முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சில பட்டாம்பூச்சிகளின் பருவகாலங்கள்...

Image hosted by Photobucket.com


சிறகடிச்சுக்கிட்டுதான் இருந்தோம்!
கொரங்குபெடல் சைக்கிளிலும்
ரைட்டாதப்பா கட்டங்களிலும்
படிக்கட்டு சறுக்கலிலும்

கோணமூக்கனின் காக்காகடிக்கும்
தெருப்பயகளுடம் ஐஸ்பாய்க்கும்
அம்மாப்பா விளையாட்டுக்கும்
இதுக்குமுன்னால
யாருமே திட்டுனதில்ல

தம்மு தும்முன்னு நடக்காதே...
அடக்க ஒடுக்கமா ஒக்காருடி..
எப்பப்பாரு என்னடி இளிப்பு?
அத்தனை அசைவுகளுக்கும்
திருத்தம் சொல்லறாங்க
நாங்க
இதுவரை பறந்ததை ரசிச்சவங்க

டீவிசானலை திடீரென மாத்தறதும்
நான் தலைகுனிந்து
விரல்நகம் கடிப்பதும்
எங்க வீட்டின் புதுப்பழக்கம்

ச்சே! அம்மாதான் இப்படின்னா
இந்த அண்ணனுக்கென்ன?
முன்னமாதிரி விளையாடவராம
தள்ளித்தள்ளிப்போறான் கொரங்கு...

பசங்ககூட சேரக்கூடாது சரி..
அப்பாவின் கழுத்தையுமா
பிடிச்சு தொங்கக்கூடாது?

இப்போதெல்லாம் பழகிக்கொண்டோம்
சட்டையை முன்னால் இழுத்துப்பிடித்துக்கொள்ள
சில பார்வைகளை தாண்டிவரும்போது

யாரு கேட்டா இந்த சனியனை
இப்போ வரலேன்னு?

அய்யயோ அங்க்கிள்! நாங்க போறோம்...
அம்மா சொல்லியிருக்காங்க
I should not talk to Strangers!

கருத்துகள்

  1. நீங்க நல்லா எழுதிருக்கீங்க. கலக்கல் இளவஞ்சி

    பதிலளிநீக்கு
  2. ம்..ம்..ம்ம்..கொஞ்சம் விஷயம் இருக்கு. ஆனா இளவஞ்சியின் 'முத்திரை'..? அது சரி, எல்லாத்திலயும் அது கட்டாயம் இருக்கணுமா, என்ன? அப்புறம்,இது வெறும் போஸ்ட் ஆஃபீசா ஆயிடுமே!

    பதிலளிநீக்கு
  3. ம்..ம்..ம்ம்..கொஞ்சம் விஷயம் இருக்கு. ஆனா இளவஞ்சியின் 'முத்திரை'..? அது சரி, எல்லாத்திலயும் அது கட்டாயம் இருக்கணுமா, என்ன? அப்புறம்,இது வெறும் போஸ்ட் ஆஃபீசா ஆயிடுமே!

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. இளவஞ்சி அற்புதமான கவிதை.

    //யாரு கேட்டா இந்த சனியனை
    இப்ப வரலைன்னு//

    நுட்பமான உணர்வுகளை துல்லியமாக சொல்லியிருக்கிறீர்கள்....

    வாழ்த்துகள்.

    உங்கள் படைப்புகளில் இதைத்தான் மிகச் சிறந்ததாக கருதுகிறேன்

    பதிலளிநீக்கு
  6. சிவா, ஞான்ஸ், தருமி, ராசா, முத்துகுமரன்

    உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு