முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இளவஞ்சியின் தத்துவமுத்துக்கள்


Image hosted by Photobucket.com


1. வாழ்க்கைல யாரோ ரெண்டுபேரு மட்டும் அப்படி இப்படி புரட்டிட்டு மடிப்பு களையாம அலமாரிக்குபோற Hindu பேப்பரா இல்லாம காலைல இருந்து சாயந்தரம் வரை வர்றவங்க போறவங்க படிச்சு படிச்சே கிழிஞ்சிபோற டீக்கடை தினத்தந்தியா ஒரு 4 பேருக்கு உபயோகமா இருக்கறது எவ்வளவோமேல்!

2. ஆண்டவன் கெட்டவங்களுக்கு விதவிதமா பேண்ட் குடுப்பாரு. ஆனா பெல்ட்டு குடுக்காததால அடிக்கடி அவுந்துடும். நல்லவங்களுக்கு ஒரே ஒரு அண்டர்வேரு தான் குடுப்பாரு. இறுக்கமா கட்டிக்கறதுக்கு நாடாவோட! (எங்கயோ கேட்டமாதிரி இருந்தா நான் பொறுப்பல்ல!)

3. நகர வாழ்க்கைல பிஸ்சாவும் ஃபாஸ்ட்புட்டும் சாப்டுட்டு அடுத்தநாள் காலைல நியூஸ்பேப்பரையோ குண்டு புக்கையோ எடுத்துகிட்டு போய் ஒன்னரை மணிநேரம் முக்கியும் தோல்வியடையறவனைவிட, கிராமத்துல கஞ்சியோ கூழோ குடிச்சிட்டு விடிகாலைல போறபோக்குல காட்டுல கக்காபோறவந்தான் குடுத்துவச்சவன்!

4, காலங்காத்தால கார் எடுத்துகிட்டு 10 கிலோமீட்டர் தூரம் பீச்சுக்கு போய் அங்க ஒரு கிலோமீட்டர் நடக்கறதுக்கு, வீட்டசுத்தியே ஜிம்மிய கூட்டிகிட்டு 4 ரவுண்டுவர்றது ஜிம்மிக்கும் நல்லது. நம்ம மணிபர்சுக்கும் நல்லது,

5. நல்ல வேளை! நாம எல்லாம் இந்தியால பொறந்தோம். ஒரு ஃபிகர தேத்தி லவ் பண்ண துப்பு இல்லன்னாலும் ஒரு வயசுக்குமேல அப்பாம்மாவே ஒரு புள்ளய பார்த்து கல்யாணம்பண்ணிவச்சிடறாங்க. இதே நாம அமெரிக்கவுலயோ லண்டன்லயோ பொறந்திருந்தா நெலமைய நெணச்சுப்பாருங்க..! நம்ப மூஞ்சிக்கும் பர்சனாலிட்டிக்கும் என்னைக்கு ஃபிகர்மாட்டி செட்டில் ஆகறது??

6. கல்யாணத்தன்னைக்கு மாப்பிள்ளையயையும் பொண்ணையும் நல்லா பாருங்க! அவரு மொகம் நெறஞ்ச சிரிப்போட இருப்பாப்ல. பொண்ணு கேவி கேவி அழும். தம்மு தண்ணி அடிக்கறவங்க அந்த பழக்கத்தை நிறுத்தும்போது பார்த்திருக்கீங்களா? ஃபில்டரு தீயறவரைக்கும் வாய்சுட இழுப்பாங்க! கடைசிசொட்டு வரைக்கும் உறிவாங்க!! கடைசியா ஒன்ன செய்யும்போது புல்லா அனுபவிச்சிசெய்யனும். அதுக்குதான்.

7. பொண்டாட்டியா வர்றவகிட்ட அழகு மட்டும் இருந்தா போதும் நெனைக்கறவன் நெலம 1000 ரூபா செருப்பு வாங்குனவன் நெலமதான்! பத்திரமா பாத்துக்கறதுலயே வாழ்க்கை போயிரும்.

இன்னைக்கு இதுக்கு மேல சிந்திக்க முடியலைங்க... மிச்சத்த நாளைக்கு வச்சிப்போம்!

கருத்துகள்

  1. அடடா!
    என்ன தத்துவ முத்துக்கள்?
    இடைக்கிடை இப்பிடி எழுதவும்.

    பதிலளிநீக்கு
  2. வசந்தன், சுரேஷ்,

    கருத்துக்களுக்கு நன்றி. இதை எழுதுனதுக்காக எனக்கு யாரவது சாகித்திய ஆகாடமி குடுக்கறதா இருந்தாகூட முன்னாடியே சொல்லிடுங்க. அப்பதான் ஒரு நாலு பேர வர்ணமா.. அடச்சீ.. வண்ணமா திட்ட வசதியா இருக்கும்!

    ஹிஹி..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு