முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சோமபானமும் ஒரு வாலிப விருந்தும்!

Image hosted by Photobucket.com

ஓசியில் சரக்கடிக்ககூட நேரத்திற்கு போகாத ஒரு பனானா சோம்பேறியை நீங்கள் பார்த்ததுண்டா? அது இந்த உலகத்திலேயே நான் ஒருத்தனாய்தான் இருப்பேன். சரியாய் 8 மணிக்கு ராமு மெஸ்சுக்கு வரச்சொன்ன மக்களின் பேச்சை மறந்தது என் தப்புதான். ஆனால் அதற்கு ஒரு சரியான காரணம் இருந்தது. உங்கள் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் சொல்லுங்கள். ஒரு டாப் கிளாஸ் ஃபிகரிடம் 2 மணி நேரம் கடலை போட சான்சு கிடைத்தால் நீங்களும் இதைதானே செய்வீர்கள்? அதுவும் எந்தமாதிரி ஃபிகர்? ஸ்டெப்பி கிராப்பு, சானியா மிஸ்ரா, நயன்தாரா(ஹிஹி...அடிக்கடி இப்போ கனவுல வந்து "ஒரு வார்த்த பேச காத்திருந்தேன்"னு டார்ச்சர் பண்ணறாங்க!) ராய், ஜெனிபர் லோபஸ்(என்னது யாரா? வழவழான்னு இருக்கற இடுப்பை தையல் மெசினுல ஊசி போய்வர வேகத்துல ஆட்டிகிட்டு லபோதிபோன்னு பாடிக்கிட்டு(அது யாருக்கு வேணும்?!) ஆடுவாங்களே!!) இவங்க எல்லாத்தையும் புடிச்சி ஒரு மிக்ஸில போட்டு ஒரு நிமிசம் அடிச்சி எடுத்த கலவையா ஒரு பிகர் இருந்தா எப்படி இருக்குமோ அப்பிடி!! மனசுல ஏதாவது உருவம் தோணியிருக்கனுமே! பாட்டு கூட வருமே... "கட்டுனா இவள கட்டனுண்டா.. இல்ல கட்டுனவன் ......... ........ ........." Fill in the blanks நம்ப கானா அல்வாசிட்டி.விஜய் சரக்கு! சும்மா நினைக்கும் போதே ஒரு கிளுகிளுப்பு கால் கட்டைவிரல் நகத்துல இருந்து உச்சிமண்டை வரைக்கும் ஓடுதா இல்லையா? அப்போ 2 மணி நேரம் கடலை வறுத்தவனுக்கு எப்படி இருக்கும்? ஆனா நடந்த கதையே வேற! ஊருக்கு போக ரயில்வேஸ்டேசன் வரைக்கும் துணைக்கு வர அவள் அழைத்தபோதே நான் கொஞ்சம் வெவரமா இருந்திருக்கலாம்!

அவள்: நான் என் ஹேண்ட்பேக்க எடுத்துக்கறேன். நீ அந்த 2 சூட்கேசையும் லெதர்பையும் எடுத்துக்கறியா?
நான்: அதுக்கென்ன? இதோ எவ்வளவு ஈஸியா தூக்கறேன் பாரு!
அவள்: அய்யோ நீ கூட இருக்கும் போதுதான் ரொம்ப ஹெல்ப்புல்லா இருக்கு! தாகமா இருக்கு...
நான்: அப்பவே நான் 2 பாட்டில் தண்ணி வாங்கிட்டேன். கூட இந்த பெப்சியும் வச்சிக்க..
அவள்: ம்ம்ம்... ரயில்ல நீ இல்லாம ரொம்ப போர் அடிக்கும்
நான்: அதுக்குதான் பாரு... சிட்னிஷெல்டன் 2 வாங்கி இருக்கேன்...
அவள்: ஹை.. நீன்னா நீதான். புக் படிச்சிகிட்டே சூடா காபி குடிச்சிகிட்டே போனா சூப்பரா இருக்கும்....
நான்: அதுக்குதான் பாரு ப்ளாஸ்க்குல 2 காபி வாங்கி இருக்கேன்... கூட இந்த காட்பரீஸ் சாக்கலேட் பாக்ஸும் வச்சிக்க..
அவள்: மை காட்! யு ஆர் sooooooooooo cute!!!!!
இப்படி புள்ளைங்களுக்கு பெட்டி தூக்கறது காலேஜ்ல தெரிஞ்சதுனா அவ்வளவுதான்! ஓட்டியே கிழிச்சு காயப்போட்டுடுவானுங்க. இதுக்கெல்லாம் பயந்தா முடியுமா? துப்புக்கும் கிண்டலுக்கும் பயந்தா அவன் ஒரு சரியான கடலை நிபுணனே கிடையாது. ஒரு வழியா சிவப்பு சட்டை போடாமலேயே போர்ட்டர் வேலை பார்த்து, 327 ரூபாய்க்கு தண்டமும் அழுது திரும்பி வரும்போதுதான் போன வாரம் அம்மாவை திட்டிக்கொண்டே பஸ்ல ஏத்திவிட்டது ஞாபகத்துக்கு வந்து மனசுக்குல்ல வந்து ஒரு குண்டூசி எடுத்து லைட்டா குத்துச்சி....ம்ம்ம் பரவாயில்ல.. அதுனால என்ன? வரப்போற மருமகளுக்கு செஞ்சா அம்மா கோவிச்சிக்கவா போறாங்க?? ஹிஹி... நமக்கு கொஞ்சம் தன்னம்பிக்கை அதிகமுங்க!

அடடா.. கதை எங்கயோ போயிடிச்சி பாருங்க. இந்த ஃபிகர பாக்காமலேயே, இவகூட பேசாமலேயே, இவகுரல கேக்காமலேயே லவ் பண்ணற ஒரு கோக்குமாக்கான ஆசாமி எங்க கூட்டதுல இருந்தான். அவன் பேரு விவேக். இவளோட அண்ணன் பேரும் விவேக்காம்! அதுக்காக அவன் குடுக்கற பார்ட்டி தான் நான் மேல சொன்னது! இது எப்படி இருக்கு? கோவை ராமு மெஸ்னா ஏதோ இட்டிலி, தோசை மட்டும் கிடைக்கற இடமா நெனச்சிக்காதிங்க... நாம சரக்க மட்டும் வாங்கிகிட்டு போயிட்டம்னா ப்ளாஸ்டிக் டம்ளரு, ஐஸு, வாட்டர் பாட்டல், சிப்ஸூ, சோடா, ஒப்பனரு, தீப்பெட்டி, காரசுண்டல், சிக்கன் வருவல், மட்டன் கொத்சு, சில்லி கோபி, சிக்கன் 65, மட்டன் கீமா தோசை... அடடா... அப்படியே full மெனுகார்டையும் சொல்லிருவேன் போல... எல்லாம் கிடைக்கும். மங்க்கானும் மாட்டானும் தான் எங்க பேவரைட்... old monk and beef!!

10 மணிக்கி போய் சேர்ந்தப்ப பசங்க 4 ரவுண்டு முடிச்சிட்டனுங்க... பசங்கன்னா வேற யாரும் இல்லைங்க. விவேக், சங்கர், முரளி மற்றும் காந்தி(பேர பாத்தீங்களா?! அவங்க அப்பாம்மா என்னத்த நெனச்சு வச்சாங்களோ!). அந்த விவேக்குக்கு என்மேல எப்பவுமே ஒரு கடுப்பு கலந்த பாசம். ஏன்னா நம்ப ஃபிகர பத்தின தகவல் சுரங்கம் நாந்தான்னு அவனுக்கு தெரியும். அரை மப்புல என்னை பார்த்ததும் அவன் கேட்டது... " என்னடா.. உன் தங்கச்சிய்ய ஒழுங்கா அனுப்பிச்சி வச்சயா?" எனக்கு வந்த கடுப்புல முன்னாடி ஒரு டம்ளர் புல்லா ஊத்திவச்சிருந்தத அப்படியே வாயில கவுத்துகிட்டேன். சும்மா 2 GSLV ராக்கெட்ட ரெண்டு காதுக்குள்ளயும் விட்டு அது அப்படியே தொண்டை வழியா இறங்கி வயித்துக்குள்ள போய் வெடிச்சாமாதிரி ஒரு ஃபீலிங்! அப்பறம்தான் தெரிஞ்சது அது மிக்ஸிங் பன்னாம வச்சிருந்த ரா ரம்முன்னு. அடிவயத்துல இருந்து ஒரு தீ அப்படியே லைட்டா உடம்பெல்லாம் பரவ ஆரம்பிச்சது. விரல்நுனிகளும் காதுமடலும் அப்படியே பறபறங்குது. மக்கள் எல்லாரும் அப்படியே பேஸ்த் அடிச்சுப்போய் பாக்கறானுங்க... "அடப்பாவி... ஒரு கோட்டர் ரம்ம இப்படி கவுத்திக்கிட்டயே... மனுசனா நீ?"

ஒரு மணி நேரம் போச்சுது... அப்பறம் ஆரம்பிச்சது கூத்து... வெளிய வந்து ஒரு தம் பத்தவச்சி இழுக்கலாம்னு வாய்கிட்ட கொண்டுவந்தா ஏதோ செவப்பா தெரியுது... மாத்திபுடிச்சிருக்கேன்! மப்பு ஏறிடிச்சுடோய்!!! மெஸ்ஸ விட்டு வெளிலவந்து லெப்டுல திரும்புனா கோவை ரயில்வேஸ்டேசன். இங்க தானெ ஒரு புள்ளய ஏத்திவிட்டேன்...ஆங்.. ஞாபகம் வருது... "அடேய் விவேக்கு... இனிமே அவள பாக்காத... நான் அவள கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்.. இனிமே அவ உனக்கு அண்ணீ... எங்க சொல்லு... அண்ண்ண்ணீ...." செவத்த புடிச்சிகிட்டு தின்னது எல்லாம் வாந்தியா எடுத்து ரோட்டுக்கு சோறு போட்டுகிட்டு இருந்த அவன்... வெறும் காலுலயே 8 போட்டுகிட்டு என்னை பார்த்து வந்துகிட்டு இருந்தான்..."ழேய்..துழோகி.. உன்ன கொழ பன்ழ்லாமெ விடமாத்தேம்ம்.." பின்ன..? ஓசில நல்லா அவன் காசுல குடிச்சிட்டு அப்பறம் அவன் லவ் பண்ணற பொண்ணப்பத்தி இப்படி சொன்னா சும்மா இருப்பானா? அவன் துரத்த நான் ஓட மத்தவங்க எங்கள அடக்கப்பார்க்க நடுரோட்டில விழுந்து புரள ஆரம்பித்தோம்... என்ன குத்தவந்த அவன் தவறி பக்கத்துல இருந்த முரளி முகத்துல கைய வீச அவன் மூக்குல ரத்தத்தோட "என் அப்பா கூட என்ன இப்படி அடிச்சதில்லைனு" ஓன்னு அழ ஆரம்பிச்சான். நாங்க எங்க சண்டைய மறந்து அவன சமாதானபடுத்த ஆரம்பித்தோம். நடுரோட்டுல இஞ்சினியரிங் படிக்கற பசங்க நாங்க இருந்த நிலமைய அன்னைக்கு அப்துல்கலாம் பார்த்திருந்தாருன்னா இன்னைக்கு இளயசமுதாயத்த நம்பி ஜனாதிபதியாவே ஆகியிருக்கமாட்டாரு!

11 மணிக்குமேல பஸ் கிடையாது. இப்படியே வீட்டுக்கும் போகமுடியாது. எங்கள பெத்தவங்க பாவம் நாங்க கம்பைன்ட் ஸ்டடி பண்ணி அறிவ வளர்த்தப்போறோம்னு நிம்மதியா தூங்கிகிட்டு இருப்பாங்க... ஹட்கோல பசங்க தங்கி படிக்கறதுக்காக வாடகைக்கு எடுத்திருந்தா வீடுதான் ஒரே தஞ்சம்! அப்படியே ஒருத்தன் மேல ஒருத்தன் தொங்கி சாஞ்சி 2 காலும் ரோட்டுல கோடு போட அப்படியே உப்பிலிபாளயம் தாண்டி UMS வந்துட்டோம். அதுவழியாதான் திருப்பூர் பஸ்செல்லாம் போகும். அதுல ஏறி அவனாசி டிக்கட்டு வாங்குனா ஹட்கோல இறக்கிவிட்டுடுவான்! நடுரோட்டு நின்னு டிரைவர் கிட்ட திட்டு வாங்கி எல்லோரும் ஏறதுக்குள்ள அவருக்கு பிரசரு ஏறிக்கிச்சு... உள்ள உக்கார இடமில்லை. கல்யாணநாள்போல. ஆளாளுக்கு ஒரு கம்பிய பிடுச்சு தொங்க ஆரம்பிச்சோம். முரளி மூஞ்சி வீங்கிப்போய் நிக்க, நானும் விவேக்கும் ஒருத்தனை ஒருத்தன் மொறச்சபடி நிக்க, காந்தி ரொம்ப பொறுப்பா கண்டக்டர பார்த்து ஒரு வழி வழிஞ்சான்.
கண்டக்டர்: யாருப்பா டிக்கட் எடுக்கனும்?
காந்தி : சாழ்..நாங்கதாழ்ன்...
கண்டக்டர்: எத்தன?
காந்தி : தெழிழ்ழயே..
கண்டக்டர்: 5 பேரு இருக்கீங்க... 40 ரூபா எடு..
காந்தி : டிக்கட் எழுக்கமுடியாது சாழ்...
கண்டக்டர்: ஏம்பா?
காந்தி : சொழ்ன்னா கேளுங்க சாழ்.. எடுக்க முழிய்ழாது...
கண்டக்டர்: என்னாங்கடா? தண்ணிய போட்டுகிட்டு ரவுசா?
காந்தி : ரெண்டு கையும் மேழ புழிச்சிகிட்டு இழுக்கேன்.. எழுத்தா விழுந்த்துடுவேன்!!
கண்டக்டர்: அட குடிகார பசங்களா... டிக்கட்டுக்கு காசகுடுங்கடா..
காந்தி : முழியாது சாழ்... கைய எழுத்தா கீழ விழுந்த்துடுவேன்..
கண்டக்டர்: நாசமா போச்சி... இந்தா பாக்கட்டுல எவ்வளவு வச்சிருக்க?
அவரு எவ்வளவு எடுத்தாரு..எத்தன டிக்கட்டு குடுத்தாருன்னு அவருக்குதான் வெளிச்சம்! ஹட்கோல இறக்கிவிட்டுட்டு போனபிறகுதான் தெரிஞ்சது. முரளி வாட்ச்ச எவனோ பஸ்லயே கெளப்பிட்டான்னு!! ஒருமாதிரியா வீட்டை கண்டுபிடுச்சி அதைதொறக்கதுக்கு விட்ட அளப்பரைல பக்கத்துல எல்லாம் லைட்டு எரிய ஆரம்பிச்சது... எவனோ எவனையோ திட்டாரான்னு நெனச்சிக்கிட்டு உள்ள போய் அங்கங்க விழுந்ததுதான் தெரியும்... காலைல எழுந்து பார்த்தா ஒவ்வொருத்தன் உடம்புலயும் சிராய்ப்பு.. சட்டை புல்லா அழுக்கு... மண்ணு... எல்லாம் ரோட்டுல கெடச்ச பரிசுகள்! அப்பறம் அன்னைக்கு ஒருத்தனை ஒருத்தன் பார்த்து சிரிச்ச சிரிப்பு இன்னும் நினைவுல இருக்கு....

ம்ம்ம்... அப்பன் காசுல குடிச்சதுல இருந்த சந்தோசம் இப்போ எவ்வளவு சம்பாதிச்சி சொந்த காசுல குடிச்சாலும் 10% கூட வரமாட்டேங்குது.. அது ஏங்க?

நிற்க: அந்த ஃபிகர அப்பறம் யாரு கல்யாணம் பண்ணான்னு கேக்கறீங்களா? நாங்கெள்ளாம் தக்கி முக்கி அரியர் எல்லாம் முடிக்கறதுக்குள்ள அவ ஒரு அமெரிக்கா மாப்பிள்ளய கட்டிகிட்டு போய் புள்ளயும் பெத்து செட்டில் ஆகிட்டா!!!

மறுபடியும் நிற்க: அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கோயம்புத்தூர்ல விவேக்குக்கு கல்யாணம். கண்டிப்பா முந்துனநாளு சோமபானமும் சுராபானமும் ஓடும். இந்த கதைய மறுபடியும் அங்க கெளறப்போறதா முடிவு :)

மறுபடியும் மறுபடியும் நிற்க: தலைப்பு ஒரு மாதிரியா இருக்கேன்னு மொனங்காதிங்க! "மாமனாரின் இன்ப வெறி", "அஞ்சரைக்குள்ள வண்டி" மாதிரி ஒரு கவர்ச்சியா வைக்கலாம்னு... ஹிஹி...

கருத்துகள்

  1. //அப்பன் காசுல குடிச்சதுல இருந்த சந்தோசம் இப்போ எவ்வளவு சம்பாதிச்சி சொந்த காசுல குடிச்சாலும் 10% கூட வரமாட்டேங்குது.. அது ஏங்க?//

    ம்ம்.. அப்பன் காசு என்ன? ஓசியில குடிச்சாலே அந்த சந்தோசம் தனி தான். சம்பாத்திச்சி சொந்த காசுல குடிச்சா நமக்கே வலிக்கும்ல... அதுக்கு தான்.

    //தலைப்பு ஒரு மாதிரியா இருக்கேன்னு மொனங்காதிங்க! "மாமனாரின் இன்ப வெறி", "அஞ்சரைக்குள்ள வண்டி" மாதிரி ஒரு கவர்ச்சியா வைக்கலாம்னு... ஹிஹி... //

    அப்புறம் காசிகிட்ட பதிவை தூக்க ரெக்கமெண்ட் பண்ணுவோம்ல.

    சுவாராஸ்யமாக சொல்லும் எழுத்து ஸ்டைல். நல்லாயிருக்கு. கண்டினியூ.

    பதிலளிநீக்கு
  2. போட்டோவுல ஐயா எங்க இருக்கீக?
    -முரசு

    பதிலளிநீக்கு
  3. இந்த இன்ஜினியரிங் பசங்க எல்லாரும் காலேஜ் வாழ்க்கையில யாராவது ஒரு பொண்ணுக்கு ஒரு தடவையாவது பொட்டி தூக்கி இருப்பானுங்க போல...(பாம்பின் கால் பாம்பறியும்..)

    பதிலளிநீக்கு
  4. பதிவின் பல இடங்களில் என்னை மறந்து சிரித்தேன்

    பதிலளிநீக்கு
  5. சுரேஷ்: இதெல்லாம் அந்தகாலத்து ஆதங்கத்துல எழுதுனது. கல்யாணத்துக்கு வீட்டுக்காரம்மாவும் கூடவராங்க! அதனால தண்ணிக்கும் வாந்திக்கும் இந்த தடவை சான்சே இல்லை. அதுபோக என் கல்யாணத்துக்கு பிறகு தம்மாவது! தண்ணியாவது!! எல்லாத்துக்கும் தடா!
    விஜய்: பலான படங்களை பத்தி ஒன்னு எழுதலாம்னு இருந்த்தேன். அதுக்குள்ள காசி காதுல விசயத்தை போட்டுட்டீங்களா?
    முரசு: இருக்கறதுலயே சூப்பர் பர்சனாலிட்டி யாருன்னு தெரியலயா? லெப்ட்சைடுல பர்ஸ்ட்டா நிக்கறேன் பாருங்க!
    அனானிமசு:பெட்டி தூக்காம ஒருபய கடலை போட்டிருக்கமுடியாது :)
    KVR: நன்றி.

    உங்கள் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. ராமு மெஸ்: ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! ;)

    --பாண்டி

    பதிலளிநீக்கு
  7. //இருக்கறதுலயே சூப்பர் பர்சனாலிட்டி யாருன்னு தெரியலயா? லெப்ட்சைடுல பர்ஸ்ட்டா நிக்கறேன் பாருங்க!//
    தண்ணியடிச்சே இப்பிடியெண்டா தண்ணியடிக்காம ஆரோக்கியமா இருந்தா உடம்பு எப்பிடி இருந்திருக்கும்?

    உங்கட பதிவு அருமையா இருக்கு. பழைய ஞாபகங்கள சொல்லிற முறைதான் முக்கியம். அது உங்களுக்கு கைவந்த கலைதான்.

    பதிலளிநீக்கு
  8. இளவஞ்சி அண்ணே! நீங்க பலான பதிவு போட்ட நாங்க எல்லாரும் படிச்சி பாத்து தான் காசிகிட்டே போட்டு தாக்குவோம் ;-) :-) :-) பின்னே யாம் பெற்ற இன்பம் யாரும் பெறக்கூடாது தலீவா.....

    அப்புறம் அந்த போட்டோவில 'காதல் FM'மணிகண்டன் ரேஞ்சுல தான் இருக்கீங்க.

    // கல்யாணத்துக்கு வீட்டுக்காரம்மாவும் கூடவராங்க! அதனால தண்ணிக்கும் வாந்திக்கும் இந்த தடவை சான்சே இல்லை. அதுபோக என் கல்யாணத்துக்கு பிறகு தம்மாவது! தண்ணியாவது!! எல்லாத்துக்கும் தடா!//

    சோமபான வாலிபவிருந்துல மீந்து போனது பெரிய தொப்பையா இருக்குமே? சே! எல்லாருக்கும் கல்யாணம் ஆன இந்த மாதிரி உரிமைகள் ஏன் தான் செல்லமா பறிக்கப்படுதோ?

    பதிலளிநீக்கு
  9. ///ம்ம்ம்... அப்பன் காசுல குடிச்சதுல இருந்த சந்தோசம் இப்போ எவ்வளவு சம்பாதிச்சி சொந்த காசுல குடிச்சாலும் 10% கூட வரமாட்டேங்குது.. அது ஏங்க?///

    ம்ம்ம் .. சரிதான் .. :-)

    பதிலளிநீக்கு
  10. கலக்கல் ராசா...

    பதிலளிநீக்கு
  11. இந்த ராமு மெஸ்ஸுக்காரங்கள்ளாம் சேந்தா ஒரு பெரிய புராணமே எழுதிடலாம் போலிருக்கே! :-) அந்த மெஸ்ஸுக்கு மேல ஒரு 'பார்' இருக்குமே, அங்கந்த அனுபவம் எப்படி? ;-)

    பதிலளிநீக்கு
  12. பாண்டி, விஜய், வசந்தன், முத்து, பாலாஜி-பாரி, இராதாகிருஷ்ணன் - கருத்துக்களுக்கு நன்றி. ராமு மெஸ் மேல இருக்கற பார்லயும் இந்த உலகம் உய்ய நாங்கள் நடத்திய கலந்துரையாடல்கள் உண்டு. ஆனா அதையும் எழுதுனா அப்பறம் என்னை வசந்தமாளிகை சிவாஜி ரேஞ்சுலதான் பாப்பிங்க :)

    பதிலளிநீக்கு
  13. மேலே பாம்பின் கால் பாம்பறியும்ன்னு என்னையும் சேர்த்து தான் சொன்னேன்...ஹி..ஹி..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு