ஆஹா! ஒரு வாரம் ஓடிப்போச்சு!
உங்களோட உற்சாகமான பின்னூட்டங்களும் கருத்துக்களூம் நெஜமாவே ரெண்டு டம்ளர் ராகிக்கஞ்சிய மோருல கரைச்சு கல்லுப்பு போட்டு வெங்காயத்தை கடிச்சுக்கிட்டு குடிச்சப்புல ஜில்லுன்னுதான் இருக்கு!
இந்த வாரம் நாமன்னு ஆனதுக்கப்பறம் நல்ல விசயமா எழுதனுமேன்னு நினைச்சதுல வெளைஞ்ச மலரும் நினைவுகள் தாங்க இதெல்லாம்! சொல்ல வந்த கருத்தும் இதுதாங்க.. நிஜமாவே வாழ்க்கையை பத்தி சொல்லிக்குடுக்கறதுக்கு நம்பளைசுத்தி எப்பவும் ஒரு நாலுபேராவது இருக்காங்க... கடவுள் என்னைக்கும் மனுசங்களை நேரா சந்திக்கறதே இல்லை! அதுக்குபதிலா சகஜீவனுங்களைத்தான் அவரோட தூதுவராகவும் அவங்களிடம் கிடைக்கும் படிப்பினைகளைத்தான் அவரோட நற்செய்திகளாகவும் அனுப்பறாரு! இல்லைன்னா நாமெல்லாம் எந்த பாடசாலைல போய் படிச்சு இதெல்லாம் தெரிஞ்சிக்கறது? ஆனாலும் ஒருவேளை இது என்னைக்கும் இலவசகல்வியா இருக்கறதால நாமதான் சரியா கருத்தா படிக்கறதில்லையோ என்னவோ?!
நட்சத்திரவிதிப்படி எல்லா நாளும் எழுதனும்னாலும் வெள்ளிக்கிழமை மட்டும் முடியலைங்க..( மதியக்கா.. மன்னிச்சிருங்க! ) அன்னைக்கு ஆபீசுல ஒரு சர்வரு புட்டுக்கிட்டதுல நம்பளபோட்டு ஃபுல்நைட்டு பெண்டை நிமிர்த்திட்டாங்க! அதேபோல நேரம் பத்தாதலால நிறைய எழுத்துப்பிழைகளோடவும் பதிவுகளை போட்டுட்டேன்! படிச்சு சகிச்சுகிட்டவங்க அப்படியே என்னையும் மன்னிச்சுருங்க! (தமிழ்ல எனக்கு பிடிச்ச ஒரே வார்த்தை மன்னிப்புதான்! இல்லைன்னா நானெல்லாம் எப்படி பொழப்பு நடத்தறது!? :) )
ஒருவாரமா மடிக்கணினியை கட்டிக்கிட்டு ஓரியாடுனதுல வீட்டுலயும் கொஞ்சம் கலவரம்தாங்க! இன்னும் ஒரு வாரத்துக்கு இதை வீட்டுல தொடக்கூடாதுன்னும் இல்லைன்னா இன்னொரு புதுக்கரண்டி வாங்கவேண்டியிருக்கும்னும் எனது இல்லாள் தாழ்மையாகவும் அன்போடவும் பரிவுடனும் வேண்டுகோள் வைத்திருப்பதால் போனாப்போதுன்னு(ஹிஹி...) நானும் அந்த கோரிக்கைக்கு செவிசாய்த்திருக்கிறேன்! ஆகவே அன்பர்களே! இத்தனை நாள் படிக்காமலும் பின்னூட்டமிடாமலும் விட்ட பதிவுகள் ஆபீசுல கவனிக்கப்படும்னு சொல்லிக்கறேன்! (இல்லைன்னா மட்டும்? )
மற்றபடி, உங்கள் ஊக்கங்களுக்கும் கருத்துக்களுக்கும் என்றென்றும் நன்றி!
அதுக்குள்ளே ஒரு வாரமா? கலக்கல் வாரம்.
பதிலளிநீக்குநீங்க சொல்றது சரிதான் இளவஞ்சி. வாழ்க்கையிலே பலதும் இலவசக்கல்வி என்பதாலே கவனிக்க வேண்டிய நேரத்துலே கவனிக்காம பிறகு இருந்து "இரை மீட்கிறது".
உங்களுடைய அனுபவங்களைப்பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!
இந்த வார நட்சத்திரம், இல்ல..இல்ல.. வலைப்பதிவுகளில் நட்சத்திரம் நீங்கதான்
பதிலளிநீக்குசூஊஊஊஊஊஊஊஊப்பர் வாரம்.
பதிலளிநீக்குநல்ல பதிவுகள் நல்ல செய்திகள் என்மனசுக்குள்ளெ போயிருக்கு.
நல்லா இருங்க.
தொடர்ந்து உங்க பதிவுலே எழுதுங்க. விட்டுராதீங்க.
சொல்லிப்புட்டேன், ஆமா.
என்றும் அன்புடன்,
துளசி.
இளவஞ்சி, உண்மையிலேயே உங்க பதிவுகள் நேர்மையாவும், எளிமையாவும், நெகிழ்ச்சியாவும், சிந்திக்க வைக்கிறதாகவும் அதே சமயம் ஒரு சின்ன புன்னகையோட படிக்கும்படியாகவும் இருந்தது. திருப்பி தலை மறைவா ஆகாம நிறைய எழுதுங்க!!
பதிலளிநீக்குHoldat9000:
பதிலளிநீக்குThe week was a great read and touching. Pl continue.
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஇளவஞ்சி,
பதிலளிநீக்குஅருமையான வாரம் .இது போல எந்த வலைப்பதிவரும் என்னைக் கவர்ந்ததில்லை என்பதை உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொல்லிக்கொள்கிறேன் .
நிறைய எழுதுங்கள்.
எளிமையான அதேசமயம் படிக்க தூண்டும் நல்ல பதிவுகள்.தொடர்ந்து எழுதுங்கள்.
பதிலளிநீக்குரசனைக்கும் சிந்தனைக்குமுரியதாயிருந்தன உங்கள் பதிவுகள்.
பதிலளிநீக்கு'அந்த ஏழு நாட்கள்' முடிய பழைய இளவஞ்சியைப் பார்க்கலாமென்று நம்புகிறேன்.
புதுசாப் படமெல்லாம் வந்திருக்காமே?
ஏனோ தெரியவில்லை. உங்கள் பக்கம் மட்டும் கணிணியில் வர நேரமெடுக்கிறது.
'ஓரியாடுனதுல' - ஆஹா..., இந்த வார்த்தையக் கேட்டு எத்தன நாளாச்சு... ?
பதிலளிநீக்குகொங்குதமிழ் கொஞ்சி விளையாடுது!
கலக்கு மச்சி..
"இளவஞ்சி,
பதிலளிநீக்குஅருமையான வாரம் .இது போல எந்த வலைப்பதிவரும் என்னைக் கவர்ந்ததில்லை என்பதை உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொல்லிக்கொள்கிறேன் .
நிறைய எழுதுங்கள்."
-இது ஜோ சொன்னது.
நான் 100% அதை வழி மொழிகிறேன்.
உங்கள் அனைவரின் ஊக்கங்களுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!
பதிலளிநீக்குFantastic!!!
பதிலளிநீக்குபோன பதிவிற்கு தருமி சொன்னதை வழிமொழிகின்றேன்.
மேன்மேலும் நிறைய எழுதுங்கள்.
Partha
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்கு//இன்னும் ஒரு வாரத்துக்கு இதை வீட்டுல தொடக்கூடாதுன்னும் இல்லைன்னா இன்னொரு புதுக்கரண்டி வாங்கவேண்டியிருக்கும்னும் எ/
பதிலளிநீக்குநல்ல வேளை.. புதுக்கரண்டி, தப்பிச்சீங்க... கொடுத்து வெச்சசரு...
பூரிக்கட்டையா இருந்தா எப்படி இருக்கும்... யோசித்து பாருங்க
அன்னைக்கு ஆபீசுல ஒரு சர்வரு புட்டுக்கிட்டதுல நம்பளபோட்டு ஃபுல்நைட்டு பெண்டை நிமிர்த்திட்டாங்க!
நீங்க 5 ஸ்டார் ஓட்டல்ல வேலை செய்றீங்களா இளவஞ்சி அன்னாத்த? ஹி னு நம்ம கம்ப்யூட்டர் கோயிந்தன் கேக்கறான்.. இன்னபா சொல்றது அவனுக்கு??
ஹி ஹி ஹி ..
புதுக்கரண்டியா இருந்தா என்ன? பூரிக்கட்டையா இருந்தா என்ன? அதது அவனவன் கொடுப்பினை! அதுபோக நம்ப மனதிடத்துக்கு முன்னால இதெல்லாம் ச்சும்மா! :) (அவிங்க தூங்கிட்டாங்க.. ஹிஹி....)
பதிலளிநீக்கு"ஒரு சர்வரு புட்டுக்கிட்டதுல " - எழுதும்போதே நினைச்சேன்! இது தேவையான்னு! :)
வருகைக்கு நன்றி வீ.எம்...
எனக்கு நேரமில்லாத ஒரு நேரத்தில் வலைப்பூ நட்சத்திரமாக வந்து...
பதிலளிநீக்குநான் வர முன்னமே பெட்டியைக் கட்டிக் கொண்டு வெளிக்கிட்டு விட்டீங்கள்.
பரவாயில்லை. இனித்தான் உங்கள் மலரும் நினைவுகளை வாசிக்கப் போகிறேன்.