முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பீளமேடு - 641004




ன்னாங்க இது இப்படி ஒரு அநியாயம் நடக்குது நாட்டுல! கற்பனைத்திருட்டு ஒரு அளவுக்கு இருக்கலாம். அதுக்காக இப்படியா வகைதொகையில்லாம சீனுக்கு சீன் எங்க காலனி மேட்டருல இருந்து சுட்டு படமெடுப்பாய்ங்க? ( மனசாட்சி: டேய்... டேய் இந்தியா முழுசும் சின்னப்பசங்க ஒரே மாதிரிதான் கிரிக்கெட்டு வெளையாடுவாய்ங்க... சும்மா கூவாத.. )

சரி போனாப்போகுது. கிளைமாக்சு கூடவா? நாங்க சேரன் மாநகர் டோரணமெண்டுல செமீஸ் வரைக்கும் உயிரைக் குடுத்து போராடி வந்ததும் அப்பறம் ஃபைனல்சுல டங்குவராரு அந்து அம்மணத்துக்கு ஈக்குவலா சீரழிஞ்சு சின்னாபின்னப்பட்டு வந்ததும் இவிங்களுக்கு எப்படி தெரியும்? 4 ரவுண்டு மேட்சுல மூணாவதே செமீஸ் மேட்ச்னா பார்த்துக்கிடுங்க... ரெண்டு டீமும் எதுத்தெதுத்தாப்புல நின்னு கையெல்லாம் குடுத்து ஜோராத்தான் ஆரம்பிச்சது மேட்சு. அப்பவெல்லாம் சைடுக்கு 20 ஓவரு மேச்சுதான். அவங்க 88ம் நாங்க கடைசி விக்கெட்டுக்கு 84ம். வாழ்க்கைல நான் மொதலும் கடைசியுமா அடிச்ச ( பாரதி காலனி வினாயகரால் அடிக்க வைக்கப்பட்ட.. ) 6 அதுதான். அடிச்சு முடிச்சு ஆரவாரமெல்லாம் முடிஞ்சும் அரை மணி வரைக்கும் கையெல்லாம் நடுங்கிட்டு இருந்தது இன்னும் ஞாபகமிருக்கு!

ம்ம்ம்... அதுக்கப்பறம் பைனல்சு மேட்சுக்கு விதவிதமா பிராக்டீசுன்னு எடுத்து, டைவிங் கேச்செல்லாம் பழகி, தொட்டுவிட்டு ஓடி சிங்கிள்ஸ் எடுக்கறதெல்லாம் நடத்திப் பார்த்து, வெள்ளை வெளேர்னு வைட் அண்ட் வைட்டுமா போயி, பைனல்சுல மொதல்ல பேட்டிங் எடுத்ததும், போன மேட்ச்சு சிக்ஸ்சரை வைச்சே டீமுக்குள்ள அரசியல் செஞ்சு நான் ஓபனிங் எறங்குனதும், மூனாவது பந்துல லெக்சைடு வைடு போன பந்தை அசிங்கமா லெக்ஸ்வீப்பு செய்ய அது அதைவிட அசிங்கமா ரெண்டாவது "ஸ்லிப்பு"ல தேமேன்னு மூக்கு நோட்டிக்கிட்டிருந்தவன் கையில அடைக்கலமாகி அவுட்டானதும் (யோசிச்சுப்பாருங்க என் திறமையை! ஒலகத்துல எவனுமே இந்த மாதிரி அவுட்டு ஆனதா வரலாறு கிடையாது! ), அப்பறமா நாங்க 12 ஓவருக்கு மேல கையில, காலுல, மூஞ்சியில எல்லாம் அடிவாங்கி நின்னும் தாக்குப் புடிக்க முடியாம 36க்கு ஆல் அவுட்டு ஆனதும், அந்த பிக்காரிப்பயக வெரல் நகத்துல கூட அழுக்குப்படாம அஞ்சாவது ஓவருல மேச்சை முடிச்சு கோப்பையை தூக்கிக்கிட்டு போனதுபின்னான துக்கம் இப்ப நினைச்சாலும் தொண்டைய அடைக்குது. எனக்கு என்ன தோணுதுனா.. எங்க டீமுல இருந்த எவனோ ஒரு அல்லக்கை மொத்தக் கதையையும் ஜஸ்ட் ஒரு சிங்கிள் தேங்கா பன்னுக்கு ஆசைப்பட்டு எழுதிக் குடுத்திருந்தாதான் இது சாத்தியம்!

உணர்ச்சி வசப்பட்டு காபிரைட்டு கேசு போடலாம்னு முடிவு செஞ்சு அதுக்கான தகவல்களை திரட்டும்போதுதான் நம்ப P.வாசுவும் சந்திரமுகி கதை அவரோடதுன்னும் அதை ஹிந்தில அவரைக் கேக்காம எடுக்கக் கூடாதுன்னும் கேசு போட்டிருக்கறதா தெரியவந்துச்சு. சரி இது தெரிஞ்சப்பறமும் நாம காப்பிரைட்டு வழக்குன்னு போனா இருக்கற கொஞ்ச நஞ்ச மானமும் மிஞ்சாதுங்கறதாலயும், புது டைரக்டரு வெங்கட்டு நல்லா படமெடுத்திருக்கறதாலயும் மறப்போம்... மன்னிப்போம்!

என்னாதான் அவரு விலாவரியா புட்டுபுட்டு வைச்சிருந்தாலும் எங்க டீமு சட்டதிட்டங்களை அவரால திரைக்கு கொண்டுவர முடியல! ( பின்ன.. அதையெல்லாம் எங்க டீமுக்குள்ள கொண்டு வர்றதுக்கே நாங்க தலையால தண்ணி குடிச்ச காலமது ) ஆகவே, எங்க மட்டையடி சட்ட திட்டங்க போனாப்போடுதுன்னு உங்களே உங்க பார்வைக்கு மட்டும்...

* 23 தப்படிகளுக்கு பிட்ச்சும் ஒன்னரை பேட்டுக்கு கிரீசும் இருக்குமாறு அம்பயரின் முன்னினையில் மட்டுமே அளக்க வேண்டும்.

* செகப்பு விக்கி கார்க் பால் தான் அப்ரூவ்டு அபிசியல் பிராண்ட். பாதி மேச்சுல பந்து விரிசல் விட்டாலும் அதுலயே வெளையாடலாம். சில நேரம் கால்வாசி பேர்ந்துபோனாக்கூட வைச்சு சமாளிக்கலாம். ஆனா பாதியா ஒடைஞ்ச பந்து நிச்சயமா அனுமதிக்கபட மாட்டாது.

* டாஸ் போடறதுக்கு படம் போட்ட காசு கூடாது. ஹெட்டா டெயில்ஸா ன்னு இங்கிலீசுல கேக்கற வாய்ப்பு இருக்கறதால குழப்பமாகி ஆரம்பமே சண்டையில் ஆரம்பிக்காம இருக்க கண்டிப்பா ஒரு சைடு நம்பரும் அடுத்த சைடு சிங்கத்தலையும் இருக்கனும்.

* டாஸ் போடற எடத்துல காப்டனுக்கு மட்டுமே அனுமதி. டாஸ் ஜெயிச்சப்பறம் ஒடனே பேட்டிங்கா பவுலிங்கான்னு முடிவு சொல்லிறக் கூடாது. திரும்ப வந்து டீம் மக்களோட ரெண்டு நிமிசம் விவாதிச்சுத்தான் முடிவை சொல்லனும். அப்பத்தான் ஒரு கெத்தா இருக்கும். கூடவே, நம்மகிட்ட ஏதோ ஒரு சதித்திட்டம் இருக்குன்னும் எதிரணி மெரளும்.

* கையிலோ காலிலோ அடிபட்டா பிச்சுலயே அழுது டீம் மானத்த வாங்கக்கூடாது. அட்ரிட்டெய்டு கேட்டு வாங்கிட்டு வெளிய வந்து வெச்சுக்கலாம் ஒப்பாரிய...


* ஓவருக்கு 3 வைடுதான் போட அனுமதி. மூணு பாலுக்குள்ளயே மூணு வைடும் போட்டுட்டம்னா அது பேபி ஓவராக மாற்றப்படும். இல்லைன்னா அடுத்த ஸ்பெல்லு கிடையாது. பந்து பயங்கறமா ஸ்விங்கு ஆகறதாலதான் வைடு போகுதுங்கற கதையெல்லாம் எடுபடாது! ( எங்க கேப்டனு முரளி கதறக்கதற ஒரு மேட்சுல 14 வைடுகளை அரைமணி நேரமாக ஒரே ஓவரில் போட்டு முடித்த என் தனிப்பட்ட சாதனையின் மூலமாகத்தான் இந்த ரூல்சு கொண்டு வரப்பட்டது என்பதை சொல்லிக்கறது மூலம் என் தனிப்பட்ட ரெக்கார்டுகளை டெண்டுல்கர் போல பீத்திக்கறதில் எனக்கு என்றைக்குமே விருப்பமிருந்தது இல்லையாததால், நான் அதை இங்கே சொல்லப்போவது இல்லை! ) ( வாக்கியத்தை முடிடா வெண்ணெய்! )

* ஒரு வாரத்துல ஒரு தடவைதான் அவுட்டு ஏமாத்த அலவ்டு. அதுக்கு மேல என்ன சண்டை போட்டாலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது! ( From History: க்ளீன் போல்டு ஆகி ஸ்டம்பு நாலடிக்கு அந்தப்பறமா பறந்து விழுந்ததை சில நொடிகள் மவுனமாக பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு அப்பறமா அது காத்தடிச்சுத்தான் விழுந்ததுன்னு முக்காமணிநேரமா போராடி நிரூபிச்சு மறுபடியும் காஜி அடிச்ச எங்க கேப்டன் முரளிக்காகவே கொண்டுவந்த ரூல்ஸ் இது.)

* மேட்சுக்கு ரெண்டு பேரு வீட்டுல இருந்து ஒரு கொடம் தண்ணியும் டம்ளரும் கொண்டுவர்ற வேலைய ஏத்துக்கனும். பயக காட்டுத்தனமா கண்டமேனிக்கு கொடத்துகுள்ள கைய விட்டு தண்ணி அழுக்காச்சுன்னா அதுக்கும் அவங்களே பொறுப்பு.

* ரெண்டு சைடுலயும் ஒரு ஓவருக்கு ஒரு தடவைதான் ஸ்கோர் கேட்க (ஸ்கோர் ப்ளீஸ்ஸ்... )அலவுடு. சும்மாச்சும்மா ஓவ்வொரு பந்துக்கும் ஸ்கோர் கேட்டு எழுதறவனை கொழப்பக்கூடாது.

* டீமுக்கு 11 பேரு வேணுங்கறதெல்லாம் கட்டாயம் கிடையாது. மேச்சுக்கான பேச்சுவார்த்தையின் போது ஏழு பேருக்கு ஏழுன்னு ஒத்துக்கிட்டம்னா அதுக்கப்பறம் மேச்ட் ஆரம்பிச்ச பெறகு ரெண்டு பேரு சொல்லாம கொள்ளாம அப்பீட்டு ஆயிட்டானுங்கன்னா அது அவுங்க பாடு. ஏழுக்கு அஞ்சுபேருன்னே மேட்சு தொடரும். ஒன்மேன் காஜி வேண்டுமா இல்லாங்கறதும் இதைப்பொறுத்தே முடிவெடுக்கப்படும்.

* டீமில் பொதுவிலிருக்கும் கொட்டைகார்டை கண்டிப்பாக அண்ராயருக்கு மேல்வைத்துதான் உபயோகப்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் அண்ராயருக்கு உள்ளே வைச்சு உபயோகப்படுத்தக் கூடாது!

* ரன் அவுட்டுகளில் கனெக்சன் அவுட்டு உண்டா என்பதனை மேட்சுக்கு முன்னதாகவே பேசி முடிவு செய்துக்க வேண்டும். அதே போல கிரீசுக்கு உள்ளே ரீச்சானமா இல்லையா என்பதை பேட்டு செம்மண்ணில் கிழித்த கோட்டைக்கொண்டு நிரூபிக்கும் பொறுப்பு பேட்ஸ்மேனுக்கே உண்டு. இல்லையெனில் பேட்டு Airல் இருந்ததாகவே கருதப்பட்டு அவுட்டு கொடுக்கப்படும்.

* பேட்டுக்கு கிரிப்பாக சைக்கிள் ட்யூப்பு வாங்கி மாட்டுவதும், ஆயில் சீசன் செய்து வைப்பதும் ஓபனிங் பேட்ஸ்மேன்களது பொறுப்பு. மேட்சில் அரைபிளேடுகளுக்கு மேல் ஒடைஞ்ச பேட்டுக நாட் அலவுடு.

* எக்காரணம் கொண்டும் எந்த நிலையிலும் அம்பயரை கெட்ட வார்த்தைகளில் திட்டாமல் கண்ணியம் காக்க வேண்டும். ஏனெனில், அம்பயரும் இதே காட்டுக்கும்பலில் இருந்த வந்த ஆளாகையால் அவரால் அதிகப்பட்சம் 5 நிமிடங்களுக்கு மேல் நடுவுநிலமையா இருக்கமாதிரி நடிக்க முடியாது. ( ஒரு முறை பாதி மேட்சில் LBW கொடுக்க மறுத்த அம்பயர் ஆவரம்பாளையம் வெல்டிங் பட்டரை ஓனர் அன்பர் காத்தமுத்துவைப் பார்த்து "நீயெல்லாம் எப்படியா அம்பயரான? LBWக்கு இங்கிலீசுல என்ன சொல்லு பார்ப்போம்"னு மல்லுக்கு நின்ற, அடுத்த 5வது நிமிடத்தில் அவர் கையில் ஒரே ஒரு ஸ்டம்புடன் தனியாளாக எங்களை கிரிக்கெட்டை உடனடியாக விடுத்து விளையாட்டை 100 மீட்டர் ஓட்டப்பந்தயமாக மாற்றத்தூண்டிய நிகழ்வு பீளமேடு முட்டுசந்து கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்! )

* தவிர்க்க இயலாத காரணங்களால் ஒரே கிரவுண்டில் ஒரே நேரத்தில் 5 மேட்சுகள் நடக்கும்படி அமையும் நேரங்களில் எக்காரணம் கொண்டும் அடுத்தவர் பிச்சுக்கு குறுக்காக ஓடிவந்து பவுலிங் போடும்படி தமது பிச்சுகளை அமைத்துக்கொள்ள கூடாது.

* மேட்சு முடிவில டீம் காசுல எல்லாத்துக்கும் ஒரு டீ அல்லது ரஸ்னா பாக்கெட்டும் கூட தேங்கா பன்னு அல்லது முட்டை பப்ஸ் மட்டுமே அலவ்டு. அதுக்குமேல தீனிக்கு ஆட்டைய போட்டா அது தட் தட் மேன் தட் தட் மணியின் கீழ் வரும்.

* * * *

இதுபோக என் கடந்த கால மட்டையடி விளையாட்டின் வரலாற்றை கொசுவத்திச்சுருளாக பதிந்துவைத்திருக்கும் மற்ற இடங்கள் பின்வருமாறு:

1. மனசுக்கு நேர்மையாய்...

2. எனக்கு வராத காதல் கடிதம்

( காலத்தின் கொடுமைய பார்த்தீங்களா? எனக்கு நானே செல்ஃப் வெளம்பரம் போட்டுக்கற அளவுக்கு மூத்த வலைப்பதிவராயிட்டேன்! )

கருத்துகள்

  1. 2007 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாட, உங்க அணியை மேற்கிந்தியத் தீவுகளுக்கு அனுப்பியிருக்கலாம். :-)))

    பதிலளிநீக்கு
  2. காலங்கார்த்தாலை சிரிக்கவைச்சுப் புண்ணியம் கட்டிக்கொண்டீர்கள். உங்கள் குழுவின் அல்லது குழுக்களின் சட்டதிட்டங்கள் மெச்சத்தக்கவை :)

    பதிலளிநீக்கு
  3. கொசுவர்த்தி சுத்தலாம்தான். அதுக்காக படம் முழுவது அதுவே கொஞம் கூட தொடர்பில்லாத மாதிரி ஒரு உறுத்தல் இருந்துட்டே இருந்தது...

    உங்க கிரிக்கெட் ரூலை அள்ளி விட்டுட்டீங்க. மூத்த பதிவரைத் தொடர்ந்து இன்னமும் எத்தனை வருதோ???

    பதிலளிநீக்கு
  4. தல,
    வெங்கட் கிட்ட கதைக்கு ராயல்டி கேளுங்க....

    பதிலளிநீக்கு
  5. //மூத்த வலைப்பதிவராயிட்டேன்//

    இதுதான் டாப்பு...
    நம்ம கிரிக்கெட் எல்லாம் ஹோப் காலேஜ் தேவி ஒயின்ஸ்ல மட்டும் தான் :-)

    பதிலளிநீக்கு
  6. தெய்வமே!! :) நான் போஸ்ட்டுக்கு வச்சிருத ஒக்கேஒக்க ஐடியாவும் பனால்.. ம்ம் நடத்துங்க..

    இங்கயே இருந்துகிட்டு இன்னும் நான் படத்தை பார்க்க முடியல, நீங்க முந்திக்கிட்டீங்க...

    நாங்கெல்லாம் விக்கட்கீப்பராவும் பாதி மேட்ச் நின்னுட்டு 'டெயில்' ஓவர்ல பவுலிங் போடவும் வருவோம்..

    இதே ரூல் எல்லா இடத்துக்கும் அப்ளை ஆகும்.. எங்களுக்கு இன்னொரு சட்டதிட்டமும் உண்டு.. 'கண்டிப்பா லுங்கி கட்டிட்டு விளையாட கூடாது' .. ஒரு காப்பரிச்சை லீவுல எங்க டீம் ஸ்பின்னர் பூபாலன் அவங்கவீட்டுக்கு வந்திருந்த சொந்தக்கார பொண்ணை மேட்சு பார்க்க கூட்டிட்டு வந்து, அசிங்கப்பட்டதுல இருந்து இந்த ரூல் ஸ்ட்ரிக்டா ஃபாலோ செய்யப்பட்டது :)

    பதிலளிநீக்கு
  7. ஆனாலும் நீங்க இப்படி அநியாயமா இந்த பதிவை நகைச்சுவை'யில சேர்த்திருக்க கூடாது, இதெல்லாம் நிசத்துல நடந்த 'வெகு சீர்யஸ்' சமாச்சாரங்கள்.. 'பேட்'ல அடியல்லாம் வாங்கலையோ..

    ஒரு வேளை சந்திரமுகி P.வாசு மேட்டருக்காக நகைச்சுவை'யில சேர்த்தீங்களோ?

    பதிலளிநீக்கு
  8. ஒரே நகைச்சுவை தான் போங்கள்.

    பதிலளிநீக்கு
  9. அது சரி... ஏன் ராக்கர்ஸ் போட்டோ போட்டிருக்கீங்க? ஷார்க்ஸ் படம் கிடைக்கலையா?

    பதிலளிநீக்கு
  10. கழுகு யாருங்கண்ணா? ஸ்கூப் மீட்டருங்கண்ணா!

    வலையுலக நைனாங்களுக்கு வணக்கம்!

    இப்போ ஒருத்தர் நான் புது கழுகு, பழைய கழுகு மசால் வடை துன்னுட்டு டீ ஆத்திக்கினு இருந்ததுன்னு கெளம்பியிருக்காரே? அவ்ர பத்தின மேட்டர் தெரீமா?

    பேரே இல்லாம எழுதற ஆளு தான் பழைய கழுகும், புது கழுகும்! அவ்ரோட பழைய கழுகு அவதாரத்துலே உஷார்னு ஒரு பெண் பதிவர கொச்சை படுத்தி எழுதினாரு, மேஸ்திரின்னு ஒருத்தர மட்டமா எழுதினாரு. குழுகாரங்களை எல்லாம் கொடஞ்சு எடுத்தாரு. அதுமாரியே நெறைய பேரை கழுகா வந்து அலகுல குத்தி தள்ளிட்டாரு.

    அவங்கள்லாம் எங்கே பாய்ஞ்சி கொதறிடப் போறாங்களோன்னு புச்சு, பயசுன்னு டகால்ட்டி காட்டிக்கினு கீறாராம்.

    மசால் வடை துன்னுட்டு டீ ஆத்திக்கினு இருந்தவரு தான் பழைய கழுகுன்னு சொல்றாரே? அப்போ அவரே இவரு மேல ஆசைப்பட்டு யூசர் நேம்மையும், பாஸ்வேர்டையும் இவருகிட்ட கொடுத்து கண்டினியூ பண்ண சொன்னாரா?

    யார்க்கு காது குத்தறாரு? முனியாண்டி கோயில்ல மூணு வயசு இருக்குறப்பவே எங்க நைனா எங்களுக்கு காது குத்திட்டாரு! நம்பளுக்கே மீட்டர் போடுறாரா இந்த முருகேசன்?

    கும்மாங்கோ. கொய்யாங்கோ.
    கோலாலம்பூர், கொழும்புவெல்லாம் போயிட்டு வந்தோங்கோ

    பதிலளிநீக்கு
  11. பாலராஜன்கீதா,

    ஆஹா! என்ன ஒரு ஐடியா! ஏதோ எங்க வட்டாரத்துக்குள்ள போய்க்கிட்டு இருந்த எங்க மானத்தை இன்டர்நேஷனல் அளவுக்கு உயர்த்திவாங்க ஆசைப்படறீங்க போல! :)

    இகொ,

    வரணும்! :)

    அனானி,

    நன்றி!

    தமிழ்நதி,

    நீங்க சிரிப்பா சிரிக்கற அளவுக்கு அந்தக்காலத்துல நாங்க சீரியஸா விளையாண்டிருக்கோம் பாருங்க! :)

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  12. உதய்,

    // அதுக்காக படம் முழுவது அதுவே கொஞம் கூட தொடர்பில்லாத மாதிரி ஒரு உறுத்தல் இருந்துட்டே இருந்தது...// எனக்கென்னவோ அந்த பிகர் மடிக்கற காட்சிகளைவிட மத்ததெல்லாம் அப்படியே ஊறிப்போய்த்தான் பார்த்ததாக நினைவு! :)

    சங்கரய்யா,

    வரணும்! :) ராயல்டிக்காகத்தான் மொத்த தமிழ்நாட்டு டீமுக அத்தனையும் அவரை நெருக்கிட்டு இருக்கறதா கேள்வி! :) சும்மா சொல்லக்கூடாது சும்மா நச்சுன்னு ஹிட்டாவுற ஏரியாவா பார்த்து அடிச்சிருக்கான் மனுசன்!

    ஷ்யாம்,

    // ஹோப் காலேஜ் தேவி ஒயின்ஸ்ல மட்டும் தான் //
    என்ன இருந்தானும் நீங்க எனக்கு சீனியரு! நாங்க எல்லாம் நம்ப காலேஜ் சேர்ந்துதான் கெட்டுப்போனதே! ஆரம்பமே கருமத்தம்பட்டி ஸ்டார் ஒயின்ஸ்தான் டூப்ளிகேட்டு சரக்குகதான் பார்த்துக்கிடுங்க :) அப்படியே ஊத்திக்கிட்டு ஹாஸ்டல் போய் படுத்துக்கலாம். ஹோப்ஸ் உள்ளூர் ஏரியா... எசகு பெசகா மாட்டுனா அப்பறம் எங்கப்பா வால்டரு வகுந்துருவாருங்கப்பு :)

    விஜயபாபு,

    வருகைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  13. ராசா,

    இந்த மாதிரி மேட்டரு சிக்கலாகும்னு நினைச்சுத்தான் கவருமெண்ட்டு அந்தக்காலத்துலயே ஏரியாக்கு ஒரு பின்கோடு குடுத்திருக்காய்ங்க!

    பொள்ளாச்சி பின்கோடு என்னது? சீக்கிரம் வாங்க :))

    லுங்கி மேட்டரு சூப்பருங்க! கீப்பருக்கு நிக்கறவன் கையாலதான் பந்தை தடுக்கனும். லுங்கிய விரிச்செல்லாம் கீப்பிங் செய்யக்கூடாதுங்கறதையும் வைச்சிருந்தோம்!

    // இதெல்லாம் நிசத்துல நடந்த 'வெகு சீர்யஸ்' சமாச்சாரங்கள் // சீரியஸ்னு சீரியஸா சொன்னா மட்டும் நம்ப மக்கா என்ன சீரியசாகவா எடுத்துக்கப்போறாங்க. அவிங்க எல்லாம் சிரிப்பா சிரிக்கறதுக்கு முன்னாடி நாமளே ஒரு தற்காப்புல எறங்கிக்கறதுதான்! :)

    பிரகாஷ்ஜி,

    எங்க கதையெல்லாம் ஷார்க்ஸ் கதைதான். ஆனா பாருங்க இந்த கெட்டப்பயக பிகரெல்லாம் மடிக்கறாங்க! அதுக்கெல்லாம் எங்களுக்கு கொடுத்து வைக்காம வெறும் "கடுவன்ஸ்"களாகவே வெளையாண்டு ஓய்ஞ்சுட்டதால ராக்கர்ஸ்தான் சரியா இருக்கும்னு.. ஹிஹி..

    அனானி,

    நாங்க ஏதோ இங்க சின்னப்பயக பெட்டும்மேச்சு மத்தி பேசிக்கிட்டு இருக்கறோம். நீங்க பெரிய பெரிய லெவெல்ல ஏதேதோ சொல்லறீங்களேயப்பு! கொஞ்ச நாளா நான் ஃபீல்டுல வேற இல்லை! Thermodynamics பாடம் கேட்டாப்புல ஒரு எழவும் புரியமாட்டேங்குது! :)

    பதிலளிநீக்கு
  14. இப்பொ எதுக்கு நீங்க தெர்மோடைனமிக்ஸ் பத்தியெல்லாம் பேசரீங்க.. பாருங்க உள்ளங்கையெல்லாம் வேர்த்துபோச்சு.. 3ல இருந்து 7வரைக்கும் இழுத்துட்டு சுத்துனதெலாம் ஞாபகம் வருது.. சும்மாவே இருக்க மாட்டீங்களா.. தினம் ரெண்டு புகை தான்னு வூட்ல சொல்லியிருக்கேன் இன்னைக்கு உங்களால 'வாக்கு தவறப்போறேன்' :)

    பதிலளிநீக்கு
  15. ஐயப்பாடு ஏன்? நீங்கள் மூத்த வலைப்பதிவர்தான் என்பதை மறந்தீரா.....ஒங்க தெறமைக்கும் தண்டிக்கும்....இந்தக் கைல முந்நூறு கொமரிப் புள்ளைக ஊஞ்சல் கட்டி ஆடலாம். அந்தக் கைல முந்நூறு கொமரிங்க ஊஞ்சலாடலாம். அப்படி இருக்கைல....


    சரி...விசயத்துக்கு வருவோம். இந்தக் கிரிக்கெட்டு இருக்கே..கிரிக்கெட்டு....அதுதாங்க சின்ன வயசுல இருந்தே புரிய மாட்டேங்குது. நானும் எவ்வளவோ முயற்சி செஞ்சு பாத்தேன். ம்ஹூம்.....இத்தனைக்கும் வீட்ல என்னையத் தவிர எல்லாருக்கும் கிரிக்கெட் உசுரு. ஏதோ நல்லா வெளையாட முயற்சி பண்ணி தோல்வி அடஞ்சிருக்கீங்கன்னு புரியுது. வருத்தப்படாதீங்க. எது நடக்கனுமோ அது நல்லபடியாகவே நடந்தது.

    பதிலளிநீக்கு
  16. வலைபதிவர் கிரிக்கெட் மேட்ச் ஒன்றை பெங்களூரில் நடத்தலாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தேன், கிறேன்.

    நல்லா எழுதியிருக்கிறீங்க...

    பதிலளிநீக்கு
  17. ithu .. ithu .. ithai thaan ethirpaarthaen. adichaadunka ilavanji...

    naalrodu

    பதிலளிநீக்கு
  18. ithu .. ithu .. ithai thaan ethirpaarthaen. adichaadunka ilavanji...

    naalrodu

    பதிலளிநீக்கு
  19. :)))

    தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன்.நன்றி !!

    http://www.desipundit.com/2007/05/17/pelamedu/

    பதிலளிநீக்கு
  20. //( காலத்தின் கொடுமைய பார்த்தீங்களா? எனக்கு நானே செல்ஃப் வெளம்பரம் போட்டுக்கற அளவுக்கு மூத்த வலைப்பதிவராயிட்டேன்! )
    //

    ha ha.
    வழக்கம்போல இளவஞ்சி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  21. அய்யோ.அண்ணா..இத படிச்சதும் எனக்கும் நான் விளையாடினத பத்தி எழுதனும் போல இருக்கு.... இது தான் நான் முதல் போஸ்டா எழுதனும்னு நினச்சுட்டு இருந்தேன்... அப்புறம் எழுதாம விட்டுட்டேன்... இப்ப எழுதனும் போல இருக்கு,,எழுதறேன்..சூப்பர் போஸ்ட்டுண்ணா..நானும் கோவை தான்..

    பதிலளிநீக்கு
  22. ராசா,

    எனக்கு தெர்மோடைனமிக்ஸ் & ப்ளூயிட் மெக்கானிக்ஸ்!!! "நீரும் நெருப்பும்". தண்ணி பாயறப்ப எப்படி பாய்ஞ்சா நமக்கென்னங்க? அதயெல்லாம் ஆராய்ச்சி செஞ்சி அளவெடுத்துக்கிட்டு... என்ன படிப்போ என்ன இஞ்சினியருங்கோ!!

    // இன்னைக்கு உங்களால 'வாக்கு தவறப்போறேன்' :) // நடத்துங்க! ஆனா, இதே காரணம் டெய்லி கெடைக்காது சொல்லிட்டேன்! :)

    ***

    ஜீரா,

    //இந்தக் கைல முந்நூறு கொமரிப் புள்ளைக ஊஞ்சல் கட்டி ஆடலாம். அந்தக் கைல முந்நூறு கொமரிங்க ஊஞ்சலாடலாம். அப்படி இருக்கைல....// நீர் நல்லா இருக்கனும் சாமீ!! எந்தக்காலத்துலயும் எவனும் என்னை இப்படி வண்டியேத்துனது இல்லை!!! :)))

    // நானும் எவ்வளவோ முயற்சி செஞ்சு பாத்தேன். ம்ஹூம்.....// விடுங்க.. அவிங்கவிங்களுக்கு அவிங்கவிங்க வெளையாட்டு! இவ்வளவு வெளையாண்ட எனக்கு டிவில கிரிக்கெட் மேட்ச் பாக்கறதுன்னா பிடிக்கவே பிடிக்காது! இதுக்கு என்னங்கறீங்க? :)

    // எது நடக்கனுமோ அது நல்லபடியாகவே நடந்தது. // ஏஞ்சொல்ல மாட்டீரு? எவனுக்கு நல்லபடியாகவே நடந்ததுங்கறதுதான் இங்க முக்கியமப்பு! :)

    ***

    மோகன்தாஸ்,

    // பெங்களூரில் நடத்தலாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தேன், கிறேன்.// அதில் ஆண்களுக்கு அனுமதி உண்டா?! :)

    ***

    நால்ரோடு, டுபுக்கு, சிறில் அண்ணாச்சி,

    வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

    ***

    அவந்திகா,

    வாம்மா தங்கச்சி...

    நீயெல்லாம் வேற இந்த குட்டைல இருந்திருக்கியா?!

    // எழுதறேன் // நடத்துங்கம்மா!

    // நானும் கோவை தான்..//

    நம்மூருல மழைங்களா?!

    பதிலளிநீக்கு
  23. //நம்மூருல மழைங்களா?! //

    Now i am in Delhi..:-(

    பதிலளிநீக்கு
  24. // க்ளீன் போல்டு ஆகி ஸ்டம்பு நாலடிக்கு அந்தப்பறமா பறந்து விழுந்ததை சில நொடிகள் மவுனமாக பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு அப்பறமா அது காத்தடிச்சுத்தான் விழுந்ததுன்னு முக்காமணிநேரமா போராடி நிரூபிச்சு மறுபடியும் காஜி அடிச்ச எங்க கேப்டன் முரளிக்காகவே கொண்டுவந்த ரூல்ஸ் இது //

    உங்க டீம்ல சேரலாம்னு இருந்தேன் இநத ரூல்ஸ் தான் இடிக்கது எனக்காக கொஞ்சம் மாத்திக்கமுடியுமா ??



    // லெக்சைடு வைடு போன பந்தை அசிங்கமா லெக்ஸ்வீப்பு செய்ய அது அதைவிட அசிங்கமா ரெண்டாவது "ஸ்லிப்பு"ல தேமேன்னு மூக்கு நோட்டிக்கிட்டிருந்தவன் கையில அடைக்கலமாகி அவுட்டானதும //


    அரசியல்ல இது எல்லாம் சகஜம் அப்பு ...

    பதிலளிநீக்கு
  25. //எனக்கு நானே செல்ஃப் வெளம்பரம் போட்டுக்கற அளவுக்கு மூத்த வலைப்பதிவராயிட்டேன்!//

    என்ன சொல்ல வர்ரீங்க, இளவஞ்சி?
    ரொம்ப நாளா பதிஞ்சிக்கிட்டு இருக்கிற senior பதிவர், வயசான பதிவர், - இப்படி பல அர்த்தம் வருது. நீங்க சொல்ல வர்ரது எதுவோ!

    பதிலளிநீக்கு
  26. ராஜா சண்முகம்,

    // இநத ரூல்ஸ் தான் இடிக்கது எனக்காக கொஞ்சம் மாத்திக்கமுடியுமா ?? // சான்சே இல்லைன்னேன்! எங்க கேப்டனு முரளி இத்தன காலத்துக்கப்பறமாவது திருந்தியிருப்பாருங்க நம்பிக்கை எனக்கில்லை! அத்தனை கொள்கைப்பிடிப்பான ஆசாமி! :)

    ராம்சி, வருகைக்கு நன்றி!

    தருமிசார்!

    என்ன வெளையாட்டு இது?! ஏதோ சைக்கிள் கேப்புல நானும் ஒரு சீனியர் வலைப்பதிவர்னு சொல்லவந்தா... :)

    பதிலளிநீக்கு
  27. வாத்தி,
    கிரிக்கெட்ல எப்படியோ பதிவு சிக்ஸர் ரகம். சட்டதிட்டங்கள் எல்லாம் ஐ.நா சபை தோத்தது போங்க.

    பதிலளிநீக்கு
  28. Kovai-641023 (Mettur-Pothanur) Present Sir.....

    Team Profile
    Estd 1981 around 4 batches came and went out as retired from 1st class cricket (due to Maintaining family and Thoppai)

    Rules & Policies
    Same as you mentioned


    From Massachusetts, USA

    பதிலளிநீக்கு
  29. அண்ணா நானும் போட்டுட்டேன்..
    :-))


    http://crickchat.blogspot.com/2007/05/gkrnagar.html

    பதிலளிநீக்கு
  30. இளவஞ்சி,

    அட நீங்களும் "பீளமேடு - 641004" இருந்தீங்க? நானும் அங்க தான் கிரிக்கெட் குப்பையை கொட்டிக்கிட்டு இருந்தேன்!!! நான் லட்சுமிபுரம் ஏரியா? நீங்க? எந்த வருட கதை இது இளவஞ்சி?? நான் 1978-1986 வரை லட்சுமி புரம், ஆர்கஸ் ஏரியாவில தான் குப்பைய கொட்டிக்கிட்டு இருந்தேன்! பழைய நினைவுகளை கிளரிவிட்டுவிட்டீங்க ...

    பதிலளிநீக்கு
  31. //எனக்கு தெர்மோடைனமிக்ஸ் & ப்ளூயிட் மெக்கானிக்ஸ்!!! ///

    சாரே, ரெண்டுமே எனக்கு புடிச்ச சப்ஜெக்ட். என்ன, சீனியரா போயிட்டீங்க, இல்லைன்னா கிளாஸ் எடுத்து 4 வது செம்லய தூக்கிருக்கலாம். இந்த 2 புரபொசர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால இந்த பாடம் புடிச்சதா, இல்லை பாடத்தால அவங்களை புடிச்சதான்னு தெரியல.

    (சுய விளம்பரம், கண்டுக்காதீங்க... நாங்கெல்லாம் இன்னமும் மூத்த வலைப்பதிவர் ஆகலை)

    பதிலளிநீக்கு
  32. சச்சினை விட அதிக ரெக்கார்ட்கள் செய்த இளவஞ்சி அண்ணனை இந்திய கிரிக்கேட் வாரியம் பீளமேடு பூராத் தேட ஆட்களை ஏவி விட்டிருக்கிறது என்பது காத்துவாக்கில் காதில் விழுந்த செய்தி...

    கலக்கல் அண்ணா....

    பதிலளிநீக்கு
  33. முத்துகுமரன்,

    // எப்படியோ பதிவு சிக்ஸர் ரகம். // :) நன்றி!

    கப்பி பய, மதுரைய படிச்சுட்டேன். சுட்டிக்கு நன்றி!

    அனானி,

    நீங்க போத்தனூர் ஏரியாவா? ஒரு தடவை மேட்சுக்கு வந்த நியாபகம் இருக்கு..

    // retired from 1st class cricket (due to Maintaining family and Thoppai) // அது சரி! :)

    அவந்திகா, பார்த்துட்டேன், படிச்சுட்டேன், கலக்கல்! :)

    வீதபீப்பிள்,

    நான் பீளமேட்டில் மட்டை பிடித்த காலம் 86-95. ஆர்கஸ் SKP மெஸ் இன்னும் இருக்குங்களா?! அந்த பொடிபோட்ட முட்டை தோசையும் தக்காளி சட்னியும் இருக்கே!!!! ஹிம்!


    உதய்,

    // ரெண்டுமே எனக்கு புடிச்ச சப்ஜெக்ட் // அய்யா.. தெய்வமே.... இந்த சப்ஜெட்டுகளை புடிச்சு படிச்சீரா?! கொஞ்சம் காலைக்காட்டுங்க ஆபீசர்.... :)

    செந்தில்,

    // சச்சினை விட அதிக ரெக்கார்ட்கள் செய்த இளவஞ்சி அண்ணனை //

    அஞ்சு ரூவாய்க்கு கூவச்சொன்னா இப்படியா அய்யாரத்துக்கு கூவறது?! :))

    படிக்கறவங்க நம்பளைப்பத்தி என்ன நெனைப்பாங்க? போங்க.. ஒரே கூச்சமா இருக்கு! ஹிஹி...

    மக்களே, வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! :))

    பதிலளிநீக்கு
  34. புதினா சாதம் சாப்பிட போய் இங்கே வந்தேன். இலவஞ்சி பின்னிட்டேங்களெ

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு