முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெங்களூர் வலைப்பதிவாளர்கள்/எழுத்தாளர்கள் சந்திப்பு!!!

வலைப்பதிவர் சமுதாயமே! வலைத்தமிழின் வாழ்விடங்களே!!

அலைகடலென திரண்டு வாரீர்!!
Photobucket - Video and Image Hosting



நேரங்காலம் :
தேதி 9 ஜூலை ஞாயிறு காலை நேரம் 10 மணிக்கு

சந்திக்கும் இடம்:
லால்பார்க்கில் மெயின்கேட்டைத் தாண்டி உள்ள மொட்டைப்பாறைக்கு முன்னால் (சொன்னமாதிரியே சூட்கேசுடன் வந்துடுங்க!
கோட்வேர்டு: தீப்பெட்டி-கருப்பட்டி-வெறும்பொட்டி )

நிகழ்ச்சி நிரல்

வரவேற்பு உரை :ஷக்திப்ரபா

தமிழ் வணக்கம் பாடல் :ஷைலஜா

வந்தவர்களைப் பற்றிய அறிமுகம் :அவரவர்களே!

விருந்தினர் அறிமுகம் :ஐய்யப்பன் (Jeeves)

விருந்தினர் உரை :திலகபாமா

வலைப்பதிவாளர்கள் உரை :அனைவரும் தங்கள் வலை அனுபவங்களைப் பற்றி பேசுதல்

உருப்படியான ஒரு செயல் திட்டம் :தேடல் எனும் தலைப்பிலும் பஞ்சபூதங்களில் ஏதாவது ஒன்றினைப் பற்றியும் 3 நிமிடக் கவிதைகள் எழுதிக் கொண்டுவந்து விருப்பமுள்ளோர் வாசிக்கலாம்

மதிய உணவு : ( ஷைலஜாவின் கைவண்ணத்தில் ) 1 மணிக்கு (கண்டிப்பாக 1 மணிக்கு மட்டுமே! அதுவும் கோட்வேர்டு சரியாச் சொன்னவங்களுக்கு மட்டுமே! :) )

அப்பறம்?! :அரட்டை அல்லது விளையாட்டு (தூங்கப்படாது ஆமா!!)

நன்றிஉரை: நண்பர்களில் யாராவது

நடுநடுவுல கொறிக்கறதுக்கு அவங்கவங்க ஏதாவது வாங்கிக்கிட்டு வந்துருங்கப்பு. செவிக்குணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயலாம். கோக்கு பாண்டா அலவ்டு! சோமசுரா பானங்களுக்கு தடா! (மனம் தளராதீங்க! இளஞ்சிங்கங்களே! நன்றி உரைக்கு அப்பறம் விருப்பப்பட்டவுக தனியா கழண்டுக்கலாம்! :) )

பங்கேற்பாளர்கள்:

இதுவரை வர்ரேன்னு சொன்னவங்க சுட்டிகள். லைட்டா எல்லாத்தையும் ஒரு எட்டு பார்த்துக்கிட்டு வந்துட்டீங்கன்னா நிறைய ஹிஹி க்களை தவிர்க்கலாம்! விடுபட்டவர்கள் இங்கே ஒரு பின்னூட்டம் போடுங்க! அல்லது மின்னஞ்சல் போடுங்க - iyappan_k@yahoo.com.

Kongu Rasa --- http://raasaa.blogspot.com
Iyappan --- http://iyappan.blogspot.com, http://kaduveli.blogspot.com, http://payananggal.blogspot.com ( Shared with ilavasakoththanar )
Viziyan(Umanath Selvan ) --- http://vizhiyan.wordpress.com, http://vizhiyan.wordpress.com
Vibagai --- http://www.manidham.com, http://www.rajfm.com, http://vibagai.blogspot.com
Ravindaran Antony --- http://tvpravi.blogspot.com ( Senthazal Ravi)
Udhay --- http://soundparty.blogspot.com
Sudharshan Gopal --- http://konjamkonjam.blogspot.com
Ilavanji --- http://ilavanji.blogspot.com
Thilagabama --- http://mathibama.blogspot.com
Maravandu ganesh --- http://ilakkiyam.wordpress.com
Balasundaram --- http://ta.wikipedia.org ( some part of aRiviyal part )
Harikrishnan --- http://www.harimozhi.com
Ramachandiran --- http://raamcm.blogspot.com
Lalitha Ram --- http://classical-music-review.blogspot.com
Desigan --- http://www.desikan.com/blogcms
புகைப்படம்: போன மாதம் லால்பார்க் போனபோது எடுத்தது...

கருத்துகள்

  1. பத்து மணிக்கு நீங்கெல்லாம் போயிடுங்க.. நான் கரெக்ட்டா 'ஒரு' மணிக்கு வந்து நம்ம கடமைய செவ்வனே ஆற்றிடுறேன்.. :)

    கோட்வேர்ட் இப்பவே சொல்றேன் : *பெட்டி-*பட்டி-*பொட்டி

    பதிலளிநீக்கு
  2. அது சரி, கடலலை என திரண்டு வாரதுக்கு ஒங்க ஊர்ல கடல் இருக்கா..

    ஹூம்.. பணக்கார ஊர்.. மதியம் சாப்பாடெல்லா போடறீங்க.. இங்க வெறும் போண்டா காப்பிதான் அதுவும் டட்ச் ஸ்டைல்..

    டோண்டு சார்..பாருங்க.. ஏதாச்சும் செய்ங்க சார்.. மானம் போவுது!

    பதிலளிநீக்கு
  3. http://sandanamullai.blogspot.com, - சுதர்ஷனோட நட்பு வட்டம் யாரோ எழுதறதுன்னு நினைச்சேன்.. அவரே தான் எழுதறாரா?

    பதிலளிநீக்கு
  4. எல்லாம் நல்லபடி நடக்க எனது வாழ்த்துகள். நாந்தான் வர முடியாது. அதுனால என்ன....நெனப்பெல்லாம் அங்கதான் இருக்கும். பெங்களூரும் எங்களூர் ஆயிற்றே.

    நண்பர்கள் அனைவரும் கலந்து மகிழ்ந்து உறவாடக் கிடைத்த இந்த வாய்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஒற்றுமையும் ஒத்துளைப்பும் எங்கும் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  5. இடம், கடவுச்சொல்,வருகைதருவோர் பட்டியல்.....கைவண்ணம் எல்லாம் சொன்னீங்க.நன்றி
    அப்படியே பக்கத்தில் உள்ள மருத்துவ மனைகள்(குறிப்பா ENT specialists)
    பட்டியலும் கொடுத்திருக்கலாமுல்லே!
    சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துகள்!
    மாநிலங்கள் அளவிளான சந்திப்புகள்
    நிகழ்வதற்கு இச்சந்திப்பு வழிகோலட்டும்

    பதிலளிநீக்கு
  6. ஜோசப் சார், சாப்பாட்டை விடுங்க.. அந்தச் செயல் திட்டத்தைப் பாருங்க!! இன்டரெஸ்டிங்கா இருக்கு.. :)

    இளவஞ்சி, கோட்வர்ட் எனக்கும் தெரிஞ்சிடுச்சு... ;) சரி, வர்றவங்க லிஸ்டைப் பார்த்தா, நீங்க அங்ஙனவே மரத்தடில உட்கார்ந்து க.க 7 ஆரம்பச்சிட மாட்டீங்க தானே! ;)

    பதிலளிநீக்கு
  7. //தமிழ் வணக்கம் பாடல் :ஷைலஜா//
    பாத்துங்க, கன்னடத்துக்காரங்க கும்மாங்குத்து குத்திடப் போராங்க.

    பதிலளிநீக்கு
  8. //அந்தச் செயல் திட்டத்தைப் பாருங்க!! இன்டரெஸ்டிங்கா இருக்கு.. :)//
    அது தாங்க எனக்கு பயமா இருக்கு.. ஆனாலும் 1 மணிக்கப்புறம் நிகழ்ச்சி நிரல் நல்லாத்தான் இருக்கும் போல இருக்கு.

    பதிலளிநீக்கு
  9. நல்ல இடத்தை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். பொறாமையாகயிருக்கிறது.

    நல்ல புகைப்படங்களை (:-)) எடுத்து போடுங்க.

    பதிலளிநீக்கு
  10. ராசா,

    // 'ஒரு' மணிக்கு வந்து // என்ன மேன் வெளையாட்டு இது?! நீங்க இல்லாம அங்க யார் கவிதை படிக்கறது? :)

    ****
    ஜோசப் சார்,

    // கடலலை என திரண்டு வாரதுக்கு ஒங்க ஊர்ல கடல் இருக்கா..// ஹிஹி... இப்படி எங்களை மட்டும் கேளுங்க... உங்க ஊருல மீட்டிங்னு சொல்லிக்கிட்டு நாலே நாலு பேரு அதுவும் ஸ்டேஜ்ல மட்டும் ஒக்கார்ந்துக்கிட்டு இதையே சொன்னா கண்டுக்காம விட்டுருவீங்க! :)

    // மதியம் சாப்பாடெல்லா போடறீங்க.. // எல்லாம் ஷைலஜா மேடம் கருணை! :)

    ****
    ராசா,

    அது சுதர்சனது இல்லையாம்! எடுத்திட்டேன்!

    ****
    ராகவன் ஜீ,

    We miss you! :(

    பதிலளிநீக்கு
  11. தருமிசார்,

    ஆனாலும் இது அநியாயம்! மேல போட்டிருக்கற பெஞ்சுபோட்டோ போட்டோ மாதிரி இல்லையா?! :)

    ****
    sivagnanamji

    // அப்படியே பக்கத்தில் உள்ள மருத்துவ மனைகள் //

    சொன்னா சிரிக்கக்கூடாது! பக்கத்துல NIMHANS னு புகழ்பெற்ற மனநல மருத்துவமனைதான் இருக்கு! :)

    ****
    பொன்ஸ்,

    // கோட்வர்ட் எனக்கும் தெரிஞ்சிடுச்சு... //

    OK! உங்களுக்கு ஒரு பார்சல்! :)))

    க.க 7! இத வேற ஞாபகப்படுத்திட்டீங்களா! சரி விடுங்க! க்.க6 படி இப்பத்தான் கல்யாணம் முடிஞ்சு சந்தோசமா இருப்பாக! கொஞ்ச நாள் போகட்டும்! :)

    ****
    மகேஸ்,

    // கன்னடத்துக்காரங்க கும்மாங்குத்து குத்திடப் போராங்க. //

    விடுவமா?! எத்தன கைப்புள்ள படம் பார்த்திருக்கோம்! "என்ன சின்னப்புள்ளத் தனமா இருக்கு?!"ன்னு ஒரு பிட்ட போட்டுறமாட்டோம்?

    ****
    மோகன் தாஸ்,

    // நல்ல புகைப்படங்களை (:-)) //

    புரியுதுங்ங்! சிறிசுக அப்டீப்டி இருக்கறத எடுக்கச்சொல்லி எனக்கு பெண்டெடுக்காம விடமாட்டீக போல! :)

    பதிலளிநீக்கு
  12. நானும் கலத்துக்கலாமா இளவஞ்சி, வந்தாலும் மதியம் போலதான் வர முடியும். பரவாயில்லையா? ராசா மாதிரி 1 மணிக்கு இல்லே

    பதிலளிநீக்கு
  13. நான் வரப்பவும், இப்படியே ஒண்ணு அரேஞ்ச் பண்ணல.. என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.

    பதிலளிநீக்கு
  14. annaa... elavasam.blogspot.com - athu ilavasakoththanaarthu
    ..

    payananggal thaan.. rendu perum sernthu ezutharathungannOv...

    பதிலளிநீக்கு
  15. இளா,

    // நானும் கலத்துக்கலாமா //

    யோவ்! உம்மைத்தான் நேத்துல இருந்து இதுக்காக வலை வீசி தேடறோம்!

    // வந்தாலும் மதியம் போலதான் வர முடியும் // சாப்பாட்டு நேரத்துக்காவது கரீட்டா வந்துங்க! :) முடிஞ்சா சுதர்சன்கோபாலை கூப்டு பேசுங்க!

    ****
    சுரேஷ்,

    உமக்கு இல்லாததா? உங்கூருல இருந்து வாறப்ப எங்களுக்கு ஆளுக்கு ஒரு ஐபோடு வாங்கிட்டு வந்தீங்கன்னா ஜமாய்ச்சிறலாம்! ஹிஹி... (இங்க புள்ளைங்க எல்லாம் காதுல மாட்டிக்கிட்டு போடற படத்துல எங்காதுல பொகை! )

    ****
    Jeeves,

    கொஞ்சம் டைம் குடுங்க.. மாத்திடறேன்! மத்தபடி எல்லாரு பேரும் இருக்கா?!

    பதிலளிநீக்கு
  16. யோவ் இன்னாங்கையா...நீங்களும் நடத்துறீங்களா...நாங்களும் நெல்லையில ஒரு சந்திப்பு நடத்துறோம்ல...:))

    பதிலளிநீக்கு
  17. டுபுக்குவோட முப்பெரும் விழாவுக்கு போட்டியா இது...ஒரு கோட்டரும் பிரியானியும் இல்லாம என்னாது இது..வாழ்த்துக்கள்... :-)

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் இளவஞ்சி

    நான் பெங்களூரை விட்டுக் காலி பண்ணினாப்புறம் சந்திப்பை வைக்கிறீர்களே, உங்களுக்கெ இது நியாயமா:-(

    பதிலளிநீக்கு
  19. நல்லாயிருங்கப்பூ......அடுத்த முறை நான் வரும் போது ஒண்ணு வையுங்க.

    பதிலளிநீக்கு
  20. டுபுக்ஸ்,

    // நீங்களும் நடத்துறீங்களா...நாங்களும் நெல்லையில ஒரு சந்திப்பு நடத்துறோம்ல //

    சந்தோசமுங்கண்ணா! பெங்களூரு வந்துட்டு அப்படியே நெல்லை போயிருங்க! (சால்னா பாக்கெட்ட மறந்துறாதீங்க! :) )

    ****
    ஷ்யாம்,

    // ஒரு கோட்டரும் பிரியானியும் இல்லாம //

    அண்ணாச்சி, அலைகடலென திரளச்சொன்னது உண்மைதான்! அதுக்காக அரசியல் மாநாடுன்னே முடிவு செய்யறதா?

    ****
    கானா பிரபா,

    அடடா! நீங்களும் இங்க இருந்தவுங்க தானா? அடுத்தமுறை வாங்க! ஜமாச்சிறலாம்.. :)

    ****
    இகொ...

    உங்களுக்கும் அதே அதே! :)))

    பதிலளிநீக்கு
  21. இங்கேயும் ஒரு பார்ஸல்:-))))
    ( ஒரு ரெண்டு பேருக்கு போதுமானது)

    பதிலளிநீக்கு
  22. Hello Illavanji,

    I am angry that you have not called me who leave comments in almost all the blogs. I am none other than Mr/Ms. Anonymous.

    பதிலளிநீக்கு
  23. துளசி கோபால்,
    // இங்கேயும் ஒரு பார்ஸல்:-)))) //

    உங்களுக்கு இல்லாததா?! ஆனா பார்சல் வந்து சேர்றதுக்குள்ள உங்க ஊர்க்காரங்க கண்ட்டாமினேட்டட் ஃபுட்னு இமிக்ரேசன்லயே தடுத்துற போறாங்க! :)

    ****
    அன்பு அனானி,

    யாரப்பா நீ? :)))

    இது ஒரு open அழைப்பு! பெங்களூருல இருக்கற யாரு வேனா வரலாம்! வர்றேன்னு இதுவரை சொன்னவுக சுட்டி மட்டும் இங்க போட்டிருக்கேன்!

    ஊர்ல இருந்தீங்கன்னா கட்டாயம் வாங்க!

    பதிலளிநீக்கு
  24. //தேடல் எனும் தலைப்பிலும் பஞ்சபூதங்களில் ஏதாவது ஒன்றினைப் பற்றியும் //
    பஞ்ச பூதங்களை சேர்த்து ஒரு கவிதை இங்கு இருக்கிறது ... சந்திப்பில் படிக்க விரும்புபவர்கள் பார்க்கலாம்

    http://govikannan.blogspot.com/2006/07/blog-post_07.html

    பதிலளிநீக்கு
  25. கோவி,

    // சந்திப்பில் படிக்க விரும்புபவர்கள் பார்க்கலாம் //

    தகவலுக்கு நன்றி!

    அப்படியே நீங்க ஒரு எட்டு வந்துட்டுப்போங்க! :)

    பதிலளிநீக்கு
  26. அய்யா Zebigleb,

    என்னருமை வெள்ளக்கார தொரையே!

    // It's a pity I'm not able to translate //

    என்ன வைச்சு காமெடி கீமெடி ஏதும் பண்ணலியே? :)))

    பதிலளிநீக்கு
  27. சந்திப்பு நல்லபடியா முடிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.
    புடிச்ச படத்தையெல்லாம் சீக்கிரமே போடுங்க.
    இந்த நேரம் பாத்து நான் பெங்களூர்ல இல்லாம இங்க வந்து மாட்டிக்கிட்டேன்! :-(

    இளவஞ்சி, ஃப்ரான்ஸ்ல இருந்து வந்த ஆளுக்கு மறுபடியும் தமிழ்ல பதில் சொல்லிருக்கீங்களே! பாவம் இல்ல அவரு!?

    பதிலளிநீக்கு
  28. being absolutely ignorant about the software details....do tell about where the pic(from your bog homepage) can be got for my own self

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு