முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காற்றினிலே வரும் கீதம்

Image hosting by Photobucket

"இதுக்கு முன்னால நீ இங்க வந்திருக்கியா?"

"ம்ஹீம்.. இல்லப்பா.. ஊட்டி, ஏற்காடு தான் போயிருக்கேன்! இதுதான் மொதல் தடவை! ஊட்டிய விட இங்க நல்லா இருக்கு... இல்ல... நீ?"

"ஒரே தடவை. பதிணொன்னாவது ஸ்கூல் டூரு போது வந்தது. ஏழெட்டு வருசத்துக்கு முன்னால. மூணு நாளு செம ஆட்டம் அந்த டூருல.. மொத நாளு மதுரை போயிட்டு ரெண்டாநாளு இங்க வந்தோம். செம குளிரு அப்ப... மொத மொதலா தம்மு அடிக்க டிரை செஞ்சு கண்ணுலையும் மூக்குலயும் தண்ணி வர இரும்புனது இங்கதான்... கணேசெல்லாம் வாத்தியாருக்கு தெரியாம பீரெல்லாம் அடிச்சானுங்க.. நான் தம்மோட நிறுத்திக்கிட்டேன்! அப்பவே இந்த கம்பி மேல ஏறி நின்னு அந்தப்பக்கம் போகப்பார்க்க வாத்தியாருகிட்ட செம மாத்து வாங்குனேன்! விழுந்து தொலைச்சு ஏதாவது ஆனா எவன்டா உங்கப்பனுக்கு பதில் சொல்லறதுன்னு போட்டு பின்னிட்டாப்புல. அன்னைக்கு எட்டிப் பாக்கறதே ஒரு திரில்லா இருந்தது. ம்ம்ம் இன்னைக்கு எப்படி இருக்கும்னு தெரியலை!"

"நீ அந்த வயசுலயே கொரங்கு வேலையெல்லாம் செய்வியா? அதான் இப்பவும் இப்படி இருக்க!! ம்ம்ம்.. மொத மொதல்ல உன்னைப் பார்க்கறப்ப இந்த பூனையும் பால் குடிக்க்குமான்னு இருந்த.. இப்ப உன் வண்டவாளத்தையெல்லாம் கேக்க கேக்க கெட்ட நாயா இருப்ப போல..."

"ஆமாம்! பொட்டப்புள்ளைங்கெல்லாம் ரொம்ப ஒழுங்கு பாரு! அன்னைக்கு என்னை எட்டிப்பார்க்க சொன்னதே ஜெயாதான்! அதான் அந்த ஸ்கூல் போட்டோல தேவாங்கு மாதிரி ஒன்னு மொத வரிசைல நிக்குமே.. அவ தப்பிச்சிக்கிட்டா. நாந்தான் மொத்த திட்டும் வாங்குனேன்! அவ கொழந்தை போல பேக்கு மாதிரியே மூஞ்சிய வைச்சுக்கிட்டு கடைசி வரைக்கும் என்னை வேடிக்கைதான் பார்த்தா!"

"அடப்பாவி.. அப்பவே நீ இந்த ஜொள்ளா? புள்ளைங்க என்ன சொன்னாலும் செஞ்சிருவியா?"

"அட நீ வேற... உன்னை மாதிரி ஒருத்தி எனக்கு கிடைப்பான்னு தெரிஞ்சிருந்தா நான் ஏன் அன்னைக்கு அந்த பாண்டை பேச்சையெல்லாம் கேட்டிருக்கப் போறேன்! ஆனா மூஞ்சி சரியில்லைன்னாலும் அன்னைக்கே அவ ஆளு சும்மா கும்முன்னு இருப்பா...! பசங்க எல்லாம் சுத்தி சுத்தி வருவானுங்க..பயாலஜி லேப்ல அவ மைக்ராஸ்கோப் பாக்க ஆரம்பிச்சா எதுத்தாப்புல வரிசைல இடம் போடறதுக்கு ஒரு அடிதடியே நடக்கும்..!"

"சொல்லுவடா.. சொல்லுவ.. வழியறதை கொஞ்சம் தொடச்சுக்க... உன் பின்னாடி சுத்தறது இல்லாம இதையெல்லாம் வேற கேக்கனும்னு என் தலையெழுத்து! ம்ம்ம்.. சந்தடி சாக்குல நான் கும்முன்னு இல்லைன்னு சொல்ல வர.."

"கோச்சுக்காதடா கன்னுக்குட்டி... உன்னைப் பார்த்த கண்கள் இனி வேற யாரையாச்சும் பாக்குமா என்ன? இந்த ஜன்மத்துக்கு நீ போதும்! அடுத்ததுல வேற யாரையாவது பார்த்துக்கறேன்! "

"கொன்னுடுவேன்.. ராஸ்கல்... இன்னும் உனக்கு எத்தனை பிறவின்னாலும் அது என் கூடத்தான்.. நீ நாயா பொறந்தாலும் சரி.. இல்லை புழுவா பொறந்தாலும் சரி..."

"ஹை.. அப்படின்னா நான் மண்புழுவா பொறக்கறேன்! அப்போதான் வாலிப வயசுல பொம்பளைங்களை நம்பி வாழ வேண்டாம்! என்ன நான் சொல்லறது..?"

"நாயே... நாயே.. உன் புத்தி ஏண்டா இப்படி போகுது? வேற எதையுமே நல்லதா நெனைக்க மாட்டியா?"

"நான் என்னம்மா செய்யறது? 25 வயசு வரைக்கும் ஒருத்தன் ஒன்னுமே பார்க்காம இருந்தா அவன் வேற எப்படி இருப்பான்? அதுவும் இப்படி அழகான குட்டியோட தனியா இருந்தா வேற என்னத்த தின்க் பண்ணுவான்? ம்ம்ம்.. எங்க கஸ்டம் என்னைக்கு உங்களுக்கெல்லாம் புரிஞ்சிருக்கு? சரி.. ப்ளீஸ்பா... கடைசியா கேக்கறேன். ஒரு தடவை பார்த்துக்கட்டுமா? கொஞ்சம் திரும்பி சைடா ஒக்காறேன்..!"

"கொன்னுடுவேன் படவா? எந்த எடத்துல வந்து என்ன கேக்கறதுன்னு வெவஸ்தையே இல்லையா? இப்படி சொல்லி சொல்லியே எத்தனை வாட்டி பார்ப்ப? ம்ம்ம்.. நம்ப கல்யாணம் மட்டும் நடந்திருந்தா மொத்தமும் உனக்குத்தான்! நான் மட்டும் இது எல்லாத்தையும் உனக்கு இல்லாம வேற யாருக்குடா சேர்த்து வைச்சிருக்கறேன்? என்ன செய்ய? போற நேரத்துலயாவது நல்லதை நெனைச்சு கொஞ்சம் புண்ணியம் தேடிக்க! இங்க ஒரு காளி கோவில் இருக்காம். ரொம்ப சக்தி வாச்சதாம். வேண்டுனதெல்லாம் பலிக்குமாம்! போயிட்டு அப்பறம் போலாமா?"

"ஆமாம் இனி என்னத்த வேண்டி என்னத்த செய்ய? எல்லாம் நேர்ல பார்த்து உரிமையா கேட்டுக்கலாம்! டோண்ட் ஒர்ரி.."

"வரும்போது நீதானப்பா சொன்ன? இதைப்பத்தி பேசக்கூடாதுன்னு.. இப்ப நீயே திரும்ப திரும்ப அதுபத்தி பேசற..!"

"சரி விடு.. இனி பேசலை!"

"இது நல்ல பையனுக்கு அடையாளம்! ஆமா உனக்கு ஒரு நியூஸ் தெரியுமா? இன்னிக்கு மகளீர் தினம்! எங்க காலேஜுல புள்ளைங்கெல்லாம் நேத்திக்கே கார்ட் கலெக்சனை ஆரம்பிச்சிட்டளுக.. நீ என்னடான்னா ஒரு வாழ்த்துக்கூட சொல்லாம மண்ணாங்கட்டியாட்டம் ஒக்கார்ந்திருக்கற.."

"நான் உனக்கெல்லாம் மகளீர் தின வாழ்த்து சொல்லறதில்லை!"

"அடப்பாவி.. அப்ப நீ என்னை பொண்ணாவே மதிக்கலையா! ஐய்ங்க்க்க்க்க்..."

"அடடா.. அழுவாதப்பா.. ஏஞ்சல் தினம் வரும்ல.. அன்னைக்கு சொல்லறேன்னு சொல்ல வந்தேன்.. சரி.. சரி.. ஒடனே உன் பளீரிடும் பற்களை காட்டாத.. உங்க வீட்டுல க்ளோசப் பேஸ்ட்டுன்னு தெரியுது..!"

"ம்ம்ம்.. அதுவுஞ்சரிதான்.. கொஞ்சநேரம் பொறுத்துக்க.. நான் தேவதையானவொடனேயே சொல்லிக்கலாம்!"

"பார்த்தியா.. என்னை சொல்லிட்டு நீ இப்போ அதைப்பத்தி பேசற.."

"சாரி சாரிப்பா... இனிமே இல்லை.. மதர் பிராமிஸ் இல்லை.. சரியா? ஆமா உனக்கு என் அம்மாமேல கோவமே இல்லையா?"

"ம்ம்ம்.. இருக்கு..இருந்தது.. இப்ப இருக்கா இல்லையான்னு தெரியலை! சரி. உனக்காகதானேன்னு வாங்கிக்கிட்டேன்! என்ன செய்ய? என்னால முடிஞ்சது அவ்வளவுதான்! உங்க கூட்டத்தை எதிர்த்து போராடற அளவுக்கு எனக்கு தெம்பும் தெகிரியமும் இல்லை. நான் இப்ப நெனைக்கறது என்னன்னா, பேசாம உன்னை பார்க்காமலேயே இருந்திருக்கலாம்.. இப்ப பாரு.. என்னை நம்பி உன் வாழ்க்கையும் போச்சு.."

"அடப்போப்பா.. இப்படி ஒரு அப்பா கூட இருக்கறதுக்கு உன் கூட ஒரு நிமிசம் இருக்கறது மேல்! ஆசை ஆசையா வளர்த்துட்டு இப்படி என்னை அடிச்சி நிமிர்த்தறதுக்கா? வயித்துமேல பெல்ட்டு வரி இன்னும் இருக்கு... இன்னேரம் என்ன செஞ்சுக்கிட்டு இருப்பாங்களோ? ம்ம்ம்.. நாம இங்க வந்திருக்கறது அவங்களுக்கு தெரிஞ்சிருக்குமா?"

"நமக்கே இங்க வரலாம்னு நேத்து நைட்டு பஸ்ஸ்டேண்டுலதான் தோனுச்சு! இதுல அவங்களுக்கு எங்க தெரியறது? சான்சே இல்லை! உங்கப்பா இப்ப கொலைவெறில திரிஞ்சிக்கிட்டு இருப்பாருன்னு நினைக்கறேன்! உங்கம்மா அழுகும்னு தோணுது!"

"ஆமா.. அவங்க அழுதா இப்போ எனக்கென்ன? சரி விடு.. பசிக்குது.. ஏதாவது வாங்கிக்குடுடா.."

"இங்கெல்லாம் சீசனுக்குதான் கடைங்க.. மத்த நேரமெல்லாம் ஈயடிக்கும்.. வழில பார்த்த அந்த டீக்கடைக்கே போலாமா?"

"ம்ம்ம்.. அவ்ளோ தூரமா... வேணாம்... அந்த பிஸ்கட்டையே திங்கலாம்...
50 50யாம்ல..ஆளுக்கு பாதி.. இன்பமும் துன்பமும்.."

"ஜோக்கடிக்கற நேரத்த பாரு! சரியான லூசு நீ.. சரி.. அங்க மொனைக்கு போறவரைக்கும் மொகத்தை சிரிச்சாப்புல வைச்சுக்க.. பாக்கறவங்களுக்கு ஒரு சந்தேகமும் வரக்கூடாது... வருசத்துக்கு அஞ்சாறு நடக்குது இந்த மாதிரி.."

"சரிப்பா.. போலாமா... ஆமா இங்க உள்ள தொப்பிய தூக்கிப்போட்ட மேல வருமாமே?! உண்மையா?"

"அடியே என் ஆராய்ச்சிக் கண்மணி! இந்த நேரத்துல உனக்கு டாக்டர் பட்டம் கொடுக்க நான் எங்க போறது? ஒன்னு நல்லா கேட்டுக்க... ஒரே ஒரு செகண்டு நான் முன்னால குதிச்சிடறேன்... உனக்கு வலிக்கறத நான் பார்க்கக்கூடாது.. சரியா..?"

"அப்போ நான் மட்டும் பார்க்கணுமாக்கும்... அதெல்லாம் வேண்டாம்..சேர்ந்தே போவோம்..! சரியா.. போலாம் வா.. சரி... ரெண்டு பேரும் கையைப் பிடிச்சாப்புலயே குதிச்சு ஒன்னா கீழ போக முடியாதா?"

"ம்ம்.. சரி வா.. கைய இருக்கப் பிடிச்சுக்க.. பையெல்லாம் இங்கயே வச்சுறலாம்.. விசாரிக்கறவங்களுக்கு தகவல் சொல்ல வசதியா இருக்கும்.. அப்படியே வேடிக்கை பார்க்கற மாதிரி போய் டப்புன்னு அந்த கம்பிய தாண்டி உள்ளார போயி முனைக்கு ஓடிறலாம்.. கம்பிய தாண்டுன ஒடனே கண்ணை இருக்க மூடிக்க.. சரியா...? வாவா.."

அகண்ட வெளியின் மொத்த நிலமும் ஈரக்காற்றும் பரந்த நீல வானமும் மெல்லிய வெண்மைப்பனி மூட்டமும் எங்களை அணைத்துக் கொள்ள காத்திருக்க... திடுக்கென கால்களின் இருப்பு நிலத்தின் இல்லாமையை உணர... உடலின் எடையை மூளை உணர்த்த... இறுக்கத்துடனும் நடுக்கத்துடனும் இருந்த அவள் கைகள் என்னை விட்டுப்பிரிந்து விட.. இறுக மூடிய கண்களுடனும் தொண்டையில் சிக்கிய கூவலுடனும் மடங்கிய எட்டாய் அவள்... ஜிவ்வென காற்றினை கிழித்துக்கொண்டு போகிறோம்.. போகிறேன்... ஈரக்காற்றில் முகம் சிலிர்த்து விரைக்க... பிதுங்கிய கண்களின் தெறித்த கண்ணீர் காதுகளில் வழிந்து விடுபட... கழுத்து நரம்புகள் முறுக்கித் திமிர.. கைகள் வெற்றுவெளியைத் துழாவ... கால்களிரண்டும் மெலேறிக் கோணலாய்... அடிவயிறு முழுதும் நெஞ்சிலேறி... காதுகள் ஜிவுஜிவுக்க.. மூக்கிலும் வாயிலும் சிறுகுடலின் பித்தம் வழிய... முழுதும் வியர்க்க.. மயிர்க்கால்கள் கூச்செறிய... நினைவுகள் பிரள... மொத்த இருதயமும் வெறித்தனமாய் இயங்க... விடைக்க.. வெடிக்க.. வலிக்க.. திருக.. மயங்க...

சொத்...

கருத்துகள்

  1. // அங்க மொனைக்கு போறவரைக்கும் மொகத்தை சிரிச்சாப்புல வைச்சுக்க.. பாக்கறவங்களுக்கு ஒரு சந்தேகமும் வரக்கூடாது... வருசத்துக்கு அஞ்சாறு நடக்குது இந்த மாதிரி.." //

    இங்கேயே கதை முடிந்துவிட்டதுபோலத் தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  2. அடக்கடவுளே,
    என்ன இப்படி ஆரம்பிச்சு அப்படி முடிச்சுட்டீங்க!

    எழுத்து நடை, சொன்ன விதம் எல்லாம் நல்லா இருக்குன்னாலும்,

    'வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்' ஞாபகம் வருதே!

    இது சம்பந்தமா ஒரு கதை ,நாடகமுன்னு சொல்லலாம் கிடைச்சது. தமிழ்சங்கத்துலே நாடகமாப் போட
    எடுத்து வச்சுருக்கேன்

    பதிலளிநீக்கு
  3. அவர்கள் நின்று விடுவார்கள் என்று பார்த்தேன்!

    பதிலளிநீக்கு
  4. 'புன்னகை மன்னன்' எப்படியோ எனக்கு தெரியல, சாவின் அழுத்தம் உங்கள் எழுத்தில் ரொம்பவே நிரம்பி இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  5. லதா,

    நீங்க சொல்லறது சரி... என்னைக்கேட்டா கதையை //அன்னைக்கு எட்டிப் பாக்கறதே ஒரு திரில்லா இருந்தது. ம்ம்ம் இன்னைக்கு எப்படி இருக்கும்னு தெரியலை!"// இங்கயே முடிச்சிட்டேன்! மிச்சமெல்லாம் இந்த முடிவுக்கான காரணங்களை விளக்கும் சங்கதிகள். அவ்ளோதான்..

    துளசியக்கா, தங்கமணி, வெளிகண்டநாதர்... கருத்துக்களுக்கு நன்றி..

    வர்ணணைகளும், உணர்வுகளையும் சூழ்நிலைகளையும் விளக்கும் வரிகளும் ஏதும் இல்லாமல் அத்தனையயும் இருவர் பேசுக்கொள்வதிலேயே கொண்டுவரமுடியுமா எனப்பார்த்தேன்..

    அப்படியும் கடைசு பாரால தவிர்க்கமுடியலை! எவ்வளவோ யோசிச்சும் அதை பேசுவதாக கொண்டுவர முடியலை... :)

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  6. கொடைக்கானல்???
    ஆனா,எனக்கென்னமோ இப்போ காதல் தோல்வியினால தற்கொலை செஞ்சிக்கிறவங்க எண்ணிக்கை முன்பை விடக் கொறைஞ்சாப் போல இருக்கு.வானமே எல்லை போன்ற தற்கொலை பற்றி ஒரு விழிப்புணர்வு தரும் படங்களும்,இது இல்லைன்னு அடுத்தது அப்படிங்கற மனப்பாங்கும் காரணமா இருக்கலாம்னு நினைக்கிறேன்.

    //அப்படின்னா நான் மண்புழுவா பொறக்கறேன்! அப்போதான் வாலிப வயசுல பொம்பளைங்களை நம்பி வாழ வேண்டாம்!//
    //எல்லாம் நேர்ல பார்த்து உரிமையா கேட்டுக்கலாம்!//
    மத்தபடி இளவஞ்சியோட முத்திரை நிறைய இடங்களில் கதையில்.

    பதிலளிநீக்கு
  7. பாரதி,

    //தற்கொலை தவறு என்று எங்கேனும் ஒரு இடத்தில் கோடிட்டுக் காட்டியிருக்க வேண்டாமா?// அந்த கடைசி பத்திய படிச்சா இது தப்புன்னு தோணலையா? தோணவில்லையெனில் நான் எங்கயோ கோட்டை விட்டுட்டேன் போல! :)

    சுதர்சன்,

    //இப்போ காதல் தோல்வியினால தற்கொலை செஞ்சிக்கிறவங்க எண்ணிக்கை முன்பை விடக் கொறைஞ்சாப் போல இருக்கு// சரிதான். ஆனா பல்வேறு காரணங்களுக்கான தற்கொலைகள் எண்ணிக்கை இன்னும் அப்படியேதான் இருக்கு.

    மற்றபடி, உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  8. தப்புனு அட்வைஸ் கூட மண்டையில ஏறாதுங்க.. நீங்க சொன்ன அந்த கடைசி பாராவை படிச்சப்புறமும் தற்கொலை செய்துக்குற தைரியம் முன்பளவுக்கு இருக்குமானு சந்தேகம்தான்...

    சுதர்சன், இளவஞ்சி... சமீபகாலத்தில் படிச்ச,படிக்குற இளைஞர்கள் கூட தற்கொலை முட்டாள்தனம்னு உணரலை, என் தங்கை படிக்கும் மருத்துவக்கல்லூரியில் நடந்த தற்கொலைகள் உதாரணம்... அத்தனைக்கும் படிப்பில் முதல்வர்கள் இருவரும், தற்கொலை செய்துகொண்டவிதம் கேட்டால் தலையிலடித்துக்கொள்ளத்தோன்றும்..

    ஒவ்வொரு மருந்துக்கும், எந்த டோஸ் கொடுத்தால் என்ன விளைவுகள் ஏற்படும், எத்தனை நேரமாகும், என்ன என்ன விதமான வலிகள் வேதனைகள் வருமென ஆராய்ச்சி செய்து, நாட்குறிப்பில் குறித்து ஆராய்ந்து முடிவைத்தேடிக்கொண்டனர்..

    என்ன சொல்வது.. :-(

    பதிலளிநீக்கு
  9. அண்ணாச்சி,
    கதையைப் படிக்கும் போது தற்கொலை கதை மாதிரி இருக்குன்னு தெரிஞ்சிட்டாலும், அது மாதிரி இருக்காது...எதாச்சும் வித்தியாசமா இருக்கும்...அப்படிங்கிற எதிர்பார்ப்பு எனக்கு கடைசி வரைக்கும் இருந்துச்சு. பயாலஜி லேப் ...தேவாங்கு இதெல்லாம் கதையை இன்னும் சுவாரசியமா ஆக்கிடுச்சு. கடைசியில தற்கொலை கதைன்னு தெரிஞ்சிட்டாலும், அந்த கடைசி பத்தி ரொம்பவே வித்தியாசமா இருந்துச்சு.

    //மூக்கிலும் வாயிலும் சிறுகுடலின் பித்தம் வழிய//
    இதெல்லாம் இப்ப தான் முத தடவையா கேள்வி படறேன்.வாய் வழியா வந்துச்சுன்னா அந்த டேஸ்ட் அவ்ளோ நல்லாருக்காதுன்னு நெனக்கிறேன். இதுக்காச்சும் இதப் படிக்கிறவங்க ஒரு நாலு பேரு கிட்ட சொல்லி இன்னும் ஒரு நாலு பேரு(தற்கொலை எண்ணம் உள்ளவங்க) மனம் மாறுனா நல்லது தான்.
    :)

    பதிலளிநீக்கு
  10. சரி.. ஏன் இந்த பதிவு திடீர்னு ? எந்த சம்பவத்தின் பாதிப்பு இது ?

    பதிலளிநீக்கு
  11. நானும் தங்கமணி மாதிரியே.. அவுங்க நின்னுடுவாங்கன்னு எதிர்பார்த்தேன்.. :-(

    பதிலளிநீக்கு
  12. என்னன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன இது...என்னான்னு கேக்குறேன்........பாவங்க அந்த ரெண்டு புள்ளைங்க...இப்பிடிக் கொன்னுட்டீங்களே......இதெல்லாம் நல்லால்ல சொல்லீட்டேன்...ஆமா.....வீட்டுக்கு இன்னைக்குப் போங்க.....அடி காத்துக்கிட்டு இருக்கு.........

    பதிலளிநீக்கு
  13. இளவஞ்சி!

    கதை, வர்ணணை மற்றும் உரையாடல் - வழக்கம் போலவே அருமையான, யதார்த்தமான இளவஞ்சி டச்.

    ////அன்னைக்கு எட்டிப் பாக்கறதே ஒரு திரில்லா இருந்தது. ம்ம்ம் இன்னைக்கு எப்படி இருக்கும்னு தெரியலை!"
    /////
    வரிகளை படித்தவுடனே எனக்கு இது தற்கொலை முயற்சி தவறு என வலியுறுத்தும் கதை என்று நினைத்தேன்.

    தற்கொலைங்கறது உலகத்திலேயே மிகப்பெரிய, மிக மோசமான சுயநலச்செயல்.
    அதை எந்த காரணத்தினாலும் நியாயப்படுத்த எனக்கு மனம் வரவில்லை.

    கேட்க உரிமை இல்லையென்றாலும் .......
    'நீங்க இந்த கதையோட மறுபக்கத்த இவர்களின் பெற்றோர் பார்வையிலிருந்து எழுத வேண்டுகிறேன்'

    தியாக்

    பதிலளிநீக்கு
  14. இளவஞ்சி!
    //அதை எந்த காரணத்தினாலும் நியாயப்படுத்த எனக்கு மனம் வரவில்லை./// என்று சொன்னது என் கருத்து.
    இந்த கதை அதை நியாயப்படுத்துவதாக சொல்லவரவில்லை.

    தியாக்

    பதிலளிநீக்கு
  15. கைப்புள்ள,

    //இதுக்காச்சும் இதப் படிக்கிறவங்க ஒரு நாலு பேரு கிட்ட சொல்லி இன்னும் ஒரு நாலு பேரு// அடடா.. இது கருத்து!

    ராசா, என்ன செய்ய கதைக்கு அது தேவையா இருந்தது! ( அடிக்க வராதீக!!இந்த மாதிரி எத்தனை பதில்களை டீவீ பேட்டில டைரக்டரு சொல்லி பார்த்திருப்பீங்க! :) )

    ராகவன், //வீட்டுக்கு இன்னைக்குப் போங்க.....அடி காத்துக்கிட்டு இருக்கு// இதெல்லாம் போய் இப்படி வெளில சொல்லிக்கிட்டு!! ஹிஹி..

    தியாக், யாத்ரீகன்,

    உலகில் அது என்னவிதமான உன்னதமான உறவுகளாகவும் உணர்வுகளாகவும் இருந்தாலும் இருக்கும் போதும் இறந்தபின்னுமே அதற்கு பதிப்பும், புகழ்ச்சியும், இகழ்சியும் வியப்பும்! ஆனால் மரணத்தை நெருங்கும் அந்த கடைசிக்கட்ட பயணத்தில் இந்த உணர்வுகளுக்கு மதிப்பே இல்லை!

    கண்டிப்பா செத்துக்கொண்டிருக்கிறோம் என்ற நிலையில் இருக்கும் ஒருவனுக்கு இந்த உணர்வுகளைப்பற்றிய நினைவாவது இருக்குமா? இல்லை எல்லாமே Physiological changes தானா என்ற யோசனையில் எழுதியது. இது பெற்றவர்கள், மகள், மகன் என யார் சார்பிலும் இல்லை! பாறையில் போய் மோதப்போகிறவன் அந்த நொடியில் காதலியையா நினைத்திருப்பான்?

    அது எந்த காரணத்துக்காக இருந்தாலும் சாவை தேடிக்கொண்ட ஒருவனுக்கு யோசிக்கக்கூட முடியாத அர்த்தமற்ற நிலைதான் இறுதி என்பதே நான் சொல்ல வந்தது!

    உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  16. //( அடிக்க வராதீக!!இந்த மாதிரி எத்தனை பதில்களை டீவீ பேட்டில டைரக்டரு சொல்லி பார்த்திருப்பீங்க! :) )//

    நானும் பார்த்திருக்கேங்க! அப்ப கதைக்கு தேவைன்னா க்ளாமர் காட்டவும் தயங்க மாட்டீங்க...அப்படி தானே?(அட! கதையில தாங்க!)
    :)-

    பதிலளிநீக்கு
  17. கைப்புள்ள,

    // அப்ப கதைக்கு தேவைன்னா க்ளாமர் காட்டவும் தயங்க மாட்டீங்க...அப்படி தானே?(// அதானே! கதைக்கு தேவைன்னா செய்யவேண்டியதுதான்! ஆனா நான் செய்தால் அது கவர்ச்சி இல்லை.. கண்றாவி!! :)

    உம்ம அலும்பு தாங்கலை...!

    கட்டதொரைரைரைரைரைரைரை....

    பதிலளிநீக்கு
  18. இளவஞ்சி,
    என்னென்னமோ எழுதணும்னு தோணுது...
    ஆனா ஒண்ணும் எழுத முடியலையே!

    "அது எந்த காரணத்துக்காக இருந்தாலும் சாவை தேடிக்கொண்ட ஒருவனுக்கு யோசிக்கக்கூட முடியாத அர்த்தமற்ற நிலைதான் இறுதி என்பதே நான் சொல்ல வந்தது!"// போட்டு உடைச்சிட்டீங்க.

    on the lighter side: "அப்ப கதைக்கு தேவைன்னா க்ளாமர் காட்டவும் தயங்க மாட்டீங்க...அப்படி தானே?"(// - கைப்புள்ள, இந்தக் கதையில க்ளாமர் இல்லைன்னா சொல்றீங்க.(Engg மாணவனுக்கு இந்த biology lab விஷயம்லாம் எப்படிப்பா தெரிஞ்சிது? 12-ம் வகுப்பிலயா?) இன்னும் நிறையவே இருக்கே...

    எப்போதுமே ஆச்சரியம் என்னன்னா, sense of humour & seriousness = mysterious alchemy of Ilavanji !!!

    பதிலளிநீக்கு
  19. தற்கொலை தப்பு, இளசுகள் இப்படிச் செய்யக்கூடாதுன்னு எல்லாம் இங்கே மீட்டிங் நடக்கறது சந்தோஷம்.

    இதைப் பற்றி ஒரு கதை( நான் எழுதலைசாமீ)படிச்சேன், நாடகமாக்கூட போடலாமுன்னு சொல்லியிருந்தேனே.
    யாராவது, ஹூம்... யாராவது அது என்னா ஏதுன்னு கேட்டீங்களா? கேக்க மாட்டீங்களே.....

    சரி சரி , இங்கெ போய் பாருங்க.

    பதிலளிநீக்கு
  20. தருமி சார், //போட்டு உடைச்சிட்டீங்க. // பாருங்க.. இதை கதைல உணரச்செய்யாம பின்னூட்டத்துல சொல்லவேண்டியா போயிருச்சு! பாரதிக்கு சொன்னதுபோல எங்கயோ கோட்டை விட்டுட்டேன் போல!! :)
    //இன்னும் நிறையவே இருக்கே...// இதுவும் கதைக்கு தேவையா இருந்ததால.. ஹிஹி..

    துளசியக்கா! உங்க நாடகம் நடக்கும்போது எப்படியும் நேர்ல வந்து பார்கத்தானே போறோம்னு பேசாம இருந்துட்டோம்! ஹிஹி... (சுட்டிக்கு நன்றி )

    அடடா,, எத்தன ஹிஹி..!

    கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  21. வஷிசடர்கள் எல்லாம் பாரட்டிணப்பிறகு நான் என்ன சொல்ல எப்போவோ எங்கயோ படித்த வரிகள்.

    As I am thinking
    to commit suicide,
    I water the plant.
    Suddenly
    a hope sparkles inside.

    பதிலளிநீக்கு
  22. அந்த கடைசி பத்தி எழுத ஒரு அனுபவம் வேணாமா? என்னென்ன நடக்கும் எந்த மாதிரி உடம்பில் பாதிப்பு ஏற்படுத்தும் எல்லாமே ஒரு கற்பனையில் எழுதியதா அல்லது எங்கேனும் படித்தீர்களா?

    நான் படித்த வரையில் அந்த கடைசி பத்தி தற்கொலை தவறென்று புரிய வைக்கவில்லை. மாறாக அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் பிழைக்கவில்லை என்பதை உறுதிபடுத்துவதாக இருந்தது.

    மற்றபடி கதை ஒ.கே!

    பதிலளிநீக்கு
  23. நேரடியான, எளிமையான ஆனால் அழகிய விவரணை. கலக்கிட்டீங்க இளவஞ்சி, இதைத்தான் நான் நேத்தே சொன்னேன்.

    பதிலளிநீக்கு
  24. பட்டிணத்து ராசா,

    வருகைக்கு நன்றி!

    ****

    தயா,

    Dhanks! :)

    ****
    கார்த்திக்ராம்ஸ்,

    ஊக்கமளிக்கும் உங்கள் வார்த்தைகளுக்கு என் நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  25. நீங்க சொன்ன இடத்தில் கதை முடிஞ்சு போச்சு. ஆனாலும் முழுதும் படிக்க வைத்ததில்தான் உங்கள் வெற்றி. நல்லா இருந்தது இளவஞ்சி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு