புதன், மே 18, 2005

வேறவழி? கொஞ்சநாளைக்கு பொழச்சுபோங்க மக்கா!


Image hosted by Photobucket.com

புது வேலை! புது ஊரூ!! கலக்கறே இளவஞ்சி!!!

ஆமாங்க.. நமக்கு வேற ஊருக்கு மாத்தலு ஆயிருக்கு. என்ன ஒரு அநியாயம் பாருங்க! ஒரு கம்பெனியவிட்டு போனா அவங்க கொடுத்த பொருளுகளையும் திரும்பக்கொடுக்கனுமாம். அந்த பழக்கம் நம்ப பரம்பரையிலயே இல்லைன்னு எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். காதுல போட்டுக்காம லேப்பு-டாப்ப புடுங்கிட்டாங்க! நான் செஞ்ச ஆபீசு வேலைய மதிக்கலன்னாலும் தமிழு எலக்கியத்துக்கு தமிழ்மணம் மூலமா( சாருவோட அந்த மூலம் இல்லைங்க..!) நான் செஞ்ச சேவைய மதிச்சாவது விட்டுருக்கலாம்... சரிவிடுங்க... போற எடத்துல நம்பள நம்பி எப்ப அந்த மடிக்கணினிய குடுக்கறாங்களோ அந்த அவருல இருந்து மறுபடியும் ஆரம்பிக்கபோது நம்ம பங்களிப்புன்னு இந்த எடத்துல சொல்லிக்கொள்ள விரும்பறேன்! (என்னடா இழுவை.. மேட்டருக்கு வாடா!!)

அதனால நம்ப தலை கொஞ்சநாளைக்கு இங்க தெரியாது! (இல்லைன்னா மட்டும் தெனமும் இங்க தெரியுதான்னு எதிர்கொரலு விடாதிங்க...! சும்மா ஒரு பில்டப்பு! )

நிம்மதியா நல்ல நல்ல பதிவுகளை போடுங்க..
சந்தோசமா நல்ல நல்ல பதிவுகளை படிங்க... (என்னோடதை சொல்லலீங்க... ஹிஹி...)

6 கருத்துகள்:

 1. இளவஞ்சி, ஆபிஸ் லேப் டாப்பை விடுங்க. சொந்தமா ஒரு டெஸ்க் டாப்பு/லேப் டாப்பு வாங்கிட்டு அப்பப்போ இந்த பக்கம் வாங்கய்யா. புது வேலையும் புது இடமும் உங்களுக்கு நல்ல ஒரு உத்வேகத்தையும்,வாய்ப்புகளையும்,நலனையும் அள்ளித் தரட்டும்.

  பதிலளிநீக்கு
 2. புது வேலையில்,'பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு' வாழ
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துக்கள் இளவஞ்சி.

  சீக்கிரமா வந்துசேருங்க.

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துக்கள் .. விரைவில் மீண்டும் வருக !!

  உங்கள் வலைப்பூ டிஸைன் மிக அருமை... ரசித்தேன்.. !!


  வீ. எம்!!
  வலைப்பூவிற்கு புது வரவு !

  பதிலளிநீக்கு