முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

(புகைப்படப்) போட்டியும் என் பொட்டியும்கருத்துகள்

 1. Very Nice Pictures.

  Good! Keep Searching On Google Images Sorry! Keep it up!

  பதிலளிநீக்கு
 2. தல,
  களத்துல குதிச்சிட்டீங்களா அப்ப நாங்க பின்வாங்கவேண்டியதுதான்..

  :))

  பதிலளிநீக்கு
 3. //அப்ப நாங்க பின்வாங்கவேண்டியதுதான்//

  Siril!

  What will u do by purchasing the pin?

  பதிலளிநீக்கு
 4. பாபா,

  // கண்ணைப் பறிக்குது :) //

  'சூரிய'காந்தியல்லவா?! :)

  Smile Of a Poor,

  // Keep Searching On Google Images Sorry! // என்னண்ணே இப்படி சொல்லிட்டீங்க? என்னை அவ்வளவு அல்பமாவா நினைக்கறீங்க?!:(

  சிறில் அண்ணாச்சி,

  // அப்ப நாங்க பின்வாங்கவேண்டியதுதான்..//

  இதெல்லாம் ஓவருன்னேன்!

  பதிலளிநீக்கு
 5. இளவஞ்சி
  இது என்ன , பாதிப் பட்டாம்பூச்சி, பாதிப் பூ , ஒரே பாதிப்பா ?

  நன்றாக இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 6. A n& ,

  தல வரணும்! :)

  // பாதிப் பட்டாம்பூச்சி, பாதிப் பூ // ஆஹா!! இப்படிக்கூட ஒரு கலைக்கண்ணோட பார்க்கலாமா?! :)))

  முழு பட்டாம்பூச்சிங்க இருக்கற படத்தை ஏற்கனவே போட்டுட்டேன்! கைவசம் இருக்கற சரக்கு இதுதான்.. ஹிஹி...

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்ணா....வெற்றி உங்களுக்கே. நானும் ஒப்புக்குச் சப்பாணியா போட்டீல இருக்கேன். அப்பத்தான ஒங்க படங்களோட பெருமை மத்தவங்களுக்குத் தெரியும்.

  பதிலளிநீக்கு
 8. ஜீரா,

  எதுக்கும் http://snapjudge.blogspot.com/2007/07/nature-photo-contest-take-pictures-be.html பாபாவோட லிங்கை பார்த்துடுங்க! :)

  வெற்றி தோல்வியல்ல முக்கியம்! முன்னேற்றத்திற்காக போட்டியிடும் போராட்ட மனப்பான்மைதான் முக்கியம்னு ஆசிப் அண்ணாச்சியோட அப்பா சொல்லியிடுக்காப்புல! ஆகவே ஜீரா சியர்ஸ்சு... :)

  // அப்பத்தான ஒங்க படங்களோட பெருமை மத்தவங்களுக்குத் தெரியும். // இருக்கட்டும்யா! ஒரு நாளைக்கு உம்மை நேர்ல பார்க்காமயா போயிருவேன்! அன்னைக்கு இருக்கு உமக்கு!! :)

  பதிலளிநீக்கு
 9. ஆசானே உங்க கூட நானும் போட்டி போடுறேன்னு தெரியாம கோதாவுல குதிச்சிட்டேன். படம் எல்லாம் சூப்பரு. நம்ம கிட்ட இருக்கிற பொட்டி கேமராவுக்கு போட்டியெல்லாஅம் கொஞ்சம் ஜாஸ்திதான்னு இப்போ தோணுது

  பதிலளிநீக்கு
 10. ஐயா
  அட்டகாசமான படங்கள்

  போட்டிக்கு என் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. Mesmerising... பட்டாம்பூச்சியை எப்படி போஸ் குடுக்க வச்சீங்க.. பூவிலே தேன் ஏதாவ்து தெளிச்சீங்களா...ரெண்டு facts மட்டும் சொல்லுவீங்களா..
  1. எங்கே எடுத்தீங்க ( i have never seen this voilet color flower)
  2. என்ன காமேரா..

  பதிலளிநீக்கு
 12. இளா,

  நானும் ஒரு ஓஞ்சுபோன பொட்டிதான் வைச்சிருக்கறேன்! :) உங்களதை வந்துபார்க்கனும்.

  கோபிநாத்,

  ஊக்கங்களுக்கு நன்றி!

  தீபா,

  முதல் படம் எடுத்து ஒரு வருசத்துக்கு மேலாகுது. மணப்பாறை பக்கத்துல இருக்கற குரும்பட்டில ஒரு வயக்காட்டுல எடுத்தது. இதனுடன் எடுத்த மற்ற படங்களை இங்கே பாருங்க!

  http://ilavanji.blogspot.com/2006/06/blog-post_26.html

  இரண்டாவது படம் இங்க இருக்கற Isle of Wight அப்படிங்கற தீவுக்கு போனப்ப அங்க இருக்கற வண்ணத்துப்பூச்சிகள் பண்ணைல எடுத்தது. அதுங்களா போஸ் கொடுக்கும்போது எடுத்துக்கறதுதான்! கொஞ்ச நேரம் காத்திருந்தாலே போதும். நல்ல ஆங்கிளில் பட்டாம்பூச்சிக காணக்கிடைக்கும். மற்ற பட்டாம்பூச்சி படங்களை இங்க பாருங்க...

  http://ilavanji.blogspot.com/2007/05/postcards-from-scotchland.html

  எங்கிட்ட SLR இல்லைங்க. வைச்சிருக்கறது Sony DSC-H1. இதுல இருக்கற ஒரு நல்ல விசயம் 12x ஸூம்.

  பதிலளிநீக்கு
 13. ம் ஹும் இத ஒத்துக்கமாட்டேன்....

  போட்டியில ஏற்கனவே பரிசுக்கான ஏற்பாடு எல்லாத்தையும் செஞ்சுக்கிட்டு வரேன்...

  இப்படி திடீர்னு களத்துல குதிச்சு இப்படி பட்டாசான படங்களை எல்லாம் போட்டா எப்படி ? என்னோட வெற்றி எட்டாக்கணியா இல்ல ஆயிரும்...

  சரி என்னோட படங்களை இங்க பாருங்க... http://imsai.blogspot.com

  பதிலளிநீக்கு
 14. 12 x Zoom ஆ...:o..
  :((

  இனிமே 24 x Zoom camera வாங்கினப்புறம் தான் உங்க கூட பேசுவேன்
  .. அது வரை காய் - டு

  பதிலளிநீக்கு
 15. good pictures Ila. அந்த வயலட் கலர் பூ ரொம்ப நல்லா இருக்குங்க..

  பதிலளிநீக்கு
 16. உங்க பட்டாம்பூச்சி படம் ஸ்ஸூ...ஊஊஊஊஊ..ப்ப்ப்ப்பர்ங்க. வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 17. நிஜமாவே நீங்க எடுத்த படமா? ரொம்ப அழகா இருக்கு. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 18. தழல், நீர் நடத்துய்யா! :)

  தீபா,

  24x லென்ஸ் SLR ல வாங்குனீங்கன்னா ஏவுகனை லான்ச்சர் சைசுல இருக்கும். பரவாயில்லையா?! காயெல்லாம் வாணாங்க.. நாம காக்காகடி ப்ரென்ஸ்சாவே இருப்போம்! :)

  delphine, vathilai murali, nilakkaalam, ஜெஸிலா,

  வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 19. வாத்தியாரே,
  சூரியகாந்தி டாப் டக்கரு. ரெண்டாவது படம் பாரதிராஜா படம் கேமராமேன் கண்ணன் கணக்கா இருக்கு. எப்படியா?

  "பூக்கள் விரிவதையும், பூக்களிலிருந்து வண்டு தேன் அருந்துவதை அந்த வண்டுக்கே தெரியாமல் படம் பிடித்தது வழக்கம் போல என் கேமராமேன் கண்ணன்"னு பாரதிராஜா சொல்லிருக்காரல்லோ?
  :)

  ரெண்டு படமும் கண்ணுலேயே நிக்குதுங்க. அருமை.

  பதிலளிநீக்கு
 20. ///24x லென்ஸ் SLR ல வாங்குனீங்கன்னா ஏவுகனை லான்ச்சர் சைசுல இருக்கும்////
  lol..
  நம்ம கிட்டே இருக்கிரது Canon powershot A70 (3X)
  தான்..
  ஆசைப்படுவதுக்கு என்ன income tax கட்டணுமா என்னா அதான் பெரீசா ஆசைப்பட்டேன்.. :D

  ஓவொரு படமும் அர்புதமா இருக்கு..

  பதிலளிநீக்கு
 21. யோவ் கைப்புள்ள,

  எங்கய்யா போனீரு இவ்வளவு நாளா?! கல்யாணமாயிருச்சுன்னு கேள்விப்பட்டேன்! (நாங்கெல்லாம் மானஸ்தருங்க! கூப்புடாத கல்யாணத்துக்கு வரமாட்டோம்.. ஆமா! அப்படியே பந்திக்கு முந்துனாலும் பின்னாடி வழியாத்தான் வந்து அட்டனெஸ்சு போடுவோம்!) நிரந்தர "கைப்புள்ள"யானதுக்கு உமக்கும் உம்மை(யும்)க்கட்டி மேய்க்கப்போகும் தங்கச்சிக்கும் வாழ்த்துக்கள்!


  பாராட்டுகளுக்கு நன்றி! ஆனா ஒலக உண்மை என்னன்னா, உம்மோட அந்த ஒரு "சூரியகுஞ்சு" போட்டோவுக்கு ஈடாகுமாயா இதெல்லாம்?! :)

  காமிராமேன் கண்ணன்?! நல்லவேளை "ரெட்டைக்குழல் துப்பாக்கி" கர்ணன்னு சொல்லாம போனீரே! :)))

  பதிலளிநீக்கு
 22. புல்லட் நண்பா நீங்க ஜெயிச்சதை யாரும் போன்போட்டு சொல்லலையா? YOUR SUNFLOWER is selected as the picture of the month JULY!
  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 23. முதல் பரிசுக்கு வாழ்துக்கள்... கலக்கிட்டீங்க

  பதிலளிநீக்கு
 24. முதல் பரிசு வாங்கியதற்கு வாழ்த்துக்கள் வாத்தியாரே :)

  பதிலளிநீக்கு
 25. ungkal camira vil iruppathu zeiss opticals thane? ore santhekam athaan ketten.

  geetha ramesh

  பதிலளிநீக்கு
 26. எழுத்தில்தனித்துவமானவன் என்று தெரியும்.
  இப்போது இதிலும் .. வாழ்த்துக்கள்.

  இதில் எனக்கென்ன இவ்வளவு சந்தோஷம் ...

  பதிலளிநீக்கு
 27. geetha ramesh ,

  என்னுடையது Sony DSC-H1. இதில் sony லென்ஸ்தான் இருக்கிறது. இதற்கு அடுத்ததாக வந்த H2, H5, H7 & H9 எல்லாம் Carl zeiess லென்ஸுடன் வருகின்றன.

  வெற்றி, சுட்ஜி, செல்லா, தீபா, அனுசுயா, மாயா, தருமிசார், ஒப்பாரி,

  உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி! :)))

  பதிலளிநீக்கு
 28. வாத்தியார்,
  வாழ்த்துக்கள்.. இந்தப் படங்களைப் பார்த்தப்பவே முடிவெடுத்துட்டேன்.. இந்த முறை வாத்தியாருக்கு வுட்டுக் கொடுக்கிறது தான் நல்லதுன்னு... ;)

  பதிலளிநீக்கு
 29. வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் இளவஞ்சி. பொருத்தமான படம் போட்டியில் வென்றது.

  கலக்கல் திலகம் இளவஞ்சி வாழ்க!
  ஒளிப்படச் செம்மல் இளவஞ்சி வாழ்க!
  நிழற்பட ஓவியர் இளவஞ்சி வாழ்க!
  புகைப்படப் புலவர் இளவஞ்சி வாழ்க!

  பதிலளிநீக்கு
 30. ஜெயகாந்தன்,

  வாழ்த்துக்களுக்கு நன்றி! :)

  பொன்ஸ்,

  // இந்த முறை வாத்தியாருக்கு வுட்டுக் கொடுக்கிறது தான் நல்லதுன்னு... ;) // ஆஹா! என்னே குருபக்தி! :)

  அடுத்த முறை கலாசிருங்க! :)

  காசி,

  வாழ்த்துக்களுக்கு நன்றி!

  ஜீரா,

  வாழ்த்துக்கு நன்றி! ஆனால் அந்த கடசி 4 வரிகள் அநியாயத்துக்கு ஓட்டலு! எனக்கு "வருங்கால இந்திய ஜனாதிபதி வாழ்க"ன்னு லிவிங்ஸ்டனை பார்த்து கூவி அடிவாங்கிக் கொடுப்பானே ஒருத்தன்! அதுதான் நியாபகம் வருது! :)))

  பதிலளிநீக்கு
 31. வாழ்த்துக்கள் வாத்யார்.

  இந்த மாசம் வீட்டுக்கு வரும்போதாவது உங்க கையால ஏதாவது சமைச்சுப் போட்டீங்கன்னா,அது போதும்..வேற ட்ரீட் எல்லாம் பெரிசா வேணாம்..

  பதிலளிநீக்கு
 32. வாழ்த்துக்கள் இளவஞ்சி!

  பதிலளிநீக்கு
 33. ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்ல ..சகலகலாவல்லவர் இளவஞ்சிக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 34. வைசா, வெயிலான், பாபா,

  வாழ்த்துக்களுக்கு நன்றி!

  சுட்.ஜி,

  செஞ்சுட்டா போச்சு! ஆனா அதுக்கெல்லாம் வீட்டுக்கு கூப்பிட்டு விருந்தோம்பும் பரந்த மனசு வேணுமையா! :)

  பதிலளிநீக்கு
 35. ரெண்டு புகைப்படமும் நல்லாருக்கு ஆனா முதல் பரிசு பட்டாம்பூச்சிக்கு கொடுத்திருக்கலாம் பாலா சொன்னமாதிரி கண்ணப் பறிக்குது :)

  பதிலளிநீக்கு
 36. ஜோ, அய்யனார்,

  வாழ்த்துக்களுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 37. தல.. தாமதமான வாழ்த்துக்கள்.. சூரியகாந்தி பூவைப்பார்த்ததுமே தோணுச்சு.. சொக்கா சொக்கானு.. ஹீம்..... நீங்க சொன்ன மாதிரி, அந்த முன்னாடி துறுத்திக்கிட்டு இருக்குற இலைதான் படத்தோட ஹைலைட்.... கலக்கீட்டீங்க...

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு