முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தப்புன்னா திருத்திக்கனும்...

Image hosted by Photobucket.comஇத்தனைநாள் எழுதற பதிவுகளுக்கு வண்ணமா நல்ல நல்ல படங்களை கூகுளில் இருந்து உருவிப்போட்டபோது ஒன்னும் தெரியலை! ஆனா நேத்து ஆபீசுல Intelectual Property பத்தி ஒரு கூட்டத்துக்குபோன பிறகுதான் செய்யற தவறு புரிஞ்சது.


அதனால இனிமேல் பதிவுகளோட போடற படங்களுடன் நன்றி (அ) source எனப்போட்டு கூட சுட்டியைக்கொடுக்கறதுதான் சரியான வழின்னு தெரியுது. இதுக்கும் மேல ஏதாவது விசயம் இருந்தா தெரிஞ்சவங்க சொல்லுங்க. திருத்திக்கலாம்!


மன்னிக்கத் தெரிஞ்சவன் மனுசன்...
மன்னிப்பு கேக்கத்தெரிஞ்சவன் அதைவிட பெரிய மனுசன்... அதுனாலதான்... ஹிஹி...


அது சரி.. இந்த படம் எப்படி இருக்கு?


(Picture Source: www.msgr.ca/msgr-humour/penance%2011.htm)

கருத்துகள்

 1. You have a really good blog here. Do you have to work hard to get your content?
  Keep up the good work. I'll keep you bookmarked.

  I have a online graduate degrees site/blog. It pretty much covers
  online graduate degrees related stuff.

  Have a look see when you have a few minutes :-)
  Bye for now.

  பதிலளிநீக்கு
 2. // மன்னிப்பு கேக்கத்தெரிஞ்சவன் அதைவிட பெரிய மனுசன்... அதுனாலதான்... ஹிஹி...//
  நேத்து நைட் விருமாண்டி பாத்தீங்களா ? படம் பதிவோட அழகா பொருந்தியிருக்கு (10 க்கு ஏழு பொருத்தம் சரியா இருக்கு)

  பதிலளிநீக்கு
 3. idhu enna ilavanji, mobile - mannippa????
  nalla irukkey..

  mannichutten ungalai.. :)
  naan manushan, naan manushan :)

  பதிலளிநீக்கு
 4. //நேத்து நைட் விருமாண்டி பாத்தீங்களா //

  Ganesh thambi.. naanum paarthuttu dhan iruken... ippovellam ellaathukkum cinema va izhukureenga.. romba kettu poiteenga thambi..avlo dhan solluven..

  பதிலளிநீக்கு
 5. ஐயா இளவஞ்சி,
  இந்தப் படம் சுட்ட இடம் சொல்லலை!!

  அது சரி, மேல ஒருத்தர் ஏன் "naan manushan, naan manushan :)" அப்டின்னு இப்படி அடிச்சு சொல்றாரு; நம்ம என்ன இல்லன்னா சொன்னோம்?!

  பதிலளிநீக்கு
 6. சாரீஈஈஈஈஈஈஈஈஈஈ இளவஞ்சி, 'போட்டோ தொட்டி'யைப் பிறகுதான் பார்த்தேன்!

  பதிலளிநீக்கு
 7. கணேசு... விருமாண்டி படம் மறந்துருச்சி. ஆனா இந்த வசனம் தான் மனசில ஆழப்பதிச்சிருச்சு
  //10 க்கு ஏழு // தாராள மனசையையா உமக்கு! பொருந்தாத அந்த மிச்சம் 3 அந்த பொண்ணுக்கும் எனக்கும் இருக்கற அழகு வித்தியாசமா?!

  VM.. சரி விடுங்க.. நீங்க மனுசன் தான்!... ஏதோ எங்களை மாதிரி பெரியமனுசங்க இதை சொன்னாத்தான் உண்டு.. :)

  தருமி.. இதுவும் ஒரு விசயம் தான். இனிமே சுட்டியை படத்துக்கு கீழயே போட்டுடறேன்!

  பதிலளிநீக்கு
 8. ilavanji,

  Anniyannukku vakkumoolam kudithuteengala???

  yenna dhandani kudutharu

  :-)

  THYAG

  பதிலளிநீக்கு
 9. //10 க்கு ஏழு // தாராள மனசையையா உமக்கு! பொருந்தாத அந்த மிச்சம் 3 அந்த பொண்ணுக்கும் எனக்கும் இருக்கற அழகு வித்தியாசமா?!

  நீங்க ரொம்ப அழகு சாரே உங்களுக்கான அழகு ரேட்டிங் 10/10 போடலாம்.

  பொண்ணு பேரு, பின்னாடி நிக்கிற வண்டி அப்புறம் Intelectual Property இவற்றுக்கான சரியான விளக்கமில்லை அதான் மூணு பொருத்தம் இல்லைன்னு சொன்னேன்.

  பதிலளிநீக்கு
 10. இளவஞ்சி,

  என் பதிவுகள்ல பாத்தீங்கன்னா, சுட்ட படத்து மேல எலிய வச்சீங்கன்னா (க்ளிக்க வேண்டாம், அப்படியே தெரியும்) img crtsy : அப்படீன்னு சோர்ஸ் தெரியும்.. அதனால எதோ ஒரு வகையில நன்றி சொல்லவேண்டியது முக்கியம்தான்்

  பதிலளிநீக்கு
 11. இணையத்துல படம் உருவற கோயிஞ்சாமிக இத உணருவாகலா அப்பு?

  பதிலளிநீக்கு
 12. முகமூடி, உங்களோடது சரியா வரும்னு நினைக்கறேன். நன்றி!

  இங்கயும் கோயிஞ்சாமியா? ஏனப்பு சின்னவரை கடுப்பேத்தறிங்க?!

  பதிலளிநீக்கு
 13. கணேஷ், உங்களுக்கு தேவையான மேட்டரு இங்க கிடைக்கும்னு நினைக்கறேன். நானே நிறையா இங்க இருந்துதான் உருவுனேன்!

  http://www.wipo.int/about-ip/en/athome.htm

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

சுடரும் ஒரு தீவட்டி தடியனும்...

வ ணக்கமுங்க! இத்தனை நாள் சுடர் பிடிச்சவங்களை எல்லாம் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்ததுல ஒன்னு மட்டும் புரிஞ்சது. அவிங்க எல்லாம் சுடருக்கு நல்லா எண்ணை விட்டு பிரகாசமா ஊருக்கு வெளிச்சம் போட்டுட்டு போயிருக்காங்க. தருமி சார் அடுத்து என் கைல கொடுத்ததுல நான் இப்போதைக்கு இருக்கற நெலமைல... அதாவது மூளையும் அதில் முனைப்பும் இல்லாம ஒரு விட்டேத்தியான வாழ்க்கைல இருக்கற... சரிங்க... நேராவே சொல்லிடறேன்... திங்கறதும் தூங்கறதுமா போட்டோல இருக்கற என் மூதாதையர் மாதிரி (விளக்கம் கீழே! ) வாழ்ந்துக்கிட்டு இருக்கறவன் கிட்ட கொடுத்ததால அதை திடீர்னு கிடைச்ச லைம்லைட்டா நினைச்சுக்கிட்டு சுடரை கொஞ்சம் கீழால இறக்கி என் மூஞ்சுக்கு மேல வெளிச்சம் படறமாதிரி கொஞ்ச நேரம் பிடிச்சிக்கலாம்னு... ஹி...ஹி... ஏற்கனவே பிரேமலாதாவோட தொடர் பதிவுக்கான அழைப்பு இன்னும் பாக்கி இருக்கு! சரி விடுங்க...அதை எத்தனை தடவை வேணா வாய்தா வாங்கி எழுதிக்கலாம்! அதுக்காக அவங்க திட்டுனாலும் பிரச்சனையில்லை ( நமக்கெல்லாம் Buffalo Skin! ). ஆனா சுடருக்கு வாய்தா வாங்கப்போய் பொசுக்குன்னு அணைச்சுட்டா நீங்க எல்லாம் என்னை வகுந்துருவீங்கன்ற ஒரு பயம

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு