முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'பத்து'ப்பாட்டும் எட்டுத்'தொகை'யும்

Image hosting by Photobucket

ஆன்மீகமும் அருமை தமிழிலக்கிய பாடல்களும் அதன் பொருள்விளக்கமும் என்று நிஜமாகவே மணந்துகொண்டு இருக்கும் தமிழ்மணத்தில் தமிழுக்கு தொண்டு செய்யாமல் இருந்துவிட்டால் அதன் பிறகு நான் வலைப்பதிந்து என்ன பயன்?

ராகவன், குமரன்... உங்களது பதிவுகளுக்கு இப்படியும் ஒரு கெட்டவிளைவு இருக்குமா என்ற பேரதிர்ச்சி உங்களை தாக்காமலிருக்க கந்தன் உங்களுக்கு அருள்புரிவாராக...

பெரிய மனசுவைச்சு மன்னிச்சுருங்க.. மயிலாரை விட்டு கொத்த விட்டுராதீகப்பூ!!!

'பத்து'ப்பாட்டு

ராகம்: கபோதி தாளம்: லோக்கல்

ஏஞ்சோக கதைய கேளு வலைக்குலமே!!!

நாலுநாளா வீட்டுக்குள்ள இருக்கமுடியல
கிச்சனோட கப்புரொம்ப தாங்கமுடியல
ஊருக்குபோன பொண்டாட்டிய திட்டமுடியல
எச்சத்தட்டு பாத்திரத்தை கழுவமுடியல

ஈமொய்க்க தட்டுங்க காய்ஞ்சுகெடக்குது
காபிடம்ளருல கரப்புங்க ஓடியாடுது
கரண்டில காளானு பூத்துக்கெடக்குது
ஆகமொத்தம் அடுப்படியே ஆடிக்கெடக்குது

மொதநாளு சாம்பாரு காரசாரங்க
அடுத்தநாளு ரசம்கூட ஓக்கேதானுங்க
நூடுல்ஸு ரெண்டுவேள பேஜாராச்சுங்க
தேடிவந்த பிஸ்ஸாவும் பீச்சிருச்சுங்க

ஊத்தறப்போ தோசமாவு வட்டமாச்சுது
எடுக்கறப்போ ஃபெவிக்காலு தோத்துப்போச்சுது
அல்பஆனியனால கண்ணுகரெண்டும் தாரையாச்சுது
குக்கருகூட எரிமலையா பொங்கிப்போச்சுது

அதிகாலையில பாலுவாங்க கண்ணுநோவுது
குனிஞ்சுநிமிந்து கூட்டும்போது முதுகுதெரிக்குது
நாலுகரண்டிக்கே முழு'விம்'மும் கரைஞ்சுபோகுது
ஜட்டிபனியனுங்க வீடுமுழுசும் பல்லைஇளிக்குது

வறசோத்துக்கு டொமெட்டோசாசு கொஞ்சம்ஓவரு
அஞ்சாநாளே அடிக்கிதுங்க லைட்டாஃபீவரு
கும்பிகாய்ஞ்ச என்நெலமை கிழிஞ்சநிஜாரு
கட்டுனவ இல்லைன்னா லைஃபேபேஜாரு

வருங்கால மணமகனே கொஞ்சம் காதைத்தொறப்பா
அடிபட்ட அண்ணன் சொல்லை நெஞ்சிலேத்தப்பா
சுடுசோறு ரசமாச்சும் வைச்சு பழகப்பா
கட்டையில போறமட்டும் கவலையில்லப்பா

எட்டுத்'தொகை'

ராகம்: வேறென்ன.. முகாரி தாளம்: வயித்துப்பாடு

சம்பளம்போட்ட அஞ்சாநாளு பாதியக்காணல
வாங்கிப்போட்ட ஃபிளாட்டுEMI கட்டிமாளல

கிரெடிட்கார்டு ரிமைண்டருகாலு கேக்கச்சகிக்கல
அதக்கட்ட அடுத்தலோனு சேங்சனாவல

ஆட்டோலோனில் காருஓட்ட மனசுமருகுது
பெட்ரோல்பங்ஃகில் நிறுத்தும்போது குலையறுக்குது

CTC கேக்கையில குஜாலாயிருக்குது
டேக்ஹோமு பார்க்கையில காத்துபோகுது

பத்துவருசமா TAXகணக்கு பூச்சிகாட்டுது
பேலன்சு பார்க்கையிலே மனசுநோகுது

"சம்பாதிச்ச காசையெல்லாம் என்னபண்ணற?"
எங்கப்பன் கேள்விக்கு பதிலுதெரியல

"பிடித்தம்போக அஞ்சாயிரத்துல குடும்பம் ஓடுச்சு"
எங்கம்மாவோட பிரம்மசூத்திரம் மண்டையிலேறல

சம்பாத்தியம் எதுக்குன்னு இன்னும் வெளங்கல
இருட்டுக்குள்ள குருட்டுவாழ்க்கை ஓட்டம் முடியல

- இலக்கியக்கபோதி இளவஞ்சி

கருத்துகள்

 1. இந்த பதிணென்கீழ்கணக்கு (10+8) பதிவை அறிவியல்/நுட்பம் என்று மிகச் சரியானபடி வகைப்படுத்திய நான் வாழ்க வாழ்க!!

  பதிலளிநீக்கு
 2. இளவஞ்சி.......இளவஞ்சி.....எனக்குப் பேச்சே வரலையே.....முதுகுக்குப் பின்னாடி இருந்து எட்டிப் பாத்த மயிலார் கனஜோரா ரசிச்சிருக்காரு. ரொம்ப நல்லா இருந்ததுன்னு என்னைய விட்டே சொல்லச் சொன்னாரு. இந்தக் காலத்திலயும் புதுமையான இலக்கியம் வளக்கும் இளவஞ்சியாசானுக்குப் பாராட்டு சொல்லச் சொன்னாரு. சொல்லீட்டேனய்யா! நல்லாருந்தது.

  பதிலளிநீக்கு
 3. பட்டால் தான் தெரியும் பாவிமகனுக்கு
  பெண்டாட்டி இல்லாதது கெட்டால்தான் தெரியும் பையனுக்கு துணையில்லாது இல்லாதது
  இல்ல நானும் எழுதிப் பார்த்தேன் அது வல்ல

  பதிலளிநீக்கு
 4. ஹாஹாஹா. எதன்னு சொல்றது. அத்தனையும் அருமை. காலைலயே சிரிக்க வச்சதுக்கு நன்றி இளவஞ்சி.

  எனக்கு ரொம்ப புடிச்சது,
  //**அல்பஆனியனால கண்ணுகரெண்டும் தாரையாச்சுது**//
  //**நாலுகரண்டிக்கே முழுவிம்மும் கரைஞ்சுபோகுது**//

  பதிலளிநீக்கு
 5. ஒரு இலக்கியமே
  இலக்கியம்
  படைக்கிறதே...

  அய்யோ...கவித..கவித...

  இப்படி ஒலக மகா காவியங்கள கணப்பொழுதில உருவாக்கும் உங்களுக்கு நம்ம மஞ்சத் துண்டு மகான் மூலமா ஒரு பட்டம் கொடுக்க ஏற்பாடு பண்ணீட வேண்டியது தான்.

  பதிலளிநீக்கு
 6. எல்லாப் பதிவையும்(நட்சத்திர குமரன்) படிப்பேன்னு நீங்க பின்னூட்டம் போட்ட போதே., இது வில்லங்கமாயில்ல இருக்குது?ன்னு நினைச்சேன். என் நம்பிக்கைய காப்பாத்திட்டிங்க நன்றி.

  //ஊத்தறப்போ தோசமாவு வட்டமாச்சுது
  எடுக்கறப்போ ஃபெவிக்காலு தோத்துப்போச்சுது
  அல்பஆனியனால கண்ணுகரெண்டும் தாரையாச்சுது
  குக்கருகூட எரிமலையா பொங்கிப்போச்சுது//

  இன்னும் அஞ்சாறு மாசம் ஊர்லயே இருந்துட்டு வாம்மா.... தங்கச்சி.

  பதிலளிநீக்கு
 7. எல்லாப் பதிவையும்(நட்சத்திர குமரன்) படிப்பேன்னு நீங்க பின்னூட்டம் போட்ட போதே., இது வில்லங்கமாயில்ல இருக்குது?ன்னு நினைச்சேன். என் நம்பிக்கைய காப்பாத்திட்டிங்க நன்றி.

  //ஊத்தறப்போ தோசமாவு வட்டமாச்சுது
  எடுக்கறப்போ ஃபெவிக்காலு தோத்துப்போச்சுது
  அல்பஆனியனால கண்ணுகரெண்டும் தாரையாச்சுது
  குக்கருகூட எரிமலையா பொங்கிப்போச்சுது//

  இன்னும் அஞ்சாறு மாசம் ஊர்லயே இருந்துட்டு வாம்மா.... தங்கச்சி.

  பதிலளிநீக்கு
 8. அடப்பாவிகளா!

  இந்த பதிவு என்ன "அறிவியல்/நுட்பம்" ஆ??!!

  அப்படிச்சொல்லிக்கறதுக்கு எனக்கும் புல்லரிப்பாத்தான் இருக்கு.. ஆனா என்ன செய்ய?! இந்த மனசாட்சி...

  ம்ம்ம்.. நகைச்சுவைக்கே நகைச்சுவை!!!

  10 + இருக்கு.. ஆனா ஒரு பின்னூட்டமும் காணோம்!!

  ராம்ஸ், எல்லாத்தையும் ஹைஜாக் பண்ணி உங்க பதிவுக்கு ஓட்டிக்கிட்டு போயிட்டீங்களா!!! :)

  பதிலளிநீக்கு
 9. கெளம்பிட்டாங்கய்யா, கெளம்பிட்... டாங்க.
  தலையில் அடித்துக் கொண்டு,
  உஷா

  பதிலளிநீக்கு
 10. நான் 11வது + போட்டேன். 1வது + (இல்லாட்டி 2வது +) போட்டதும் நானே. ஒன்னு வீட்டில. ஒன்னு ஆபிஸ்ல.

  இவ்வளவு அற்புதமா ஒன்னும் விளங்காத மாதிரி எழுதுனா என்ன பண்றது? + மட்டும் போட்டுட்டுப் போகவேண்டியது தான். :-)

  அப்புறம் நீங்க என்ன எழுதுனாலும் + போடறதுக்கு ஒரு நண்பர் குழாம் இருக்குன்னு நினைக்கிறேன். அவங்களும் படிக்காமலேயே + போட்டுட்டுப் போயிருப்பாங்க. எப்படி தெரிஞ்சதுங்கறீங்களா? எனக்கு அப்படி ஒரு அன்பர் கூட்டம் உண்டு. ஹிஹிஹி.

  பதிலளிநீக்கு
 11. Ennaiyya aniyaamaa irukku oru '+' podduddu 'comment' kodutheenee...enge pochu..unga moderation-a paarunga ilavanji :-))

  பதிலளிநீக்கு
 12. //"சம்பாதிச்ச காசையெல்லாம் என்னபண்ணற?"
  எங்கப்பன் கேள்விக்கு பதிலுதெரியல//
  தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்ன?:-))

  பதிலளிநீக்கு
 13. எல்லாப் பதிவையும்(நட்சத்திர குமரன்) படிப்பேன்னு நீங்க பின்னூட்டம் போட்ட போதே., இது வில்லங்கமாயில்ல இருக்குது?ன்னு நினைச்சேன். என் நம்பிக்கைய காப்பாத்திட்டிங்க நன்றி.

  //ஊத்தறப்போ தோசமாவு வட்டமாச்சுது
  எடுக்கறப்போ ஃபெவிக்காலு தோத்துப்போச்சுது
  அல்பஆனியனால கண்ணுகரெண்டும் தாரையாச்சுது
  குக்கருகூட எரிமலையா பொங்கிப்போச்சுது//

  இன்னும் அஞ்சாறு மாசம் ஊர்லயே இருந்துட்டு வாம்மா.... தங்கச்சி.

  பதிலளிநீக்கு
 14. பின்னூட்டமே யாரும் இடவில்லை என்ற தங்கள் குறையை போக்க வந்த ஆபத்பாந்தவனாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே ;-)

  நல்லாவும் இருக்கு இளவஞ்சி !!!

  பதிலளிநீக்கு
 15. பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்

  தலைப்பைப் பார்த்துவிட்டு ஏதோ இலக்கிய தொடர்புடைய பதிவுன்னு நினைச்சா, வயிறு குலுங்க சிரிக்க வச்சிட்டீங்க இளவஞ்சி.

  பதிலளிநீக்கு
 16. //இவ்வளவு அற்புதமா ஒன்னும் விளங்காத மாதிரி எழுதுனா என்ன பண்றது?//

  குமரன்! ஹிஹி.. என்ன விளையாட்டு இது??

  பதிலளிநீக்கு
 17. அப்படிப் போடு,
  அஞ்சு மாதம் கழிச்சி வந்தா வீடு வீடாவா இருக்கும்? நாலு நாள்ல கப்பு அடிக்கிதுங்கராரூ :-)

  பதிலளிநீக்கு
 18. ஆஹா! மறுபடியும் நாந்தேன் கொய்யானா?! ரொம்பநாளைக்கு முன்னால மாடரேசனை போட்டுட்டு அதைப்பார்க்காம பின்னூட்டம் வரலைன்னு அன்பு வாசக(!?) நெஞ்சங்களை கேட்டுட்டேனே?! என்னைக்குமே வராத போலிடோண்டு கூட வந்துபோயிருக்காப்புல...என்னே என் அறியாமை!!!

  ஏஜெண்ட்டு அது நீர்தானா? உம்மால மட்டும் எப்படியா அடுத்தவர் பதிவுக்கே ஆப்புவைக்க முடியுது?! அதுசரி..ஏஜெண்ட்டுன்னா அப்படித்தான் போல!

  ராகவன், சந்தோசம்.. இந்தவாரம் மயிலாருக்கு ஃபோரம்ல என்சார்பா ஒரு பிஸ்ஸா! :)

  என்னார், அங்கனையும் அனுபவம் பேசுதா? கவலைய விடுங்க.. ஒரு சங்கம் போட்டுறலாம்!

  சிவா, ஹிஹி.. இந்த இதுக்குத்தான் இங்க அடிக்கடி நான் வரனுங்கறது! நான் போட்ட மாடரேசன் எனக்கே மறந்துருச்சு! நன்றி...

  சுதர்சன், அதான் என் ரேஞ்சு தெரிஞ்சு எனக்குநானே 'இலக்கியகபோதி'ன்ங்கற பட்டத்தை வைச்சிருக்கேனே! இதைவிட ஏன் என்னை கேவலப்படுத்தப்பாக்கறீங்க?? :)

  ம்ம்ம்.. நற்கீரன் வாயால் புலவர் பட்டம்! :)

  அப்டிப்போடு.. உங்க நல்ல மனசுக்கு என்னைக்கும் நல்லா இருக்கனும்!! :) உங்க வீட்டுக்காரருக்கு எங்க பொ.ஊ.அ.சங்கம்(பொண்டாட்டியை ஊருக்கு அனுப்பியோர் சங்கம்) உறுப்பினர் சலுகை கொடுக்கிறது!!! நீங்க தங்கச்சிக்கு சொல்லற தகவலை பார்த்தா கண்டிப்பா சேருவாருன்னு நம்பறோம்!! :)

  உஷா, தலையில அடிச்சுக்கற நேரத்துல ரசத்துக்கு பெருங்காயம் தாளிச்சுப்போடுவாங்களாங்கற தகவலை கொஞ்சம் சொல்லுங்க!!!

  ராம்கி! அனேகமா அது Global Questionன்னு நினைக்கறேன்! :)

  பாலா! உங்களோட இந்த நல்ல மனசு இருக்கறவரை நான் எத்தனை டுபாக்கூர் இலக்கியம்வேனா படைக்கலாம் போல!! அடுத்தமுறை அடிவிழும்னு எனக்கு தெரியும்!!! :)

  சிபி, இலக்கிய தொடர்புடைய பதிவா? இங்கனயா? வெளங்கீரூம்!!! :)

  வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே!

  பதிலளிநீக்கு
 19. இன்னாபா..? நீ இளக்கியம் எய்தினா மட்டும் வாணான்னுவமா இன்னா?

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

சுடரும் ஒரு தீவட்டி தடியனும்...

வ ணக்கமுங்க! இத்தனை நாள் சுடர் பிடிச்சவங்களை எல்லாம் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்ததுல ஒன்னு மட்டும் புரிஞ்சது. அவிங்க எல்லாம் சுடருக்கு நல்லா எண்ணை விட்டு பிரகாசமா ஊருக்கு வெளிச்சம் போட்டுட்டு போயிருக்காங்க. தருமி சார் அடுத்து என் கைல கொடுத்ததுல நான் இப்போதைக்கு இருக்கற நெலமைல... அதாவது மூளையும் அதில் முனைப்பும் இல்லாம ஒரு விட்டேத்தியான வாழ்க்கைல இருக்கற... சரிங்க... நேராவே சொல்லிடறேன்... திங்கறதும் தூங்கறதுமா போட்டோல இருக்கற என் மூதாதையர் மாதிரி (விளக்கம் கீழே! ) வாழ்ந்துக்கிட்டு இருக்கறவன் கிட்ட கொடுத்ததால அதை திடீர்னு கிடைச்ச லைம்லைட்டா நினைச்சுக்கிட்டு சுடரை கொஞ்சம் கீழால இறக்கி என் மூஞ்சுக்கு மேல வெளிச்சம் படறமாதிரி கொஞ்ச நேரம் பிடிச்சிக்கலாம்னு... ஹி...ஹி... ஏற்கனவே பிரேமலாதாவோட தொடர் பதிவுக்கான அழைப்பு இன்னும் பாக்கி இருக்கு! சரி விடுங்க...அதை எத்தனை தடவை வேணா வாய்தா வாங்கி எழுதிக்கலாம்! அதுக்காக அவங்க திட்டுனாலும் பிரச்சனையில்லை ( நமக்கெல்லாம் Buffalo Skin! ). ஆனா சுடருக்கு வாய்தா வாங்கப்போய் பொசுக்குன்னு அணைச்சுட்டா நீங்க எல்லாம் என்னை வகுந்துருவீங்கன்ற ஒரு பயம

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு