முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்ஸ்சப்பா... இப்பவே கண்ணக்கட்டுதே!

Image: http://www.1000plus.com/Cataract/fifty.gifபழம்தின்னு கொட்டையப்போட்ட பெரியவக எல்லாம் இங்க நின்னு ஆடி நூறும் இருநூறூமா செஞ்சுரிகள போட்டுத்தாக்கிக்கிட்டு இருக்கற இந்த சபைல வெறும் அம்பதுகே பதிவு போடறதெல்லாம் கொஞ்சம் 'கங்குலி'த்தனமா இருந்தாலும் அரிப்பு யாரைவிட்டது சொல்லுங்க?!

ஆமாங்க... இதுதான் எனது 50வது பதிவு! போட வருசம் ஜனவரில ஆரம்பிச்சது. கிட்டத்தட்ட ஒரு வருசம் முடியப்போகுது! ரவிசாஸ்திரிய மிஞ்சற ஒரு முடிவோட படுநிதானமா கட்டையப்போட்டுக்கிட்டு இருக்கேன்! ஆடிக்கும் அம்மாவாசைக்கும் எட்டிப்பார்த்து எழுதிட்டுபோற என் அக்கவுண்டை என்னைக்கு ஃப்ளாகரே பொறுத்துக்கமுடியாம என் கடவுச்சீட்டை காணாமடிக்கப்போகுதோ தெரியலை!

எனக்கெல்லாம் போனவருசம் வரைக்கும் வலைன்னா அது மெயிலு பார்க்கறதுக்கும், தினமலர், தந்தி, மாலைமலர், தினகரன், குமுதம், விகடன்னு எங்கனயாவது தமிழ் எழுத்து தெரிஞ்சா மேயறதுக்கும்தான்னு ஒரு பொழப்பத்த பொழப்பு ஓடிக்கிட்டு இருந்தது. எங்கனயோ ஏதோ ஒரு சைட்டுல ஒரு சுட்டியை தட்ட அது ஒரு ஃப்ளாகரு பக்கத்துக்கு போயிருச்சுங்க! அது அடாத மழையிலும் விடாது பதியும் அண்ணன் பத்ரியோடதுதான்! :) பார்த்தவொடனே புல் அரிச்சிருச்சி! அந்த பதிவுல ஒரு சைடா பார்த்தா நான் படிக்கும் பதிவுகள்ன்னு ஒரு 25 சுட்டிங்க! அப்படியே பீர்பாட்டிலு நழுவி ஃபிரிஜ்லுக விழுந்தா மாதிரி ஆயிருச்சி. அங்க இருந்து இங்க.. இங்க இருந்து அங்கன்னு தாவித்தாவி படிச்சுக்கிட்டு இருந்தேன். எல்லாப்பதிவுலயும் "தமிழ்மணம்" ஒரு பட்டனு! ஒரு வாரத்துக்கு அது என்னான்னே தோணலை. போனாப்போதுன்னு ஒருதடவை தட்டுனா...ஆஹா... முன்னாடி பீர்பாட்டலு விழுந்த ஃபிரிஜ்ஜிக்குல்ல நானே விழுந்த மாதிரி ஆகிருச்சுங்கப்பு...

ஆனா எந்த நம்பிக்கைல நானும் ஒரு ஃப்ளாகரு ஆரம்பிச்சேன்னு இன்னிவரைக்கும் தோணலை! தமிழ்மணத்துல படிக்கறப்ப நானும் ஒன்னு ஆரம்பிச்சா என்னன்னு தோணுச்சா இல்லை பின்னூட்டம் போடறாதுக்காக மட்டும் ஆரம்பிச்சனான்னு தெரியலை! இங்க எழுத வரதுக்கு முன்னாடி நான் எழுதினது ரெண்டே ரெண்டுதாங்க! ஒன்னு பிரசுரமானது! குமுதத்துல "தமிழில் புதுவார்த்தைகள்" ஒரு பகுதிக்கு 10 வார்த்தைகளை எழுதிப்போட அதுல ஒண்ணே ஒண்ணு வந்தது. 'அலைஞன் - அழகிய இளம்பெண்களின் பின்னால் அலையும் இளைஞன்' அப்படின்னு!... இங்க வந்து பார்த்தா 'அலைஞன்' அப்படின்னு ஒரு வலைப்பதிவாளரே இருக்காப்புல! :) இன்னொன்னு கல்லூரில ஒரு பொண்ணுகிட்ட வாங்குன 'ஞானப்பழத்'துல அறிவும் உணர்வும் பொங்கி எழுதுன ஒரு வசனகவிதை! அதற்கு முதலும் கடைசியுமான ஒரே வாசகன் நாந்தான். அதை எழுதிட்டு ஒவ்வொரு முறை படிக்கும் போதும் குமுறி அழுது, அப்பறம் அழுது, அப்பறம் வெறிக்கப்பார்த்து, அப்பறம் லைட்டா சிரிச்சு, இப்போவெல்லாம் அதைப்படிச்சா கெக்கேபிக்கேவென சிரிக்கமட்டும் வைக்கிற நவரசம் கொண்ட மாபெரும் காதல் காவியமது! வேண்டாம் விடுங்கப்பு... ஞானபீடமெல்லாம் வேண்டாம்! (ஏஜெண்டுக்குவேற கமெண்ட்டு விட்டு பல நாளாச்சு...)

சொறிஞ்சவன் கைகூட சும்மா இருந்துரும்! ஆனா அதை ஒரு சொகம்னு சொறிஞ்சவன் சொல்லக்கேட்டவன் சும்மா இருப்பானா? அப்படி சொறியப்போயிதான் மொதமொதலா 'ஒலகம் பெர்சு மாமே!' தலைப்பும் வைச்சு என்ன எழுதறதுன்னு தெரியாம 'அம்மா இங்கே வா வா" ன்னு ஆரம்பிச்சேங்க! பதிவைபோட்டுட்டு நானே 50 தடவை வந்து வந்து படிச்சிருப்பேன்! நாம எழுதுனது வலைல வருதுன்னா சும்மாவா? அதுக்காக எத்தனைவாட்டிதான் நானே படிக்கறது?! தமிழ்மணத்துல போட்டுட்டு நான் நாலாவது பதிவு போட்ட அதேநாள் தமிழ்மணம் வாசகர் பகுதில வந்தது பாருங்க! 'அக்கணம் இறைவன் எனைத்தொட்டகணம்'! அப்பறம் முதல் பின்னூட்டம், முதல் ஸ்டாரு, முதல் சண்டைன்னு கொஞ்சாநாளு போச்சு. அதுக்கப்பறம்தாங்க ரொம்ப யோசிச்சேன்! "நாம தெனமும் அரசியல் பேசறோம். இத்தனை வயசுவரைக்கும் ஆட்டமா ஆடியாச்சு. இதுவரை வாங்காத வசவும் இல்லை துப்பும் இல்லை! அதுனால அது இங்க வேணாம்" அப்படின்னு முடிவெடுத்து 'தனித்துவமானவன் உங்களைப்போலவே"ன்னு ஆரம்பிச்சேன். நமக்கு இருக்கற மூளைய வைச்சு 'ஓர் இரவுச்சுயம்வரம்'னு கவிதைக எழுத ஆரம்பிச்சேன். யாரும் திட்டலைன்னாலும் எனக்கே சந்தேகம் வந்துருச்சி.. ஒருவேளை நாம எழுதறது கவிதை இல்லையா அதுனாதான் யாரும் கண்டுக்கமட்டேங்கறங்களான்னு! சரி.. கவிதைன்னா அதுல கதை சொல்லுற போக்கு இருக்கப்படாது. ஒரு படிமம் வைச்சு எழுதனும்னு அப்பா இறந்துபோனதுக்கப்பறமா எப்படி பையன் வீட்டுப்பொறுப்பை எடுத்துச்செய்யறான்னு அப்பாவோட சட்டைய படிமமா வைச்சு "அப்பாவின் சட்டை"ன்னு ஒன்னு எழுதினேன்! பதிஞ்சிட்டு படிச்சுப்பார்த்தா எனக்கே ரொம்பபுடிச்சுப்போச்சு! கவிதைன்னு எழுதுனதுலயே எனக்கு ரொம்ப பிடிச்சது 'சுயமழியும் பொழுதுகள்" தான். நெம்ப மனசு பாரமான நிலைல எழுதுனதுங்க... அதுனாலயோ என்னவோ இப்ப படிச்சாலும் ஒருமாதிரி ஆக்கிவிட்டுரும். (ஹிஹி.. இந்த சுயபீத்தல்னு வந்துட்டா நம்ப அடிச்சுகறதுக்கு... ஹிஹி..)

அப்பறம் அப்படியும் இப்படியுமா கலந்துகட்டி ஓட்டிக்கிட்டு இருந்தேன். மதி கிட்ட இருந்து ஒருநாளு நட்சத்திரமா இருங்கப்புன்னு ஒரு கடுதாசி வந்ததுங்க. வெளிரிட்டேன்! எழுதவெல்லாம் பயமில்லை. ஆனா நாமளே ஆடிக்கொருதரம் பதிவும் அம்மாவாசைக்கு பின்னூட்டம்னு இருக்கற ஆளு. அதனால பெங்களூருக்கு போறேங்க. அப்பறமா வரேங்கன்னு ஜீட்டு! அப்பறம் ரெண்டு மாசம் கழிச்சு இந்தபக்கம் வந்து ஒருவாரம் எழுதி உங்ககிட்ட எல்லாம் நல்லபேரு வாங்குனப்பறம்தான் தெரிஞ்சது! அடடா.. நம்பள மாதிரி ஆளுங்களை ஒரு பாட்டமா எழுதவிட்டு நாலுபேரை படிக்கவைச்சு கருத்தை சொல்லவைச்சு அதுமூலமா மேலும்மேலும் எழுத்துக்காரனா/காரியா மாத்தற நல்ல வேலைய செய்யறாங்கன்னு. 3000த்துல நொண்டி அடிச்ச நம்ப கவுண்ட்டரு(கவுண்டரு இல்லைங்க... அப்பறம் சாதிப்பதிவுன்னு போட்டுத்தாக்கீறாதீக... ) இப்போ 20000 தாண்டி ஓடுதுன்னா அதுக்கு அந்த நட்சத்திரவாரம்தான் காரணம்! நம்பளையெல்லாம் எழுதச்சொல்லி கூப்படறாங்கன்னா அதுனால அவங்களுக்கு என்ன பர்சனலா நன்மை இருக்கபோகுது?! நாம கொஞ்சம் எழுத்து பழகிக்கறோம். அவ்ளோதான்! நான் சொல்லறது என்னைமாதிரி புதுசா பேனா பிடிச்சவகளுக்கு...


அப்படியே ஓடுதுங்க என்றபதிவும்... பாருங்க... 50வது பதிவுன்னு சொல்லியே ஒரு பதிவ போட்டாச்சு! நிறைய படிக்கனும்கற ஒரு ஆசையும் மனசுக்குள்ள இருக்குங்க! ஆனா இந்த இயந்திரவாழ்க்கைல தெனமும் திங்கவும் தூங்கவுமே சரியா இருக்கு... இதையும் மிஞ்சி மனசுக்கு பிடிச்ச ஒரு காரியம் பண்ணறேன்னா அது இங்கன மேயறதுதான்!

ரொம்ப நாளைக்கு முன்னால தருமிசார் பதிவுல பொலம்பலை போட்டனுங்க... அதுக்கு யாராச்சும் அனுபவசாலிங்க பதிலு போட்டீங்கன்னா இன்னைய நெலைல ஒரு உதவியா இருக்கும்! கொஞ்சம் அதிகமா பேசறாப்புல பட்டாலும் கோச்சுக்காதிங்கப்பு.. மனசுல பட்டது... இதையும் தாண்டிட்டன்னா இன்னும் கொஞ்சம் எழுதுவேன்னு நம்பறேன்!

"உங்கள் ஊக்கங்களுக்கு நன்றி தருமி! வேலைப்பளு உண்மைதான். ஆனா மேட்டரு என்னன்னா பல சமயம் எனக்கு பிடிச்சதை நான் எழுதுகிறேன். படிச்சவங்க பாராட்டுனா அதுல ஒரு திருப்தி. ஆனா பாராட்டு வேனும்னோ இல்லை எழுதியே ஆகனும்னு கட்டாயத்துலயோ ஆரம்பிச்சா முதல் எழுத்துக்கு மேல ஓடமாட்டேங்குது

இன்னொன்னு ஆயாசம்! கடந்த 30 நாளா பார்த்தீங்கன்னா, தங்கரையும் குஷ்புவையும்(இதைவிட்டா மததுவேஷம்…) போட்டு தாளிச்சு எடுத்ததுல ஒரே கமறல் இங்க! உண்மையை உண்மையாய் சொல்லும்போது அதற்கு ஒரு அந்தஸ்த்தும் அழகும் வந்துவிடுகிறது. ஆனால் அதனை ஒரு குழுமனப்பான்மையாகவோ இல்லை தன்கருத்துக்களுக்கேற்ப திரித்தலாகவோ அணுகும்போது அது பொருந்தாச்சட்டைகளாகவே அமைந்துவிடுகிறது. அனைவரும் ஆடைகள் அனிபவர்கள்தான். தைத்தவனுக்கு அவன் சட்டை நல்ல சட்டை! சுற்றி நின்று பார்ப்பவர்களுக்கே அதன் பொருந்தாமை பளிச்சென தெரிகிறது. சிலர் எடுத்துச்சொல்கிறார்கள். சிலர் அமைதியாய் சென்றுவிடுகிறார்கள் என்னைப்போல.

பத்திரிக்கையுலகிக்கென்று ஒரு இலக்கணம் உண்டு. வியாபாரதந்திரங்களும் சர்க்குலேசனுமே அதன் குறிக்கோள். வியாபாரநோக்கம் என்ற ஒன்று இங்கே இல்லாத பொழுதும் அதே இலக்கணத்தை நோக்கி தமிழ்மணமும் செல்லும்போது அவரவர் தனித்தன்மைகளை வெகுநிச்சயமாய் இழந்துகொண்டிருக்கிறோம் என்பது என் தாழ்மையான கருத்து! வலைப்பதிவுகள் என்பது பத்திரிக்கைகளுக்கு மாற்றோ போட்டியோ அல்ல! இது தனியொரு ஊடகம். அவரவர் தனித்தன்மையே அதன் முதுகெலும்பு என்பதும் என் கருத்து.

சித்திரமும் கைப்பழக்கம் தான்.. ஊக்கமது கைவிடேல் தான்.. இருந்தாலும் என்போன்ற ஆரம்பநிலையில் இருக்கும் எழுத்துக்கார(ரி)ர்களுக்கு அனுபவம் பெற்றவர்கள் இந்த ஆயாசத்தை எப்படி தாண்டிவருவது என சொன்னால் மிகுந்த உதவிகரமாக இருக்கும்! "வேற என்ன சொல்ல? அதேதான்! ஸ்ஸ்சப்பா... இப்பவே கண்ணக்கட்டுதே!

கருத்துகள்

 1. அடடே ஐம்பதாவது பதிவே இப்பதான் போடுறீங்களா? அந்தப் பழந்தின்னு கொட்டை போட்டவுங்க பட்டியல்ல உங்களையும் வச்சிருந்தேனே. :P

  ஐம்பது இடுகைகள் என்றாலும் நிறைய இடுகைகள் மனசுக்கு ரொம்ப பிடிச்சது இளவஞ்சி.

  கடைசியாப் போட்ட கதை - கதைன்னு எல்லாம் படிமம் வச்சுக்காம நீங்க உங்களுக்கு தோணுற மாதிரியே எழுதுங்க. உங்களுக்குப் பிரச்சினை இல்லாதவரை..

  மத்தபடி கட்டாயத்துக்காகவோ கைதட்டலுக்காகவோ எழுதினா இளிச்சிரும். :)

  -மதி

  பதிலளிநீக்கு
 2. 50 வது பதிவுக்கு வாழ்த்துகள்.

  உங்க நடையா இல்லாம அசப்புலே பார்த்தா கொஞ்சம் 'யாரோ' ஞாபகம் வருதப்பு.

  நல்லா இருங்க. அப்பப்ப வந்து எழுதுங்க. அடிச்சு ஆடணுமுன்னு இல்லை. ஆத்மதிருப்திக்கு எழுதறதுதானப்பு உண்மையான எழுத்து.

  பதிலளிநீக்கு
 3. 50 வது பதிவுக்கு வாழ்த்துகள்.நிறைய இடுகைகள் மனசுக்கு ரொம்ப பிடிச்சது இளவஞ்சி.

  பதிலளிநீக்கு
 4. 50 தானா, மெய்யாலுமா, உஙக தலைய தொட்டு(தடவி) சொல்லுங்க :-) இன்னும் உயரங்கள்த்தொட வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள் இளவஞ்சி. (காதை இப்படி கொண்டாங்க. என்ன சார். நீங்க நட்சத்திரமா மின்னின அப்புறம் வலைப்பதிய ஆரம்பிச்ச நானே நூறாவது பதிவை நோக்கி வெற்றிநடை (??) போட்டுக்கிட்டு இருக்கேன். நீங்க இப்பத் தான் 50ங்கறீங்க. நம்ப முடியலையே).

  பதிலளிநீக்கு
 6. அரைசதம் போட்டாலும் நச்சுன்னு போட்டுருக்கீங்க.. வாழ்த்துகள்

  ஹூம்.. நம்ம ஏஜெண்டு பதிவுல கிணத்தடி பத்தி நீங்க பின்னூட்டமிட்டது ஏனோ ஞாபகத்துக்கு வந்து தொலைக்குதே?

  ஏஜெண்டு, where art thou?

  பதிலளிநீக்கு
 7. இளவஞ்சி, இப்படியே மெயிண்டெய்ன் பண்ணுங்க, நிறைய எழுதினா நீர்த்துப் போயிடும். நாங்க, ஐ மீன் நான் போடுவதை
  எல்லாம் எண்ணிக்கையே வெச்சிக்கவில்லை. காரணம் கொசு முட்டைக்கும், சிங்க குட்டிக்கும் வேறுபாடு உண்டல்லவா :-)

  பதிலளிநீக்கு
 8. மதி, //பழந்தின்னு கொட்டை போட்டவுங்க பட்டியல்ல உங்களையும் வச்சிருந்தேனே. :P// நானே அப்படித்தான் நெனைச்சேன்! எண்ணிப்பாக்கறப்பத்தேன் நம்ப சாதனை தெரிஞ்சது! :)

  துளசியக்கா, //கொஞ்சம் 'யாரோ' ஞாபகம் வருதப்பு.// போனவாரம் ஒருநாளு ஊருக்கு போயிருந்தனுங்...அதானுங்க கொஞ்சம் கொங்குவாடை வீசுது!!

  தங்கமணி, சதீஷ், வருகைக்கு நன்றி...

  ரவிகுமார் ராஜவேல், இது நியாயமா? உங்களுக்கு மாதவன் மாதிரி அழகா ஹேர்ஸ்டைலு இருக்கறதால என் அகாஸி ஸ்டைலை சொல்லறது...!?! :) சரி விடுங்க தடவிக்கறேன்!! சீவுனா கீறல் விழுந்திடும்!!!

  குமரன், நீங்க கலக்குங்க... நமக்கு சுறுசுறுப்பு கொஞ்சம் பத்தாது! :)

  ராம்ஸ், அந்த கிணத்தடி பின்னூட்டம்!! ஹிஹி...

  உஷா, //கொசு முட்டைக்கும், சிங்க குட்டிக்கும்// உங்க லெவலுக்கு இவ்வளவு தன்னடக்கம் கூடாது! :)

  மற்றபடி, உங்கள் வருகைக்கும், ஊக்கங்களுக்கும் கருத்துகளுக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 9. என்ன இளவஞ்சி..இப்பத்தான் ஐம்பதாவது பதிவா? அநியாயம்யா அநியாயம்...

  நான் பார்த்த படம் எங்க வீ்ட்டு கொலு ஏதாச்சும் சும்மா போடுங்க..நேத்து வந்த
  நானெல்லாம் முப்பது பதிவு போட்டுட்டேன்....

  உங்க பொண்ணு பேரு காதம்பரி தானே( எப்படி தெரியும்னு கேளுங்க சொல்றன்)

  பதிலளிநீக்கு
 10. முத்து,

  இது என்ன "எப்படித்தெரியும்?"னு நான் கேட்க அப்பறம் நீங்க "நீங்க தானே சொன்னீங்க..."ன்னு போட்டுப்பாக்கற விளையாட்டா?! :)

  நாந்தாங்க உங்க பதிவுல பின்னூட்டமா சொன்னேன்....

  பதிலளிநீக்கு
 11. அன்புள்ள வாலி, (வாலிக்குத்தான் தன்பலம் தெரியாதாமே, உங்களை மாதிரி ),
  நீங்க சொன்ன அந்த பின்னூட்டத்துக்குப் பின்னாலேயே போய் என் எந்தப் பதிவுக்கு அந்தப் பின்னூட்டம் என்பதை கண்டுபிடிச்சிட்டேன். அதற்கு ஒரு தனிமயில் அனுப்பியதாக நினைவு.

  கொசுமுட்டைகளோ வேறெதுவோ - எண்ணிக்கையில் என்ன இருக்கிறது என்று உங்களிடம் ஏற்கெனவே சொன்னதாகவும் ஒரு நினைவு.

  அவ்வளவு நேரடியாகச் சொல்லாத ஒன்றை இந்த 50-ஆவது பதிவின் பின்னூட்டத்தில் தெளிவாக, வெளிப்படையாகக் கூறிவிடுகிறேனே.

  நம் தமிழ்மணப் பதிவுகளில் நான் வெகுவாகக் காதலிக்கும் எழுத்து உங்களுடையதே.
  மூளையைத்தொடும் எழுத்துக்கள் அங்கங்கே உண்டு; ஆனால், மனதைத் தொடும் 'எழுத்துக்காரன்' நீதானப்பா! ('நீ'க்கு மன்னிக்கவும்)


  "நிறைய எழுதினா நீர்த்துப் போயிடும்" // - மன்னிக்கணும் உஷா,A rolling stone never gathers moss என்று ஒரு சொலவடை உண்டுதானே; அதற்கு மறுப்பாகவும், மறு பக்கமாகவும் இப்படியும் சொல்வதுண்டல்லவா? A rolling stone gets polished. நிறைய எழுதி இளவஞ்சி தன்னையும் தன் எழுத்தையும் தீட்டிக்கொள்ளலாமே!

  மத்தபடி கட்டாயத்துக்காகவோ கைதட்டலுக்காகவோ எழுதினா இளிச்சிரும். :)"// - மதி, முதலாவது சரி; இரண்டாவது - கலைஞனுக்கு கைதட்டு உரம் என்பார்களே!

  "நான் பார்த்த படம் எங்க வீ்ட்டு கொலு ஏதாச்சும் சும்மா போடுங்க.."'' - முத்து, அதுக்குத்தான் என்ன மாதிரி ஆட்கள் இருக்கிறோமே; அது பத்தாதா என்ன..?

  பதிலளிநீக்கு
 12. நிறைய இடுகைகள் மனசுக்கு ரொம்ப பிடிச்சது இளவஞ்சி.

  பதிலளிநீக்கு
 13. இயல்பான எழுத்து. வாசிக்கும் போதே உணர முடியும் தோழமை. யோசிக்க வைத்த சில பதிவுகள். அந்த 'தனித்துவமானவன், உங்களைப்போலவே' என்ற tagline...

  வாழ்த்துகளும் ஒரு வர்ச்சுவல் கைகுலுக்கலும்.

  நிர்மலா.

  பதிலளிநீக்கு
 14. Ilavanji,

  Congrats for (the) TOUCHING 50.


  regards,
  THYAG

  பதிலளிநீக்கு
 15. தலைவா வாழ்த்துக்கள்

  நான் என்னோட பதிவுகளை எண்ணிப்பாத்தேன்

  கால் சதம் கூட வரலை :(

  நானும் நிறைய ஒப்பேத்தல் பதிவு போடணும் போல.

  பெங்களூரில் எத்தனை வலைப்பதிவாளர்கள் இருப்பார்கள் என்ற விபரம் தெரியுமா உங்களுக்கு ?

  தனிமடல் அனுப்பவும்

  பதிலளிநீக்கு
 16. இளவஞ்சி
  தனித்துவமா இருக்கீங்க
  அர்த்தமுள்ள பதிவுகள்
  நூறு நூறாய் பெருக
  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 17. மென்மெலும் உங்களது இலக்கியப் பணி சிறக்க வாழ்த்துக்கள் பல!

  தமிழ்த்தாயின் தலைமகனே வாழ்க!
  இலக்கியச் செம்மலே வாழ்க!!
  பல்லாயிரம் பதிவு போட்டு வாழ்க!!!

  பதிலளிநீக்கு
 18. வாழ்த்துகள் இளவஞ்சி....

  சாதனைகள் தொடருட்டும்.
  // வியாபாரநோக்கம் என்ற ஒன்று இங்கே இல்லாத பொழுதும் அதே இலக்கணத்தை நோக்கி தமிழ்மணமும் செல்லும்போது அவரவர் தனித்தன்மைகளை வெகுநிச்சயமாய் இழந்துகொண்டிருக்கிறோம் என்பது என் தாழ்மையான கருத்து! //

  100 விழுக்காடு உண்மையே. மெல்ல மெல்ல பிரபலம் ஆகிவிட வேண்டும் எனும் நோக்கில் எழுதப்படுவது அதிகரித்து விட்டது. எண்ணிக்கையில் இல்லை எண்ணங்களில்தான் இருக்கிறது எல்லாமே.

  தனித்தன்மையை தொலைக்காமல் இருக்க வேண்டுமென்றால் நாம் தனிமையாகவும் இருக்கவும், தனிமைப்படுத்ஹ்ட படுவதை ஏற்று கொள்ளவும் மனதை பழக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 19. இளவஞ்சி,

  குறைவான பதிவுகளாக இருந்தாலும், பெரும்பான்மையானவை அழுத்தமான, நிறைவான பதிவுகளாயிருப்பது உங்களின் சிறப்பு, 100, 200, 300 ... பதிவுகள் தாண்டியும் வர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 20. சினேகிதி, கார்த்திக்ராமாஸ், ஜேஸ்ரீ, 'காட்டூர்' நிர்மலா, தியாக், மதுமிதா, சங்கரையா, முத்துக்குமரன் உங்கள் வருகைக்கும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

  தருமிசார், உங்கள் ஆசீர்வாதம் என்னைக்கும் வேணும்! //'நீ'க்கு மன்னிக்கவும்// என்னசார் இது? நமக்குள்ள இதெல்லாம் தேவையா?

  மரவண்டு கணேஷ், எனக்கு தெரிந்து
  1. நான்
  2. நீங்க
  3. கோ.ராகவன்
  4. அலெக்ஸ் சார்
  5. மீனாக்ஸ் அண்ணாச்சி
  வேற யாராவது இருந்தா கொரளு விடுங்கப்பு.. கணேஷ், என்ன ஏதாவது விசேசத்துக்கு எங்களை நேர்ல பார்த்து அழைப்பு வைக்கப்போறிங்களா? :)

  ஏஜெண்டு, என்னை இப்படியெல்லாம் திட்டலைன்னா உமக்கு தூக்கம் வராதே! வர்றேன்.. வர்றேன்!!!

  பதிலளிநீக்கு
 21. இளவஞ்சி...அம்பது ஆச்சா.......பாராட்டுகள். இந்த அம்பதுக்குப் பின்னாடி ஒரு முட்டை போட எனது வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 22. G.Ragavan said...//இந்த அம்பதுக்குப் பின்னாடி ஒரு முட்டை போட எனது வாழ்த்துகள். //

  அந்த முட்டையை அப்டியே full boiled ஆ போட்டீங்கன்னா ஒடனே ஒட்ச்சி சாப்டுடுவேன்!
  :-)))))

  பதிலளிநீக்கு
 23. இளவஞ்சி
  பாராட்டுக்கள். மனதை தொடும் பல பதிவுகள் படித்தேன்.இன்னும் 500 ஆக வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு