திங்கள், ஜனவரி 31, 2005

ஓர் இரவுச்சுயம்வரம்
கூட்டிவந்த விலைமகளை
நண்பன் கூடிக்களித்திருக்க
எம் முறை வருமென்று
நாங்கள்

உள்ளிருக்கும் உக்கிரம் தாங்காது,
அக்குளிள் உணரும் வியர்வையின்
கசகசப்பாய் எங்கள்
மனசு

"உன்னோடு ஐவரானோம்!"
நண்பனின் கூற்றின்
இலக்கியத்தரம் உணராது
"அப்போமேல ஐநூறு ஆகும்!"
என்றதில் வெளிப்படுகிறது
அவள் வாழ்வின்
விலை

"இன்னைக்குநா போடுரபோடுல
இனி ஃப்ரீயாவே வருவாபாரு...!"
குடையும் புண் எருதுக்கும் இன்பம்
என்கிறது ஒரு
காக்கை

"பாவம்டா இவ... இவபுருசனே
கஜாக்கா கிட்ட வித்துட்டானாம்..."
உள்ளிருக்கும் காமத்தை
கழிவிரக்கத் தோலால்
போர்த்தியபடி இன்னொருவனின்
இரங்கற்ப்பா

வீட்டைக் கரையேற்ற
இளமையை விலைகொடுத்த
ஆறாறு வயது முதிர்கண்ணனுக்கு
ஓயமறுக்கும் தவிப்பை ஆள
தேடிவந்த விடமுறிவாய்
இவள்

அவர்களாவது தேவலாம்!
காரியத்தில் கண்ணாய்
நானோ அவர்களையிங்கே
கடையனாய் காட்டிக்
கொடுத்தபடி

உணர்ச்சிகளின் வெறியென்
உள்ளுணர்வை மிதித்துநசுக்க
கையறு நிலையில்
கவிதை செய்தபடி
மனது

விரைத்தவைகள் துவண்டபின்னாவது
அவள் கைப்பையிலிருக்கும்
ரெஜஸ்ட்ரோன் மாத்திரையும்
ஆறாம்வகுப்பு சமூகஅறிவியலும்
எதற்கென அறிய
முயலுமா எங்கள்
பகுத்தறிவு?

8 கருத்துகள்:

 1. நன்றாக இருக்கிறது. கொஞ்சம் நீளமாய் எனக்குத் தெரிகிறது, இருப்பினும், மிக நல்ல முயற்சி.

  பதிலளிநீக்கு
 2. உண்மையிலே நீங்க விலைமகளிடம் செல்பவரா?

  பதிலளிநீக்கு
 3. ரொம்ப அருமையான கவிதை. சுருக்கென இருக்கிறது கடைசி வரி.

  பதிலளிநீக்கு
 4. லக்ஷ்மி,

  உங்கள் வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 5. அருமையா எழுதிருக்கீங்க‌ சார் :)

  உணர்ச்சிகளின் வெறியென்
  உள்ளுணர்வை மிதித்துநசுக்க
  கையறு நிலையில்
  கவிதை செய்தபடி
  மனது

  விரைத்தவைகள் துவண்டபின்னாவது
  அவள் கைப்பையிலிருக்கும்
  ரெஜஸ்ட்ரோன் மாத்திரையும்
  ஆறாம்வகுப்பு சமூகஅறிவியலும்
  எதற்கென அறிய
  முயலுமா எங்கள்
  பகுத்தறிவு?

  பதிலளிநீக்கு