்கு. சூப்பர்.

    பதிலளிநீக்கு
  25. ஓவ்வொரு படமும் ஒரு கத சொல்லுது.. அசத்தல்..

    பதிலளிநீக்கு
  26. //ஒரு படம் பாத்த ஃபீலிங்கு. சூப்பர்.//

    ditto.:-)

    பதிலளிநீக்கு
  27. அருமை! அருமை!

    அதுவும் காதோர லோலாக்கு படம் அட்டகாசம்.

    பதிலளிநீக்கு
  28. படங்கள் அருமை.கெடாவெட்டுக்கு போன மாதிரி இருக்கு.

    பதிலளிநீக்கு
  29. D80 சூப்பருங்க... நல்லா வந்திருக்கு.

    பதிலளிநீக்கு
  30. உண்மையயை மறைமுகமா சொல்லுறது தானே உள்குத்து...மாத்திட்டாங்களா...? :)

    அப்போகாலிப்டோ, 10000 பிசி எல்லாம் விரட்டி விரட்டி இப்போ டிவிடில பாக்குறாங்க. நீங்க ஏதோ பழம் பெருமையயை சொல்லாம தவிர்க்குறீங்க :)))

    இது அறிவு பதுக்கல்... கண்டங்கள்... :))))))))))))


    //
    இளவஞ்சி said...
    டிபிசிடி,

    உள்குத்தெல்லாம் இல்லைங்க. அங்க நட்டு வைச்சிருக்கற சாமிக்கல்லுக எல்லாம் எங்க பாட்டன் முப்பாட்டனுங்கதான்.

    அந்த காலத்துல பன்னிய குத்தித்தான் கொல்லுவாங்க. கெடா மாதிரி தலைய வெட்டி முடியாது. அந்த சொலவடை இன்னும் இருக்கு. வேணாம். ரொம்ப சொல்லப்போக அப்பறம் அபாகலிப்டோ மாதிரி ஆகிறப்போகுது! :)
    //

    பதிலளிநீக்கு
  31. \\குத்தும் காது குழந்தைப்பயலுதுன்னாலும் வலி என்னவோ தாய்மாமனுக்கும் சேத்துத்தான்..\\
    கொஞ்ச வருஷம் முன்னாடி ஆப்பிரிக்கால ஒரு குழந்தைக்கு தடுப்ப்பூசி போடும் போது அதன் தாய் இதே மாதிரிதான் உணர்ச்சியைக்காட்டுவாங்க. அந்த புகைப்படம் அந்த வருஷத்துல சிறந்த புகைப்படங்களுல் ஒண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்துது. நீங்க எடுத்துருக்க இந்த போட்டொ அதை ஞாபகப்படுத்து.அருமையான புகைப்படங்கள்.

    பதிலளிநீக்கு
  32. கப்பி, சூர்யா,

    ஊக்கங்களுக்கு நன்றி!

    மங்கை,

    // பெரியவர்க்கு இந்த வயசிலேயே நல்ல புரிதல்..:-))) // ஹிஹி...

    ஆழியூரான்,

    நன்றி! :)

    // அந்த படத்தை களவாண்டு வச்சிருக்கேன். // ஒமக்கு இல்லாததா பிரதர்? :)

    சின்ன அம்மிணி,

    // நீங்க எடுத்துருக்க இந்த போட்டொ அதை ஞாபகப்படுத்து.// போட்டாகிராபி பழகறதே இப்படி பல இன்ஸ்பிரேஷன்ஸ் வைச்சுத்தான்! :)


    TBCD,

    // இது அறிவு பதுக்கல // நல்லாச்சொன்னீங்க! இருந்தா பதுக்க மாட்டமா?! :)


    மத்தபடி மக்கஸ்,

    ஊக்கங்களுக்கு நன்றி! :)

    பதிலளிநீக்கு
  33. //பாரதிநாதனின் மொட்டைக்கு முன்னான மருண்ட பார்வை!
    //

    sema padam.

    thaimaman padamum superu.

    kalakki putteenga.

    andha aadu moonji avoid panniyirukkalaam :). yendaa enna saappidareengannu kekkara maadhiri irukku :(

    பதிலளிநீக்கு
  34. படமெல்லாம் அருமை..
    அப்டியே எங்க‌ கிராம‌த்துக்கு போனாப்ல‌ ஒரு பீலிங் :)
    ந‌ன்றி இளவஞ்சி :)

    பதிலளிநீக்கு
  35. very good photographs(y), good frames....

    பதிலளிநீக்கு
  36. அருமையான பதிவு...ரசனையான மனிதர்...மண் மணம் மாறாத மனிதர்கள்....ரசனையான படைப்பு..

    பதிலளிநீக்கு
  37. சர்வேசன், செல்வன், முகி, சின்னா,

    உங்கள் வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி! :)

    பதிலளிநீக்கு
  38. Machaan,

    Indha mathiri Briyani ellam pathu romba varusamachu hmmm.

    Photos are nice... payan mudiya paatha onae first yearla partha mathiri iruku.

    Renga

    பதிலளிநீக்கு
  39. D80ல போட்டோ புடிச்சு நச்சு நச்சுனு போட்டிருக்கீங்க.
    உங்களை வம்புக்கிழுக்கர மாதிரி ஒரு பதிவு
    http://surveysan.blogspot.com/2008/05/blog-post_20.html

    சும்மா டமாஸுக்கு ;)

    பதிலளிநீக்கு
  40. படங்கள் எல்லாம் சூப்பரு ;))

    \\கதிரெழிலன் S/O இளவஞ்சி: இவனுங்களை நம்பி தலைய கொடுக்கலாமா? இல்ல.. எங்கப்பன் அவந்தலைமாதிரியே மாத்தறதுக்கு ஏதாச்சும் சதித்திட்டம் தீட்டுதானா?!\\

    சிரிப்பு தாங்க முடியல...;))))))

    பதிலளிநீக்கு
  41. \\ இராம்/Raam said...

    பையன் தலைமுடியையும், உங்க அழகான,ஸ்டைலான தலையும் நினைச்சு பார்த்தா சிப்பு சிப்பா வருது... :)

    எல்லா போட்டோஸ்'ம் சூப்பரு.... வாத்தி'கிறதை நிருபீச்சிட்டிங்க... :)\\

    இதுக்கு ஒரு ரிப்பிட்டே போட்டு என்னோட மொய்யை முடிச்சிக்கிறேன் ;;)

    பதிலளிநீக்கு
  42. சர்வேசன்,

    உங்க பதிவுல போட்ட பின்னூட்டம்....


    // என்ன ஒரே தப்புன்னா, இதை, விளையாட்டுக்காக கொல்றது, கொஞ்சம் சைக்கோத்தனம்.//

    இது கரெக்கிட்டாத்தேன் சொல்லியிருக்கீங்க :)

    // ஒரு பாவப்பட்ட ஆட்டை ஃபோட்டோவெல்லாம் எடுத்து, அதுக்கப்பால அதை மர்டர் பண்ணி, மட்டன் பிரியாணி செஞ்சு, //

    இதயே நாங்க எப்படி எழுதுவமுன்னா,

    ”முனியப்பனுக்கு நேர்ந்துவிட்ட ஆட்டை, பூசையெல்லாம் செஞ்சு, சாமிக்கு படையலாக்கி, கடைசியா சொந்தபந்தத்துக்கு விருந்தோம்புனோம்...”

    இந்தமாதிரி விசயத்துல எல்லாம் அவங்கவங்க பார்வைதான். அந்த பார்வைகள் அவங்கவங்க சமூக வளப்பும் பழக்கவழக்கங்களும் கொண்டு வர்றதுதான். இதுல சரிதப்புன்னெல்லாம் பேசிக்கினு இருந்தா முடியற காரியமா?

    ஆட்டை சந்தோசமாத்தான் நேர்ந்துக்க்கிட்டோம். மாமன்மச்சானுங்க கூடிக்குழாவி சந்தோசமாத்தாம் பிரியாணி சாப்புட்டோம். அது பற்றிய என்பார்வையிலான பதிவு இது. இதுவே நான் ”சூப்பரு பிரியாணி”ன்னும் சொல்லிட்டு கூடவே , ச்சும்மா ”மிருகவதை சபைநாகரீக”முன்னுட்டு “அய்யோ பாவம்! ஆடு!” அப்படின்னு நான்
    எழுதியிருந்தன்னா அதான் இரட்டைவேட ஆபாசமா இருந்திருக்கும்!

    ஒரு புகைப்படம் ஒரு செய்தியை மக்களுக்குச சொல்கிறது. அது எந்த விதமான எதிர்வினைகளை பார்க்கிறவர் மனதில் உருவாக்குகிறது என்பது அவரவர் கண்ணோடமில்லையா!? :) ஒரு புகைப்படக்காரனாக நடந்த நிகழ்ச்சியின் பதிவு இது. ஒரு வாசகனாக எனக்கு கெடா வெட்டு சொந்தத்துக்கு பிரியாணி போட்டது மகிழ்வளிக்கும் நிகழ்வு. உங்களுக்கு அது மிருகவதை! அம்புட்டுத்தேன் மேட்டரு! :)

    பதிலளிநீக்கு
  43. காட்சிகளை நிகழ்வுகளை எழுத்துக்கள் இன்றியே கண்முன்னே கொண்டுவரும் நல்ல புகைப்படங்கள்!

    கடைசி படம் பசியை கூட்டிருச்சி!

    சரி சரி எழுதிக்கோங்க!
    சிபி மாமா 11 ரூவா!

    பதிலளிநீக்கு
  44. 'தல' சில படங்கள் களவாடப்பட்டு விட்டன..! மறுபதிப்பின் போது நிச்சயம் பெயர் பொறிக்கப்படும்! :)

    ஆனாலும்.. பிரியாணி போட்டுற மேட்டரை சொல்லாம வுட்டுட்டீரேயா..! :((

    பதிலளிநீக்கு
  45. கோபிநாத்,

    சிரிங்கய்யா சிரிங்க! :)

    சிபியாரே,

    // கடைசி படம் பசியை கூட்டிருச்சி! // போன வாரம் உம்ம வீட்டு சாப்பாட்டை விட்டுட்டன்யா! :(

    பாலாபாய்,

    களவாவது ஒன்னாவது. யாம் பெற்ற இன்பம்... :)

    // பிரியாணி போட்டுற மேட்டரை சொல்லாம வுட்டுட்டீரேயா..! :(( //

    மேல அட்ரசை பாத்தீங்கல்ல?! பட்டிக்காட்டுக்கு யாருவருவாகன்னு விட்டுட்டேன். இருந்தாலும் தப்புத்தான்... மாப்பு! :)

    பதிலளிநீக்கு
  46. இளவஞ்சி:

    அருமையான புகைப்படங்கள், ஒரு ஆழகான ஆவணப்படம் போல இருந்தது பதிவு.

    \\கதிரெழிலன் S/O இளவஞ்சி: இவனுங்களை நம்பி தலைய கொடுக்கலாமா? இல்ல.. எங்கப்பன் அவந்தலைமாதிரியே மாத்தறதுக்கு ஏதாச்சும் சதித்திட்டம் தீட்டுதானா?!\\


    இந்தப் படம் அருமை என்றால் "முனியப்பன்& நண்பர்கள்" ஒரு அரசியலாகவும் தெரிகிறது.

    வன்முறை, பாவம், இரத்தம் ......

    மனிசனை வெளியில நிறுத்தி கைல படாம குங்குமத்தை உதறிட்டு போவதைப் பார்க்கும் போது இதுல ஒன்னுமே இல்ல...


    நன்றி.

    பதிலளிநீக்கு
  47. மறுபடியும் படங்களைப் பார்த்தேன். முனியப்பன் & பிரண்ட்ஸ் படத்தில் பசங்க முகத்தில் தெரிவதை விட முனியப்பன் முகத்தில் சந்தோசம் தெரிவது அழகு!!!

    பதிலளிநீக்கு
  48. நாதன், தங்கமணி,

    வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி! :)


    //இந்தப் படம் அருமை என்றால் "முனியப்பன்& நண்பர்கள்" ஒரு அரசியலாகவும் தெரிகிறது.//

    புரிந்தே இருக்கிறேன் :)

    நான் என் அரைகுறை அறிவில் பக்கம் பக்கமாய் எழுதியிருந்தாலும் இந்த படம் தரும் புரிதல்போல அமைந்திருக்காது என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது :)

    பதிலளிநீக்கு
  49. அருமையான அவுட்புட் !!! உங்கள் கைவண்ணத்தில் அற்புதமாக இருக்கிறது படங்கள்...

    இளவஞ்சி, உங்கள் கேமிரா என்ன ?

    பதிலளிநீக்கு
  50. செந்தழல்,

    // இளவஞ்சி, உங்கள் கேமிரா என்ன ? //

    காமெரா Nikon D80. ஊக்கங்களுக்கு நன்றி :) வெளில எடுத்து மாசமாகுது.. இந்த வாரம் எங்கனயாவது கெளம்பிற வேண்டியதுதான்! :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு