முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குலசை தசரா திருவிழா - என் புகைப்படப் பெட்டி

மீண்டும் ஒரு அற்புத பயணம். எல்லாம் நம்ப ஆதியோட சொந்த ஊரான குலசேகரன்பட்டணத்துல நடந்த தசரா விழாவை காணத்தான். 3 நாளைக்கு ஆதிவீட்டுலயே டேரா! வேளாவேளைக்கு கிணத்தடில குளியல், ரவுண்டு கட்டி சாப்பாடு, மொட்டைமாடி அறைல தென்னமரங்க காத்து தாலாட்ட உறக்கம், அப்பப்ப அப்டியப்டியே பெரண்டு படுத்துகினு மணிக்கணக்கா பொரளி பேசுதல். இதுக்கு நடுவால காலார நடந்து படமெடுக்கற வேலை! கொடுத்து வைச்சிருக்கனுமைய்யா! ஆதிக்கும் அவிங்கப்பாம்மாவுக்கும் எத்தனை நன்றி சொன்னாலும் தகும். வழக்கம் போலவே நம்ப காமேரா பிஸ்துங்க நாதன், ராம்கோ வினோத், பிரமிட் வினோத், கோகுல், கவுஜர் லக்குவனார், நம்ப சிவியாரு மற்றும் PeeVee ன்னு பெர்ரீய கும்பல். லடாக் புகழ் மோகந்தாஸு மட்டும் ஆணிங்க அதிகம்னு கடுக்கா குடுத்துட்டாப்புல. அந்தாளும் சேந்திருந்தா அதகளம்தான். இப்பல்லாம் படமெடுக்கறதுல அவ்வளவு ச்சுகுர்ரா இருக்க முடியலை.அங்கங்க நடக்கறதுல அப்படியே ஒன்றி ரசிக்கத்தான் புத்திபோகுதே தவிர காரிய நேர்த்தியா படமெடுக்கறதுல கவனம் போகமாட்டேங்குது. நாய் வாய்வைச்சாப்புல எல்லாத்தையும் செய்யும் என் வழக்கமான புத்திய வைச்சுப்பார்த்தா இந்த இன்ரஸ்ட்டும் போயிருமோன்னு பயமாத்தான் இருக்கு. இருந்தாலும் இந்தமாதிரி அருமையான மக்காகூட ஜமாபோட்டு ஊரு சுத்தவாவது கொஞ்சநாளைக்கு இத்துல ஒட்டிக்கனும்னு இருக்கேன் :)

அடடா! எத்தனை நாளாச்சு இப்படி ஒரு மனிதசக்தி கொப்பளித்து பிரவகிக்கும் கூட்டங்களைக் கண்டு? ரெண்டுநாட்களாக மக்களின் பக்தி, உற்சாகம், ஆட்டம், பாட்டம், விதவிதமான வேடம் மற்றும் இடையறாத(?!) ”டண்டணக்கர டண்டணக்கர...”. கலக்கறாங்கைய்யா. 10 நாளைக்கு குலசை முத்தாம்மனுக்கு வேண்டிகிட்டு விரதம். விதவிதமான வேடத்துல ஊர்மக்களிடம் கையேந்துதல். 10வது நாளைக்கு குழுகுழுவா கூடி குலசைக்கு ஆட்டத்துடன் பயணம். கையேந்திக்கிடைத்த காணிக்கையை கோயிலில் செழுத்திவிட்டு கடல்ல குளியல். அங்கயே சமைச்சு சாப்டுட்டு ராத்திரி நடக்கற சூரசம்காரத்தில் பக்திப்பரவசத்துடன் கலந்துக்கிட்டு வேசம் கலைச்சு ஊருக்கு போய்ச்சேர்றது. இதேன் அவங்க ப்ளானு. சும்மா சொல்லக்கூடாது. வருசமெல்லாம் பொழ்ப்பு எப்படியோ... ஆனா இந்த 10 நாளுக்கு வாழ்க்கைய அனுபவிக்கறாங்கய்யா அனுபவிக்கறாய்ங்க!
புயலுக்கு முன் அமைதி. முத்தாரம்மன் கோவிலின் முதன்மைத்தெரு... இதுவழியாத்தான் 5 லட்சம் மக்கா போனாங்கன்னா நம்புவீகளா?!

Koil_Street


நல்லநாளும் அதுவுமா சீக்கிரம் எந்திரிச்சு குளிக்காம தூங்கிக்கிட்டே இருந்தா எப்படி? முழிச்சுக்கடி என் புஜ்ஜிக்குட்டி...

Kid_Cat


குறத்தி மகள்கள்

Kurathi_Magal


ச்சே! ஒருத்தன் தனித்துவமா இருந்தா விடமாட்டீங்களே! என்னையும் திரு(ப்பி/த்தி)த் தொலைங்கப்பு!

Thanithuvamanavan


செய்வன திருந்தச் செய்!

Perfection


இந்த வருசக்குளியல் முடிஞ்சதுங்கப்பேய்...
After_Bath


மொதல்ல Sea Bath... பெறகு Sand Bath அப்புறந்தேன் Sun Bath... கலராயிடுவம்ல!

Sand_Bath


மணப்பாடு கோவில்

Manappadu Church


வேண்டுதல்னு வந்துட்டா எம்புட்டு கஷ்டம்னாலும் தாங்குவம்ல!
16Feet_Vel


கண்ணேறு காக்கப்போகும் கரும்புள்ளி

Tirushti_Pottu


அடடா! ஊருக்குள்ள வந்ததுல இருந்து இவனுங்க இம்சை தாங்கல. அவனவனுக்கு ஒளிஓவியனுங்கனு நெனப்பு. ஒரு திருகாணி மாட்ட விடுதாய்ங்களா?!
Model_Cameramen


ஆட்டத்தை ரசிக்கவில்லே... ஆளேத்தான் பார்க்குது...

Hide_See


தில்லானாவும் மோகனாம்பாளும்

ThillanaIts payback time! ஆடி சந்தோஷப்படுத்துனவுகளை சந்தோசப்படுத்தும் PeeVeeயின் கேமரா

Payback_Time


வருசத்துக்கு ஒருக்கா ச்சான்சு.. அம்புட்டையும் ஒரேராத்திரில வித்துப்புடனும்...

Kadalai_VAndi


வேண்டுதலுக்குன்னு சில வேசங்க. ஆழ்மன ஆசைகளை நிவர்த்திக்கன்னு சில வேசங்க. பத்ரகாளி, குறவன், ராப்பிச்சை, பைத்தியம், போலீஸ், கெழவி, அனுமாருன்னு ஆயிரக்கணக்கா வேசங்க.

அகந்தை அழியவேண்டி பைத்தியக்கார வேடம்.

Rappichai


இன்னொரு ஆச்சரியமான மேட்டரு பொம்பள வேசம்! புருசன் சரசரக்கும் பட்டுப்புடவையும் புது ஜாக்கெட்டும் இடுப்பைத்தொடும் சவுரியுமாக பதவிசாக கையில் தீச்சட்டியேந்தி நடக்க பின்னாடி பயபக்தியோடு வீட்டம்மாவும் கொழந்தைகளும். அப்பா சிவன் வயசுப்பையன் பார்வதி. 10 கைகள் நீள பத்ரகாளிகள். இதெல்லாம் வேண்டுதலுக்காம். இதுபோக மனசுக்குப்பிடிச்ச எந்த வேசமானாலும் கட்டலாம். தாவணிகளிலும், நைலக்ஸ் புடவைகளிலும், மிடிகளிலும், கனகச்சிதமான காட்டன் புடவைகளிலும் நளினம் கூட்டி ”கம்பீரமான” நடக்கும் பெண்கள். ஆணுக்குள் உறைந்திருக்கும் பெண்மையை வெளிப்படுத்தும் வாய்ப்பாக திருவிழாவெங்கும் வளைய வரும் ”திருவிழாப் பெண்”களை காண நல்லாத்தான் இருக்கு! :) அந்தக்காலத்துலதான் மனுசன் யோசிச்சிருக்கான்யா!

”நமக்குள் இருக்கும் ஆணும் பெண்ணும் ஒன்றாகவில்லை என்றால் , நாம் இறைவனை உணர முடியாது. ஒருமைதான் ஒருமையை அறியும்” - இ.சி.நே - கவிக்கோ.

குழந்தைகள் பெண்கள் மற்றும் பெண்கள்

Cross_Dressingஎலே.. ராஜா உத்தரவாகவே இருக்கட்டும். அதுக்காக பத்தவைக்காத தம்முக்கு எப்படில பைன் போடுவ?

King_Thum


சேர்ப்பித்த தீச்சட்டிகளும் சீர்செய்யும் சிறுவனும்

Theechati_Boy


கடற்கரை சூரசம்ஹார திடலில் ஆடி சாமிகும்பிட்டு ஓய்ந்து அமர்ந்திருக்கும் மக்கள் கடலின் நடுவில் ஒரு இ.ம.மு பிரமுகர் பேச்சு. பறையர் பள்ளர் வரலாற்றுச்சிறப்புகளை எடுத்துச்சொல்லி “சாதிபார்த்தா நாம் இம்புட்டுபேரும் குழுமியிருக்கோம்?”னு கேட்டப்ப நான் இருக்கறது தெந்தமிழ்நாடுதானான்னுட்டு கிள்ளிப்பார்த்துக்கிட்டேன். அப்பறம் வைச்சாரு வேட்டு. அதான்! கிறித்துவ இஸ்லாம் மதத்துக்காரங்களுக்கு சரமாரியாத் திட்டு. இதெல்லாம் பேச வேற மேடையே கிடைக்கல போல! நிறுவனமயமாக்குதல் என்று வரும்பொழுது உள்ளிருக்கும் அழுக்குகளை பூசிமெழுகி அதன் மேல் ஒரு பொது எதிரியை உருவாக்கி உட்கார்த்திவைக்கனும் அல்லவா?! சரியாத்தான் தொழில் செய்யறாங்க. ஆனாலும் ஒரு சந்தோஷம். ஒரு விசிலோ கைத்தட்டலோ இல்லாம மக்கள் மகா அமைதியா இருந்தாங்க. கவனமெல்லாம் நைட்டு சரியா 12 மணிக்கு நடக்கப்போகும் சூரசம்ஹரத்துக்காக வெயிட்டிங். 15 நிமிசம் இத்த பேசியும் எடுபடலைன்ன ஒடனே அப்படியே ட்ராக் மாறி “நாம் இங்கே மற்ற மதத்தினை விமர்சனம் செய்ய வரவில்லை.. இந்து மதத்தின் பெருமையை... “

ம்ம்ம்... இந்த வருசம் மக்கா அமைதியா கேக்காக. அடுத்தவருசம் கைத்தட்டுவாங்க. அதுக்கடுத்த வருசம் கொரளு விடுவாங்க. அடுத்தது... இந்துமதம் காக்க என்னே ஒரு லட்சியப்பாதை! விநாயகரு சதுர்த்திக்கு ஆன நிலைமை குலசை தசராவுக்குமான்னு மனசு கருக்குங்குது!

சரி விடுங்கப்பு. மனம் கவரும் குலசை முத்தாரம்மன் கண்டு மனம் குளிருங்க :)

Mutharamman

கருத்துகள்

 1. Very nice photos and commets as well.

  Felt like watching a nice Nat Geo documentary.

  பதிலளிநீக்கு
 2. படங்களும் அவற்றுக்கான கருத்துக்களும் சிறப்போ சிறப்பு

  பதிலளிநீக்கு
 3. படங்களும் அதற்கான விளக்கங்களும் அருமை..

  பதிலளிநீக்கு
 4. //கிணத்தடில குளியல், ரவுண்டு கட்டி சாப்பாடு, மொட்டைமாடி அறைல தென்னமரங்க காத்து தாலாட்ட உறக்கம், அப்பப்ப அப்டியப்டியே பெரண்டு படுத்துகினு மணிக்கணக்கா பொரளி பேசுதல். இதுக்கு நடுவால காலார நடந்து படமெடுக்கற வேலை! கொடுத்து வைச்சிருக்கனுமைய்யா!///


  நினைத்தாலே இன்பமயமாய் இருக்கிறதே!!!
  அண்ணாச்சி வாழ்ந்திருக்கீங்க இப்படி ஒரு அருமையான சூழல்ல :)))))

  பதிலளிநீக்கு
 5. போட்டோக்கள் ஒவ்வொன்றும் தனித்துவமாய் ஜொலிக்கிறது

  அந்த பெண் கலைஞர்கள் முகத்தில் தெறிக்கும் மகிழ்ச்சி

  ஆணவம் போக்க அருமையான தோற்றம்

  இப்படி எல்லா படங்களும் கலக்கல்!

  முதல் படம் பார்த்த கணத்தினில் டக்கென்று பிடித்தது! அதே கணத்தில் தோன்றிய எண்ணம் கொஞ்சம் அந்த பழைய மாடி வீட்டினையும் உள் சென்று கேமராவில் வெளிக்கொண்டு வந்திருக்கலாம்

  பதிலளிநீக்கு
 6. அழகோ அழகு! மறைஞ்சு நின்னு பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில நாங்க பார்த்ததெல்லாம் ஞாபகம் வந்திருச்சு... இதில இருந்த ஒரு புகைப்படத்தை பார்க்கயில :)).

  பதிலளிநீக்கு
 7. நன்றாக இருக்கு இளவஞ்சி.
  வர்ணணைகள் படத்துக்கு அழகு சேர்கின்றன.

  பதிலளிநீக்கு
 8. நல்ல பதிவு, நல்ல புகைப்படங்கள் குலசையை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடீர்கள்.

  1000 தான் வலை பதிவு, இணையதளங்கள் டிவிடி வந்தாலும் 100 மனிதர்களிடம
  பேசும் பொழுது குறையும் மன அழுத்தம் netilo chaatilo குறைவதில்லை.

  வாழ்த்துக்களுடன்

  குப்பன்_யாஹூ

  பதிலளிநீக்கு
 9. ஆசானே வழக்கம் போல எல்லாமே செம டாப்பு ;))

  \\"புஜ்ஜிக்குட்டி",

  பைத்தியக்கார வேடம்,

  Its payback time! ஆடி சந்தோஷப்படுத்துனவுகளை சந்தோசப்படுத்தும் PeeVeeயின் கேமரா\\

  அருமை..;)

  ஆனா ஒன்னே ஒன்னு ஆசானே...இங்க ஆமிரகத்தில் flickr வராது. நீங்க போட்டுயிருக்கும் picasaல சின்னதாக தெரியுது. உங்க ஆல்பத்துக்கு போன ரொம்ப நேரம் ஆகுது. பெருச பார்க்கிற மாதிரி ஏதாவது செய்யுங்களேன் ;)

  பதிலளிநீக்கு
 10. Indian, கானாபிரபா, வெண்பூ, இளா, ஆனந்த், குப்பன்,

  ஊக்கங்களுக்கு நன்றி! :)

  ஆயில்யன்,

  பழய மாடி வீட்டுல குடியிருக்காங்கப்பு. அதுபோக விருந்தாளிக கும்பலு வேற. இதுல படமெடுக்கனும்னு நானும் நெரிசல் குடுத்திருந்த என்போட்டாவை மாட்டியிருப்பாங்க! :)

  CVR,

  நன்றி. டாக்குமெண்ட்டேஷனா?! நாதன் கேட்டா எனக்கு மிதிதான்! :)

  கோபி,

  நன்றின்னேன்.

  நீரு இன்னும் பெருசா பாக்க இப்பத்திக்கி ஒரே வழி பிக்காசா சைட்டுல போய் பாக்கறதுதான். வேற ஏதாச்சும் வழிகடைச்சா கண்டிப்பா செய்யறேன்!

  பதிலளிநீக்கு
 11. போட்டோக்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு! பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்திலதனித்துவமாய்..............வாத்தியாரே சூப்பர்

  பதிலளிநீக்கு
 12. Went to wikimapia.org and saw where kulasekarapattinam is.
  Nice photography too.

  பதிலளிநீக்கு
 13. புகைப்படங்களும் வர்ணனையும் அருமை.
  கேமராவை கையில் வைத்துக்கொண்டு பெண்கள் முகத்தின்
  மலர்ச்சி நல்ல பொருத்தப்பாடு.

  பதிலளிநீக்கு
 14. சொந்த ஊருக்குச் சென்று வந்த திருப்தி. உருவாக்கியதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 15. சூப்பர் இளவஞ்சி.. அற்புதமான படங்கள்.. இந்த படங்களை என்னுடய் பதிவுக்கு உபயோக படுத்தலாமா..?

  பதிலளிநீக்கு
 16. கேபிள்ஜி,

  // இந்த படங்களை என்னுடய் பதிவுக்கு உபயோக படுத்தலாமா..? //

  கேள்வியே வேணாம். தாராளமாக! :)

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு