முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மீண்டும் தினமலர்! - ஒரு நெருடல்

இன்றய(23-03-05) தினமலரில்(www.dinamalar.com) "இது உங்கள் இடம்" பகுதியில் சி.ராதாகிருஷ்ணன் என்பவர் "தமிழை ஏன் அசிங்கப்படுத்த வேண்டும்?" என்ற தலைப்பில் எழுதியதில் ஒரு பகுதி.

"சலூன் கடை என்பதை சவரக்கடை என்று மாற்றினாலும், உள்ளே முடிவெட்டுதலும் முகமழித்தலும்தான் நடைபெறும்.அதே போல தமிழ் சினிமாக்கள் பெயரில் மட்டும் தமிழாக மாறினாலும், உள்ளே கற்பழிப்பு, ஆடை அவிழ்ப்பு, ஆபாசம், வன்முறை, விரசம் என்று கதைக்கு பதிலாக சதை தான் வீறு நடை போடும்."

முகச்சவரமும் கற்பழிப்பும் ஒன்றா? ஒப்பிட்டு எழுத வேறு உதாரணமே இல்லையா? இதில் நான் சாதியை இழுக்கவில்லை. ஆனால் ஒரு தொழிலை இப்படியா கேவலப்படுத்துவது? இது ஒரு வாசகர் கடிதமாக இருந்தாலும் பிறர்மனதை புண்படுத்தும் என்றால் அதை பத்திரிக்கை ஆசிரியர் அனுமதிக்கலாமா?

கருத்துகள்

  1. கண்டிக்கதக்கது.

    //இதில் நான் சாதியை இழுக்கவில்லை.//

    நல்ல வேளை disclaimer போட்டீங்க. இல்ல சொல்ல வந்த கருத்தை விட்டுவிட்டு நம் வாசக கண்மணிகளால் இங்கே திரும்ப சாதி இழுப்பட்டிருக்கும்.

    //இது ஒரு வாசகர் கடிதமாக இருந்தாலும் பிறர்மனதை புண்படுத்தும் என்றால் அதை பத்திரிக்கை ஆசிரியர் அனுமதிக்கலாமா? //

    தினமலர் ஆசிரியர்கிட்ட கேட்கிறீருங்களா? :-)

    பதிலளிநீக்கு
  2. ஒரு உதாரணத்துக்கு அப்படி சலூன்னு சொல்லீருக்கரு பா ! பாவம் மன்னிச்சு உட்டுடுங்கோ

    சங்கு மணி

    பதிலளிநீக்கு
  3. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. தினமலருக்கு ஒரு மெயில் அனுப்பியிருக்கேன்!

    பதிலளிநீக்கு
  4. இளவஞ்சி, ராதாகிருஷ்ணன் ஏதோ ஒரு சாம்பிள்க்கு போட்டுருகார்ன்னு நெனைக்கிறேன். பாவம் விடுங்க.

    வேணுன்னா இப்படி வெச்சுக்கலாம், "ஆர்.டி.ஓ ஆஃப்பீஸை வட்டார போக்குவரத்து அலுவலகம்ன்னு மாத்தினாலும் கூட அங்கெ லஞ்ச லாவண்யம் குறையவா போகுது?"

    இது எப்படி இருக்கு? ஓகேயா? :-)

    எம்.கே

    பதிலளிநீக்கு
  5. indhu onnum perisa alattikka vendiya vishayamillai enbadhu ennoda thazhmayana karuthu.....

    Thirumalaisamy

    பதிலளிநீக்கு
  6. ஒண்ணுமில்லாத விஷயம். ஒரு உதாரணத்துக்கு சொல்லி இருக்காங்க. வேற எதாவது சொல்லி இருக்க கூடாதான்னா, அதை சொன்னா மட்டும் சரியான்னு கேட்க ஆட்கள் வருவாங்க.

    இதை எல்லாம் பரபரப்பாக்காம இக்னோர் பண்ணுங்க ப்ளீஸ்.

    பதிலளிநீக்கு
  7. வாத்தி, மீண்டும் ஒரு முறை படிச்சேன். வேண்டாம் சாமி, இந்த பதிவை எடுத்திடுங்க. ப்ளீஸ்.

    பதிலளிநீக்கு
  8. மக்கா இளவஞ்சி

    சாதி சமாச்சாரமெல்லாம் ஒரு பக்க்ம் இருக்கட்டும். 'சலூனை சவரக்கடைன்னு மாத்துனாலும் உள்ள நடக்குறதுதானே நடக்கும்'னு எழுத வச்சு, 'தமிழ்ல பேரு மாத்துறதெல்லாம் வெட்டி வேலைப்பா'ன்னு ஒரு பொதுவான கருத்தியலை அப்படியே உள்ள புகுத்துற்தை கவனிக்கலையா?

    சத்யமேவ ஜெயதேன்னாதான் நமக்கெல்லாம் உறைக்கும். சத்தியமே வெல்லும்னா எவன் கேக்குறான்?

    சாத்தான்குளத்தான்

    பதிலளிநீக்கு
  9. அப்போ, தினமலரெல்லாம் வாசிச்சிக்கிட்டு இருக்கீங்க ..?!

    பதிலளிநீக்கு
  10. நண்பர்களே வருகைக்கு நன்றி!

    யாருமே தேதியை கவனிக்கவில்லையா?!

    இது 2 வருசத்துக்கு முன்னாடி எழுதுனது. இன்னைக்கு புதுசா எழுதுனது இது.

    காணாமல் போன சின்னஞ்சிறுசுகள்...

    "இடுகைகளைப் புதுப்பிக்க" பகுதியில் என் பிளாக் அட்ரசை குடுத்தா அது பழசையெல்லாம் தோண்டுது. :)

    இகோ, இது இன்னைக்கும் சரி அன்னைக்கும் சரி.. பரபரப்புக்காக எழுதலை... இனிமே தூக்கி என்ன ஆகப்போகுது? இருந்துட்டு போகட்டுமே! :)

    பதிலளிநீக்கு
  11. 'வாசகர் பகுதி' என்பது தினமலரைப் பொறுத்த அளவில் அதன் அரிப்புகளைத் தீர்த்துக் கொள்ளும் பகுதியாகும். ஆகையால் இதை எதோ வாசகர் கருத்து என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். தின மலத்தின் கருத்து தான் அது.! இன்றைகு அடித்துக் கொண்டும், ஊத்திக் கொடுத்து ஆள் பிடித்துக் கொண்டும் இருக்கும் காலைக்கதிரிலும், தினமலரிலும், ஒரே கடிதங்கள் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு பதிப்புகளில் பயன்படுத்தப்பட்டிருப்பது வெளிப்பட்டதே நினைவிருக்கிறதா?

    சரி, அது கிடக்கட்டும்...
    அடப் பாவிகளா? இப்பத்தான் பார்க்கிறேன்... இது 2005-ல எழுதின பதிவா? சரி...சரி... விசயத்துக்கு வருவோம்.

    //சலூன் கடை என்பதை சவரக்கடை என்று மாற்றினாலும், உள்ளே முடிவெட்டுதலும் முகமழித்தலும்தான் நடைபெறும்.//
    சரிங்க வெண்ணைகளா... சவரக்கடைங்கிறதை சலூன்-னு சொன்னாலும், அங்க முடிவெட்டுதலும், முகமழித்தலும் தானடா நடக்கப்போகிறது. விளங்காதவங்களா?

    எடுத்துக்காட்டுக்கு அவர்கள் காட்டிய தொழில், முடிதிருத்தும் தொழில் என்று நல்ல எண்ணத்தோடு எடுத்துக் கொள்வோம்.ஆனாலும் ஏற்கனவே ஒருமுறை 'தினத்தந்தி' பேப்பரைக் காட்டி, இது சவரம் செய்த நுரையைத் தேய்க்கத்தான் லாயக்கு என்ற பொருளில் விளம்பரம் எடுத்து, வாங்கிக் கட்டிக்கொண்டதும், இன்னுமொருமுறை முடிதிருத்துவோர் குறித்து எழுதி, வாங்கிக்கட்டிக்கொண்டதும் நினைவுக்கு வந்துவிடுகிறது.

    (இப்பின்னூட்டம் தனிப் பதிவாக இடம்பெற்றுள்ள இடம்:
    http://princenrsama.blogspot.com/2007/05/blog-post_23.html)

    பதிலளிநீக்கு
  12. //சாதி சமாச்சாரமெல்லாம் ஒரு பக்க்ம் இருக்கட்டும். 'சலூனை சவரக்கடைன்னு மாத்துனாலும் உள்ள நடக்குறதுதானே நடக்கும்'னு எழுத வச்சு, 'தமிழ்ல பேரு மாத்துறதெல்லாம் வெட்டி வேலைப்பா'ன்னு ஒரு பொதுவான கருத்தியலை அப்படியே உள்ள புகுத்துற்தை கவனிக்கலையா?
    //
    தொழிலை இழுத்ததை விட இது தான் கண்டிக்க வேண்டிய கருத்துத் திணிப்பு

    பதிலளிநீக்கு
  13. PRINCENRSAMA,

    வருகைக்கும் ஆதரப்பூர்வமான உங்கள் நீண்ட பதிலுக்கும் நன்றி!

    அண்ணாச்சி, ரவிசங்கர்,

    நீங்க சொல்லறது சரிதான்!

    இந்த வாசகர் கடிதம் எழுதப்பட்டதே ஏன் அனைத்து வார்த்தைகளையும் தூயதமிழில் மாற்றவேண்டும் என்ற கேள்வியோடுதான்! பா.ம.க பெயர்ப்பலகைகளை மாற்றிய காலத்தில் எழுதப்பட்டது. சரி! அவரவருக்கு அவரவர் கருத்து! ஆனால் சவரக்கடையை கொலை கொள்ளை கற்பழிப்போடு தொடர்புபடுத்தி எழுதியது உறுத்தியதாலேயா அந்தக்காலத்தில் போட்ட பதிவு.

    இந்த வாசகர் கடிதத்திற்க்கான சுட்டி கிடைத்தால் சேர்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. கொத்தனார் மட்டும் தினமலத்திற்கு சப்போர்ட்.ஸ்ஸ்ப்பா கல்லறைக்கே போனாலும் :))

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு