புதன், ஜனவரி 19, 2005

நமக்கு மட்டும் தெரிந்தது...!?

அம்மாவின் புலம்பல் அப்பாவிடம்..
"நம்ம பயலுக்கு கோட்டி புடிச்சிருக்கு போல!
தன்னப்போல இளிக்கான்...
வெள்ளென பெரண்டு பெரண்டு படுக்கான்...
காப்பிதண்ணீல கைய நனைக்கான்...
நடுச்சாமத்துல மீசமயித்த ஒதுக்குரான்...
வயசுப்பய மாதிரியா திங்கான்?
அரை களி உருண்டய
நா முச்சூடும் உருட்டறான்...
ஒரு எழவும் வெளங்கல!
காத்து கருப்பு கீது அடிச்சிருச்சா?
நம்ப ஆத்தா கோயிலு கோடாங்கிய கூப்டுவுட்டு
ஒத்த ரூவா முடிஞ்சி வச்சி
ஒரு தாயத்து கட்டணும் போல...!"

பாவம்..
அம்மாவுக்கு தெரியாது...
உன் சிரிப்புக்கு முன்னால்
கோடாங்கியின் தாயத்து
எம்மாத்திரம் என்று...!

1 கருத்து:

 1. இளவஞ்சி,
  மாட்டுக்கார வேலனு ஒரு படம் வந்தது.அதில் எம்.ஜீ.ஆர். படுவார் ஒரு பாட்டு.
  அது போல் இந்தப் பையனும் இருக்கான் போல;-)
  நல்ல கவிதைவரிகள்.
  பாவம் அந்த அம்மா!!

  பதிலளிநீக்கு