முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காரைக்குடியில் இருந்து சில படங்கள்

போனவாரம் காரைக்குடி பயணம். அங்க என்கூட படிச்ச கூட்டாளிகளை பாக்கறதுக்கு 14 வருசம் கழிச்சு போனேன்னு ஆரம்பிச்சன்னா “இவங்கூட இந்த கொசுவத்தி தொல்ல தாங்கமுடியலடா!”ன்னு நீங்க எஸ்ஸாக வாய்ப்புகள் அதிகமிருப்பதால், நண்பரது வீட்டில் காலை டிபனே முழுவாழையிலையில் பால்பணியாரம் தொடங்கி 12 ஐட்டங்களுடன் சாப்பிட்டதையோ, மதியத்துக்கு மட்டனிலே மூனுவகையும் சிக்கனிலே நாலு வகையுமாக ”முழு” இலையில் பிரண்டு எழுந்ததையோ (நண்டு சாப்ட்டு பழக்கமில்லாத்தால தொடலை! ) அப்பறமா சாயந்தரம் கமுக்கமாக லாட்ஜ்ல ரூம்போட்டு பயக எல்லாம் ஃபுல் அடிச்சும் ஸ்டெடியாக நின்னு பழய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய காலேஜ் லவ்வு பஞ்சாயத்தையெல்லாம் பேசி தீர்த்துக்கினதையோ இங்கே சொல்லப்போவதில்லை! :) ஆனால் சில படங்கள் மட்டும் போட்டால் பார்க்காம போக மாட்டீங்கன்னு...சுட்ட கருத்துக்கள் அனைத்தும் படத்தைப்பார்த்ததும் (தொடர்பிருக்கோ இல்லையோ.. ) நினைவில் வந்த படித்துப்பிடித்ததன் குறிச்சொற்களை கூகிளிட்டு கிட்டியவை.

”ஒவ்வொரு புனிதனுக்கும் ஓர் இறந்தகாலம் உண்டு. ஒவ்வொரு பாவிக்கும் ஒரு வருங்காலம் உண்டு” - வி. ஆர். கிருஷ்ணய்யர்

இன்றைய பிரபலமும் அன்றைய புதுமுகமும் - இசைஞானி இளையராஜா “சுவாமி”கள்
"Pongal" after Deepavali


”வீடுகளில் தங்குகிறோமோ இல்லையோ, சில வீடுகள் நம்முள் தங்கிவிடுகின்றன” - தனது வீடு பற்றிய கவிதை பற்றி மாலன்

நண்பனின் வீடு
"Pongal" after Deepavali


“வீட்டில் தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த இடம் - ஜன்னல். உன் வீட்டு ஜன்னல் அல்லது என் வீட்டு ஜன்னல். இன்னும் எவ்வளவு வருடங்கள் காதலி ஜன்னலில் நின்று கொண்டிருப்பாள்?” - குண்டலகேசி

இதான் ஆயிரம் ஜன்னல் வீடுன்னு நினைக்கறேன்! ஆச்சி வந்திருக்காகன்னு உள்ள விடல.
"Pongal" after Deepavali


“இங்கு தேனை ஊற்று
இது தீயின் ஊற்று
உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
புல்லரிக்கும் மேனி எங்கும் பூ பூக்கும்
அடிக்கடி தாகம் வந்து ஆளைக் குடிக்கும்
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்த கும்மிகள் கொட்டுங்களேன்” -வைரமுத்து

கருவியப்பட்டி கோவில்
"Pongal" after Deepavali


”வார்த்தையின் பள்ளத்தில்
அர்த்த கடல் விழுந்து
வீணாகிறது.
மிச்சமாய் நிற்பவை
வார்த்தைக்கான அர்த்தங்கள்!
எங்கே தேடுவேன்
அர்த்தங்களுக்கான வார்த்தைகளை?

வாழக்கை படிகளில்
சறுக்கி விழுந்தாலும் ஒரு படி
மேலே தான் விழுவோம்
விழுதலில் தவறில்லை! ” - இலக்குவனார்.

குன்றக்குடி கோவில்
"Pongal" after Deepavali


”புத்தகங்கள்
காசுக்கு வாங்கிய தண்ணீர்
அரைகுறை ஆடை அழகி
பிள்ளையார்பட்டி பிள்ளையார்
புத்தரின் கண்
எப்போதும் என்னைப் பார்த்திருக்க
இரும்புக் கட்டிலில் ஒரு இரும்பாக
கிடக்கிறது என் உடல்” - மேன்ஷன் கவிதைகள், பவுத்த அய்யனார்.

பிள்ளையார்பட்டி கோவில்
"Pongal" after Deepavali


”எத்தனை பேர் கூடி இழுத்துமென்ன
இன்னும் வரவில்லை
சேரிக்குள் தேர்.” - செ. ஆடலரசன்.

தேரும் குளமும்
"Pongal" after Deepavali


”நாடகம் போலிருக்கிறது. உள்ளே போனாள். முகம் கழுவினாள். பூத்த மலர் போலும் எப்படி வேறு கோலம் பூண்டுவிட்டாள்! பெண்கள் கனவு-தேவதைகள்தான்! குட்டிப் பெண்ணாய்ச் சுட்டிப் பெண்ணாய் மின்னல்போலும் நுழைந்தவள். பெண்ணின் குழைவுகளும் நளினங்களும் மேல்மட்டம் வந்திருந்தன. சுடிதார் களைந்து இப்போது, பட்டுப்புடவை. கூந்தலில் பொங்கிச் சிரித்துக் கிடந்தது மல்லிகை. செடி இடம் மாறிவிட்டாப் போல.” - மோகனம் - எஸ். ஷங்கரநாராயணன்

மொட்டும் மலரும்
"Pongal" after Deepavali

”வாழ்க்கையை அதன் இயல்பான அழகுடன் வாழ்ந்து பார்க்கும் மனிதர்களைப் படம் பிடிக்கப் போகிறோம், இந்தப் புகைப்படத்தில். - ராஜேஷ்லிங்கம், இயக்குனர்-புகைப்படம்

சம்பிரதாயமாக புகைப்படமெடுப்பது எப்படி? :)
"Pongal" after Deepavali

கருத்துகள்

 1. தாழ்வாரம் அமைந்த நண்பன் வீடு

  மலர் மொட்டுக்கள்

  படங்கள்

  கலக்கல் !

  :)

  பதிலளிநீக்கு
 2. ஆயில்யன், கோபி, கப்பியார்,

  ஊக்கங்களுக்கு நன்றி! :)

  பதிலளிநீக்கு
 3. அருமையான படங்களுக்கு அணி சேர்த்தன அட்டகாச வரிகள்

  பதிலளிநீக்கு
 4. உங்க photos எல்லாம் பார்க்க அழகா இருக்கு,அதே மாதிரி நீங்க தேர்வு செய்து போட்டிருக்கும் வரிகளும் நன்று

  பதிலளிநீக்கு
 5. அருண்மொழி,

  // பால் பணியார படங்கள் எங்கே? // அதெய்யெல்லாம் சாப்ட்டு தீர்த்தபறந்தேன் கேமாராவையே தொட்டேன்! :)

  வலைப்பூங்கா, முரளிகண்ணன், பாபு,

  பாராட்டுகளுக்கு நன்றி :)

  பதிலளிநீக்கு
 6. அருமையான படங்கள் இளவஞ்சி.. அதிலும் வீட்டின் முற்றமும், தென்னைமரங்களுக்கு இடையே குளம் முன் கோவிலும் அற்புதம்...

  பதிலளிநீக்கு
 7. ... அப்புறம் அந்தக் கடைசி படம் எப்படி?

  பதிலளிநீக்கு
 8. மொட்டும், மலரும் ரொம்பவே கவர்ந்தது. பெண்கள் எந்த ஆங்கிளில் இருந்து பார்த்தாலும் அழகாகவே இருக்கிறார்கள். என்ன மாயமோ? :-(

  பதிலளிநீக்கு
 9. வெண்பு, லக்கி,

  டாங்ஸ் :)

  தருமிசார்,

  அந்த கடைசி படம் ஜிம்ப்ல வைச்சு போட்டோகாப்பி பில்டர் போட்டு அப்பறம் ஷார்ப் செஞ்சது. காசா பணமா.. டிஜிடல் கேமரால எல்லாம் வெள்ளாட்டுத்தான் :)

  பதிலளிநீக்கு
 10. // பெண்கள் எந்த ஆங்கிளில் இருந்து பார்த்தாலும் அழகாகவே இருக்கிறார்கள். என்ன மாயமோ? :-(//

  ( வயசுப்பசங்களுக்கு )பருவம் வந்தா பன்னிக்குட்டியும் 10பைசா பெறும்னு சும்மாவா சொன்னாங்க? நீர் இளந்தாரி... அடிச்சாடும் :)

  பதிலளிநீக்கு
 11. மலரும் மொட்டும் ம்ம்?
  கொஞ்சம் கூட மாறவில்லை நீ.,,

  பதிலளிநீக்கு
 12. அய்யா பிடக்கரே! போறபோக்குல இப்படி குண்டைதூக்கி போடறீங்க? யாரப்பு நீங்க?! எனக்கு நாட்டுல 50 பிடக்கனாவது தெரியுமே... :)

  தனிமெயில் அனுப்புங்கப்பு...

  பதிலளிநீக்கு
 13. அடேங்கப்பா அசத்தலான படங்கள். அதற்கேற்ற குறிப்புகள். சூப்பர்.

  பதிலளிநீக்கு
 14. வாத்தி,

  படமெல்லாம் அட்டகாசம்... :)

  எங்க அக்கா வீடு அங்கே தான் இருக்கு, எப்போ போனாலும் இலைய நிறைச்சு சோத்தை போட்டு ரெண்டு நாளைக்கு மந்தமாக்கி விட்டுருவாங்க... நானும் அங்கே போறப்போ எதாவது உருப்படியா எடுக்கனுமின்னு நினைப்பேன்.. சரியா வாறாது.. :(

  போனத்தடவை போனாப்போ பட்டமங்கலத்துக்கு பக்கத்திலே இருந்த சின்ன கோவிலிலே எடுத்த அய்யனார்..


  கானாடுகாத்தான் அரண்மனை'க்கு,கொப்புடையமான் கோவில் போவலியா??? :)

  பதிலளிநீக்கு
 15. wow, nice photograph & comments. seriously I like your witting style. Keep going.

  நண்பனின் வீடு - superb
  ஆச்சி வந்திருக்காகன்னு உள்ள விடல - means manorama?
  மொட்டும் மலரும் - Thank god they didn't noticed you. But really nice. bit tight focus?

  பதிலளிநீக்கு
 16. அருமையான படங்கள் - அழகான விளக்கங்கள் - பொருத்தமான மறுமொழிகள் - மொத்தத்தில் ஒரு நல்ல பதிவு .......


  ஆமா முதல் பத்திக்குப் படம் கிடையாதா ?

  பதிலளிநீக்கு
 17. அப்பப்போ இது மாதிரி படத்தைப் போட்டு காஞ்சு போன கடந்த காலத்தை ஞாபகப் படுத்திவிடுறீயளே... நல்லாருங்க!

  இரண்டாவது வீட்டைப் பார்த்தவுடன் 5-6 வயது இருக்கும் பொழுது இது போன்ற ஒரு வீட்டில் வசித்த ஞாபகம் வருது, படத்தை ஷுட்டிங் போட்டு அப்பாகிட்ட காமிச்சாலும் காமிப்பேன் :)).

  படங்கள், அருமை.

  பதிலளிநீக்கு
 18. ஹைய்யோ............
  அந்த வீடு..... தாவாரம், மின்னும் சிமெண்டுப் பால்.....
  மூச்சு நின்னு போச்சு.


  எல்லாப் படங்களும் சூப்பர்தான்.

  பதிலளிநீக்கு
 19. பின்னிங்க்ஸ் பெடெலெடுத்துபையிங்ஸ்.,,,

  உங்கள் கேமிரா கோணமும் வரிகளும் சூப்பர்....

  அந்த பெண்கள் மலர்க் கூந்தல் கவிதை கவிதை...

  பதிலளிநீக்கு
 20. சதங்கா, கிரி, தெகா, துளசியக்கா,

  ஊக்கங்களுக்கு நன்றி! :)

  ராயல்,

  உம்ம வெளுத்த அய்யனாரு நல்லாத்தாரு இருக்காரு...

  // கானாடுகாத்தான் அரண்மனை'க்கு,கொப்புடையமான் கோவில் போவலியா??? :) //

  இருந்தது ஒரேநாள். ஓரமா குத்தவைச்சு பொங்கல்போடவெ நாள் சரியாப்போச்சு.. அடுத்தமுறைக்கு நோட் செஞ்சுக்கறேன் :)

  // ஆமா முதல் பத்திக்குப் படம் கிடையாதா ? //

  சீனா சார்,

  முதல் வரிக்கு இல்லை! இலைல ரவுண்டுகட்டவே கவனம்! கடைசி வரிக்கும் இல்லை. மக்கா கூட ரூம்ல ரவுண்டு போடவே கவனம்! :)

  பதிலளிநீக்கு
 21. சன்னி,

  உம்மைவிட்டுட்டேன்! :)

  // ஆச்சி வந்திருக்காகன்னு உள்ள விடல - means manorama? //

  வீட்டு ஓனரு ஆச்சிங்க! :)

  // மொட்டும் மலரும் - Thank god they didn't noticed you. But really nice. bit tight focus? // படம் தெரியாமல் எடுத்ததுதான். ஆனால் எடுத்ததும் அவங்ககிட்ட காட்டிட்டேன். அதானே ஒரு நல்ல ஸ்டீர்ட்போட்டாகிராபருக்கு அழகு :)

  பதிலளிநீக்கு
 22. //படம் தெரியாமல் எடுத்ததுதான். ஆனால் எடுத்ததும் அவங்ககிட்ட காட்டிட்டேன். அதானே ஒரு நல்ல ஸ்டீர்ட்போட்டாகிராபருக்கு அழகு :)//

  அவங்களுக்கு தெரிஞ்சது இருக்கட்டும் ஓய். மொட்டையும், மலரையும் வளைச்சி வளைச்சி நீர் எடுப்பது உம்ம வீட்டுக்கு தெரியுமா என்பதுதான் இங்கே கேள்வி! :-)

  பதிலளிநீக்கு
 23. டுபுக்ஸ்,

  // அந்த பெண்கள் மலர்க் கூந்தல் கவிதை கவிதை... //

  இதை நீர் ரசித்தே தீருவீர் என்பதில் எனக்கு ஆச்சரியமில்லை! :)

  சர்வேசன்,

  டாங்ஸ் :)

  ஓய் லக்கியாரே,

  // மலரையும் வளைச்சி வளைச்சி நீர் எடுப்பது உம்ம வீட்டுக்கு தெரியுமா //

  ஹிஹி...

  படம் தானேயய்யா எடுத்தேன்... இதுக்கெல்லாம் போட்டுக்குடுத்தா அப்பறம் ஆம்பளையாளுங்க எக்ஸ்ட்ராகரிகுலர் ஆக்டிவிடீஸ் எல்லாம் சுழிதானா?! :(

  பதிலளிநீக்கு
 24. காரைக்குடி படங்கள் என்றதுமே 'ஆயிரம் ஜன்னல் வீடு' இருக்குமோ என்று ஆவலாய் வந்தேன். அத்தனை படங்களும் அசத்தல்.

  படங்களோடு இணைந்த கவிதைகள் அபாரம்.

  நன்றி

  பதிலளிநீக்கு
 25. அழகான படங்கள் - அழகுக்கு அழகு சேர்க்கும் உங்கள் வரிகள்.

  மொட்டும் - மலரும் - அண்னே அருமை

  பதிலளிநீக்கு
 26. பிரேம்ஸ்,

  நீங்க காரைக்குடின்னா அந்த வீடுதான் 1000 ஜன்னலான்னு சொல்லுங்கப்பு :)

  தாமிரா, ஜமால்,

  நன்றி. எந்த சிரத்தையும் இல்லாமல் சாதாரணமாக எடுத்த படம் இத்தனைபேருக்கு பிடிச்சது ஆச்சரியமா இருக்கு :)

  பதிலளிநீக்கு
 27. நல்லா இருக்கு உங்க பதிவுகள் எல்லாம்!

  புகை படங்கள் அற்புதம்!

  இத்தினி நாள் பார்க்காம இருந்துட்டேனே ?

  பதிலளிநீக்கு
 28. எனக்கு மிகவும் பிடித்தவை: ஆயிரம் ஜன்னல் வீடு, மலர் மொட்டு...

  சூப்பர் படங்கள்.

  பதிலளிநீக்கு
 29. போன வாரம் நான் அங்கே (காரைக்குடியில்) தான் இருந்தேன்

  உங்களைப் பார்க்காமல் போயிட்டேனே?

  சரி. அடுத்த முறை முயற்சிக்கிறேன்.

  நன்றிகளுடன்

  தமிழ்நெஞ்சம்

  பதிலளிநீக்கு
 30. ilavanji, when is your next neelangarai boat trip?

  pls ping me at surveysan2005 at yahoo.com when you plan one.

  ;)

  பதிலளிநீக்கு
 31. அற்புதமான புகைப்படங்கள். என்ன கேமரா வைத்திருக்கீறீர்கள்? மாடல் நம்பர் சொல்ல முடியுமா?

  பதிலளிநீக்கு
 32. ஊக்கமளித்த நண்பர்களுக்கு நன்றி! :)

  என்னிடமிருப்பது Nikon D80+ 18-200 VR Lens.

  பதிலளிநீக்கு
 33. நான்
  இருக்கும்
  காரைக்குடிக்கு
  வந்து
  போயிருக்கீக!!
  உணர்ச்சிபொங்க
  எழுதிட்டீங்க அப்பு!!!

  பதிலளிநீக்கு
 34. காரைகள் உதிர்ந்து
  ஜன்னல்கள் அடைபட்டு
  வெளியே வர துடித்துக்கொண்டுருக்கும்
  காற்று.

  வாழ்ந்தவர்கள்
  இறந்தார்கள்
  எங்கேயோ சென்றார்கள்?

  தாழ்வாரத்தில்
  வந்து விழும் சூரிய வெளிச்சம்
  தினமும் எட்டிப்பார்த்தபடியே,

  யார் வருகைக்காக?
  தனித்துவமானவன்
  உங்களைப் போலவே,

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

க.க:5 - காதலிக்க நேரம் உண்டு! காத்திருக்க இருவர் உண்டு!!

எ ன்னது?! ஒரு வார கேப்புல சன்னமா பொண்ணை பேசி முடிச்சிட்டீங்களா? நிச்சயம் வரைக்கும் போயாச்சா? ரெண்டு வீட்டுலையும் கைய நனைச்சிட்டீங்களா?! கல்யாண தேதிக்கு இன்னும் அஞ்சாறு மாசம் இருக்கா? என்னப்பு... சொல்லவேல்ல? சரி விடுங்க.. சொந்த பந்தங்க மட்டும் கூடி மேட்டரை முடிச்சிருப்பீங்க... கல்யாணத்துக்காவது மறக்காம பத்திரிக்கை வைங்க! நமக்கெல்லாம் அடிக்கடி இந்த கல்யாணவீட்டு போட்டோவுலையும் வீடியோவுலையும் லைட்டா பல்லைக்காட்டிக்கிட்டு, 101 ரூவா வைச்ச கவரை கமுக்கமா மாப்ளை கைல அழுத்திட்டு, நமக்கு தெரிஞ்ச ஒரே இங்கிலீசு வாழ்த்தான "Many more Happy returns of the Day" அப்படிங்கறதை ஜாக்கிரதையா தவிர்த்து, கேனத்தனமா "மச்சி! கடைசில நீயும் கவுந்துட்டயா"ங்கற மாதிரி ஏதாவது பெனாத்தி, வீடியோல விழுகறதெல்லாம் நமக்கு சர்வசாதாரணங்கற மாதிரி ஒரு லுக்கோட, கொஞ்சம் முறுக்கிக்கிட்டு வெரைச்சா மாதிரி நின்னு வந்ததுக்கான எவிடென்சு காட்டலைன்னா சமுதாயத்துல திடீர்னு நம்ம பெரபலம் கொஞ்சம் கொறைஞ்சுட்டாப்புல ஒரு நெனைப்பு வந்துரும்! அதுக்காகத்தான்! மத்தபடி மூனுவேலை மூக்குப்பிடிக்க மொசுக்கறதுக்கு இல்லைங்...! ஆக ம