அப்பாவி: கருத்து சுதந்திரம்னா என்னாண்ணே?
அறிவுப்பசி அண்ணாசாமி: சோக்கா கேட்ட அப்பாவி.. பாயிண்டு பாயிண்டா சொல்லறேன் கேட்டுக்க...
1. "அதுவா? எனக்கு பிடிச்ச கருத்தை சொல்லறதுக்கு உனக்கு முழுசுதந்திரம் இருக்குன்னு அர்த்தம்" அப்படின்னு எழுதிவச்சிகிட்டு, F9/11 படம் எடுத்தவரு அது அவரோட சொந்தபடத்துல சொன்ன சொந்த கருத்துக்கள் அப்படிங்கறதை விட்டுட்டு என்னமோ புஷ்சு வீட்டு வரவேற்பறைல கக்கா போயிட்டு சும்மா வந்துட்ட மாதிரி சொல்லறதுதான் கருத்துச்சுதந்திரம்னு நம்பவைக்கறது! நாம நகைச்சுவையா பத்தி பத்தியா எழுதினாலும் அது மத்தவங்களுக்கு நகைச்சுவைதான்னும் அதுக்கு மத்தவங்க யாராவது கருத்து சொன்னா ஒடனே நகைச்சுவை முகத்தை கலைச்சுட்டு சீரியசா அதுபத்தி விவாதிக்கனும்னு நம்பறது. அதையே ஒருத்தரு "இந்த நகைச்சுவை மூன்றாம் தரமா இருக்கு! " அப்படின்னு ஒரு கருத்தை சொன்னா "இதையெல்லாம் நகைச்சுவை இல்லைன்னு சொன்னா உனக்கு மூளைக்கோளாரு! " அப்படின்னு பின்னூட்டம் வந்தாலும் ஒன்னும் சொல்லாம அதை அப்படியே வச்சிருக்கறது!
2. சேரும்போது மட்டும் நாம எழுதறது நாலு பேரு கவனத்துக்கு போகனும்ற "தெளிவான" நோக்கத்தோட தமிழ்மணத்துல சேர்ந்துட்டு, அவங்க ஏதாவது சட்டதிட்டம்னு கொண்டுவந்து இந்த விதிகளின் படிதான் இங்க உனக்கு இடம்னு சொன்னா உடனே "ஐயையோ! என் எழுத்து சுதந்திரம் போச்சே! " அப்படின்னு என்னவோ weblog account டையே முடக்கி வைச்சாப்படி "தெளிவில்"லாம கூவறது.
3. இருக்கறவரைக்கும் சகட்டுமேனிக்கு எல்லா பதிவுகளையும் போட்டு தாக்கிட்டு அதுக்கு எப்பவும் போல வழக்கமான பின்னூட்டங்களான " அண்ணே.. கலக்கீட்டிங்க...", "பின் முதுகை சொரிஞ்சிட்டீங்க", "மூக்கை நோண்டிட்டீங்க"ன்னு வர்ற நாலஞ்சு பின்னூட்டங்களை வச்சிகிட்டு "பாருங்க.. நான் யாரும் வருத்தப்படறமாதிரி எங்கயும் எழுதலை"ன்னு தன்னிலை விளக்கமும் குடுத்துக்கிட்டு, விலக்கிவைச்சப்பறம் "அங்கதம்"னா என்ன அப்படின்னு விளக்கமா எல்லாருக்கும் சொல்லித்தர்றது...
4. அந்த " அண்ணே.. கலக்கீட்டிங்க..." பின்னூட்டத்தையும் அனானிமசா இவ்வளவு நாள் போட்டுட்டு, அங்க பொலம்பற பதிவுலயும் போய், "நீங்க ஒன்னும் கவலைப்படாதிங்கண்ணே! உங்களுக்காக நான் ஒரு திரட்டி ஆரம்பிக்கறேன்"னு அனானிமசாவே பின்னூட்டம் போட்டு அங்கதம் சொல்லித்தந்த அண்ணன் புண்ணுலயே அங்குசம் பாய்ச்சி தமாசு பன்னறது.
5. எழுதற வரைக்கும் எந்த வரைமுறையும் இல்லாம "அமெரிக்காவுல அப்பிடி சுதந்திரமா எழுதறாங்கோ.." "சப்பானுல இப்படி அளவுகோலே கிடையாது", "உகாண்டால பேனாவுக்கு தடையே கிடையாது"ன்னு கூவிட்டு "நாம எழுதறதுக்கு என்ன அளவுகோல்?" அப்படின்ற கேள்வியே நெனப்புல வராம அம்மா, அக்கா, சாதி, மதம்னு அத்தனையும் இழுத்துப்போட்டு நாறடிச்சுட்டு, "தயவு செய்து இந்தமாதிரி பண்ணறவங்க கவனிங்கன்னு" சொன்னா.. அதையும் உப்புமா பதிவுன்னு சொல்லிட்டு கடைசியா பச்சை வெளைக்க அணைச்சவுடனே "நீ விளக்கை அணைக்கறதுக்கு என்னா அளவுகோல் வச்சி இப்படி புடுங்குன?" அப்படின்னு திடீர்னு அளவுகோல் மேல கரிசனம் காட்டி அறிக்கை விடறது
6. எழுதுன அத்தனையும் மத்தவங்க பதிவுகளையே போட்டுத்தாக்கிட்டு, கடைசியா சொந்தமா ஒரே ஒரு பதிவை போடறபோது பச்ச பல்பு ஃபியூசு போனது தெரிஞ்சு மண்டை காய்ஞ்சபடி ஓய்ஞ்சுபோறது
7. "எதிர்மறை கருத்துக்களே இருக்க கூடாதா? அப்படின்னா இது என்ன எழுத்து சுதந்திரம்?" கேள்வி கேக்கற அதே நேரத்துல "அவங்க எடம்னு தெரிஞ்சு தானே வந்தோம்? அவங்க சொல்லறதையும் கொஞ்சம் கேக்கலாமே?" ன்னு யாராவது சொன்னா "ஜால்ராவ நிறுத்து பெருசு.."ன்னு இவ்வளவு நாள் மத்தவங்களுக்கு போட்ட ஜால்ராவ மறந்து சொல்லறது.
8. குஷ்பு சுந்தரை இல்லாம தலகாணிய கட்டிப்புடிச்சுட்டு தூங்கறதால தமிழ் பெண்களின் கற்புக்கு ஆபத்தா? திருமா கனடவுல வேலங்குச்சிவச்சி ஏன் பல்லு வெளக்கலை? புருசன் பொண்டாட்டி சண்டையோட குடும்பம் நடத்தறவங்க எல்லாம் எப்படி ஒரு விபச்சாரி எழுதுன புத்தகத்தை வச்சி குடும்பம் நடத்த பழகிக்கனும்? இணையத்துல செருப்பால அடிக்கறது எப்படி? ன்னு பலதரப்பட்ட இம்சைகளையும், கூச்சல்களையும் கேட்டுக்கேட்டு நொந்துபோய் "சரி, நம்ப வேலையையாவது நாம பார்ப்பம்"னு ஒதுங்கிப்போறவங்களைப்பார்த்து கருத்துச்சொல்லாத கோயிஞ்ச்சாமிகள்னு சொல்லறது
9. சாவுச்சேதிகளை கூட விடாம பத்தி பத்தியா அங்கதம் பண்ணிட்டு, அங்கதம் பத்தி விளக்கமா வகுப்பும் எடுத்துட்டு "கொடுக்கற தானியத்துல ரெண்டு கொறச்சிக்கங்க.. "ன்னு சொன்னா "அதெப்படி நிர்வாகியா இருந்துக்கிட்டு நீ அங்கதமா எழுதலாம்? இப்படி சொல்லறதுக்கு எவ்வளவு கொழுப்பு உனக்கு?"ன்னு கேக்கறது.
10. இணையதளம்கறது இந்த உலகத்துக்கே வாசல்கறதை மறந்துட்டு எழுதற எழுத்துமேல நம்பிக்கை வைக்காம தமிழ்மணம் மட்டும்தான் தமிழு இலக்கியத்துக்கே வாசல்னு நம்பறது. "இருக்கறவனுக்கு ஒரு எடம்.. இல்லாதவனுக்கு இந்த ஒலகமே மடம்"னு போய் அடுத்த வேலையை பார்க்காம அதையே புடிச்சுகிட்டு இந்த மாதிரி பதிவு போட்டு தொங்கறது.
இது போதுமா? இல்லை இன்னும் கோஞ்சம் சொல்லவா?? "
============
கடைசி பக்கத்தில் தாரள மார்புகளை காட்டும் நடிகையின் படத்தையும், முதல் பக்கத்தில் நாலு பெண்கள் ஒரு டீக்கடையில் சிங்கிள் சாயாவும் ஒரு வடையும் தின்னும் படத்தை அரை பக்கத்துக்கு போட்டு "சீர்குலையும் தமிழ்க்குடும்பங்கள்" னு கலாச்சார அதிர்ச்சி கட்டுரை வெளிவந்த தமிழ்முரசின் 7ம் பக்கத்து விளம்பரத்துக்கு அடியில் ஒரு செய்தி...
"கருத்துச்சுதந்திரம் பற்றி கருத்துச்சொல்லிய அண்ணாசாமியின் கை உடைப்பு! அப்பாவி கைது!!"
Pops shows why it's tops with tour to China
பதிலளிநீக்குCincinnati Pops violinist Lois Reid Johnson posed for a photo, and took a few of her own, on the Great Wall of China outside Beijing on Thursday.
Find out how to buy and sell anything, like things related to quality assurance highway construction on interest free credit and pay back whenever you want! Exchange FREE ads on any topic, like quality assurance highway construction!
F9/11 படத்துல அவுரு மத்தவங்க படத்துல கருத்து சொல்றாருன்னு சொல்லீங்கண்ணா... அத சொன்னவர் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிச்சாங்களான்னு கேட்டேனுங்க.. அதத்தான் முழுசாவே எழுதலையே, அர்த்தமில்லாததுன்னுல்ல முடிச்சிருக்கு... அப்புறம் யாரு நம்புனாய்ங்க, என்னத்த நம்புனாய்ங்க...
பதிலளிநீக்குமூளைக்கோளாருன்னு வர்ற பின்னூட்டத்த மட்டும் தூக்கணுமா, இல்ல மூன்றாம்தரம்னு வர கருத்தயும் தூக்கணுமா, மத்த எது எத வச்சிக்கலாம், எத எத தூக்கலாம்னு ஒரு பட்டியல் தாங்கண்ணே. அப்படியே இந்த மாதிரி பட்டியல மத்த எந்த எந்த பெரிய மனுசங்க கிட்ட இருந்து பாலோ பண்ணனும்னு பெரிய மனுசங்க பட்டியல் ஒண்ணும் தாங்க. அல்லாத்தையும் ஒரு சேர வாங்கி ஒரு முடிவுக்கு வந்திற்றேன். அப்புறம் இதெல்லாம் பண்ணா உங்களுக்கு முதுகு சொறியிறேன்னு யாராவது சொன்னா, அதுக்கு நான் என்ன பண்றதுன்னும் சொல்லீருங்க.
அனானிமஸா வந்து தனக்குத்தானே பின்னூட்டம் விட்டுக்கறவங்கள பத்தி ஜேம்ஸ் பாண்டு கணக்கா சொல்லியிருக்கீங்க. அவங்க வேற எந்த எந்த மெத்தட்ல தனக்கு தானே பின்னூட்டம் கொடுத்து சந்தோசப்பட்டுக்கிறாங்கன்னும் ஒரு வார்த்தை சொல்லிப்போடுங்க.
"அவங்க ஏதாவது சட்டதிட்டம்னு கொண்டுவந்து இந்த விதிகளின் படிதான் இங்க உனக்கு இடம்னு சொன்னா"ன்னு அருமையா சொன்னீங்கன்னா.. அதையேத்தானுங் நானும் கேட்டன். விதிகள அறிவிச்சி இதும்மாதிரி எழுதுனா எழுது, இல்லையின்னா வருத்தப்படாதேன்னு சொல்லியிருக்கலாமே, என்னத்துக்கு இடமில்லையின்னு சொன்னப்புறம் விதிகளுன்னு... டெர்ம்ஸ் ஆஃப் கண்டிசன்ல எல்லாம் இருக்காம். மடப்பய நாந்தான் தப்பா புரிஞ்சிகிட்டேய்ங்க..
உங்களை மாதிரி நாலும் தெரிந்த பெரிய மனுசங்களே வெறும் 10 பாயிண்டோட நிறுத்திட்டா எப்படிண்ணே... ரொம்ப ஏமாத்தமா இருக்கு போங்க. இன்னும் கெத்தா பல பாயிண்டுகளை அள்ளி வீசி என்னட கண்ண தொரங்கண்ணே...
முகமூடி,
பதிலளிநீக்குஒன்னாம் நம்பரு மட்டுமே உங்க பதிவுகளைப்பத்தினது. யாரு கேட்டாங்கன்னு ஞாபகம் இல்லை! இவ்வளவு அற்புதமா நகைச்சுவையா எழுதற நீங்க யாராவது கேள்வி கேட்டாமட்டும் இப்படி சீரியஸ் ஆகிடறீங்களேன்னு கேட்டதை படிச்சிட்டு அது எனக்கும் சரின்னு தோணினதால சொன்னது அது! நீங்க சொல்லற மாதிரிதான்! உலகத்துல யார் மனசையும் புண்படுத்தாம நகைச்சுவையா எழுதறது கடினம். அதுக்காக ஒவ்வொருத்தருகிட்டையும் மன்னிப்பு கேட்டுகிட்டு இருந்தா விடிஞ்சிரும்! ஆனா யாரவது அதுகுறித்து நிஜமாவே வருத்தப்பட்டா பதில் சொல்லவேண்டிய நேர்மையான பொறுப்பு எழுதினவருக்கு உண்டு என்பது என் கருத்து. உங்களதையும் சின்னவருடையதையும் தவறாமல் படித்து ரசித்தவன் நான்(குசும்பருடையதையும் படித்தேன். பிடிக்கலை!).
//அனானிமஸா வந்து தனக்குத்தானே பின்னூட்டம்// நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. அனானிமசாக கருத்து சொல்லும் அனானிமஸ்களையே சொன்னேன்! பெயரைக்கூட சொல்லாமல் பின்னூட்டம் இடுபவர்.. நான் திரட்டி செய்யரேன்.. நீ வந்து எழுதுங்கறது தமாசு இல்லையா?
மற்றபடி உங்க கருத்து உங்களது.. எனக்கும் உடன்பாடுன்னா அது என்னதும்! இல்லைன்னா எடுத்துச்சொன்னதுக்கப்பறம் அவங்கவங்க வழில போய்க்கிட்டே இருக்கறதுதான்...
கடைசியா ஒரு ஆழமான பின்னூட்டத்தோடயே முடிக்கறேன்! நம்ப ஏஜெண்ட்டு சொன்னது போல "நீங்கள் எழுதுவதில் வெறும் வேடிக்கை மட்டும் இல்லை.. விசயங்களும் நிறைய உண்டு!"
ennapu kalakureeha?
பதிலளிநீக்குஒரு ஆழமான பின்னூட்டத்தோடயே முடிக்கறேன்! நம்ப ஏஜெண்ட்டு சொன்னது போல "நீங்கள் எழுதுவதில் வெறும் வேடிக்கை மட்டும் இல்லை.. விசயங்களும் நிறைய உண்டு!//
பதிலளிநீக்குஎனது பின்னூட்டம் quote செய்யப்படும் அளவிற்கு! இருப்பதை நினைத்து உவகை அடைகிறேன்.
:-)))
ஆனால் எனது பதிவுகள்தான்... ஹி..ஹி...!!
...தொடர்ச்சி (இப்டி எழுதுறது ஒரு 'இது'வா இப்ப ஆயிடிச்சு!)
பதிலளிநீக்குஆனால் என் பதிவுகள்தான் எளிதில் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு பலநூறு கருத்துக்களைக் கொண்டு....
எனக்கு தற்புகழ்ச்சி அவ்வளவாக விருப்பமில்லாததாலும் கஜினி படம் பார்க்கப் போவதாலும் இத்துடன் நிறுத்துகிறேன்!
:-)
//எளிதில் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு பலநூறு கருத்துக்களைக் கொண்டு//
பதிலளிநீக்குஏஜெண்டு.. சத்தியமான உண்மை.. சிலநேரம் உமக்கே புரிந்துதான் எழுதுகிறீரா?! என்ற அளவுக்கு!!
அந்த நெய், பருப்பு பதிவு என்னை அந்த அளவுக்கு பாதித்தது! :)
//சிலநேரம் உமக்கே புரிந்துதான் எழுதுகிறீரா?! //
பதிலளிநீக்குஅப்படியென்றால்...
என்ன சொல்ல வருகிறீர்! சில சமயம் தவிர்த்து மற்ற சமயங்களில் என் பதிஉ புரிகிறது என்பதை ஒத்துக் கொள்கிரீரா!?
:-)))
* * * * *
நெய் பருப்பு கொஞ்சம் மந்தம் தான்; ஓமத்திரவம் குடித்தால் சரியாகிவிடும்!
இளவஞ்சி
பதிலளிநீக்கு( இது உங்களின் உண்மை பெயரா இல்லை புனைப்பெயரா தெரியாது , ஆனால் profile இருப்பது உங்களின் உண்மை படம் இல்லை எனத் தெரிகிறது :-) )
ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அபொருள் மெய்பொருள் காண்பதரிது.
இளவஞ்சியோ, காசி என்ற பெயரில் வருவது எல்லாம் சரியான கருத்தாகவோ. அனானி, முகமூடியோடு வருவதால் தப்பான கருதாகா இருக்கவேண்டும் என்று அர்த்தமில்லை. இந்த பின்னூட்டதையே நான் நீங்கள் அறிந்த பெயரில் விட்டுச் சென்றால், அவன் அப்படித்தான் என்ற என்னத்தோடுதான் படிப்பீர்கள். அனானியாக வருவதால் என் பெயரை/Ip address பார்க்காமல் நான் சொல்ல வருவதை மட்டும் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அடிக்கடி இந்த பக்கம் வ்ரும் ஒரு வாசகன்.
ஏஜெண்டு! அது சும்மா தமாசு! ஒத்துக்கொள்வது என்ன? பாண்டு பத்திரமே தரேன்! நீங்க எழுதறது எல்லாஆஆஆஆமே புரியற பதிவுதான்! (வடிவேலு மாதிரி இழுத்துப்படிங்க...)
பதிலளிநீக்குஅனானிமஸ்!
//எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அபொருள் மெய்பொருள் காண்பதரிது// சரியாகத்தான் சொல்லியிருக்கீங்க... நான் இங்கே யாரு சொன்னது சரி, தப்புன்னு சொல்ல வரவில்லை! கருத்துக்களை நியாயத்தராசில் நிறுத்தி சரிபார்க்கவில்லை! விவாதம்கற பேருல இப்படியெல்லாம் நடந்துக்கறதுதான் கருத்துச்சுதந்திரமாங்கறதுதான் இங்க என் ஆதங்கம்.
நான் இங்க வந்தபுதுசுல இப்படித்தான் ஒரு ஆர்வக்கோளாருல மிகச்சிறப்பா எழுதிக்கொண்டிருந்த ஒருத்தரோட பதிவுல மத்தவங்களோட சேர்ந்து வாதம் செய்யப்போக அவர் மிகவும் உணர்வுகள் காயப்பட்டு எழுதறதையே நிறுத்திட்டார். அதுக்கு நாந்தான் மொத்தமா காரணமில்லைன்னாலும் அதுல பங்கெடுத்த குற்ற உணர்வு எனக்கு இன்னைக்கும் இருக்கு! அதனாலதான் முடிஞ்சவரைக்கும் இங்க விவாதம்னா தலைகாட்டறதே இல்லை! ஒரு பயம்னே வச்சுக்கங்க.. 3 பின்னூட்டத்துக்கு மேல அது விவாதமா இல்லாம அடிதடியா மாறிடுது...(ரோசா..டோண்டு...) நான் அறிந்தவரை இங்க யாரும் ஞானபீடவிருது(ஏஜெண்டு.. மறுபடி கெளம்பீறாதிங்க...) வாங்கறதுகாக எழுதலை. நமக்கும் எழுத வருதா.. சந்தோசம்... அதை 4 பேரு கவனிக்கறாங்களா.. அதுவும் சந்தோசம்! இங்க இந்த இடத்துல இந்தமாதிரி இருந்தா ஔஇருங்கன்னு சொல்லும்போது நான் அந்த மாதிரி இருக்கானா? அப்படின்னா ஓகே... இல்லையா? எனக்கும் இதேதான்! வேறொரு மடம்! அது இல்லாம நீ என்னை தூக்கிட்டையா? உன்னை என்ன பண்ணறேன் பாருன்னா அது இதுவரை எழுதுன அவங்க எழுத்துமேலையே நம்பிக்கை இல்லைன்னு அர்த்தம்!
மத்தபடி முகமூடிக்கு சொன்னதுதான்.//உங்க கருத்து உங்களது.. எனக்கும் உடன்பாடுன்னா அது என்னதும்! இல்லைன்னா எடுத்துச்சொன்னதுக்கப்பறம் அவங்கவங்க வழில போய்க்கிட்டே இருக்கறதுதான்//
இது என் புனைப்பெயர்.
என் புகைப்படம் இங்க இல்லைன்னாலும் இன்னொரு பதிவுல இருக்கு.. அதுபோக இந்த படம் அச்சு அசலா என்னைபோலவே இருக்கறதுனாதான் இங்கே..
//அனானியாக வருவதால் என் பெயரை/Ip address பார்க்காமல் நான் சொல்ல வருவதை மட்டும் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்// அனானியாக மட்டுமல்ல.. தெரிந்த நிஜப்பெயரில் வந்தாலும் சொல்லவந்ததை மட்டுமே பார்ப்பேன் என நம்புகிறேன்...
இதுபோக, உங்கள் மனம் வருந்தும்படி வேறு ஏதாவது எழுதியிருந்தால், தவறைச்சொல்லுங்கள்.. திருத்திக்கொள்கிறேன்... இல்லையா.. இதுபோலவே என்னைக்கும் அடிக்கடி இந்தப்பக்கம் வாங்கப்பு.. :)
திரு/திருமதி/செல்வி/????அனானிமஸ்,
பதிலளிநீக்கு"அவன் அப்படித்தான் என்ற என்னத்தோடுதான் படிப்பீர்கள்.""
---'நான் அப்படித்தான்' என்று நீங்கள் சொல்லிக்கொள்ள, 'நீங்கள் அப்படித்தான்' என்று நான் உங்களைத் தெரிந்துகொள்ள ஏன் பயப்படவேண்டும்/தயங்க வேண்டும்??
புரியவில்லை உங்கள் logic!
தருமி
பதிலளிநீக்குநான் சொல்லவந்தது இதுதான். நிறைய சமயங்களில் சொல்லவந்த கருத்தை விட சொல்பவரை பற்றிய கருத்துதான் கணிக்கப்படுகிறது. ( உங்களின் பதிவில் உங்களைப் பற்றி வரும் சில பின்னூட்டங்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். ). என்ன சொல்லப்படுகிறது என்று பாருங்கள். அதை சொன்னவர் அனானியா , இல்லை தருமியா, இளவஞ்சியா என்று பார்க்காதீர்கள் என்பதுதான். விரும்பியோ, விரும்பாமலோ இங்கு எழுதுபவரின் மேல் "முத்திரை"
குத்தப்பட்டு இருக்கிறது. அதை தகர்க்க சில சமயங்களில் அனானியின் தேவை இருக்கக்கூடும் என்பதுதான் என் logic !
Athu- nnaa Ithuthaa-nnaa!
பதிலளிநீக்குநல்ல கருத்துக்கள், நகைச்சுவையுடன்.
பதிலளிநீக்குதங்களின் Previous Posts கீழுள்ள சுட்டி மற்றும் பின்புல வண்ணங்களை மற்றினால் கண்களைக் குத்தாது.
இளவஞ்சீ, கலக்கல். அப்ப சரியாப் படிக்கலை. இன்னிக்குத்தான் படிச்சேன். இவுனுகளுக்கெல்லாம் வெளங்காம இல்லை, வெளங்குனதாக் காட்டிக்கூடாதாம்!
பதிலளிநீக்கு