முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காணாமல் போன சின்னஞ்சிறுசுகள்...

ன்றோடு 19 நாட்கள் ஆகின்றன மேடலின் மெக்கேன் ( Madeleine McCann ) என்ற 4 வயது சிறுமி காணமல் போய்! போர்ச்சுகல் நாட்டிற்கு விடுமுறையைக் கழிக்க சென்ற இடத்தில் மே 3ம் தேதி மாலை வேளையில் பெற்றோர் இரவு உணவுக்காக சென்றிருந்த வேளையில் தங்கியிருந்த இடத்தில் இருந்து மாயமாய் மறைந்து விட்டாள். போன வாரம் தான் அவளுடைய நான்காவது பிறந்தநாள்!


Closeup



பத்திரிக்கைகள், தொலைக்காட்சி, ரேடியோ என அனைத்து மீடியாக்களும் காணாமல் போன நாளிலிருந்து அலருகின்றன. 15 நிமிடங்களுக்கு ஒரு முறை BBC, Sky போன்ற முதன்மை தொலைக்காட்சிகளின் செய்திகளில் லேட்டஸ்ட் தகவல்கள் ஒளிபரப்பப்படுகிறது.




http://www.findmadeleine.com/ எனற இனையதளம் மேடலினை தேடுவதற்காகவே அவளது சொந்த ஊரில் இருக்கும் டீனேஜ் மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 150 மில்லியன் ஹிட்டுக்கள் அடைந்துள்ளது. 76,000 பேர் தனது பிரார்த்தனைகளையும் அவளது பெற்றோருக்கான ஊக்கங்களையும் குறுந்தகவல்களாக விட்டுச் சென்றுள்ளனர். இதுவரை 180,000 பவுண்டுகள் தேடுதலுக்கான நிதியாக பொதுமக்களின் பங்களிப்பின் மூலம் திரட்டப்பட்டுள்ளது. தடயங்களையும் தகவல்களையும் சொல்வதற்கான வழியும் இதில் உண்டு. மெடலினைக் கண்டுபிடிக்க சரியான தகவல் தருவோருக்கு 2.5 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Plan of Praia da Luz

இங்கிலாந்தின் கால்பந்து நாயகன் டேவிட் பெக்காம் தொலைக்காட்சியில் தோன்றி தேடலுக்கான வேண்டுகோளை அனைவருக்கும் விடுத்துள்ளார். புதிய விம்பெர்ளி ஸ்டேடியத்தில் போன வாரம் நடந்த FA கோப்பை இறுதிப்போட்டியின் முன்னால் 90,000 பார்வையாளர்களுக்கு தேடலுக்கான வேண்டுகோள் வீடியோ படமாக காட்டப்பட்டது. போர்ச்சுகல் காவல்துறையும் இங்கிலாந்து காவல்துறையும் மிகத்தீவிரமான தேடுதல் வேட்டையில் உள்ளனர். அந்தக் காலக்கட்டத்தில் அந்த பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சேகரித்து அதில் பின்புலத்தில் இருக்கும் சந்தேகத்திற்கு உரிய முகங்களை கம்ப்யூட்டர் மூலம் ஏற்கனவே கிரைம் டேட்டாபேசில் உள்ள ஃபீடோபைல் என சந்தேகத்திற்கு உள்ளானவர்களும் ஓப்பிடும் அளவுக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.

அவளது சொந்த ஊரான லீஸ்டெர்ஷைன் காவல்துறை http://www.leics.police.uk இந்த தேடலுக்காக மட்டுமென 0800 096 1233 என்ற எண்ணை பொதுமக்கள் தகவல் அளிக்க வெளியிட்டுள்ளது. மேடலினது தேடல் கோரிக்கைபோஸ்டராக மாற்றப்பட்டு ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு கண்டம் முழுதும் விநியோகிக்கப்படுகிறது. அவளது சொந்த ஊரில் தினமும் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. அவளது புகைப்படம் அச்சிட்ட டீ-சர்ட்டுகள் விநியோகிக்கப்பட்டு மராத்தான் ஓட்டம் நடத்தி அதன்மூலம் அவளது உருவத்தினை மக்களது மனதில் பதிக்கும் முயற்சியும் நடக்கிறது. பிரிட்டனின் வருங்கால பிரதமர் கோர்டன் பிரவுன் இந்த தேடலுக்கான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் செய்யுமென அறிவித்துள்ளார்.

இவ்வளவுக்குப்பிறகும் அவளது பெற்றோர்கள் மன உறுதியுடன் போர்ச்சுகலிலேயே தங்கி தங்களது மூத்தமகளுக்கான தேடலை இன்னனும் விட்டுக்கொடுக்காமல் தொடருகின்றனர். மேடலின் தொலைந்த துயரம் தனது மற்ற இரட்டைக்குழந்தைகளை பாதிக்காமல் இருக்க இயல்பாய் இருக்க மிகவும் கடினப்பட்டு முயற்சிக்கின்றனர்.


தேடல் இதுவரை எந்தவிதமான முக்கிய தடயங்களும் கிடைக்கவில்லை என்பது வருந்தமான செய்தி. ஒரு மிடில்க்ளாஸ் தம்பதியினரது தேடல் பொதுமக்களின் ஆதரவோடும், மீடியாக்களின் கவனம் சிதறாத முயற்சிகளோடும் முழுவீச்சில் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.

Banner2

30/05/2007:

மேடலின் பெற்றோர்கள் போப்பாண்டவரை வாடிகன் சென்று சந்தித்து பிரார்த்தனைகளையும் ஆசிகளையும் பெற்றனர்.



http://news.sky.com/skynews/article/0,,91210-1267684,00.html?f=rss

http://news.bbc.co.uk/1/hi/uk/6696497.stm


* * * * *

சென்ற வருடம் டிசம்பர் மாதக்கடைசியில் புறநகர் டெல்லியான நோய்டாவில் ஒரு வீட்டின் பின்புறத்தில் இருந்து சிதைக்கப்பட்டு புதைக்கப்பட்ட குழந்தைகளின் சடலங்களை போலீசார் கண்டெடுத்தனர். அதன் மீதாக இருவரை கைதும் செய்தனர். அதில் ஒருவர் தான் குழந்தைகளுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் பழக்கும் உடையவன் என்றும் அந்தப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு மிட்டாய்களும் பிஸ்கட்டுகளும் கொடுத்து ஆசைகாட்டி கூட்டிச்சென்று கற்பழித்து பின் கொலை செய்ததாகவும், இதுவரை ஏழு குழந்தைகளை கொன்றுள்ளதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக செய்திகள் வந்தன.

இதனையடுத்து அந்த பகுதி மக்கள் பொங்கி எழுந்தனர். இதுவரை 38 குழந்தைகள் அந்த பகுதியில் கடந்த 21 மாதங்களில் காணாமல் போயிருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மீதான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் போராட்டம் நடத்தினர். அளிக்கப்பட்ட புகார்களின் பேரில் தகவல் அறியும் முயற்சியாக காவல்நிலையம் சென்று கேட்ட நேரங்களில் போலிசார் அதனை காதில் வாங்கிக்கொள்ளாமல் அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர். புகார்கள் வந்த ஆரம்பக்கட்டத்திலேயே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் இவ்வளவு குழந்தைகள் காணாமல் போயிருக்க மாட்டர்கள் எனவும் தாங்கள் ஏழை கூலித்தொழிலாளிகள் என்பதாலேயே காவலர்கள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த பகுதிக்கான 5 காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

http://www.ezilon.com/information/article_17428.shtml

http://news.independent.co.uk/world/asia/article2112546.ece

இந்தியாவில் ஒரு வருடத்திற்கு சராசரியாக 44,476 குழந்தைகள் ( ஒரு நாளைக்கு 122 ) காணாமல் போவதாகவும் இதில் 15,407 குழந்தைகள் ஆறு பெரிய நகரங்களில் இருந்துமட்டும் எனவும் அதிலும் 11,008 குழந்தைகள் திரும்பக்கிடைக்காதவர்கள் எனவும் இந்த செய்தி சொல்கிறது.

நோய்டா செய்தியில் கைதான சுரேந்திரா என்பவரது இன்றைய ஒப்புதல் வாக்குமூலத்துடன் விசாரணை தொடருகிறது.

30/05/2007:

இந்த வழக்கைப்பற்றிய முழுமையான செய்திகளுக்கு...

http://en.wikipedia.org/wiki/Noida_Serial_Killings

கருத்துகள்

  1. சுஜாதாவோட ஒரு கதைல அவர் பிரான்ஸ்ல் டீ-ஷர்ட் விலை அதிகமென்று ஒரு பிரான்ஸ் நாட்டு பிரஜை ஒருவரிடம் புலம்ப பதிலுக்கு அவர் உங்க ஊர்ல இதை விட குறைந்த தொகைக்கு இந்த குழந்தைய வாங்கினேன்னு சொல்லுவார். உயிர்களோட மதிப்பு நம்மூர்ல இதுதாங்க. என்ன செய்ய?

    பதிலளிநீக்கு
  2. இளவஞ்சி, இங்க நெதர்லாந்துக்கு வந்ததும் இந்தச் செய்தியைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். அந்தக் குழந்தை எங்கே போயிருக்கும்? கண்டிப்பாக யாராவது கடத்தியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஐயா..திரும்பக் கொண்டாந்து விட்டுருங்கய்யா...

    நம்மூர் கதையே வயித்தெரிச்சலாச்சே. அடச்சீன்னு அலுத்துப் போச்சு.

    பதிலளிநீக்கு
  3. பிரமாதமான பதிவு சார். நம்ம ஊர் கதை மீடியா பசிக்கு கொஞ்ச நாள் தீனி போட்டதோட சரி. இந்தியனுக்கு எதுவும் தன் வீட்டில் நடக்காதவரை கவலையில்லை.

    பதிலளிநீக்கு
  4. பதிவு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் இளவஞ்சி!

    உள்நாடு,அயல் நாடு என்று இரண்டுக்குமுள்ள வித்தியாசத்தை பளிச்சென்று சொல்லும் விதத்தில் உள்ளது பதிவு, நினைக்கையில் ஆயாசாமாக உள்ளது .

    என்று திருந்தும் இந்த பாரத நாடு ,பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு இப்போது எல்லாம் டாஸ்மாக் பாருக்குள்ளேவே முடங்கிவிட்டது!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு