முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இதெல்லாம் ஆவறதில்லைங்க...

Image Source: http://wwwiaim.ira.uka.de

Image Source: http://wwwiaim.ira.uka.de தேன்கூடு போட்டில பரிசு வாங்குனதால தமிழோவியம் இணையவார இதழுக்கு இந்த வாரம் சிறப்பாசிரியராக இருக்கனும்னு கணேஷ் சந்திரா கேட்டுக்கிட்டாங்க! அங்க எல்லாம் வலைப்பதிவுக மாதிரி நம்ப இஸ்டத்துக்கு எழுதப்படாது.. நாலு பெரிய மனுசருக்கு வந்து எழுதற படிக்கற எடம்.. அப்படின்னு தெரிஞ்சதால நானும் ஏதாவது உருப்படியா கதை, கவிதைனு எழுதலாம்னு முடிவு செஞ்சேன்! அப்பறம் தான் தெரிஞ்சது நம்ப திறமை!

ஆமாங்க... யோசிச்சு யோசிச்சு பார்த்தேன். அங்க இங்க ஏதாவது வெசயம் கெடைக்குமான்னு நெட்டுல மாஞ்சு மாஞ்சு மேய்ஞ்சும் பார்த்தேன். ஒரு நோட்டுப் புத்தகத்த கையில வைச்சுக்கிட்டு மூடி கழற்றிய பேனாவை கண்ணத்துல வைச்சுக்கிட்டு கழுத்தை 30 டிகிரி வளைச்சு தலைய 45 டிகிரிக்கு திருப்பி அரைமணி நேரம் சிந்திச்சும் பார்த்தேன். போன் ரிசீவரை காதுல வச்சிக்கிட்டு முழு இட்டிலி அப்படியே உள்ளேபோய் வெளியே வரும் அளவில் வாயைத்தொறந்து சிரிச்சுக்கிட்டு மேலாக்க விட்டத்தை பார்த்தபடியும் ஒரு மணி நேரம் ஒக்கார்ந்து பார்த்துட்டேன். சாயங்கால வேளைல மொட்டை மாடிக்குப்போய் பெட்சீட்டை விரிச்சு மல்லாக்கப் படுத்துக்கிட்டு பறங்கற காக்கா குருவிங்களை ரசிச்சும் பார்த்துட்டேன். சமுதாய நிகழ்வுகளை கவனிக்கலாம்னு மடிவாலா மார்க்கெட்ல ரெண்டு மணி நேரம் சுத்துனேன். உணர்ச்சி வசப்பட்டா ஏதாவது பொறி கிடைக்கும்னு தினத்தந்தி செய்திகளை ஒருமுறைக்கு நாலுமுறை வாய்விட்டும் படிச்சுட்டேன். ஒரு வேளை பசியின் கொடுமையறிந்தால்தான் இலக்கியம் வருமோன்னு ஒரு நா மத்தியானம் வரைக்கும் பட்டினி கெடந்தேன். அதுக்கப்பறமா ருசியின் அனுபவத்தில் ஏதேனும் கிடைக்கலாம்னு கோரமங்களா இம்பீரியல்ல காயின் பரோட்டா, கிக்கன் கடாய், பிரியாணி, கசாட்டான்னு ரவுண்டு கட்டியும் பார்த்தேன். ஒரு கோட்டரையாவது உட்டுப்பார்க்கலாம்னா என் கடந்தகால Watersports கருத்தாய்வு அனுபவங்களும், வருங்கால வயிற்றுப்பாடும் பற்றிய பயமுமே நெனப்புக்கு வருது.

ம்ஹீம்! வேலைக்கே ஆவலை! :( கதை எழுதலாம்னா ரெண்டாவது பத்திக்கு மேல கதை மாந்தர்கள் வேட்டைக்குப்போன இம்சை அரசனுக்கு கரடி கொடுத்த மரியாதை மாதிரி செய்யறாங்க. கவிதை எழுதலாம்னா ரெண்டாவது லைனுக்கு அப்பறம் கண்ணுக்கு சாத்தான்குளம் அண்ணாச்சிதான் தெரியறாரு.

கடைசியா ஒன்னுமட்டும் தெரிஞ்சது! எழுதியே ஆகனும்னு கட்டாயத்துல ஒக்கார்ந்தா எனக்கு இந்தக்காலத்துல மட்டுமில்லை.. எந்தக் காலத்துலயும் எழுத முடியாதுங்கறது!

ஆகவே... வழக்கம்போலவே கடைசிநேரத்துல நமக்கு கைவந்த கலையான கொசுவத்தி சுத்தறதையே அங்கயும் செஞ்சுட்டேன். ஹிஹி... என் இம்சையை பொறுத்துக்கொண்ட கணேஷ் சந்திராவுக்கு என் நன்றிகள்!

1. என் பெயர் இளவஞ்சிங்க!

2. முதல் புகைப்படப் போட்டி!

3. இரண்டு திரைப்படங்கள்

4. சிறப்பு ஆசிரியர்கள் - 1

5. சிறப்பு ஆசிரியர்கள் - 2

இதுபோக , போன வார பெங்களூரு சந்திப்பு பற்றி விழியனும், பிரகாசும் பதிவு போட்டிருக்காங்க! அதனையும் ஒரு எட்டு பாருங்க...

1. பிரகாஷ்

2. விழியன்

கருத்துகள்

 1. ஆஹா.... தனிமடல் போட்டுருக்கேன், பாருங்க.

  பதிலளிநீக்கு
 2. இளவஞ்சி,
  சிரிச்சி சிரிச்சி படிச்சேன் :-)

  நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு

  பதிலளிநீக்கு
 3. //காவல்துறைல இருந்ததால வருசம் ஒருக்கா ஸ்டேசன் மாறப்ப எல்லாம் எங்களையும் கொண்டுபோய் அந்தந்த ஊரு கவருமெண்டு ஸ்கூல்ல போட்டுட்டு ஸ்டேசனுக்கு போயிருவாரு!
  //
  ஓ... அப்போ அது நீங்க தானா?

  பதிலளிநீக்கு
 4. உங்க பேட்டி சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர் கலக்கறீங்க...

  பதிலளிநீக்கு
 5. கடைசியா ஒன்னுமட்டும் தெரிஞ்சது! எழுதியே ஆகனும்னு கட்டாயத்துல ஒக்கார்ந்தா எனக்கு இந்தக்காலத்துல மட்டுமில்லை.. எந்தக் காலத்துலயும் எழுத முடியாதுங்கறது!//

  ஆமாங்க, ஆமாங்க!
  தேம்பிக்கொண்டே,
  உஷா
  பி.கு நான் இன்னும் ஒன்றுமே எழுத ஆரம்பிக்கவில்லை. பேசாம, பரிசை மனம் உவந்து யாருக்காவது தள்ளிடலாமா என்று
  யோசித்துக்கொண்டு இருக்கிறேன் :-))

  பதிலளிநீக்கு
 6. நல்லா எழதீருக்கீங்க. அங்கயும் ரெண்டு பின்னூட்டம் போட்டிருக்கேன் பாருங்க.

  பதிலளிநீக்கு
 7. நாங்க நட்சத்திர வாரத்திற்கே தடுமாறி இதே டெக்னிக்கை பயன்படுத்தியாயிற்று :)

  உங்கள் நகைச்சுவைக்கு கேட்கணுமா ?

  பதிலளிநீக்கு
 8. துளசியக்கா, நிலா,

  உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி!

  ****
  குழலி,

  என்ன விளையாட்டு இது? அடி கொடுக்கற/வாங்கற ஒடம்பா என்னுது?!

  அந்தக்காலத்துல நான் பூஞ்சைங்க :)

  ****
  குமரன் எண்ணம்,

  ஊக்கங்களுக்கும் வருகைக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 9. உஷா,

  // ஆமாங்க, ஆமாங்க!
  தேம்பிக்கொண்டே,
  //

  ம்ஹீம்! உங்களையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் நம்பமாட்டேன்! :)

  ****
  ராகவன்,

  பின்னூட்டங்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி! எப்ப பெங்களூர் வரீங்க?

  ****
  மணியன்,

  // நட்சத்திர வாரத்திற்கே தடுமாறி இதே டெக்னிக்கை // நானும் அதே அதே! :)

  பதிலளிநீக்கு
 10. எழுதறதுக்கு ஒன்னும் இல்லனு சொல்லரதுக்கு, இத்தனை காரணங்களா திறமதேன்..ஏனுங்க அந்த கோட்டர்ர உட்டு இருந்தீங்கனா அது பாட்டுக்கு பிச்சு பீஸ கிளப்பி இருக்கும்ல...

  பதிலளிநீக்கு
 11. ஒரு ப்ளோக் பெஞ்சு(Blog Bench) வாத்தியார், சிறப்பாசிரியர் ஆகிறார்... :)))

  நல்லா சுத்தியிருக்கீங்க கொசுவர்த்தி.. வழக்கம் போல நல்லா வந்திருக்கு..

  உங்களை மாதிரி வெரைட்டி காட்டுறது நிஜமாவே கஷ்டம் தான் வாத்தியார்.. அந்த ஆசிரியர்கள் ரெண்டு பேரைப் பத்தியும் சந்தோஷமா படிச்சிகிட்டே வந்து கடைசி ரெண்டு லைனும் சரியான பஞ்ச்.. எத்தனை கதை எழுதினாலும் இப்படி வாழ்க்கைல கத்துக்கிறது தான்... நீங்க வேற ஏதாவது புனை கதை எழுதி இருந்தாக் கூட இந்த மாதிரி வந்திருக்குமான்னு தெரியலை..

  அறிமுகக் கட்டுரைக்கு என் பங்குக்கு ரெண்டு கேள்வி கேட்டிருக்கேன்.. பார்த்துப் பதில் சொல்லுங்க ;)

  அப்புறம் வாக்கிய நீளங்கள் கொஞ்சம் குறைச்சிட்டீங்களேன்னு 'அட' போடலாம்னு பார்த்தா, தமிழ் டீச்சரைப் பத்தின கட்டுரைல நீளம் வந்துடுச்சே!! :( :))).... (உங்க பதிவெல்லாம் படிச்சி இப்போ எனக்கும் கெட்ட பேரு.. என் கதையை வந்து பாருங்க, அங்க இதே வாக்கிய நீளத்தைப் பத்தி ஒரு கம்ப்ளெயின்ட் வந்திருக்கு!!! )

  பதிலளிநீக்கு
 12. //காவல்துறைல இருந்ததால வருசம் ஒருக்கா ஸ்டேசன் மாறப்ப எல்லாம் எங்களையும் கொண்டுபோய் அந்தந்த ஊரு கவருமெண்டு ஸ்கூல்ல போட்டுட்டு ஸ்டேசனுக்கு போயிருவாரு!
  //
  ஓ... அப்போ அது நீங்க தானா?

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் இளவஞ்சி,

  உங்க சிறப்பு ஆசிரியர் பகுதி படிச்சேங்க ரொம்ப இயல்பா எழுதி இருக்கிங்க. நட்சத்திரம் ஆனவுடன் எல்லாரையும் அசத்தணும் எழுதுவாங்க ஆனால் நிங்க ஒருத்தர் இயல்பா எழுதி அசத்திட்டிங்க வாத்தி அண்ணே

  அன்புடன்
  தம்பி

  பதிலளிநீக்கு
 14. http://aigolady.com/bbs.aigolady.cn/viewthread.php?tid=117197&pid=1008327&page=1&extra=page%3D
  http://humannetwork.wikia.com/wiki/Special:CreatePage/index.php?title=Diflucan_and_the_heart&action=edit&redlink=1
  http://www.weloveinteriors.com/forum/viewtopic.php?f=2&t=25932&p=37798

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு