தவிர்த்த அழைப்புகள்

திங்கள், மே 09, 2005

Image hosted by Photobucket.com


அவசியம் வரணும் நீங்க...!
நான் இல்லாமலா? அவசியம் வரேங்க...!

உங்களைத்தான் ரொம்ப எதிர்பார்த்தேன்...!
ஸாரி வரமுடியலை..!

கிழிக்க மனமின்றி
சேர்ந்துவிட்ட அழைப்பிதழ்கள்
தேங்கிக்கிடக்கின்றன

அசட்டுப்புன்னகையோடு
வாயளவில் உறவாடும்
வெற்று வார்த்தைகளைப்போலவே

மேஜைமீதும் மனதிலும்

விரும்பக்கூடியவை...

5 comments

 1. அப்புறப் படுத்திவிட்டு...
  பார்க்கவேண்டியதுதானே அடுத்த வேலையை?!

  பதிலளிநீக்கு
 2. அதுசரி..

  அதுமுடியாதனால தானே இப்படி பொலம்பறேன்!

  பதிலளிநீக்கு
 3. "கிழிக்க மனமின்றி" அங்கேயே தெரிஞ்சு போச்சே சார் உங்க நல்ல மனசு அப்புறமென்ன வாயளவில் உறாவாடறது.....

  பதிலளிநீக்கு
 4. கனேஷ்.. கவிதை சொன்னா அனுபவிக்கனும்.. ஆராயக்கூடாது :) சும்மா தமாசுங்க..

  போகமுடியாதுன்னு தெரிஞ்சும் "கண்டிப்பா வரேங்க.."ன்னு டகால்ட்டி காட்டறோமில்ல.. அதைதாங்க சொன்னேன்...

  பதிலளிநீக்கு
 5. தேவலப்பா...........என்னைவிட இன்னும் கொஞ்சம் அழகாயிருக்கே.... ஐசுவரியா ராய் மாதிரி சாமானியங்க யாராச்சும்

  'லவ்வு கடதாசி' எழுதலாம்.

  அது சரி கவுதை இன்னாமே தீர்ந்துடிச்சா?

  சும்மா......... இறக்கிவுடும்மா.

  தெனவா இருக்கு.

  பதிலளிநீக்கு

Like us on Facebook

Flickr Images